Published:Updated:

எங்கள் காரை வழிமறித்த விலங்குகள்! | ஆப்பிரிக்கன் லயன் சஃபாரி பயண அனுபவம் | My Vikatan

Hamilton lion safari

பழமையும் புதுமையும் இங்கு ஒருசேர காணலாம். ஹாமில்டன் நான் வசிக்கும் டொராண்டோ நகரத்தில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

எங்கள் காரை வழிமறித்த விலங்குகள்! | ஆப்பிரிக்கன் லயன் சஃபாரி பயண அனுபவம் | My Vikatan

பழமையும் புதுமையும் இங்கு ஒருசேர காணலாம். ஹாமில்டன் நான் வசிக்கும் டொராண்டோ நகரத்தில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

Published:Updated:
Hamilton lion safari

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

ஹாமில்டன் என்பது  கனடாவின் ஒன்டாரியோ ஏரிக்கரையின் மேலே உள்ள அழகிய நகரம். நூற்றுக்கணக்கான நீர்வீழ்ச்சிகளை தன்னகத்தே கொண்ட இயற்கை எழில் கொஞ்சி விளையாடும் நகரம் தான் ஹாமில்டன். பழமையும் புதுமையும் இங்கு ஒருசேர காணலாம். ஹாமில்டன் நான் வசிக்கும் டொராண்டோ நகரத்தில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இவ்வளவு தொலைவில் இருந்தாலும் ஹாமில்டனில் இருந்து டொராண்டோ நகரத்தை தெளிவாக காண முடிகிறது. அதிலும் குறிப்பாக CN Tower ஐ 80 கிலோமீட்டர் தொலைவிலிருந்து கண்களால் காண முடிவது வியப்பிற்குறியது என்று சொல்லலாம்.

Hamilton
Hamilton

இயற்கை எழில் கொஞ்சி விளையாடும் ஹாமில்டன் இலையுதிர் காலத்தில் வண்ணமயமாக காட்சி அளிக்கும். நான் ஹாமில்டன் காரில் தான் சென்றிருக்கிறேன். டொராண்டோவில் இருந்து 1 மணி நேரத்தில் ஹாமில்டன்  சென்று விடலாம். டொராண்டோவில் இருந்து ஹாமில்டன் செல்ல பேருந்து மற்றும் ரயில் வசதிகளும் உள்ளதால் பலர் ஹாமில்டனில் வாழ்ந்து கொண்டு தினம் டொராண்டோ வந்து பணி புரிகிறார்கள். பல முறை நான் ஹாமில்டன் சென்றிருப்பதால் இந்த ஊரில் எனக்கு பிடித்த விஷயங்கள் எத்தனையோ உண்டு. அத்தனையும் எழுத்தில் வர்ணிக்க முடியாது என்றாலும் என்னை கவர்ந்த  சிலவற்றை இங்கு கூறுகிறேன்.

தமிழ்நாட்டில்  உழவர் சந்தை போல கனடாவில் ஒவ்வொரு ஊரிலும் உழவர் சந்தை(Farmers market) உண்டு. ஆனால் அவை திறந்தவெளியில் அமைந்திருப்பதனால் குளிர்காலத்தில் உழவர் சந்தை இருப்பதில்லை.

Hamilton market
Hamilton market

ஆனால் ஹாமில்டன் நகரத்திலுள்ள உழவர் சந்தை பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் போல அமைக்கப்பட்டுள்ளதால் கோடையில் மட்டுமல்லாமல் குளிரிலும் கூட இயங்குகிறது. நூறு வருடத்திற்கு மேல் பழமையான இந்த உழவர் சந்தைக்கு நான் சென்றது குளிர் காலத்தில் தான்.

அமெரிக்காவில் சக்கை போடு போடும் Starbucks என்ற காஃபி ஷாப்பை போல கனடாவில் Tim Hortons மிகவும் பிரசித்தி பெற்றது. Tim Hortons பற்றி நான் எனது முந்தைய பயணக் கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கிறேன். டிம் ஹார்டன் என்ற ஒரு ஹாக்கி வீரர் முதன் முதலில் இந்த காஃபி ஷாப்பை தொடங்கியது ஹாமில்டனில் தான்.

வள்ளி சத்தியமூர்த்தி
வள்ளி சத்தியமூர்த்தி

அந்த கடை இன்னும் அங்கேயே உள்ளது. டிம் ஹார்டனின் நினைவாக இந்த கடையின் நுழைவாயில் அருகே அவரது சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பழமை மாறாமல் சிலவற்றை அப்படியே பராமரித்து வருகிறார்கள்.

அடுத்து நாம் ஹாமில்டன் அருகே உள்ள ஆப்பிரிக்கன் லயன் சஃபாரி பற்றி கூறியே ஆக வேண்டும். இது ஒரு வித்தியாசமான மிருக காட்சி சாலை. இங்கு நாம் காரில் அமர்ந்து கொண்டே இங்குள்ள மிருகங்களை பார்க்கலாம். கார் இல்லாதவர்களுக்கு இங்கு பஸ் வசதியும் உண்டு.

African lion safari
African lion safari

திறந்தவெளியில் விலங்குகள் உள்ளதால் காரில் செல்லும் போது கதவை மூடி வைக்க சொன்னார்கள். நம் வாகனங்கள் அனைத்தும் வரிசையாக அணிவகுத்து செல்ல அங்கங்கே அங்குள்ள ஊழியர்கள் நம்மை வழிநடத்திச் செல்கிறார்கள். விலங்குகளுக்கான அதிக பரப்பளவுள்ள இடத்தை அழகாக வடிவமைத்து பராமரித்து வருகி

இங்கு நான் முதலில் சிங்கத்தை தான் பார்த்தேன். ஆப்பிரிக்கன் லயன் சஃபாரி என்ற பெயருக்கு ஏற்ப முதலில் சிங்கத்தை காண ஏற்பாடு செய்திருப்பதாக எனக்கு தோன்றியது. அதன் பிறகு சிறுத்தை, ஆமை, புள்ளிமான், கங்காரு, நெருப்பு கோழி, குரங்கு, பைசன் ஆடு, வரிக்குதிரை, காண்டாமிருகம், ஒட்டகச்சிவிங்கி என சுதந்திரமாக திரியும் பலவற்றை கண்டு களித்த வாறே சென்றோம்.

African lion safari
African lion safari

எங்கள் கார் கண்ணாடியை நெருப்பு கோழியும் ஒட்டகச்சிவிங்கியும் சீண்டி விளையாடியது இனிமையான காட்சியாக இருந்தது. ஆப்பிரிக்கன் லயன் சஃபாரியில் இரண்டு கொம்புகளை கொண்ட காண்டாமிருகம் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்தது.

ஆப்பிரிக்கன் லயன் சஃபாரி என்ற இந்த மிருக காட்சி சாலையில் யானைகள் உண்டு. யானைகளை காண செல்வதற்கு ரயில் வசதியும் உண்டு. யானைகளை காணும் போது குழந்தைகளுக்கு மட்டுமல்ல நமக்கும் மனதில் சந்தோஷம் பொங்கும். அடுத்து ஒரு குட்டி படகில் சென்று ஆந்தை, கழுகு, கொக்கு, வாத்து ஆகியவற்றை கண்குளிர பார்க்கலாம். இதெல்லாம் பார்த்து விட்டு "Bird show" சென்றேன். அதில் கிளி ஆங்கிலத்தில் "How are you?" என கேட்டது வியப்பளிப்பதாக இருந்தது. அதே கிளி தமிழில் "வணக்கம்" சொல்லியிருந்தால் இன்னும் ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்திருக்கும்.

African lion safari
African lion safari

எல்லாவற்றையும் கண்டு களித்த பின்னர் எனக்கு  டொராண்டோ  Zoo ஞாபகம் வந்தது. இரண்டுமே மிருக காட்சி சாலை என்றாலும் எனக்கு ஒரு விஷயம் வித்தியாசமாக தோன்றியது.  டொராண்டோ  Zoo வில் விலங்குகள் கூண்டில் இருந்தன. நாம் சுதந்திரமாக சுற்றி பார்த்தோம். ஆப்பிரிக்கன் லயன் சஃபாரியில் விலங்குகள் சுதந்திரமாக சுற்றி திரிந்தன. நாம் தான் கார் என்னும் கூண்டில் இருந்தோம்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.