இருபது ஆண்டுகளுக்கு முன் இருந்த முந்தைய பெற்றோர்களுக்கும் இன்றைய பெற்றோர்களுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. இன்று குழந்தை வளர்ப்பில் ரசிக்கக் கூடியதும் விமர்சிக்கக் கூடியதுமாக இருப்பது
‘Daddy's Little Princess’ என்று அறியக்கூடிய தந்தையின் குட்டி இளவரசிகள்.
கண்ணான கண்ணே...
தன் பெண்பிள்ளை மேல் அலாதி பிரியமுள்ள அப்பாக்களின் பெண்குழந்தைகள் அப்பாவுக்கு அடுத்தபடியாக அன்பைத் தேடுவது (வருங்கால) கணவரிடம்தான். அப்பாவுக்கும் மகளுக்கும் இடையிலுள்ள பிணைப்பு அற்புதமானது; அழகானது. ஆனால், அதுவே அந்தப் பெண்ணுக்கு இயல்பு வாழ்க்கையைப் பற்றிய புரிதல் இல்லாமல் போகவும் வழிவகுக்கிறது. அதிக பாசம், அளவு கடந்த அரவணைப்பு, சிறப்புச் சலுகைகள் போன்றவை அந்தப் பெண்ணின் திருமண வாழ்க்கையை பெரிதும் மாற்றியமைக்கவே வழிவகுக்கின்றன.

கல்யாண வயசுதான் வந்திருச்சுடா...
‘எத்தனை நல்ல வரன் வந்தாலும், என் மகள் ஏதாவது ஒரு காரணம் சொல்லி ‘பிடிக்கலை’ என்கிறாள். அவள் அப்பாவும் அவள் சொல்பேச்சு கேட்டு எல்லாவற்றையும் நிராகரிக்கிறார். இப்படியே போனால் என் பெண்ணுக்கு எப்படி திருமணமாகும்?’ என்று ஒரு பெண்ணின் தாய் மிகவும் ஆதங்கப்பட்டார். நம் பிளளைகளின் விருப்பு வெறுப்புகளை மதிக்க வேண்டும் என்பது ஆரோக்கியமான விஷயம். ஆனால், நம் பிள்ளைகள் திருமண வாழ்க்கை பற்றிய புரிதலில்தான் அதைச் சொல்கிறார்களா என்பதுதான் கேள்வி. ஆதங்கப்பட்ட அந்த அம்மா தன் பெண்ணை என்னிடம் அழைத்து வந்து, ‘இவள் மனதில் என்னதான் இருக்கிறது என்று கேட்டுச் சொல்லுங்கள்’ என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSசின்ன சின்ன ஆசை!
அந்தப் பெண்ணிடம் சிறிது நேரம் பேசிய பிறகு, ‘உன் வருங்காலக் குடும்பம் எப்படி இருக்க வேண்டும்?’ என்று கேட்டேன். அதற்கு அவள் சொன்ன பதில் வேடிக்கையாக இருந்தது...
‘எனக்கு தனிக்குடித்தனம்தான் வேண்டும்...’
‘என் வருங்காலக் கணவன் நான் நினைத்தபோதெல்லாம் ஷாப்பிங் கூட்டிப் போக வேண்டும்...’
‘அடிக்கடி ஹோட்டல் கூட்டிப் போக வேண்டும்’
‘வேறு என்ன எதிர்பார்க்கிறாய்?’
என்று நான் கேட்க, அவள், ‘நத்திங்... அவ்வளவுதான்’ என்றாள். இதுபோல இன்று பல பெண்களின் எதிர்பார்ப்புகள் சுவாரஸ்யமாகவும் வேடிக்கையாகவும் இருப்பது வாடிக்கையாகிவிட்டது.

சில கல்லூரி மாணவிகளிடம், வருங்கால கணவனிடம் உள்ள எதிர்பார்ப்பு பற்றிக் கேட்டபோது, 80 சதவிகித பெண்கள் சொன்ன பதில் என்ன தெரியுமா? ‘என்னைக் குழந்தை போல பார்த்துக் கொள்ள வேண்டும்...’‘ரொமான்டிக்காக இருக்க வேண்டும்...’‘எனக்காக சமைக்க வேண்டும்’இந்த அனைத்து எதிர்பார்ப்புகளும் மேலோட்டமானவையாகவே இருக்கின்றனவே தவிர, அவற்றில் ஆழ்ந்த அர்த்தமோ புரிதலோ இருப்பதில்லை.
இன்றைய பெண்களில் ஒரு தரப்பினருக்கு வாழ்க்கைத் துணையை தன் விருப்பம்போலத் தேர்ந்தெடுக்கும் உரிமை இருப்பது மகிழ்ச்சியான விஷயம். அதோடு, வாழ்க்கைக்கான புரிதலும் இருந்தால் மண வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருக்கும்.
முந்தைய தலைமுறைப் பெண்களுக்கு இவையெல்லாம் தெரிந்து தெளிவாக இருந்தார்களா என்றால் இல்லையென்றே சொல்லலாம்.
பெற்றோர்களின் விருப்பத்தின் பேரில் திருமணம் செய்து கொண்டவர்கள்தாம் ஏராளம். ஆனால், கணவன் - மனைவி இருவருக்கும் எப்படியாவது திருமண வாழ்க்கையை கைவிடாமல் பாதுகாக்கும் முனைப்பு மட்டுமாவது இருந்தது. இன்று பல விவாகரத்துகள் நடப்பதற்குக் காரணம் எதிர்பார்ப்புகள் பொய்த்துப் போனால், சட்டென அந்த மண வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் முடிவுக்கு வந்துவிடுவதுதான். இந்த மேலோட்டமான முடிவுகள் திருமண வாழ்க்கையை முழுமையாக புரிந்துகொள்வதற்கு முன்பே முற்றுப் புள்ளிகளாக மாறிவிடுகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தீர்வு என்ன?
காதல் திருமணமோ, பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமோ எதுவாக இருந்தாலும், திருமணத்துக்கு முன், மணமக்கள் இருவரும் சில அடிப்படையான கேள்விகளுக்கு மனம் திறந்து பதில் தேடி ஆலோசிக்க வேண்டும். இதுபோன்ற ஆரோக்கியமான உரையாடல்கள் அவர்களது வருங்கால மணவாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த உரையாடல்கள் தங்களைப் பற்றிய நல்ல பகுதியைத் (Best Side) தாண்டி ஆழமானதாக இருத்தல் நல்லது.

பதில்களைத் தேடுங்கள்!
பின்வரும் கேள்விகளுக்கு பாஸ்பர நேர்மையான பதில்கள் அவசியம். அவற்றை உங்கள் வருங்கால கணவர் / மனைவியுடன் கலந்து பேசுங்கள்.
1. நம் திருமண வாழ்க்கையில் எதை உன்னால் சகித்துக் கொள்ளவே முடியாது?
(இந்தக் கேள்வி ஒருவரின் சகிப்புத்தன்மையின் உச்சத்தை அறிந்துகொள்ள உதவும்.)
2. நம் வருங்கால வாழ்க்கையில் எந்த ஒரு விஷயத்தை உன்னால் ஆத்மார்த்தமாகவும்
நிரந்தரமாகவும் அளிக்க முடியும்?
3. நான் உனக்கு உடன்பாடில்லாத எந்தக் காரியத்தையாவது செய்தாலும், நீ நம் மணவாழ்க்கையை கைவிட மாட்டாய் என்பதற்கான காரணம்?
இந்த மூன்று கேள்விகளும் பல்வேறு உறவுகளின் முக்கியத்துவத்தையும் தனிமனித புரிதல்களையும் பல்வேறு பரிமாணங்களில் உணர்த்தக் கூடியவை. இது பற்றிய பரஸ்பர உரையாடல் மணமக்களிடையே அவர்களின் மேலோட்டமான கனவுகளையும் தனிமனித அகங்காரங்களையும் தாண்டி சிந்திக்க வைப்பவை. இங்கு நான் முக்கியமான சில கேள்விகளை மட்டுமே பகிர்ந்துள்ளேன்.
இது போன்ற ஆரோக்கிய உரையாடல்கள் திருமண வாழ்க்கைக்கு சிறந்த அஸ்திவாரமாக அமையும். தேவையெனில் சிறந்த வழிகாட்டுதலுக்கும் புரிந்துணர்வுக்கும் உங்களுக்கு நம்பிக்கையான திருமண ஆலாசகர்களை அணுகலாம். அவர்களின் வழிகாட்டுதல்கள் உங்கள் வருங்கால வாழ்க்கையில் மண முறிவையும், மன முறிவையும் நிச்சயம் தவிர்க்கும். கூட்டுக் குடும்ப வாழ்க்கையை விட்டுத் தள்ளியிருக்கும் இந்த காலகட்டத்தில் திருமணத்துக்கு முந்தைய பரிதல்கள் பல பிரச்னைக்கான தருணங்களை காணாமல் போகச் செய்துவிடும்.
- மேலும் பேசலாம்!
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.