Published:Updated:

கீதையைப் படிப்பதற்காக நின்று கொண்டே பல் துலக்குவேன்! - காந்தியின் சீக்ரெட்ஸ்

ஆட்டுக்குப் புல் கொடுப்பதிலிருந்து ஆங்கிலேயரை அஹிம்சாவழியில் அசுரத் தனமாக எதிர்ப்பது வரை, அத்தனைக்கும் உரிய நேரமொதுக்கி, அனைத்தையும் செய்து காட்டிய ஆதர்ஷ புருஷன் அவர்...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

மகாத்மா காந்தி அவர்களின் 150 வது பிறந்த நாள்,அவர் பிறந்து வளர்ந்த இந்திய நாடு மட்டுமின்றி, அமெரிக்கா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளிலும் கொண்டாடப் பட்டதிலிருந்தே அவரின் ஆற்றலை அறியலாம்! ஒவ்வோர் ஆண்டும்அவரின் பிறந்த நாளை உலகமே நினைவில் வைத்திருக்கிறது!

குஜராத் மாநிலத்தின் போர்பந்தரில் பிறந்த,ஒரு சராசரி சிறுவன், மிகுந்த கூச்ச சுபாவம் உள்ளவன், உலகமே போற்றும் மகாத்மாவாக உயரக் காரணம், தான் கற்பவற்றில் தனக்கு நல்லதெனத் தோன்றியவை அனைத்தையும் எப்பாடு பட்டாவது அப்படியே வாழ்க்கையில் கடைப் பிடிக்க வேண்டுமென்ற விடா முயற்சிதான் என்பதுதான் , காந்தியின் வாழ்விலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்!

மகாத்மா காந்தி
மகாத்மா காந்தி

உண்மைக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்யலாம்!ஆனால் எதற்காகவும் உண்மையைத் தியாகம் செய்யக் கூடாது’ (You can sacrifice everything for the sake of truth, but you cannot sacrifice truth for the sake of anything!)

என்ற விவேகானந்தரின் கூற்றுக்கு இலக்கணமாக வாழ்ந்து காட்டியவர் மகாத்மா! உண்மையையே தெய்வமாக வழிபட்டு, அந்த உண்மையின் வழி நிற்றலுக்காக அனைத்துத் தியாகங்களையும் மனமுவந்து ஏற்று வழி நடந்ததால்தான், சாதாரண ஆத்மாவான அவர் மகாத்மா ஆனார்! எனவே அவரின் ஒவ்வொரு செயலுமே உலகுக்கு வழிகாட்டியாக அமைந்ததில் வியப்பேதுமில்லை.

தனது ஒவ்வொரு நடவடிக்கைக்கும் காரண, காரியங்களை ஆராய்ந்து, அது நேர்மையானதாகவும், சாதாரண மக்களுக்குப் பயன்தரக் கூடியதாகவும் இருந்தால் மட்டுமே அதனைச் செயல்படுத்துவதென்ற உயர்ந்த குறிக்கோளுடன் வாழ்ந்த உத்தமர் அவர்.

எந்தச் சிறிய விஷயத்தையும் கூடச் சிரத்தையுடன் செய்த சீரிய மகான் அவர். ஆட்டுக்குப் புல் கொடுப்பதிலிருந்து ஆங்கிலேயரை அஹிம்சாவழியில் அசுரத் தனமாக எதிர்ப்பது வரை, அத்தனைக்கும் உரிய நேரமொதுக்கி, அனைத்தையும் செய்து காட்டிய ஆதர்ஷ புருஷன் அவர். மனிதம் ஒன்றையே மாபெரும் பொக்கிஷமாகக் கருதி,சாதிப்பாகுபாடும்,சமஸ்தான மன்னர்களும் வாழ்ந்த காலத்திலேயே, மனிதர்கள் அனைவரும் சமமேயென்று கூறி , தாழ்த்தப்பட்டோருக்காகப் பல சந்தோஷ நிகழ்வுகளை நடத்திக் காட்டிய நவயுக மனிதர் அவர்!

மகாத்மா காந்தி
மகாத்மா காந்தி

சாதாரணமானவர்கள் கூட, நல்லவற்றைச் செய்வதற்கே நேரமில்லை! நேரமில்லை! என்று எல்லாவற்றுக்கும் சால்ஜாப்பு சொல்கின்ற இந்த உலகத்தில், கீதையைப்படிக்க எப்படி நேரத்தை ஒதுக்கிக் கொண்டார் அண்ணல் என்பதை, அவர் சொல்லியபடியே கேட்கலாம். இது தலைவர்களுக்கும், படிக்கும் மாணவர்களுக்கும் ஏன்? எல்லோருக்குமே பொருந்தும். ஒரு நாளின் 24 மணி நேரம் எல்லோருக்குமே பொதுவானதுதான். அதை நாம் எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதில்தான், நம் வாழ்வின் உயர்வு அடங்கியுள்ளது. அதற்கு உதாரணமாகத் திகழ்ந்தவர் காந்தியடிகள். இதோ அவர் கூற்று!

கீதையினிடம் இதற்கு முன்பே எனக்குப் பக்தி இருந்தது. அது என் உள்ளத்தைக் கவர்ந்தும்இருந்தது. அதை ஆழ்ந்து படிக்க வேண்டியதன் அவசியத்தை இப்பொழுது உணர்ந்தேன்........

தினம் இரண்டொரு சுலோகத்தை மனப்பாடம் செய்து விடுவதென்றும் தீர்மானித்தேன். எனது காலைக் கடன்களைச் செய்யும் நேரத்தை இதற்குப் பயன் படுத்திக் கொண்டேன்!இவ்வேலைகளை முடிப்பதற்கு எனக்கு 35 நிமிடங்களாகும். பல் துலக்குவதற்குப் பதினைந்து நிமிடங்கள்; குளிக்க இருபது நிமிடங்கள். மேனாட்டு வழக்கத்தை அனுசரித்து, நின்று கொண்டே பல் துலக்குவேன். அப்போது எதிரேயுள்ள சுவரில் கீதையின் சுலோகங்களை எழுதிய காகிதத்தை ஒட்டி விடுவேன். நினைவு படுத்திக் கொள்ள அவ்வப்போது அதைப் பார்த்துக் கொள்வேன். அன்றாடம் மனப்பாடம் செய்து கொள்ளுவதற்கும், முன்னால் மனப்பாடம் செய்திருந்த சுலோகங்களை நினைவு படுத்திக் கொள்வதற்கும் எனக்கு அந்த நேரம் போதுமானதாக இருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இவ்வாறு, பதின்மூன்று அத்தியாயங்களை மனப்பாடம் செய்து விட்டதாக எனக்கு ஞாபகம்.

என்னைப் பொறுத்த வரையில், எனக்கு வழி காட்டும் தவறாத் துணையாகக் கீதை ஆகிவிட்டது.

அபரிக்கிரகம் (உடைமை வைத்துக் கொள்ளாமை),சம பாவம்(சமத்துவம்)போன்ற சொற்கள் என் உள்ளத்தைக் கவர்ந்தன. அந்த சமபாவத்தை எப்படி வளர்ப்பது? எப்படிப் பாதுகாப்பது என்பதே பிரச்னை.

எனக்கு இருப்பவற்றையெல்லாம் விட்டு விட்டுக் கடவுளைப் பின்பற்ற வேண்டுமா? இதற்கெல்லாம் உடனே நேரான பதில் கிடைத்தது!’ என்னிடம் இருப்பவைகளை எல்லாம் நான் துறந்து விட்டாலன்றிக் கடவுள் நெறியை நான் பின்பற்ற முடியாது!’ என்பதே அந்தப் பதில்.

மகாத்மா காந்தி
மகாத்மா காந்தி

உடனே நான் ரேவா சங்கர்பாய்க்கு எழுதி, இன்சூரன்சுக்கு மேற்கொண்டு பணம் கட்ட வேண்டாம் என்று அறிவித்தேன். இதுவரை கட்டிய பணத்தில் கிடைக்கக் கூடியதைப் பெறப் பார்க்கும்படியும், இல்லாவிட்டால் அத்தொகையைப் போனதாகவே வைத்துக் கொள்ளும்படியும் எழுதினேன். எனக்குத் தந்தையைப்போல் இருந்து வந்தவரான என் சகோதரருக்கும் கடிதம் எழுதினேன்! அதுவரையில் நான் மிச்சமாக வைக்க முடிந்ததையெல்லாம் நான் அவருக்கே கொடுத்து விட்டதாகவும், இனி என்னிடமிருந்து அவர் வேறு எதுவும் எதிர்பார்ப்பதற்கு இல்லையென்றும், மேற்கொண்டும் ஏதாவது மீதமிருக்குமானால் அதை இந்திய சமூகத்தின் நன்மைக்காகவே செலவிட வேண்டியிருக்கிறது என்றும் அவருக்கு விளக்கினேன்!

கோடிக்கணக்கில் கீதை படித்தாலும், நமக்குத் தெரிந்து மகாத்மாவைப்போல் யாரும் முடிவெடுத்ததாக வரலாறு இல்லை!அதனால்தான் அவர் மகாத்மா! அவரைப் போன்று உறுதியான முடிவுகளை எடுத்து, நாமும் வாழ்வில் உயர்வோம்! என்ற உறுதியினை உளத்தில் ஏற்போம்!

பாழ்பட்டு நின்ற பாரத தேச்தை வாழ்விக்க வந்த, வல்லுறுதி படைத்த மகாத்மாவின் வழித்தடத்தைப் பிற்பற்றுவோம்!

-ரெ.ஆத்மநாதன்,

மெக்லீன்,அமெரிக்கா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு