Published:Updated:

மருத்துவ காப்பீடு அவசியமா? - ஒரு குட்டி ஸ்டோரி | My Vikatan

Representational Image

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எப்போது என்ன ஆகும் என்ற பயத்தில் தான் வாழ்கிறார்கள். முப்பது வயதா? ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்துவிட்டால் என்ன என்று நம்மை சிந்திக்க வைக்கிறது இன்றைய சமூகம்.

மருத்துவ காப்பீடு அவசியமா? - ஒரு குட்டி ஸ்டோரி | My Vikatan

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எப்போது என்ன ஆகும் என்ற பயத்தில் தான் வாழ்கிறார்கள். முப்பது வயதா? ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்துவிட்டால் என்ன என்று நம்மை சிந்திக்க வைக்கிறது இன்றைய சமூகம்.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

ஓடும் பாம்பை மிதிக்கிற வயது, கல்லை தின்றாலும் ஜீரணமாகும், இளங்கன்று பயமறியாது.. என்ற பழமொழி எல்லாம் இப்போது மாறிவிட்டது. ரொம்ப ஓடாதடா எதாவது அடைக்க போகுது, இதை ஏன் திங்கற? இதுல கொழுப்பு எவ்வளவு இருக்கு தெரியுமா? என்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எப்போது என்ன ஆகும் என்ற பயத்தில் தான் வாழ்கிறார்கள்.

முப்பது வயதா? ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்துவிட்டால் என்ன என்று நம்மை சிந்திக்க வைக்கிறது இன்றைய சமூகம்.

Representational Image
Representational Image

பல ஆண்டுகள் கடுமையாக உழைத்தாயிற்று, இனி பணி நிறைவு பெற்றவுடன் நிம்மதியாக இருக்கலாம் என்று என்னும் பலர், அவர்களது ஓய்வூதியத்தில் பெருமளவு மருத்துவமனைக்கே செலவிடுகின்றனர்.

சிறுகதை:

பரபரப்பான காலை நேரம், கந்தன் வழக்கம்போல் அலுவலகத்திற்கு தயாராகிறார், அவரின் மனைவி ஜெயந்தி அவருக்கு மதிய உணவை டிபன் பாக்ஸில் ரெடியாக வைத்திருக்கிறார். அவர்களது இரு மகன்களும் (அருணும், அஜய்யும்) வீட்டில் இருந்தே வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் (work from home).

Representational Image
Representational Image

டைம் ஆயிருச்சு நான் கிளம்பறேன் என்றார் கந்தன், சரி பாத்து போயிட்டு வாங்க என்று வழி அனுப்பி வைத்துவிட்டு, வீடு வேலையை பார்க்க செல்கிறார் ஜெயந்தி.

அரை மணி நேரத்தில் ஓர் அலைபேசி அழைப்பு வருகிறது, வாகனத்தில் சென்று கொண்டிருந்த கந்தன் சுயநினைவை இழந்து கீழே விழுந்துவிட்டார் உடனே வாருங்கள் என்று.

உடனடியாக அருணும், அஜய்யும் பதட்டமாக கிளம்புகிறார்கள். ரோட்டில் ஓரத்தில் கந்தன் அமர்ந்து இருக்க அவரை சுற்றி பொது மக்கள் நின்று கொண்டு இருக்கிறார்கள்.

Representational Image
Representational Image

eதாமத படுத்தாமல் அருகில் இருந்த மருத்துவமனைக்கு கந்தனை அழைத்து சென்றார்கள் அருணும் அஜய்யும். அங்கே பரிசோதனை செய்து பார்த்த பின்புதான் தெரிந்தது மூளையில் ரத்த கசிவு என்று. ஒரு வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், மொத்த செலவு இரண்டு லட்சம் ருபாய். பின் நலமாக வீடு திரும்பினார்.

அருணிடம் இருந்தது கடன் மட்டுமே சேமிப்பு என்பது எதுவும் இல்லை, அஜயிடம் சேமிப்பு இருந்தது அது தான் அந்த கடினமான காலகட்டத்தில் உதவியது. அஜய்யிடமும் பணம் இல்லை என்றால் நிலைமை இன்னும் கடினமாக இருந்திருக்கும்.

ஆனால் இங்கே நாம் கவனிக்க வேண்டிய ஒன்று இவர்கள் இருவரிடமும் மருத்துவ காப்பீடு இல்லை. மருத்துவ காப்பீடு இருந்திருந்தால் சேமிப்பு கரைந்திருக்காது. காப்பீட்டு நிறுவனம் அந்த தொகையை செலுத்தி இருக்கும்.

அருணும், அஜய்யும் அவர்களின் அறியாமையை எண்ணி வருந்தினார். வருங்காலத்தில் தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் பாதுகாக்க மருத்துவ காப்பீடு எடுத்துக்கொண்டனர்.

Representational Image
Representational Image

நம்மில் பலரும் இவர்களை போலத்தான், ஒவ்வொரு மாதமும் ஒரு சிறிய தொகையை காப்பீடாக செலுத்த விரும்புவதில்லை, நமக்கு ஒன்றும் ஆகாது என்ற நம்பிக்கை (மூடநம்பிக்கை), ஆனால் வாழ்க்கை நிச்சயமற்றது. நம்மையும் நம்மை சார்ந்தவர்களையும் காக்க மருத்துவ காப்பீடு அவசியம்.

--மருத்துவ காப்பீட்டின் நன்மைகள்:

1. மருத்துவ செலவுகளை எண்ணி பயம் வேண்டாம்.

2. கட்டணமில்லா மருத்துவம். - நம் காப்பீடு நிறுவனம் நேரடியாக நமக்கான கட்டணத்தை மருத்துவமனைக்கு செலுத்தும்.

3. நம்மையும் நம் குடும்பத்தையும் பாதுகாக்கும்.

4. மருத்துவ பணவீக்கத்தை எண்ணி நாம் வருந்த வேண்டாம்.

5. நாம் செலுத்தும் காப்பீட்டு தொகைக்கு 80டின் கீழ் வரி விலக்கு உண்டு.

உடல்நலம் காப்போம்.

நன்றி,

நரேந்திரன் பாலகிருஷ்ணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.