Published:Updated:

`இண்டஸ்ட்ரி 4.0' தொழில்புரட்சி! - வேலையிழக்காமல் இருக்க என்ன செய்யலாம்?

Representational Image

நமது இயலாமைக்கு நிறுவனங்களை குறை சொல்லுவதில் பலன் இல்லை. இது நமது குடும்பத்துக்கு சோறு போடும் வேலை, நமக்குத்தான் அர்ப்பணிப்பு உணர்வும் அக்கறையும் இருக்க வேண்டும் என்பது என் கருத்து..

`இண்டஸ்ட்ரி 4.0' தொழில்புரட்சி! - வேலையிழக்காமல் இருக்க என்ன செய்யலாம்?

நமது இயலாமைக்கு நிறுவனங்களை குறை சொல்லுவதில் பலன் இல்லை. இது நமது குடும்பத்துக்கு சோறு போடும் வேலை, நமக்குத்தான் அர்ப்பணிப்பு உணர்வும் அக்கறையும் இருக்க வேண்டும் என்பது என் கருத்து..

Published:Updated:
Representational Image

நாம் வாழும் இந்த நவீன யுகம் "டிஜிட்டல் யுகம்" என்று அழைக்கும் அளவுக்கு நிறைய புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி கொண்டே இருக்கின்றன. மேலும் இந்த புதிய தொழில்நுட்பங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து நம்முடைய அன்றாட வாழ்க்கையில் மிக பெரும் மாற்றங்களை கொண்டு வரும் அளவுக்கு புதிய பரிமாணத்தை அடைந்து இருக்கின்றன.

கடந்த இருநூறாண்டுகளில் மூன்று முறை தொழில் புரட்சிகள் ஏற்பட்டதன் விளைவே தொழிற்சாலைகள் வளர்ந்தன, மின்சாரம், டெலிபோன், ரயில் போன்ற மிக முக்கியமான கண்டுபிடிப்புகள் அறிமுகமாகி நம் வாழ்க்கை பயணத்தை மிகவும் வசதிகரமாக மாற்றி இருக்கின்றன. மூன்றாம் தொழில் புரட்சியின் விளைவாக தொழிற்சாலைகள் மட்டும் அலுவலகங்களில் மனித உழைப்பு கணிசமாக குறைக்கப்பட்டு அதற்கு பதிலாக இயந்திரங்களின் பங்களிப்பு (Automation) கணிசமாக அதிகரிக்கப்பட்டு திட்டமிடல் மனிதர்களாலும் வேலைகள் மனிதர்களாலும், இயந்திரங்களால் சேர்ந்து செய்யப்படும் " இண்டஸ்ட்ரி 3.0 " என்று அழைக்கப்படும் டெக்னலாஜி யுகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

Representational Image
Representational Image

இதன் அடுத்த கட்டமாக முழுக்க முழுக்க இயந்திரங்களையே திட்டமிட வைத்து அனைத்து வேலைகளையும் இயந்திரங்களையே செய்ய வைக்கும் " இண்டஸ்ட்ரி 4.0 " என்று அழைக்கப்படும் அடுத்த கட்ட தொழில்புரட்சியை நோக்கி இந்த உலகம் பயணிக்க ஆரம்பித்து இருக்கிறது .ரோபோடிக் ப்ராசஸ் ஆட்டோமேஷன் (RPA) , ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் (AI), டேட்டா சயின்ஸ் (DATA SCIENCE), மெஷின் லேனிங் (MACHINE LEARNING), பிளாக் செயின் (BLOCK CHAIN), க்ளவுட் கம்பியூட்டிங் ( CLOUD COMPUTING) போன்ற புதிய டெக்னாலஜி வரவுகள் ஒன்று சேர்ந்து இந்த " இண்டஸ்ட்ரி 4.0 " புரட்சியை முன்னெடுத்து செல்லுகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த " இண்டஸ்ட்ரி 4.0 " புரட்சியை நாம் நிறுவனங்களின் டிஜிட்டல் ட்ரான்ஸ்பர்மேஷன் (DIGITAL TRANSFORMATION) என்றும் கூறலாம். அவசர கதியில் நகரும் இன்றைய இயந்திர உலகில், சந்தையில் உள்ள போட்டியாளர்களுடன் போட்டி போட்டு லாபம் ஈட்ட ஒவ்வொரு நிறுவனத்துக்கும் இந்த டிஜிட்டல் ட்ரான்ஸ்பார்மேஷன் ஒரு தவிர்க்க இயலாத காரணியாக மாறிப்போயிருக்கிறது.

புதிய டெக்னாலஜி வரவுகளால் முன்னெடுத்து செல்லப்படும் இந்த " இண்டஸ்ட்ரி 4.0 " தொழில்புரட்சி ஐடி துறையின் பங்களிப்புடன் மட்டுமே முன்னெடுத்து செல்லப்படுகிறது என்பது உலகறிந்த உண்மை. அதனால் ஐடி துறையில் பணிபுரியும் நண்பர்கள் மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் " இண்டஸ்ட்ரி 4.0 " தொழில் புரட்சியை முன்னெடுத்து செல்லும் புதிய டெக்னாலஜி வரவுகளை கரைத்து குடித்து தங்களின் அறிவு எல்லைகளை புதுப்பிக்க வேண்டியது தவிர்க்க முடியாத நிர்ப்பந்தம்.

Representational Image
Representational Image

இதில் முதல் கட்டமாக ஐடி துறையில் பணிபுரியும் நண்பர்கள் இந்த புதிய டெக்னாலஜி வரவுகள் சம்பந்தபட்ட பல புத்தகங்களை படித்து இந்த புதிய டெக்னாலஜி வரவுகள் அடிப்படையை கருத்தாழத்துடன் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு பிறகு இந்த புதிய டெக்னாலஜி வரவுகள் சம்பந்தப்பட்ட பிரத்தியேக பயிற்சிகள் (Trainings), பட்டய (Certifications) படிப்புகளை கண்டுபிடித்து அவற்றை படித்து முடிக்க வேண்டும். சந்தையில் இத்தகைய பிரத்தியேக பயிற்சிகள் மற்றும் பட்டய படிப்புகளை நடத்தும் நிறுவனங்கள் நிறையவே இருக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாற்றம் என்ற பெயரில் இத்தனை நாள் நான் கொடுத்த உழைப்பை, பங்களிப்பை மறந்து என் கம்பெனி அநியாயமாக என்னை வேலையை விட்டு அனுப்ப பார்க்கிறது, என்று அழுது புலம்பி நேரத்தை வீணடிப்பதற்கு பதிலாக புதிய டெக்னாலஜி வரவுகளை கற்று தேர்ந்து உங்கள் அறிவு எல்லைகளை விசாலமாக்கி கொள்வது உத்தமம்.

இப்படி பிரத்தியேக முயற்சிகள் எடுத்து தங்கள் அறிவு எல்லைகளை விசாலமாக்க விரும்பாதவர்களும், விசாலமாக்க இயலாதவர்களும் தாங்கள் பணிபுரியும் நிறுவனங்களை குறை சொல்லாமல் அமைதியாக பணியை ராஜினாமா செய்துவிட்டு வெளியேறுவதே யதார்த்தம். தனது வியாபாரத்திற்கு லாபம் சேர்க்காத எந்த ஒரு சுமையையும் யாரும் தேவை இல்லாமல் தூக்கி சுமக்கமாட்டார்கள் என்பதே இங்கு நிதர்சனம். நாம் ஒரு கம்பெனி நடத்தினாலும் இதைத்தான் செய்வோம். அதனால் நமது இயலாமைக்கு நிறுவனங்களை குறை சொல்லுவதில் புண்ணியம் இல்லை . இது நமது குடும்பத்துக்கு சோறு போடும் வேலை, நமக்குத்தான் அர்ப்பணிப்பு உணர்வும் அக்கறையும் இருக்க வேண்டும், நம்மை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கு அல்ல என்பதை ஐடி துறையில் பணி புரியும் நண்பர்கள் முதலில் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

Representational Image
Representational Image

அதனால் மாற்றம் என்ற பெயரில் இத்தனை நாள் நான் கொடுத்த உழைப்பை, பங்களிப்பை மறந்து என் கம்பெனி அநியாயமாக என்னை வேலையை விட்டு அனுப்ப பார்க்கிறது, என்று அழுது புலம்பி நேரத்தை வீணடிப்பதற்கு பதிலாக புதிய டெக்னாலஜி வரவுகளை கற்று தேர்ந்து உங்கள் அறிவு எல்லைகளை விசாலமாக்கி கொள்வது உத்தமம்.

அலை கடலில் பயணிக்கும் படகை நல்லபடியாக செலுத்த உதவும் துடுப்பு போல கடும் போட்டிகள் நிறைந்த தன் தொழிலுக்கு உதவ கூடிய பணியாளர்களை இழக்க எந்த நிறுவனமும் விரும்பாது என்பதை ஐடி துறையில் பணிபுரியும் நண்பர்கள் முழுமையாக மனதில் உள்வாங்கி கொண்டு உங்கள் நிறுவனத்தின் தொழில் வளர்ச்சிக்கு, டிஜிட்டல் ட்ரான்ஸ்பார்மேஷன் புரட்சிக்கு உதவும் வகையில் புதிய டெக்னாலஜி வரவுகளை கற்று தேர்ந்து உங்கள் அறிவு எல்லைகளை தொடந்து விரிவாக்கி கொண்டே இருங்கள் . உங்களின் பங்களிப்பு என்பது புதிய டெக்னாலஜி வரவுகளால் முன்னெடுத்து செல்லப்படும் " இண்டஸ்ட்ரி 4.0 " புரட்சியில் இன்றியமையாதது என்பதை புரிந்து கொண்டு உங்கள் நிறுவனத்தில் புதிய சவால்களை, வாய்ப்புகளை எதிர்நோக்கி காத்திருங்கள். வெற்றி உங்களுடையதே . வாழ்த்துக்கள் நண்பர்களே !!!

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism