Published:Updated:

தமிழ்நாட்டை பிரிக்க விரும்புவோருக்கு சில கேள்விகள்! | வாசகர் வாய்ஸ் |My Vikatan

நயினார் நாகேந்திரன்

பாஜக ஆளும் உத்தர பிரதேசம் என்ற மாநிலம் பரப்பளவை பொறுத்தவரை இஸ்ரேல்,டென்மார்க், இலங்கை,தென் கொரியா, ஆஸ்திரியா,போன்ற உலக வரை படத்திலுள்ள பல நாடுகளை விட ஏறக்குறைய இரண்டு, மூன்று மடங்கு பரப்பளவு கொண்டது,

தமிழ்நாட்டை பிரிக்க விரும்புவோருக்கு சில கேள்விகள்! | வாசகர் வாய்ஸ் |My Vikatan

பாஜக ஆளும் உத்தர பிரதேசம் என்ற மாநிலம் பரப்பளவை பொறுத்தவரை இஸ்ரேல்,டென்மார்க், இலங்கை,தென் கொரியா, ஆஸ்திரியா,போன்ற உலக வரை படத்திலுள்ள பல நாடுகளை விட ஏறக்குறைய இரண்டு, மூன்று மடங்கு பரப்பளவு கொண்டது,

Published:Updated:
நயினார் நாகேந்திரன்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

கடந்த ஆண்டு, தமிழ்நாட்டை சேர்ந்த எல். முருகன் அவர்கள் ஒன்றிய இணை அமைச்சராக பதவியேற்ற போது கொங்கு நாடு என்று குறிப்பிடப்பட்டது, அதனை தொடர்ந்து தினசரி பத்திரிகை ஒன்றும் கொங்கு நாடு தனி யூனியன் பிரதேசம் ஆகிறது என்ற செய்தி வெளியிட்டது. இதனால், தமிழ்நாட்டில் எழுந்த கடும் எதிர்ப்பு, பின் பாஜக தரப்பில் இருந்து தமிழ்நாட்டை பிரிக்கும் எண்ணம் தங்களிடம் இல்லை என்று அறிவிப்பை தொடர்ந்து அந்த பிரச்சனைக்கு கடந்தாண்டு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஆனால், இந்த மாநில பிரிப்பு விவகாரம் மீண்டும் இப்போது நயினார் நாகேந்திரன் வடிவில் தலை தூக்க ஆரம்பித்திருக்கிறது.

03 ஜூலை 2022 ல், நாமக்கல்லில் நடந்த திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில், முன்னாள் ஒன்றிய அமைச்சரும், இன்றைய மக்களவை உறுப்பினருமான ஆ. ராசா அவர்கள் மாநில சுயாட்சி குறித்து பேசுகையில் ”பெரியாரை முழுமையாக ஏற்றுக் கொண்ட நாங்கள் அதிலிருந்து விலகி ஜனநாயகத்துக்காக இந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்காக தந்தையையே ஒதுக்கி வைத்துவிட்டு இந்தியா வாழ்க என்று சொன்னோம். நான் பிரதமருக்கும், அமித்ஷாவுக்கு மெத்தப் பணிந்து கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் அண்ணா வழியில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். எங்களை பெரியார் வழிக்குத் தள்ளி விடாதீர்கள். தனிநாடு கேட்க விட்டுவிடாதீர்கள். மாநில சுயாட்சி தாருங்கள். அதுவரை நாங்கள் ஓயமாட்டோம்' என்றார்.

ஆ.ராசா
ஆ.ராசா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆ.ராசாவின் இந்த பேச்சுக்கு காரணம் என்பது, ஒன்றிய பாஜக ஆட்சியில் மாநிலங்களின் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்படுவது, அதன் வரி வசூல் முறைகள் பறிக்கப்படுவதும், இதனால் கடும் நிதி பற்றாக்குறையை மாநிலங்கள் சந்திப்பதும். ஒவ்வொரு முறையும் நிதிக்காக ஒன்றிய அரசை கெஞ்சும் நிலைக்கு மாநிலங்களை தள்ளியதும், கூடுதலாக, ஆளுநரை வைத்து அரசை இயங்க விடாமல் முடக்குவதும். குறிப்பாக , தமிழ்நாடு சட்டமன்றம் இயற்றிய பதினெட்டுக்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துவதும். ஒட்டு மொத்தமாக சொல்ல வேண்டுமானால் மாநில உரிமைகளை குழி தோண்டி, மீண்டும் தோண்டி எடுக்க முடியாத அளவு புதைக்கப்படுவதுமே காரணமாக இருக்க முடியும் என்றே எண்ண தோன்றுகிறது. தமிழ்நாட்டில் யாரும் தனி தமிழ்நாடு என்ற கோரிக்கையை எழுப்பவில்லை. மேலும், தமிழ்நாடு என்ற மாநிலம் அனைத்து மாநில உரிமைகளை பெற்று மாநில சுயாட்சி கொண்ட இந்திய ஒன்றியத்தின் ஒரு மாநிலமாக தொடர்வதையே விரும்புகிறார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இரண்டாவதாக, நயினார் நாகேந்திரன் அவர்களின் மாநில பிரிவினை பேச்சு, தமிழ்நாட்டை பொறுத்தவரை, உத்தர பிரதேசத்திலிருந்து உத்தராஞ்சல் பிரிந்தது போலவோ, பீகாரிலிருந்து ஜார்கண்ட் பிரிந்தது போலவோ, ஆந்திராவிலிருந்து தெலுங்கானா பிரிந்தது போலவோ, மாநில பிரிவினைக்கான பல ஆண்டு போராட்டங்கள், உயிர் தியாகங்கள் எதுவும் நடைபெற்ற வரலாறுகள் என்பது இல்லை. இங்கு யாரும் தமிழ்நாட்டை பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வைக்கவில்லை. அப்படி இருக்கையில், நயினார் நாகேந்திரன் போன்றவர்களின் இந்த பேச்சை ஒரு போதும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவரது இந்த பேச்சானது, அவரது இருப்பை கட்சியில் காட்டிக்கொள்ள மட்டுமே உதவுமே தவிர, வேறு எதற்கும் பயன்படாது.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

ஒரு வேளை, நிர்வாக வசதிக்காக தமிழ்நாடு பிரிக்கப்பட வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் விரும்புகிறார் என்றால், மாநில பிரிவினை கோரிக்கை எழாத தமிழ்நாட்டை பிரிக்கும் முன், அவர், ஒன்றியத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் தான் சார்ந்த பாஜக கட்சியிடம் , முதலில் இந்தியாவில் பல ஆண்டுகளாக கோரிக்கையில் இருக்கும் மகாராஷ்டிராவிலிருந்து விதர்பா, குஜராத்திலிருந்து சவ்ராஸ்ட்ரா, மேற்கு வங்கத்திலிருந்து கூர்க்கா லேண்ட் போன்ற தனிமாநில கோரிக்கைளை நிறைவேற்ற கேட்டுக்கொள்வாரா?

அடுத்தபடியாக, பாஜக ஆளும் உத்தர பிரதேசம் என்ற மாநிலம் பரப்பளவை பொறுத்தவரை இஸ்ரேல்,டென்மார்க், இலங்கை,தென் கொரியா, ஆஸ்திரியா,போர்ச்சுகல், ஹங்கேரி, கிரீஸ், பல்கெரியா, நெதர்லேண்ட், ஸ்விட்சர் லேண்ட், பெல்ஜியம் போன்ற என்ற உலக வரை படத்திலுள்ள பல நாடுகளை விட ஏறக்குறைய இரண்டு, மூன்று மடங்கு பரப்பளவு கொண்டது, இன்னும் சொல்லப்போனால், சற்று ஏறக்குறைய இங்கிலாந்து நாட்டின் பரப்பளவுக்கு சமமான பரப்பளவு கொண்டது. மக்கள் தொகை அடிப்படையில் எடுத்துக் கொண்டால், உத்தரபிரதேசம் என்பது, ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற அனைத்து நாடுகளின் ஒட்டு மொத்த மக்கள் தொகையை விட கூடுதலாகும். இப்படி, பரப்பளவில் உலக வரைபடத்தில் உள்ள பல நாடுகளை விட பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தை பல மாநிலமாக பிரிக்க ஒன்றிய அரசிடம் நயினார் நாகேந்திரன் கோரிக்கை வைப்பாரா?

மேலும் , ஒன்றிய அரசின் நிதிஆயுக் அறிக்கைபடி,ஒட்டுமொத்த இந்தியாவில் பின்தங்கிய நிலையில், ஏழ்மையான மாநிலங்களின் பட்டியலில் கடைசியிலிருந்து நான்காவதாக இருக்கும், அதாவது 37.8% மக்கள் ஏழ்மையில் வாழும் ஒரு பெரிய மாநிலமாக இருக்கிறது. உத்தரபிரதேசம், அதுமட்டுமல்லாமல், மற்ற பெரிய மாநிலங்களான மத்திய பிரதேசம்(36.7%), ராஜஸ்தான்(29.5%), குஜராத்(18.6%) போன்ற மாநிலங்களும் ஏழ்மையான நிலையில் கடைசி நிலையில் உள்ள மாநிலங்களே. ஏழ்மை குறைவான பெரிய மாநிலங்கள் வரிசையில் கேரளா(0.7%) முதலிடத்திலும், தமிழ்நாடு(4.9%) இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்திய ஒன்றியத்தில் மிக ஏழ்மை நிலையில் கடந்த பல ஆண்டுகளாக இருக்கும் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களை பிரித்து ஏழ்மையை அகற்ற ஒன்றிய அரசிடம் நயினார் நாகேந்திரன் கோரிக்கை வைப்பாரா?

உத்தரபிரதேசம்
உத்தரபிரதேசம்
ANI

மேலும், 23 காரணிகளை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படும் சுகாதாரத்துறை தரவரிசையில் முதலிடத்தில் கேரளாவும், இரண்டாவது இடத்தில் தமிழ்நாடும் உள்ளது. இந்த பட்டியலில் கடைசி இடங்களை உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் உள்ளன. ஒட்டுமொத்த வளர்ச்சி என்று எடுத்துக் கொண்டால் அதில் கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் முன்னிலையில் இருக்கிறது, இதில் கடைசி இடங்களை உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களே உள்ளன.

சுகாதாரம் போன்ற பல விஷயங்களில் பின்தங்கியுள்ள இந்த மாநிலங்களை சிறிய மாநிலங்களாக பிரித்து பல துறைகளை உயர்த்தி மக்கள் நலமாக வாழ ஏதுவாக அந்த மாநிலங்களை மாற்ற ஒன்றிய அரசிடம் நயினார் நாகேந்திரன் கோரிக்கை வைப்பாரா?

மேலும், மே 12, 2022 இல் அறிவிக்கப்பட்ட இந்திய புள்ளியில் துறை(NSO) அறிக்கையின் படி, ஏப்ரல் மாதத்தில் இந்திய ஒன்றியத்திலேயே குறைவான பணவீக்க விகிதம் உள்ள மாநிலங்கள் வரிசையில் கேரளா முதலிடத்திலும், தமிழ்நாடு இரண்டாவது இடங்கள் முறையே 5.5% குறைவாகவே உள்ளன. அதேவேளையில், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்கள் ஏறக்குறைய 8.5% அதிகமாகவும் பணவீக்கம் உள்ள மாநிலங்களாக உள்ளன. இப்படி பொருளாதார ரீதியில் பின்தங்கிய இந்த மாநிலங்களை பிரித்து பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய ஒன்றிய அரசிடம் நயினார் நாகேந்திரன் கோரிக்கை வைப்பாரா?

இந்திய ஒன்றியத்தின் ஏறக்குறைய அனைத்து துறைகளிலும் ஒன்றிணைந்த தமிழ்நாடு பெரும் வளர்ச்சி பெற்று முன்னேறி சென்று கொண்டிருக்கிறது என்பதையே மேற்சொன்ன அறிக்கைகள் தெளிவு படுத்துகிறது. அப்படி இருக்கையில், வளர்ச்சி அடைந்த தமிழ்நாட்டை பிரிக்க வேண்டும் என்று சட்டப்பேரவை குழு தலைவர், பாஜகவின் மாநில துணை தலைவர், பல முறை சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர் என்ற பல பொறுப்புகளை தமிழ்நாடு அரசியலில் அலங்கரித்த நைனார் நாகேந்திரன் போன்ற ஒரு நீண்ட கால, அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி சொல்வது அவருக்கு மேற்சொன்ன மாநிலங்களின் வளர்ச்சி சார்ந்த நிதி ஆயுக் மற்றும் தேசிய புள்ளியியல் துறையின் அறிக்கைகள் பற்றி தெரியாமல் தான் சொல்லி இருப்பாரா? என்பது சந்தேகமே.

இப்படி பெரும்பாலான அனைத்து துறைகளிலும் பின்தங்கி உள்ள உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற பெரிய மாநிலங்களை மூன்றாகவோ, நான்காகவோ நிர்வாக வசதிக்காக பிரித்தால் அந்த மாநிலங்களை தமிழ்நாடு, கேரளா போன்ற வளர்ச்சியை எட்டுவதற்கு உதவியாகவே இருக்கும். இந்த மாநிலங்களில் பெரும்பாலான மாநிலங்கள் நயினார் நாகேந்திரன் அவர்கள் சார்ந்த பாஜகவே ஆட்சியில் உள்ளது. அதனால் அந்த மாநிலங்களை பிரித்து அதன் வளர்ச்சிக்கு வித்திட வேண்டும் என்ற நல்நோக்கோடு நயினார் நாகேந்திரன் அவர்கள் பாரத பிரதமர் மோடி அவர்களிடம் கோரிக்கை வைப்பார் என்று நம்புகிறோம்.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

ஒட்டுமொத்தமாக சொல்ல வேண்டுமானால், தமிழ்நாட்டை விட பரப்பளவில் பெரிய மாநிலங்களாகவும், வளர்ச்சியில் பின்தங்கிய மாநிலங்களாகவும் உள்ள உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்றவைகளை எல்லாம் நிர்வாக வசதிக்காகவும், வளர்ச்சிக்காகவும் பிரிக்கப்படாத போது அவைகளை விட சிறிய மற்றும் முன்னேறிய மாநிலமான தமிழ்நாட்டை மட்டும் இரண்டாக அல்லது மூன்றாக பிரிக்க சொல்லுவது எதனால்?

சிந்திப்போம்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.