Published:Updated:

மெனுகார்டு! | My Vikatan

Representational Image

மெனு கார்டில் உள்ளதை உள்ளது போல் சமைத்து லஞ்ச் பேக்கில் வைக்க வேண்டும் என்பது இல்லை. உங்கள் வசதிக்கு ஏற்ப சிறு சிறு மாற்றங்கள் செய்து கொண்டாலே போதும்.

மெனுகார்டு! | My Vikatan

மெனு கார்டில் உள்ளதை உள்ளது போல் சமைத்து லஞ்ச் பேக்கில் வைக்க வேண்டும் என்பது இல்லை. உங்கள் வசதிக்கு ஏற்ப சிறு சிறு மாற்றங்கள் செய்து கொண்டாலே போதும்.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

இதோ பள்ளி திறந்தாச்சு. அம்மாக்களுக்கு, பிள்ளைகளுக்கு லஞ்ச் ரெடி பண்ணுவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும். நாம் எது செய்தாலும் இது தான் தினமுமா? என்று பிள்ளைகள் கேட்பார்கள். அவர்களை திருப்திப்படுத்துவது என்பது பெரிய விஷயம். போதாக்குறைக்கு வீட்டில் உள்ள பெரியவர்களும் வித்தியாசமாகத்தான் செய்து கொடேன் என்று (எரிகிற தீயில் கூட கொஞ்சம் எண்ணெய் ஊற்றுவார்கள்) சொல்வார்கள்.

ஆக, பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளுக்கு கொடுத்து அனுப்புகிற உணவு வகைகள் வெரைட்டியாகவும் இருக்கணும். காலை வேளையில் சுலபமா செய்யற மாதிரியும் இருக்கணும். சத்தாகவும் இருக்கணும். என்ன செய்யலாம் என்று யோசித்ததன் விளைவே இந்த மெனு கார்டு.

சும்மா கோடுதான் போடப்பட்டுள்ளது . இதில் ரோடு போடறதும், பஸ் விடறதும் ஏன் பாலமே கட்டறதும் உங்க சாமர்த்தியம்.

Representational Image
Representational Image
Photo by S'well on Unsplash

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மெனு கார்டில் உள்ளதை உள்ளது போல் சமைத்து லஞ்ச் பேக்கில் வைக்க வேண்டும் என்பது இல்லை. உங்கள் வசதிக்கு ஏற்ப சிறு சிறு மாற்றங்கள் செய்து கொண்டாலே போதும்.

(உ-ம்) தோசை என்று எடுத்துக் கொண்டால் அதில் தோசையின் மேல் பொடியாக துருவிய சீஸ், துருவிய கேரட் துவுதல், புதினா சட்னியைத் தடவுதல் இப்படி ருசிக்கு ஏற்ப செய்து கொள்ளலாம்.

சப்பாத்தி அல்லது பூரியை அப்படியே தராமல் சப்பாத்தி அல்லது பூரியின் வடிவத்தை மாற்றியோ அல்லது சப்பாத்தியின் நடுவில் காய்கறிகளை வைத்து அதை அப்படியே ரோல் செய்து ஒட்டி இரண்டு மூன்று துண்டுகளாக நறுக்கியும் வைக்கலாம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இட்லி என்ற எடுத்துக் கொண்டால் விதவித குட்டி குட்டி டம்ளர்கள் அல்லது குட்டி கப்புகள் என்ற மாவை ஊற்றி வேகவிட்டு வைக்கலாம். இட்லியை கட் செய்து மிளகாய் பொடி தூவியும் அல்லது வேகவைத்த இட்லியை இட்லி மஞ்சூரியனாகவும் செய்து அனுப்பலாம். சமைக்கும்போது கொஞ்சம் கற்பனையும் ஆர்வம் இருந்தால் போதும் தினமும் "லஞ்ச் சூப்பர்மா!!" என்ற குழந்தைகள் பள்ளி விட்டு வந்ததும் உங்களை முத்தமிடுவது நிச்சயம் இதோ மெனு கார்டு.

Representational Image
Representational Image

சூடான இட்லி+ துவையல் அல்லது பொடி (பருப்பு பொடி,வேர்கடலை பொடி) மற்றும் 10 பேரிச்சம் பழங்கள் அல்லது பாதாம் பருப்பு.

'மெத்'தென்ற வெஜிடபிள் ஊத்தப்பம்+ வெஜிடபிள் சாலட், வேர்க்கடலை உருண்டை மற்றும் ஏதேனும் ஒரு பழ ரசம்.

உருளை அல்லது காலிபிளவர் ஸ்டஃப் செய்த சப்பாத்தி, தயிர் பச்சடி ஏதேனும் ஒரு பழ ரசம்.

இடியாப்பம் (காரம் அல்லது இனிப்பு) அதனுடன் ஒரு மில்க் ஷேக்.

வெண்பொங்கல்+கேரட் கீர்+கத்தரி கொத்சு

அவல் உப்புமா+ பழங்கள் அடங்கிய சாலட் +பாசிப்பருப்பு உருண்டை.

பூரி ஆலு மட்டர் +கட் செய்த பழங்கள்.

காய்கறிகள் சேர்த்து செய்த நூடுல்ஸ் மில்க் ஷேக் அல்லது பழரசம்.

பன் பட்டர் ஜாம், பழ சாலட் ,ஒரு பழரசம்.

வெஜிடபிள் சாண்ட்விச், கட் செய்த வெள்ளரி மற்றும் ஆனியன், தக்காளி துண்டுகள்.

காய் போட்ட உப்புமா, எலுமிச்சை ஜூஸ், பட்டர் குக்கீஸ்.

எலுமிச்சை சாதம் ,உருளைக்கறி பொட்டுக்கடலை உருண்டை

புளி சாதம் ,வத்தல், ஒரு பழ ஜூஸ்

பகளாபாத், பழங்களான ஒரு ஸ்வீட் பச்சடி , வாழை கார கறி.

இப்படி வித்தியாசமாய் சத்தானதாய் செய்து கொடுங்கள் பிள்ளைகளுக்கு. பிள்ளைகளின் ஆரோக்கியமும் மேம்படும். படிப்பில் ஆர்வமும் அதிகரிக்கும்.

கூடவே நீங்களும் கொஞ்சம் சாப்பிடுங்கள் ... நீங்கள் நன்றாக இருந்தால் தான் கணவர் மற்றும் பிள்ளைகளை நன்றாக பார்த்துக் கொள்ள முடியும்.

என்றென்றும் அன்புடன்

ஆதிரை வேணுகோபால்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.