Published:Updated:

நீதி!

Representational Image

Campsite போகும் வழியில், சாலையின் ஓரமாக காரை நிறுத்தி கண்ணை மூடி ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது கார் கண்ணாடியை யாரோ தட்டுவதை கேட்டு கண்ணை திறந்து பார்த்த பொழுது, அங்கே காவல்துறை அதிகாரி ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

நீதி!

Campsite போகும் வழியில், சாலையின் ஓரமாக காரை நிறுத்தி கண்ணை மூடி ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது கார் கண்ணாடியை யாரோ தட்டுவதை கேட்டு கண்ணை திறந்து பார்த்த பொழுது, அங்கே காவல்துறை அதிகாரி ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

Published:Updated:
Representational Image

அமெரிக்காவில் மலைகளில், காட்டு பகுதிகளில் தங்குவதற்கு வசதிகள் இருக்கும். அதை campsite என்று அழைக்கிறார்கள். அப்படி ஒரு campsite இல் தங்குவதற்காக ஒருவர் தனது காதலியுடன் காரில் சென்று கொண்டிருந்தார். அந்த ஆணின் பெயர் ஜான் என்றும் பெண்ணின் பெயரை கேதரின் என்றும் வைத்துக் கொள்வோம்.

Campsite போகும் வழியில், சாலையின் ஓரமாக காரை நிறுத்தி கண்ணை மூடி ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது கார் கண்ணாடியை யாரோ தட்டுவதை கேட்டு கண்ணை திறந்து பார்த்த பொழுது, அங்கே காவல்துறை அதிகாரி ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர் கேதரின் மற்றும் ஜானை காரில் இருந்து இறங்குமாறு அறிவுறுத்தினார். இருவரும் காரில் இருந்து இறங்கினர்.

Representational Image
Representational Image

இறங்கிய பிறகு அவர் காவல்துறை அதிகாரி அல்ல என்பது தெரிந்தது. அதற்குள், வந்தவர் துப்பாக்கியை காட்டி ஜானை விரட்டி விட்டு கேதரீனை தன் காரில் கடத்தி கொண்டு போய்விட்டார். அங்கே அந்த பெண்ணுடன் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுவிட்டு, இந்த சாலையில் பத்து கிமீ நடந்து சென்றால், உன் காருக்கு போய்விடலாம் என்று கேதரீனை அனுப்பி விட்டார். காருக்கு வந்த பின் கேதரீனும் ஜானும் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு போய் தகவல்களை திரட்டி விசாரணையை தொடங்கினர்.

கேதரீனின் மருத்துவ பரிசோதனையில், கேதரீன் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது. ஜானையும் கேதரீனையும் தனித்தனி அறைகளில் வைத்து விசாரித்தனர். அந்த விசாரணையில் சில ஆண்களின் புகைப்படத்தை கேதரீனிடம் காண்பித்து, குற்றவாளி அதில் இருக்கிறாரா என்று கேட்கப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கேதரீன் மைக்கேல் என்ற ஒருவரை அடையாளம் காட்டி, அவர் தான் குற்றவாளி என்று சொன்னார். மற்றொரு அறையில் இருந்த ஜானிடம் அதே புகைப்படங்களை காட்டினார் விசாரணை அதிகாரி. அவரும் மைக்கேல் தான் குற்றவாளி என்று துல்லியமாக அடையாளம் காட்டினார். மைக்கேலை கைது செய்தது காவல்துறை. கேதரீனின் உடலில் வேறொருவரின் முடிகள் இருந்தது. அந்த முடிகள் மைக்கேலின் முடியுடன் ஒத்துப்போனது. எனவே மைக்கேலை குற்றவாளி என்று நீதிமன்றத்தில் நிறுத்தினர். இந்த இடத்தில் அமெரிக்க நீதிமன்ற விசாரணை முறையை தெரிந்து கொள்வது அவசியம். நீதிமன்றத்தில் நீதிபதி இருப்பார். அவருடன் ஜூரி இருப்பார்கள்.

Representational Image
Representational Image

யார் இந்த ஜூரி? இவர்கள் அந்த நீதிமன்றம் இருக்கும் பகுதியில் வாழும் பொதுமக்கள். விசாரணை அதிகாரிகள் குற்றம் சுமத்தப்பட்டவர் தொடர்பான ஆதாரங்களை நீதிபதி மற்றும் ஜூரிகளிடம் சமர்ப்பிப்பார்கள். அவர்கள் அனைவரும் அந்த ஆதாரங்களை ஆராய்வார்கள். குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு வாதங்களையும் கேட்பார்கள். இறுதியாக, நீதிபதி ஜூரி ஆகியோர் இணைந்து குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளியா இல்லையா என்று தீர்மானிப்பார்கள்.

கேதரீன் வழக்கை கையாண்ட நீதிபதி மற்றும் ஜூரிகள் மைக்கேல் தான் குற்றவாளி என்று சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு இருபத்தி ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கினர். சிறையில் அடைக்கப்பட்டார் மைக்கேல். விசாரணையின் பொழுது தான் எந்த தவறும் செய்யவில்லை என்று மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தார் மைக்கேல். அதையே சொல்லிக்கொண்டு பத்தாண்டுகளை சிறையில் கழித்துவிட்டார். அப்பொழுது DNA பரிசோதனை அறிமுகமாகி இருப்பதை தெரிந்து கொண்ட மைக்கேல், நீதிமன்றத்தை அணுகினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கேதரீனின் பிறப்புறுப்பில் எடுக்கப்பட்ட மாதிரியை DNA பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டுமென்று வேண்டுகோள் வைத்தார். அதை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது. கேதரீனின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரியில் இரண்டு வகை DNA இருந்தது. ஒன்று ஜானின் DNA உடன் பொருந்திப் போனது. இன்னொரு DNA மைக்கேலின் DNA உடன் பொருந்தவில்லை! அதாவது மைக்கேல் குற்றவாளி இல்லை. பத்து ஆண்டுகள் தண்டனை அனுபவித்த பின் விடுதலை ஆனார் மைக்கேல். ஜானும் கேதரீனும் தனித்தனியாக அடையாளம் காட்டியவர் குற்றவாளி இல்லை. அதாவது பாதிக்கப்பட்டவரின் கண்கண்ட சாட்சியே தவறாக இருந்தது.

Representational Image
Representational Image

2019 ஆம் ஆண்டு தெலங்கானாவில் ஒரு பெண் மருத்துவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். அந்த குற்றத்தில் தொடர்புடையவர்கள் என நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களை "சுட்டு தூக்கணும்" என்று ஒரு கூட்டம் சமூக வலைத்தளங்களில் கொந்தளித்தது. அந்த குற்றம்சாட்டப்பட்டவர்கள் காவல்துறையினரின் ஆயுதங்களை எடுத்து காவல்துறையினரை தாக்கினர். தங்களை பாதுகாத்துக்கொள்ள விரைந்து செயல்பட்ட காவல்துறை அந்த நான்கு குற்றவாளிகளையும் சுட்டு கொன்று விட்டது.

காவல்துறையை பாராட்டி இந்தியா முழுக்க ஒரே கொண்டாட்டம். அந்த என்கவுன்டரை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒரு குழுவை அமைத்தது. அந்த குழு நடத்திய விசாரணையில், பத்து காவல்துறையினர் திட்டமிட்டு குற்றம் சாட்டப்பட்டவர்களை கொலை செய்தது தெரிய வந்திருக்கிறது. அந்த பத்து காவல்துறையினரையும் கொலைக்குற்ற விசாரணைக்கு உட்படுத்த அறிவுறுத்தியுள்ளது. பாலியல் மற்றும் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்களை கொலை செய்தாகிவிட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களை கொலை செய்தது யார் என்று தெரிந்து விட்டது. அந்த பெண் மருத்துவரை கொலை செய்தவர்கள் யார்?

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism