Published:Updated:

நோயா நம்பிக்கையா? | குறுங்கதை | My Vikatan

Representational Image ( Unsplash )

‘இத பாருங்க கேசவ், உங்க மனைவிக்கு இருக்கிறது நோய் அல்ல… அப்கோர்ஸ், இட்ஸ எ பிராப்ளம்! போரிங்க் பிராப்ளம் யூ கெனாட் அவாய்ட் இட்..! யூ ஹாவ் டு அக்சப்ட் இட்.’ என்றார் டாக்டர் பிரபு.

நோயா நம்பிக்கையா? | குறுங்கதை | My Vikatan

‘இத பாருங்க கேசவ், உங்க மனைவிக்கு இருக்கிறது நோய் அல்ல… அப்கோர்ஸ், இட்ஸ எ பிராப்ளம்! போரிங்க் பிராப்ளம் யூ கெனாட் அவாய்ட் இட்..! யூ ஹாவ் டு அக்சப்ட் இட்.’ என்றார் டாக்டர் பிரபு.

Published:Updated:
Representational Image ( Unsplash )

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

டாக்டர், இந்த நோயிலிருந்து மீள வழியே இல்லையா ஒவ்வொரு குளிர் காலத்துலயும் இப்படியேதான் தொடரும்னா என் மனைவி, நார்மல் மனுஷியா வாழவே முடியாதா?!’ கேட்டார் கேசவ்.

‘இத பாருங்க கேசவ், உங்க மனைவிக்கு இருக்கிறது நோய் அல்ல… அப்கோர்ஸ், இட்ஸ எ பிராப்ளம்! போரிங்க் பிராப்ளம் யூ கெனாட் அவாய்ட் இட்..! யூ ஹாவ் டு அக்சப்ட் இட்.’ என்றார் டாக்டர் பிரபு.

‘என்ன டாக்டர் சொல்றீங்க இது நோய் இல்லைனா அப்புறம் ஏன் இதை அனுபவிக்கணும்?’ இதுக்கு மருந்து மாத்திரையே இல்லையா?’

Representational Image
Representational Image

‘வீஷிங்க் பிராப்ளம்ங்கறது ஒரு நோயல்ல, ஒரு பிரச்சனை.. பிராப்ளம் அதை ஏத்துக்கிட்டுத்தான் ஆகணுமே தவிர அதிலிருந்து விடுபட முடியாது. அது ஒரு போரிங்க் பிராப்ளம். அவாய்ட் பண்ணணும்னா அதிக ரிஸ்க் எடுக்கணும். எது நமக்கு அலர்ஜினு பார்க்கணும். அதைத் தவிர்க்கப் பார்க்கணும். அது அவ்வளவு லேசில்ல!   சிலருக்கு டஸ்ட் அலர்ஜி, சிலருக்கு ஸ்மெல் அலர்ஜி! இப்படி அலர்ஜிக் கான காரணங்கள் ஆயிரமாயிரம் இருக்கு. தற்காலிகமா மருந்து எடுத்துக் குணப்படுத்திக்கலாம். அவ்வளவுதான். நிரந்தர தீர்வு கஷ்டம்.

‘அவ்வளவுதானா.? அப்படீனா. வாழ்க்கையே அவ்வளவுதானா? இந்த அலர்ஜி பிரச்சனையாலேயே சாகத்தான் வேணுமா?’

‘ஏன் அப்படி விரக்தியா பேசறீங்க இப்ப, சமீபத்துல வந்த புயலை எடுத்துக்குங்க, ‘புயல்னால மக்களுக்குக் கிடைக்கற நன்மைகளைவிட தீமைகள் அதிகம் அதுக்காக புயலுக்குப் பயந்து செத்தா போயிடறோம்?

Representational Image
Representational Image

அவ்வளவு எதுக்கு அண்மையில நடந்த FIFA புட்பால் மேட்ச்சில கூட, அர்ஜெண்டெய்னா மூணு கோல் போட்டும் தொடர்ந்து ஆக்ரோஷமா ஆடியது. எதிரா ஆடிய கொரோஷியா கோல் எதும் போடலைனாலும் இடிஞ்ச்சுபோய் பணிஞ்சிடலை. கடைசிவரை போராடினாங்க அல்ல..? மூணு கோலை முப்பது கோலாயிடாம தடுத்தாடுனாங்கல்ல?! அது மாதிரி வாழ்க்கைல சில நோய்களோட நாம கடைசிவரை போராடித்தான் ஆகணும். சிலசமயம், மிராக்கிளாக்கூட அவை நம்மைவிட்டு சொல்லாமக் கொள்ளாம விலகிவிடுவதும் உண்டு. நம்பிக்கைதான் முக்கியத் தேவை’. என்ற பிரபு தொடர்ந்து.

‘வெற்றிமீது வெற்றி வாங்கிக் குவிப்பவர்க்கெல்லாம் அடிப்படையான ஒண்ணு அஸ்திவாராமா இருக்கு, அது, அவங்க வச்சிருக்கிற நம்பிக்கை.

நோயோ, வியாபாரமோ, விளையாட்டோ, வீர சாகசமோ எதுவும் நம்மால் முடியும்கற நம்பிக்கை மட்டும் இருந்தாப் போதும். ஜெயிச்சிடலாம்.

Representational Image
Representational Image

சே கு வே ராவிலிருந்து ஜெயிச்ச பலபேருக்கும் வீஷிங்க் ஒரு ஸ்பீடு பிரேக்கராத்தான் இருந்திருக்கு, முன்னேற்றத்துக்கு தடையா இருந்ததில்லை.

அதுனால, நம்பிக்கையோட இருக்கச் சொல்லி தைரியமூட்டுங்க உங்க மனைவிக்கு.

வீஷிங்க் ஒரு ‘சீசனல் டிஸ்ரபன்ஸ்!’ வேகத்தடைதான் பயணத்தடை அல்ல.. பாதுகாப்பான பயணத்துக்கு வேகத்தடைகள் வேண்டும். அப்போதுதான் வெற்றி மீது வெற்றி வந்து சேரும்! டேமேஜில்லாமல் பயணம் சுகப்படும்!’ என்றார்.

மன ஆறுதல் பெற்றார் கேசவ்.

*****

-வளர்கவி, கோவை.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.