Published:Updated:

என் ஆறாம் அறிவை எங்கு கொண்டு குழிதோண்டிப் புதைக்க?! | My Vikatan

Representational Image ( Unsplash )

காக்கைக்குத் தெரிஞ்சிருக்கு மண்பானைத் தண்ணீரை மேலே கொண்டுவர கல்லைப் பொறுக்கிப் போட்டுத் தாகம் தீர்த்துக் கொள்ள, எனக்குத்தான் எதுவும் தெரியலை! ஏன்னு புரியலை.?

என் ஆறாம் அறிவை எங்கு கொண்டு குழிதோண்டிப் புதைக்க?! | My Vikatan

காக்கைக்குத் தெரிஞ்சிருக்கு மண்பானைத் தண்ணீரை மேலே கொண்டுவர கல்லைப் பொறுக்கிப் போட்டுத் தாகம் தீர்த்துக் கொள்ள, எனக்குத்தான் எதுவும் தெரியலை! ஏன்னு புரியலை.?

Published:Updated:
Representational Image ( Unsplash )

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

வசதி வந்ததுக்கப்புறமும் மாற மாட்டேன்னதுக்கு தண்டணையா? கடவுளே?!

நாக்கு வறண்டு இழுத்துட்டு நிக்க, அங்கே பக்கத்து டேபிள்ல வச்சிருந்த ஓபன் பண்ணின தண்ணி பாட்டில் மிச்சம் வச்சிட்டுப் போயிருந்தான் யாரோ மகராசன்.

எடுத்துக் குடிக்கலாமா? இதெல்லாம் ஸ்டார் ஹோட்டல் மானரிசமில்லயே.. ?! என்ன பண்ணலாம்? எதுக்குடா இங்க வந்தோம்? மாற மாட்டோம்னு நின்னது ஏன்னு மெத்தப் படிச்சவங்களுக்கு எங்க புரியப் போகுது?!

யோசனையிலிருந்த போது, படித்த பழங்காலம், என் ஆறாம் அறிவை உசுப்பியது!

நடந்தது என்ன…????

Representational Image
Representational Image

பிளாஷ் பேக்கில் பின்னோக்கிப் போகிறோம்…!!

‘அப்பா, வசதி வந்ததுக்கப்புறமும் மாற மாட்டேன்னு அடம்புடிக்கறது தப்பு, வசதியில்லாத காலத்துல கஷ்டப்பட்டே, சரி, இப்பவாவது மாறு’ மகள் கண்டித்ததால் வேறு வழியில்லாமல் அந்த ஸ்டார் ஹோட்டலுக்குச் சாப்பிடத் தனியாய்ப் போனான் சந்துரு!

விதி பிடர் பிடித்து உந்தியது…! வேறென்ன சொல்ல..???!!!

மெனு கார்டை வெயிட்டர் காட்ட, நம்பர் ‘ஃபைவ்’ என்றான். ஆர்டர் வந்தது. அது, அந்த அயிட்டம் ரொட்டியா? சப்பாத்தியா? புரோட்டாவா? தெரியலை!.

‘சைடு டிஷ்’ தனியா ஆர்டர் பண்ணனுமாம்.

பன்னீர் அடிக்கடி கேள்விப்பட்ட, தெரிந்த பெயரில் ஒன்று! அதைச் சொல்லி, அந்த சால்னா தொட்டு சாப்பிட முடிவு செய்தான்.

நம்ம சாதாரண ஹோட்டல்களில் கையேந்தி பவனா இருந்தாக்கூட பிளாஷ்டிக் குடத்துல பக்கத்துலயே குடிக்கத் தண்ணி வச்சிருப்பாங்க, இங்க, ‘தண்ணீ தண்ணீனு’ கேட்டபிறகு, மேஜையில் ஏற்கெனவே வைக்கப்பட்டிருந்த ஒரு கோலிசோடா பாட்டில் மாதிரி ஒன்றிலிருந்த ‘தண்ணி காட்டினான்’. அதுக்கொரு தக்கையாலான மூடி (கார்க் மூடி)கம்பியில் பிணைக்கப் பட்டிருந்தது. அதை எப்படித் திறப்பது, மூடுவது? திறந்தாத் தானே மூட..??!! தெரியவில்லை. கம்பி நகர மறுத்து, பாட்டிலில் நங்கூரமிட்டிருந்தது.

Representational Image
Representational Image

தின்ற வறட்டு ரொட்டி அதுக்குப் பேர் நானாமே?!?! விக்கலை வரவேற்றது! நாந்தேன்… நாந்தேன்… காக்கவா பொறந்ததைவிட கஷ்டப்பட்டேன். நாண்டுகிட்டுச் செத்தறலாம் போல இருந்தது. எப்படி பாட்டிலைத் திறப்பதுன்னு கேட்க வெட்கம். அக்கம் பக்கம் பொறுக்கிப் போட்டு மேலே தண்ணி வந்ததும் குடிச்சுட்டுப் பறக்கற காக்காயுமில்ல நான். பாட்டிலின் மூடி திறக்காம, கல்லை எப்படிப் பொறக்கிப் போடுவதாம்?!

வசதி வந்ததுக்கப்புறமும் மாற மாட்டேன்னதுக்குத் தண்டனையா? கடவுளே?! நாக்கு வறண்டு இழுத்துட்டு நிக்க, அங்கே, பக்கத்து டேபிள்ல வச்சிருந்த ஓபன் பண்ணின தண்ணி பாட்டில் மிச்சம் வச்சிட்டுப் போயிருந்தான் யாரோ மகராசன். அதை எடுத்துக் குடிக்கலாமா? இதெல்லாம் ஸ்டார் ஹோட்டல் மானரிசமில்லயே.. ?! என்ன பண்ணலாம்?! யோசனையிலிருந்த போது, படித்த பழங்காலம் என் ஆறாம் அறிவை உசுப்பியது!

Representational Image
Representational Image

ஓண்ணாம் வகுப்பிலோ எப்பவோ படிச்சது..!

காக்கா ஒண்ணு, தண்ணி தாகத்துல கஷ்டப்பட்டுத் தேடி அலைந்து ஒரு வீட்டின் பின்பக்கம் ஒரு மண்பானையிலிருந்த தண்ணீரைக் குடிக்க முயல, அது அடியில் ரொம்ப கீழ இருந்த்துனால, அதில் சின்னச் சின்னக் கல்லா எடுத்துப் போட்டுத் தண்ணீர் மட்டம், மேலே வந்ததும் குடிச்சிட்டுப் பறந்து போச்சாம். அதுக்கு அம்மா காக்கா fliptop bottle ஐ க்காட்டி கல்வி ஊட்டியிருக்குமோ? பின்ன எப்படித் தான் தெரிந்து?!, தண்ணி குடிச்சுட்டு தாகம் தீர்த்துட்டுப் பறந்ததோ…?! எனக்குத் தெரியலையே?!

காதுகளில் ஒலித்தது காலம் கடந்த பழைய பாடல்

‘காக்கா கூட்டத்தப் பாருங்க அதுக்குக்

கத்துக் குடுத்தது யாருங்க?!

ஓண்ணா இருக்கக் கத்துக்கணும்- இந்த

உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்!

அன்றைக்கெல்லாம் எந்த ஸ்டார் ஹோட்டல் எங்க இருந்தது? யார் ஃபுல்கா சப்பாத்தி செஞ்சிருப்பா? தண்ணீர் தாகத்துக்கு ‘ஃபிலிப்டாப்’ தண்ணி பாட்டிலையெல்லாம் காட்டிச் சொல்லிக் கொடுத்திருப்பாங்க… ? ஒண்ணும் தெரியலை…!

Representational Image
Representational Image

நரிக்குத் தெரியுது, எம்பிக் குதிக்க முடியலைனா.. திராட்சைப் பழம் எட்டலைனா, ‘சீ…சீ இந்த பழம் புளிக்கும் இதைத் தின்றால் பல்கூசும்!’னு சொல்லி, சாப்பிடாமல் தப்பித்துக் கொள்ள, நமக்குத்தன் நாகரீக மாற்றத்தோடு நம்மை இணைத்துக் கொள்ளத் தெரியலை!

காக்கைக்குத் தெரிஞ்சிருக்கு மண்பானைத் தண்ணீரை மேலே கொண்டுவர கல்லைப் பொறுக்கிப் போட்டுத் தாகம் தீர்த்துக் கொள்ள, எனக்குத்தான் எதுவும் தெரியலை! ஏன்னு புரியலை.?

என் ஆறாம் அறிவை எங்கு கொண்டு குழிதோண்டிப் புதைக்க?!

பத்து பேரோட ஒண்ணா இருக்கக் கத்துக்கலைனா, கூடி வாழும் நாகரீகத்தைக் கத்துக்கலைனா,  ஒண்ணுக்கும் உதவாம ஒண்டியாத்தான் இருக்கணும். ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்னு இதைத்தான் சொன்னாங்களோ?!

-வளர்கவி, கோவை

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.