Published:Updated:

`லவ் யூ டாடி’னு சொல்ல வைத்த ஜான் விஜய்! - அப்லாஸ் அள்ளிய கேரக்டர்

சார்பட்டா பரம்பரை

அம்மா புலம்புறத கேக்காத… என்று சொன்ன அதே டாடி, கபிலன் மது அருந்திவிட்டு வந்து தன் அம்மாவை அடிக்கும்போது… hey என்னா மேன் அம்மாவ அடிச்சிகிட்டு… என்று கபிலனை கண்டிக்கவும் செய்வார்.

`லவ் யூ டாடி’னு சொல்ல வைத்த ஜான் விஜய்! - அப்லாஸ் அள்ளிய கேரக்டர்

அம்மா புலம்புறத கேக்காத… என்று சொன்ன அதே டாடி, கபிலன் மது அருந்திவிட்டு வந்து தன் அம்மாவை அடிக்கும்போது… hey என்னா மேன் அம்மாவ அடிச்சிகிட்டு… என்று கபிலனை கண்டிக்கவும் செய்வார்.

Published:Updated:
சார்பட்டா பரம்பரை

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

எழுத்தாளர் சாரு நிவேதிதா அவ்வளவு சீக்கிரம் எந்தப் படத்தையும் பாராட்ட மாட்டார் என்பது நாம் அறிந்ததே. அப்படிபட்ட சாருவே சார்பட்டா விமர்சனத்தில் Daddy கதாபாத்திரத்துக்காக சார்பட்டா படத்தை இரண்டு மூன்று தடவை பார்ப்பேன் என்று எழுதியிருந்தார். சாரு எழுதியிருந்ததை போல… ஆனந்த விகடன் தன் விமர்சனத்தில் “கபிலனின் டாடிதான் “சார்பட்டா” படத்தின் காட்பாதர்” என்று சுட்டிக்காட்டியது போல… இந்த டாடி கதாபாத்திரம் அப்படியே ஒருமாதிரி மண்டைக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது.

எதிர்ச்சையாக பார்த்த மீம் ஒன்றில் டாடியின் படத்தைப் போட்டு If I can give a character to my "manasatchi" It would definitely be "daddy"... you have to do this you bugger. I am with you... என்ற வார்த்தைகளை பார்த்ததும் டாடியை பற்றி எழுதியே ஆக வேண்டும் என்று தோன்றியது.

சார்பட்டாவில் ஜான் விஜய்
சார்பட்டாவில் ஜான் விஜய்

Come on child… பாத்ரூம்லயே பாக்சிங் பண்ணிட்டுருந்தா யாரு மேன் உன்ன நம்புவா… அங்க ஸ்டேஜ் மேல ஏறி பைட் பண்ணு நா ஒத்துக்குறேன்… என்று கபிலனிடம் டாடி சொன்னதும் கபிலன் சில நொடிகள் யோசிப்பான். இப்படி சிறுவயது முதலே கபிலனுக்குள் இருக்கும் பாக்ஸிங் நெருப்பை அணையாமல் பார்த்துக்கொள்கிறார் டாடி. ஸ்டேஜில் பாக்சிங் நடக்கும்போது சிறுவயது முதலே கபிலன் ரிங்குக்கு வெளியே கீழே அமர்ந்து சுயமாக பாக்சிங் ட்ரைனிங் எடுப்பது போன்ற காட்சியில் எப்போதும் கூடவே இருப்பார் டாடி. இப்படி கபிலனை பாக்ஸராக்க துடிக்கும் டாடியை கபிலனின் அம்மா கண்டிக்கவும் செய்கிறார்.

எந்த ட்ரைனிங்கும் இல்லாமல் ஸ்பேரிங்கில் ராமனை அடித்து வீழ்த்திய கபிலனிடம்… hey kabila… did you really do it? You really did it man… அடிச்சு காலி பண்ணிட்டியாமே… எப்படி மேன்… என்னால யோசிச்சே பாக்க முடியல… wish I was there… show me your hand bugger… you found a path man… you found a path kabila… என்பார் தழுதழுத்த குரலில். கபிலனுக்கு ஒரு வழி கிடைத்ததை தனக்கொரு விடியல் கிடைத்தாக நினைப்பார். உன் அம்மாவை பற்றியெல்லாம் கவலைபடாதே… old lady… அழுதுட்டே இருக்கும்… you have to do this… i am with you… என்பார் உறுதியான குரலில்.

ஜான் விஜய் மற்றும் பசுபதி
ஜான் விஜய் மற்றும் பசுபதி

அடுத்த நாள் இடியப்ப பரம்பரை துரைகண்ணு குழுவினரிடம் பேசும்போது, டாடி நான் ஆடுறேன்… என்று கபிலன் உறுதியேற்கும்போது go on… tell them… என்று அவனுக்குள் இருக்கும் பாக்ஸரை வெளியே கொண்டு வருவார் டாடி. அதைத் தொடர்ந்து “நல்ல ஆட்டக்காரனோட மோதி ஜெயிச்சுட்டு வா … அப்புறம் வேம்புலியிடம் மோதலாம்…” என்று கபிலனை இளக்காரமாக பேசும் டான்ஸிங் ரோஸை கபிலனுடன் மோத வைத்து ஊரையே கபிலனை பற்றி பேச வைப்பார் டாடி.

கபிலனின் டவுசரை கத்தியை வைத்து கிழித்து… அசிங்கப்படுத்துவான் தணிகா. அப்போது தன்னுடைய மானம் பறிபோனதுபோல கபிலன் அருகே முட்டிபோட்டு வெறிகொண்டு அழுவார் டாடி. மருத்துவமனையில் தலையில் கட்டுப்போட்டுக்கொண்டு படுத்திருக்கும் கபிலன் டாடியிடம், “சார்பட்டா பரம்பரை ஜெயிச்சுடுச்சு தான டாடி…” என்று கேட்க, பரம்பரை இல்ல மேன்… நீ ஜெயிக்கணும்… என்று சொல்லி தணிகா கபிலனின் அப்பாவுடன் விரோதமாய் இருந்ததை சொல்லி… கபிலனை பெரிய பாக்ஸ்ராக உருவாக்குவதிலேயே கவனமாக இருப்பார் டாடி. தன் கணவனை இழந்ததுபோல் மகனையும் இழந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் அம்மாவை போல… தன் நண்பனை இழந்தது போல அவன் மகனையும் இழந்துவிடகூடாது என்பதில் உறுதியாக இருப்பார் .

அம்மா புலம்புறத கேக்காத… என்று சொன்ன அதே டாடி, கபிலன் மது அருந்திவிட்டு வந்து தன் அம்மாவை அடிக்கும்போது… hey என்னா மேன் அம்மாவ அடிச்சிகிட்டு… என்று கபிலனை கண்டிக்கவும் செய்வார்.

ஜான் விஜய்
ஜான் விஜய்

நம்முடைய தன்னம்பிக்கையை ஒட்டுமொத்தமாக அடித்து நொறுக்கி நீ எதுக்குமே லாய்க்கு இல்ல… நீ திங்கறதுக்குதான் லாய்க்கு… நீ ஒரு ஜீரோ… நீயெல்லாம் எங்க போய் உருப்பட போற… என்று நம்மை அடித்து இறக்கி ஓரமாக உட்கார வைக்க… நமக்குள் தாழ்வு மனப்பான்மையை உருவாக்க… தற்கொலை எண்ணத்தை கொண்டுவர… நம்மை சுற்றி நிறைய ஆட்கள் இருக்கிறார்கள். அவர்கள் நம்முடன் நன்கு பழகியவர்களாக இருக்கலாம்… பல நாட்கள் நம்மை வைத்து வேலை வாங்கியவர்களாக இருக்கலாம்… அவர்களுடைய வேலை முடிந்ததும் தூக்கி எரியக்கூடிய ஆட்களாக இருக்கலாம்… அந்த மாதிரியான நபர்களிடமிருந்து நம்மை காப்பாற்ற… சாதி மத பாகுபாடு பார்க்காமல்… நேரங்காலம் பார்க்காமல்… எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்… ஒரு அப்பாவாய்… அண்ணனாய்… தோழனாய்… எப்போதும் நம்மை சரியான பாதையில் வழிநடத்த… நீ இறங்கி ஆடு… நான் இருக்கேன் பாத்துக்கலாம் என்று சொல்ல… நமக்குள் இருக்கும் நெருப்பை அணையாமல் பார்த்துக்கொள்ள… ஒரு டாடி நம் எல்லோருக்கும் கிடைத்தால் நம் வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும்… !

மௌனகுரு படத்திற்காக தேசிய விருது வாங்கியிருக்க வேண்டியவர் ஜான் விஜய். அந்தப் படத்தில் தவறவிட்டவர் சார்பட்டா படத்திற்காக… சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை கண்டிப்பாக வாங்குவார்.

- மா. யுவராஜ்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/