Published:Updated:

எப்படியெல்லாம் கடிதம் எழுதியிருக்கோம்! - Nostalgic பகிர்வு

Representational Image
Representational Image

தங்கை கல்லூரி விடுதியில் தங்கி படித்த காலத்தில், நான் படித்த அக்பர் - பீர்பால் முதல் சந்திப்பு பற்றி கடிதம் எழுதியது மறக்கவே முடியாது.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

கடிதங்கள் எழுதிய காலம் காவிய காலம். அன்புள்ள அம்மா, அப்பா அவர்களுக்கு தங்களுடைய அன்பை என்றும் மறவாத தங்களுடைய அன்பு மகன் எழுதும் கடிதம், என்னவென்றால் நான் இங்கு நலம். அங்கு உங்களுடைய நலம் அண்ணன் , பாப்பா தாத்தா, பாட்டி என அணைவரின் நலமும் அறிய ஆவல் .

நமது வீட்டில் இருந்த மயிலை பசு கன்றுக்குட்டி போட்டு விட்டதா, என்ன குட்டி?? நமது ஓடைக்காட்டை உழுது விதைத்து விட்டீர்களா? கல்லு பயறையும், கானப் பயறையும் கலந்து சோளத்தையும் கலந்து விதைக்கவும். இப்படியாக எழுதிய காலமது.

Representational Image
Representational Image

தங்கை கல்லூரி விடுதியில் தங்கி படித்த காலத்தில், நான் படித்த அக்பர் - பீர்பால் முதல் சந்திப்பு பற்றி கடிதம் எழுதியது மறக்கவே முடியாது.

அக்பர் ஒரு நாள் காலையில் உப்பரிகையில் நிற்க அரண்மன அருகிலிருந்த ஆற்றல் துணிகளை சலவை செய்து கொண்டிருந்த சலவை தொழிலாளி கையிலிருந்த துணியை அப்படியே போட்டு விட்டு, அக்பரை நோக்கி கை கூப்பிட, ஆமோதித்தபடி திரும்பிய அக்பர் கால் இடறி கால் விரலில் நகம் சிதைந்து சிறிய அளவில் ரத்தம் கசிய, அங்கிருந்தவர்கள் பதறி வந்து கால் விரலை கட்ட முயன்றனர், ஒரு சிலர் தங்களுடைய பட்டாடைகளை கூட கிழிக்க முற்பட்டனர். ஆத்திரமடைந்த சிலர், அக்பர் இன்று யாருடைய முகத்தில் விழித்தாரோ இப்படி காயமடைந்து விட்டதே என குமுற, அக்பரும் வெகு இயல்பாக ஆற்றங்கரையில சலவை தொழிலாளியை கண்டதாக கூற, உடனே அங்கிருந்தவர்கள் அந்த அதிர்ஷ்டம் கெட்டவனை அழைத்து வந்து அரசவையில் வைத்து ஐம்பது கசையடி தர வேண்டுமென கூற, அப்படியே ஆகட்டும் என அக்பரும் கூறிட, இழுத்து வந்தனர் சலவையாளரை..

அவரும் தனது மனையிடம் விசயத்தை கூறிட, அழைத்து வரப்பட்டார் அரசவைக்கு. சலவையாளரின் மனைவி விசயத்தை பீர்பாலிடம் கூறிட, சரி நான் பார்த்துக் கொள்கிறேன் என சமாதானம் கூறி அனுப்பினார். அரசவையில் அக்பருக்கு அருகிலிருந்த பீர்பால் அக்பருக்கு கேட்கும் விதமாக சற்றே சப்தமாக சிரித்திட, பீர்பாலை ஏறிட்ட அக்பர் 'என்ன சிரிப்பு?' என கேட்க, பீர்பால் 'அரசே... சலவை தொழிலாளியின் முகத்தில் விழித்த உங்களுக்கு விரலில் சிறு சிராய்ப்பு, உங்களுக்காக முகத்தில் விழித்த அவருக்கோ ஐம்பது கசையடிகள், யார் முகம் துரஷ்டமானது என நினைத்தேன், சிரித்தேன் ' என கூறிட, அக்பரோ அரசவையினை பார்த்து 'நிறுத்துங்கள் உங்களுடைய கேலிக்கூத்தான செயல்களை, அவரை உடனடியாக விடுவியுங்கள் ' என ஆணையிட்டாராம். இதனை படித்தமாத்திரத்தில் கடிதமாக எழுதிய காலம் பொற்காலம்.

Representational Image
Representational Image

ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான சந்தோஷ்சிவன் அவர்களின் "மல்லி" என்ற திரைப்படத்தில் வரும் தபால்காரர் கதாபாத்திரம் அற்புதமானது. அந்த மலைக் கிராமத்தில் வசிக்கும் மலை கிராம மக்களுக்காக கடிதம் கொண்டு வருவது, கடிதங்களை வாசித்து காட்டுவது, பதில் கடிதம் எழுதுவது என அற்புதமான கதாபாத்திரமாக உருவாக்கியிருப்பார்.

மாதம் தவறாமல் நான்எழுதும் கடிதங்களுடன் தபால்காரர் வீட்டிற்கு வந்து விடுவார். இப்போது காலம் மாறி விட்டது. கடிதங்கள் வருவதே இல்லை, தபால் பெட்டிகள் மட்டுமே காத்துகிடக்கின்றன கடிதங்களுக்காக.

-வீ.வைகை சுரேஷ்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு