Published:Updated:

உலக நாயகனுக்கு ஒரு குட்டி வாழ்த்து! - இப்படிக்கு சூப்பர் ஸ்டாரின் ரசிகை| My Vikatan

நாயகன்

பள்ளியில் கமல் , ரஜினி என்று இரு பிரிவினர் உண்டு அதேபோல் கல்லூரியிலும். ஆனால் எதற்காகவும் யாருக்காகவும்நான் ரஜினியை விட்டு தந்ததேயில்லை.

உலக நாயகனுக்கு ஒரு குட்டி வாழ்த்து! - இப்படிக்கு சூப்பர் ஸ்டாரின் ரசிகை| My Vikatan

பள்ளியில் கமல் , ரஜினி என்று இரு பிரிவினர் உண்டு அதேபோல் கல்லூரியிலும். ஆனால் எதற்காகவும் யாருக்காகவும்நான் ரஜினியை விட்டு தந்ததேயில்லை.

Published:Updated:
நாயகன்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

நான் சூப்பர் ஸ்டாரின் வெறிபிடித்த ரசிகை. சிறுவயதிலிருந்தே அவர் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்கும் அளவிற்கு பைத்தியம். பள்ளி மற்றும் கல்லூரி காலங்களிலும் அவருக்காக பலரிடமும் சண்டைபோட்டிருக்கிறேன்.

பள்ளியில் கமல் , ரஜினி என்று இரு பிரிவினர் உண்டு அதேபோல் கல்லூரியிலும். ஆனால் எதற்காகவும் யாருக்காகவும்நான் ரஜினியை விட்டு தந்ததேயில்லை.

அவரின் வசனங்கள் அவரின் பஞ்ச் டயலாக்குகள் , அவர் வாயசைத்து பாடிய பாடல்கள்.. இப்படி எல்லாமே மனப்பாடமாய் சொல்லுமளவிற்கு அவர் மேல் தீராக்காதல். அப்படிப்பட்ட நான்ஒரு குறிப்பிட்ட படம்பார்த்தபோது... கமலின் அற்புதமான நடிப்பை உணர்ந்தேன்.

கமல், கே.பாலசந்தர், ரஜினி
கமல், கே.பாலசந்தர், ரஜினி

ஆம் ..இளங்கலை முதலாம் ஆண்டு.. விடுமுறைக்கு சென்னை வந்திருந்தேன். புரசைவாக்கம் நடராஜா தியேட்டரில் 'நாயகன்' படம் பார்க்க சென்றேன். படம் பார்க்க சென்றதே பெரிய கதை. எனக்கு சுத்தமாக கமலை பிடிக்காது. அதுவரை நான் கமலுக்காக என்று எந்தப்படத்தையும் பார்த்தது இல்லை. ரஜினியின் படத்தில் கமல் இருந்திருப்பார் அதை பார்த்திருக்கிறேன். அவ்வளவுதான்.

எனது அக்காவின் நாத்தனார் மகள் தேன்மொழி. அவளும் என் வயதை ஒத்தவள். அவள் பயங்கரமான கமலின் விசிறி. என்னை வற்புறுத்தி அழைத்துச் சென்றாள் அந்த படத்திற்கு. மும்பை தாதாவாக விளங்கிய வரதராஜன் என்பவரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் .

தொழிலாளர் சங்கத் தலைவரான தன் தந்தையை துப்பாக்கிக்கு பலி கொடுத்து விட்டு அதற்கு காரணமான போலீஸ் அதிகாரியை கொன்றுவிட்டு பம்பாய்க்கு தப்பிச் செல்கிறான் ஒரு சிறுவன். வளர்ந்து பெரியவனாகி தான் இருக்கும் பகுதியை ஆக்கிரமிக்க வருபவர்களிடமிருந்து காப்பாற்றி அந்தப் பகுதிக்கு தலைவனாகிறான். பலருக்கும் நல்ல செயல்களை செய்யும் அவன் பல கடத்தல் தொழில்களிலும் ஈடுபடுகிறான். குறுகிய காலத்தில் அவன் மிகப்பெரிய 'டான்' ஆகிறான். ஊருக்கு நல்லவனாக தெரியும் அவன் ,அவன் குடும்பத்தாருக்கு எவ்வாறு தெரிகிறான்? நல்லவனா? கெட்டவனா?! இதுதான் அந்த படத்தின் கதை.

கமலஹாசன் அவர்கள் வேலு நாயக்கராகவே வாழ்ந்திருப்பார். நான்கு விதமான தோற்றத்தில் சிறப்பாக நடித்திருந்தாலும் சக்திவேல் ..வேலு நாயக்கராக மாறும் பொழுது அந்த பாடி லாங்குவேஜ் ,மேனரிசம் ..வாவ் சான்சே இல்ல! வேற லெவலாகஇருக்கும்.

"ரெட்டி குடும்பத்துல ஒரு ஆம்பள உயிரோடு இருக்கக் கூடாது' என்று மனைவியின் சாவுக்கு பழிவாங்குவதாகட்டும் ,'செல்வா மேல கை வச்சது எவன்டா' என்று தன் நண்பனுக்காக கோபப்படுவதாகட்டும்,' வேற வழி இல்ல டா கண்ணா 'என்று தன் மகளிடம் பாசத்தில் மருகுவதாகட்டும், 'ஒரு கெழவனுக்காக இத்தனை பேரா போதும்டா' என்று தனக்காக அடிபட்ட மக்களுக்காக அழுவதாகட்டும்.. மனுஷன் வேலு நாயக்கராகவே திரையில் உலா வருவார். இப்படியெல்லாம் கூட நடிக்க முடியுமா ? பிரமிப்பின் எல்லைக்கே சென்றேன். நாடி நரம்பு ,தசை இப்படி ஒவ்வொன்றும் ஏன் அவரின் முடி கூட நடித்திருக்கும் .

'நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்லை',' நீங்க நல்லவரா கெட்டவரா ?','அவனை நிறுத்தச் சொல் நான் நிறுத்தறேன். பாலகுமாரனின் வசனங்கள்... சும்மா 'நச்'சுன்னு இருக்கும்.

கதையின் ஓட்டத்திற்கு எந்த விதத்திலும் இடைஞ்சலாக அமையாத காதல் பகுதி. இப்பகுதி தான் வேலுநாயக்கரை பண்பட வைக்கிறது. காட்சி அமைப்புகள் பிரமாதமா அமைக்கப்பட்டிருக்கும்.

நாயகன்
நாயகன்

இறுதியில் நீதி மன்றத்தில் பேரன் நீ நல்லவனா? கெட்டவனா? எனும் பொழுது 'தெரியலையே 'எனும் காட்சியில் அவரின் மனநிலையை மட்டுமல்ல ,அவரை போன்ற இரு நியாயங்களில் சிக்கித் தவிக்கும் எண்ணற்ற மனிதர்களை கண்முன் நிறுத்தியிருப்பார்.

அதேபோல் படத்தின் இசை..

காட்சிக்கு இசையா? இசைக்கு காட்சியா ?என குழம்பும் அளவுக்கு பிரமாதப் படுத்தி இருப்பார் இசைஞானி.

ஒரே ஒரு வரியை மீட்டுவதன் மூலம் படத்தின் சாரத்தை நமக்குள் கடத்திவிடும் மாயம் இசைஞானிக்கு மட்டுமே சாத்தியம். அதற்கேற்ற காட்சி மொழியை திரையில் எழுதுவது மனிரத்னத்துக்கு மட்டுமே சாத்தியமானது. ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் தென்பாண்டி சீமையிலே பாடலின் பல்லவி படங்களின் பல்வேறு தருணங்களில் பின்னணியில் ஒலித்து நம்மை உலுக்கி எடுக்கும். அதிலும் குறிப்பாக படத்தின் இறுதிக்காட்சியில் கமலின் பேரன் ..கமலிடம் நீ நல்லவனா? கெட்டவனா ?என கேட்கும் பொழுது ஒலிக்கும் பின்னணி இசை இன்றும் நம்மை கரைய வைத்து நினைவில் வைத்திருக்கும் வல்லமை வாய்ந்தது.

காலம் கடந்தாலும் இந்தப் படமும் பாடலும் என்றும் அழியாது தமிழ் சினிமாவின் பொக்கிஷம் என்றே இந்தப் படத்தை சொல்லலாம். இரவு காட்சி சினிமா பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்ததும் எதுவும் சாப்பிடாமல், யாரிடமும் பேசாமல் தனியே உறங்கினேன். விழிகளை மூட உறக்கம் வரவில்லை. கண்முன்னே பார்த்த திரைப்படத்தின் காட்சி ஒவ்வொன்றாய் வந்து கொண்டே இருந்தது .

மூன்று மணி வரைக்கும் உறக்கம் வரவில்லை படத்தை பற்றிய சிந்தனையே இருந்தது . எப்படி ஒரு மனிதனால் இப்படி எல்லாம் நடிக்க முடியும் என்று என்னை யோசிக்க வைத்தது .அதன்பிறகு தேடித்தேடி கமலின் படங்களை பார்க்க ஆரம்பித்தேன். பார்த்த படங்களுக்கு கணக்கே இல்லை ஒவ்வொரு படமும் ஒரு காவியம் என்று சொல்லலாம். மொத்தத்தில் என் வாழ்க்கையில் என்னை மாற்றிய திரைப்படம் என்றால் 'நாயகன்' என்றே சொல்லலாம். சார் அழகான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சார் நீங்க நூறு வருஷம் நல்லா இருக்கணும் நல்லா இருப்பீங்க!

என்றென்றும் அன்புடன்

ஆதிரை வேணுகோபால்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.