இந்திய மக்கள் ஆங்கிலத்திற்கு மாற்றாக ஹிந்தியை கற்றுக்கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இதன் சாதக பாதகங்கள் பற்றி அறிய முற்படுவதே இந்த சிறிய கட்டுரையின் நோக்கம். இந்தியாவில் பல மொழிகள் பேசப்படுகிறது. அவற்றில் ஹிந்தி மொழியும் ஒன்று. உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பிஹார், ஜார்கண்ட், மத்தியபிரதேசம் மற்றும் சட்டிஸ்கர் ஆகிய மாநிலங்களில் வாழ்கிற மக்களின் மொழி ஹிந்தி. அவர்கள் பேசுவது, எழுதுவது எல்லாமும் ஹிந்தியில் தான்.

அம்மாக்கள் வீட்டில், கடையில், பேருந்தில், பள்ளியில், கல்லூரியில், அலுவலகத்தில் என்று நாள் முழுவதும் பேசுகின்ற மொழி ஹிந்தி தான். நாம் எப்பொழுதும் தமிழில் பேசுவது போல, அவர்கள் எப்பொழுதும் ஹிந்தியில் பேசுகிறார்கள். தமிழகத்தை சேர்ந்த ஒருவர் அகில இந்திய போட்டி தேர்வை எழுதுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் தேர்வெழுத தேர்ந்தெடுக்கும் மொழி அந்நிய மொழியான ஆங்கிலம். அதே நேரத்தில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர் அவரது தாய் மொழியான ஹிந்தியில் தேர்வெழுத முடியும். அதாவது உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர் அவர் எப்பொழுதும் பயன்படுத்தும் மொழியில் தேர்வெழுதுவார். அவருடன் தமிழகத்தை சேர்ந்த நாம் கற்றுக்கொண்ட அந்நிய மொழியான ஆங்கிலத்தில் தேர்வெழுதி போட்டியிட வேண்டும். இதுவே நியாயமற்ற முறை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஅனைவருக்கும் சமமான தளத்தில் போட்டி நடத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இருந்தால், அனைவருக்கும் பொதுவான அந்நிய மொழியான ஆங்கிலத்தில் தேர்வு நடத்த வேண்டும். அந்த நிலை இப்பொழுது இல்லை. இது போதாதென்று, வினோதமாக ஹிந்தி தாய்மொழியாக இல்லாத தமிழக, கேரள, ஆந்திர, மேற்கு வங்க, மஹாராஷ்டிர, கர்நாடக, ஒடிசா, குஜராத் மாநில மாணவர்கள் அந்நிய மொழியான ஹிந்தியை கற்றுக் கொண்டு, ஹிந்தியை தாய் மொழியாக கொண்ட உத்தரபிரதேச மாணவர்களுடன் போட்டியிட வேண்டுமென்று சொல்கிறார்கள்.
இது ஹிந்தி தாய் மொழியாக இல்லாதவர்களை கல்வி வேலை வாய்ப்பில் பின்னுக்கு தள்ள செய்யப்படும் ஏற்பாடு என்றே கருத வேண்டும். ஹிந்தியை பள்ளியில் சொல்லிக்கொடுக்க வேண்டுமென்று தமிழகத்தில் சிலர் தொடர்ந்து குரல் கொடுக்கிறார்கள்.

ஒரு முன்னாள் துணைவேந்தர், ஹிந்தி தெரியாமல் வடமாநிலத்தில் காய்கறி வாங்க முடியவில்லை என்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசினார். காய்கறி வாங்குவதற்காக ஒரு மொழியை பள்ளியில் கற்றுக் கொள்ள வேண்டுமென்று பேசும் அளவிற்கு தான் அவரின் சிந்தனை இருக்கிறது. நான் பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் மஹாராஷ்டிரா மாநிலத்தில் வாழ்கிறேன். நான் ஹிந்தி கற்றுக் கொள்ளவில்லை. நானெல்லாம் காய்கறி வாங்கி சாப்பிடவில்லையா? காய்கறி வாங்குவதற்காக ஒரு மொழியை பள்ளியில் கற்றுக்கொள்வது என்று தொடங்கினாள் எத்தனை மொழிகளை கற்றுக்கொள்வது?
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஜெர்மனியில் ஓராண்டு காலம் ஆராய்ச்சி செய்தேன். அங்கே காய்கறி வாங்குவதற்காக ஒன்றாம் வகுப்பில் இருந்து ஜெர்மன் மொழி கற்க முடியுமா? முன்பெல்லாம் ஹிந்தியையும் கற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்வார்கள். இப்பொழுது, ஆங்கிலத்திற்கு பதிலாக ஹிந்தியை கற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள். ஆங்கிலத்தை கற்றுக் கொள்ளாமல் இருப்பது நல்லதா? உலகின் பல்வேறு நாடுகளில் படிக்க வேலை செய்ய ஆங்கிலம் அவசியம். இந்தியாவில் வேலை வாய்ப்புகள் குறைந்து கொண்டே வருகிறது.
ஆங்கிலம் தெரியாமல் ஹிந்தி மட்டும் கற்றுக் கொண்டிருந்தால், இந்தியர்கள் யாருக்கும் அந்த வேலைகள் கிடைத்திருக்காது. அதே போல உலகின் அனைத்து முக்கிய நிகழ்வுகளும் ஆங்கிலத்தில் தான் பதிவு செய்யப்படுகிறது. உதாரணமாக, கரோனா வைரஸின் மரபணு வரிசையை சீனா வெளியிட்டது. அதை சீன மொழியான மேண்டரினில் வெளியிடவில்லை, ஆங்கிலத்தில் தான் வெளியிட்டனர்
வேலையின்மை நாற்பது ஆண்டுகள் இல்லாத அளவு உயர்ந்திருப்பதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. கல்வியும், ஆங்கிலமும் கற்றிருந்தால் உலகில் எதோ ஒரு நாட்டில் வேலைக்கு செல்லலாம். ஆங்கிலம் தெரியாமல், ஹிந்தி தெரிந்திருந்தால் இந்தியாவின் சில மாநிலங்களுக்கு மட்டுமே வேலைக்கு செல்ல முடியும். அங்கே வேலை வாய்ப்புகள் இல்லையென்று சொல்கிறது புள்ளிவிவரம். எனவே ஆங்கிலத்திற்கு பதிலாக ஹிந்தி கற்பது மிகப்பெரிய சீரழிவில் கொண்டு போய் விடும்.
தாய் மொழி எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் ஆங்கிலம். நாம் இரண்டு மொழிகளை கற்றுக்கொள்வது கட்டாயம், அவை தாய்மொழி மற்றும் ஆங்கிலம். அந்நிய நாட்டு மொழியான ஆங்கிலத்தை கற்றுக்கொள்வது அந்நிய மோகம் இல்லையா என்று ஒரு கேள்வி கேட்கிறார்கள். ஆங்கிலம் தான் உலகின் தொடர்பு மொழி. அதை நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கற்றுக் கொண்டால் தான் உலக மக்களோடு தொடர்பு கொள்ள முடியும். ஆங்கிலம் தெரிந்ததால் தகவல் தொழில்நுட்ப புரட்சி ஏற்பட்ட பொழுது இந்தியர்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்கு வேலைக்கு போக முடிந்தது.

ஆங்கிலம் தெரியாமல் ஹிந்தி மட்டும் கற்றுக் கொண்டிருந்தால், இந்தியர்கள் யாருக்கும் அந்த வேலைகள் கிடைத்திருக்காது. அதே போல உலகின் அனைத்து முக்கிய நிகழ்வுகளும் ஆங்கிலத்தில் தான் பதிவு செய்யப்படுகிறது. உதாரணமாக, கரோனா வைரஸின் மரபணு வரிசையை சீனா வெளியிட்டது. அதை சீன மொழியான மேண்டரினில் வெளியிடவில்லை, ஆங்கிலத்தில் தான் வெளியிட்டனர். அதன் பிறகு உலக நாடுகள் கரோனா தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் இறங்கி வெற்றி கண்டனர். ஆங்கிலம் தெரியாமல் ஹிந்தி மட்டும் கற்றுக் கொண்டிருந்தால், இந்தியர்கள் கரோனா சிகிச்சை மற்றும் தடுப்பு பணிகளில் பின்தங்கி இருப்பார்கள். இப்படி பல உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். எனவே தாய்மொழியையும் ஆங்கிலத்தையும் முறையாக கற்றுக் கொள்ளுங்கள். ஆங்கிலத்தை கற்காமல் ஹிந்தி கற்றுக்கொள்வது நம் எதிர்காலத்தை நாமே அழித்துக் கொள்ளும் முயற்சி.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.