Published:Updated:

தேவிஸ்ரீ பிரசாத்தை பார்த்து அடுத்த இளையராஜான்னு கமல் சொன்னதுக்கு காரணம் இருக்கு! - வாசகர் பகிர்வு

கமல்

கமலுக்கென்றே பிரத்யேகமான ஒரு இசை சுரப்பி இளையராஜாவின் உடலுக்குள் இருக்கிறது என்று தோன்றுகிறது..

தேவிஸ்ரீ பிரசாத்தை பார்த்து அடுத்த இளையராஜான்னு கமல் சொன்னதுக்கு காரணம் இருக்கு! - வாசகர் பகிர்வு

கமலுக்கென்றே பிரத்யேகமான ஒரு இசை சுரப்பி இளையராஜாவின் உடலுக்குள் இருக்கிறது என்று தோன்றுகிறது..

Published:Updated:
கமல்

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

கமல்ஹாசன் ஒரு பன்முக கலைஞர் என்பது நாம் அறிந்ததே. நடிப்பிற்காக இதுவரை கமல் நான்கு முறை தேசிய விருது வாங்கியுள்ளார். நிறைய பிலிம்பேர் விருதுகள் மற்றும் இதர நிறுவனங்களின் குழுவினர்களின் விருதை பெற்றுள்ளார். ஆனால் இயக்குனர் என்ற அவதாரத்திற்கும் பாடகர் என்ற அவதாரத்திற்கும் அவர் எத்தனை விருதுகள் வாங்கி இருக்கிறார் என்பது நாம் அறியாத தகவல்கள். விஸ்வரூபம் படத்திற்காக அவருக்கு "சிறந்த இயக்குனர்" விருதை விஜய் டிவி வழங்கியது மட்டும் எனக்கு நன்கு நினைவிருக்கிறது.

கமல் எப்படிபட்ட இயக்குனர் என்பதற்கு ஹேராம், விருமாண்டி, விஸ்வரூபம் போன்ற படங்கள் நல்ல உதாரணங்கள். அந்த படங்கள் இன்றளவும் வியந்து கொண்டாடப்படுகின்றன. அதே சமயம் அற்புதமான பாடகர் என்பது பல பாடல்களில் நிரூபணம் ஆகியுள்ளது. ஆனால் "சிறந்த பாடகர்" என்பதற்கான விருதை எத்தனை முறை வாங்கி உள்ளார்... யாரேனும் அதை பாராட்டி தந்திருக்கிறார்களா என்பது 90'ஸ் கிட்ஸாகிய எனக்கு தெரியவில்லை. மூத்த கமல் ரசிகர்களுக்கு தெரிந்திருந்தால் கமண்ட் செய்யுங்கள்.

கமல்
கமல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இளையராஜாவும் கமலும்:

இளையராஜாவும் கமலும் இணைந்தாலே மிரட்டல் தான். அதற்கு உதாரணங்களாக ஹேராம், தேவர்மகன், விருமாண்டி ஆகிய படங்களை சொல்லலாம். கமல் இயக்கத்தில் வெளியான ஹேராம் படத்தில் வரும் "ராம்... ராம்..." என்ற பாடலில் "ரகுபதி ராகவ்... ராஜா ராம்... பதீத்தபாவண... சீதா ராம்" என்று கமல் குரலில் ஒலிக்கும் வரிகள் நம்மை எதோ செய்துவிடுகின்றன. "ப்பா... என்னா குரல் வளம்..." என்று என்னை வியக்க வைத்த முதல் பாடல் இது. இதே பாடலில் "நாளை அன்பெனும் தீபத்தை ஏற்றி நீ வைத்தால்... நாளையும் எரியும்முன்பேர் சொல்லும் ஜோதி..." என்று மீண்டும் கமல் குரலில் ஒலிக்கும் வரிகள் கமலை பற்றி எப்போது பேசினாலும் காதிற்குள் முதலில் கேட்கும் வரிகளாக அது இருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தேவர்மகன் படத்தில் கமல் பாடிய... "இஞ்சி இடுப்பழகி..." பாடலை பேருந்து பயணங்களின் போது அடிக்கடி கேட்க முடியும். அதிலும் குறிப்பாக அந்த பாடலில் வரும் "மறக்குமா மாமன் எண்ணம்..." வரியை கேட்கும்போதெல்லாம் எவ்வளவு காதல் நிறைந்த பாடல் இது என்ற பிரமிப்பை தருகிறது.

"இஞ்சி இடுப்பழகி" போலவே காதல் நிறைந்த இன்னொரு பாடல் விருமாண்டி படத்தில் வரும் "உன்ன விட இந்த உலகத்தில் உசந்தது ஒன்னுமில்ல..." என்ற பாடல் தான். காதலர்கள் அனைவரையும் உருக வைக்கும் பாடல்கள் என்று பட்டியலிட்டால் அதில் முதல் இடத்தில் இருக்கும் பாடல் இது.

கமலுக்கு என்றே பிரத்யேகமான ஒரு இசை சுரப்பி இளையராஜாவின் உடலுக்குள் இருக்கிறது என்று சொல்லலாம். "இளையராஜாவும் கமலும்" என்ற அற்புதமான கூட்டணியை போல இன்னொரு கூட்டணி இனி தமிழ் சினிமாவில் நிகழுமா என்பது கேள்விக்குறி.

இளையராஜா
இளையராஜா

ஜிப்ரானும் கமலும்:

விஸ்வரூபம் 2, உத்தமவில்லன், பாபநாசம் போன்ற கமல் படங்களுக்கு ஜிப்ரான் இசையமைத்து உள்ளார். இதில் ஜிப்ரானும் கமலும் இணைந்து கலக்கிய பாடல் என்றால் விஸ்வரூபம் 2 படத்தில் வரும் "நானாகிய நதி மூலமே" பாடலை சொல்லலாம். அந்தப் பாடலின் தொடக்கத்தில் இருந்து இறுதிவரை தனது அட்டகாசமான குரலில் அசத்தி இருப்பார் கமல்.

தமிழ் சினிமாவில் இதுவரை "அம்மா என்றழைக்காது உயிரில்லையே...", "அம்மா அம்மா நீ எங்க அம்மா...", "காலையில் எழுந்ததும் கண் விழித்தால் நான் கைதொழும் தேவதை அம்மா", "ஆசப்பட்டா எல்லாத்தையும் காசு இருந்தா வாங்கலாம்... அம்மாவ வாங்க முடியுமா..." எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் வரும் "நீயே நீயே...", ராம் படத்தில் வரும் "ஆராரிராரோ..." போன்ற பாடல்கள் நம் அம்மாவை நினைவூட்டும் வகையில் போற்றும் வகையில் அமைந்தவை. ஆனால் அந்த பாடல்களை எல்லாம் விட மிக சிறப்பான பாடல் என்றால் அது கமல் பாடிய "நானாகி நதிமூலமே" என்ற பாடல் தான்.

கமல்
கமல்

தேவிஸ்ரீ பிரசாத்தும் கமலும்:

தேவிஸ்ரீ பிரசாத்தை பார்த்து கமல் ஒரு மேடையில் "அடுத்த இளையராஜா இவர் தான்..." என்று பாராட்டியபோது எல்லோரும் அந்தக் கருத்தை கேலி செய்திருந்தார்கள். ஆனால் கமல் ஏன் அப்படி சொன்னார் என்று யோசிக்கும்போது "நீலவானம்..." பாடலை மனதில் வைத்து அப்படி சொல்லியிருப்பாரோ என்று தோன்றுகிறது. "இஞ்சி இடுப்பழகி..." , "உன்ன விட இந்த உலகத்தில் உசந்தது ஒன்னுமில்ல..." போன்ற பாடல்களை போலவே ஒரு அழகான ரொமான்ஸ் பாடல் தான் இந்த "நீலவானம்..." பாடல்.

திருமணம் செய்துகொண்டு தம்பதியாய் வாழ்வதும் நமக்காக இன்னொரு உயிர் வேண்டும் என்றும் அழகாக இந்தப் பாடலில் உணர்த்தி இருப்பார். என்னுடைய உறவினர் ஒருவர் திருமணமே வேண்டாம் என்று விரக்தியில் இருந்த போது அவருக்கு இந்தப் பாடலை ஒலிக்கவிட்டு வாழ்க்கையின் முக்கியத்துவத்தை விளக்கினேன். இந்தப் பாடலில் வரும் "நாம் வாழ்ந்த வாழ்வுக்குச் சான்றாவது இன்னொரு உயிர் தானடி..." என்ற வரிகள் அவருக்கு ரொம்ப பிடித்து போகவே இப்போது அவர் தனக்கென ஒரு துணையை தேடி வருகிறார். அந்த அளவுக்கு மேஜிக் செய்த பாடல் இது. அந்த வகையில் கமல் தன் அசாத்திய குரலால் எல்லோரையும் மயக்கும் தனித்துவமான மேஜிக் மேன்!

- மா. யுவராஜ்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/