Published:Updated:

மயக்கும் மசாலா பொடிகள்! - சிம்பிள் செய்முறை | My Vikatan

Masala

நான் வீட்டிலேயே தயாரிக்கும் சில வித்தியாசமான பொடிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

மயக்கும் மசாலா பொடிகள்! - சிம்பிள் செய்முறை | My Vikatan

நான் வீட்டிலேயே தயாரிக்கும் சில வித்தியாசமான பொடிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

Published:Updated:
Masala

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

மசாலா பொடிகளும் நானும்.. ஈருடல் ஓருயிர் போல்… "என்னுடைய எல்லா சமையல்களிலும் இறக்கும்போது நானே என் கைப்பட தயாரித்த ஒரு பொடியைத் தூவி இறக்குவது தான் என் சமையல் ருசிப்பதற்கு அதி முக்கிய காரணம். பொடி வகையில் இரண்டு வகை உண்டு.

ஒன்று, பருப்பு பொடி, கறிவேப்பிலை பொடி, மிளகுப் பொடி பொட்டுக்கடலை பொடி போன்ற ரெடிமேட் பொடிகள் .இவற்றை சாதத்தோடு கலந்து சாப்பிடலாம் சாம்பார், சட்னிகளுக்குப் பதிலாக இட்லி தோசைக்கும் தொட்டுக் கொள்ளலாம்.

Representational Image
Representational Image

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மற்றொன்று சாம்பார் பொடி, மசாலா பொடி... என்று சமையலில் சேர்க்கக்கூடிய பொடி வகைகள். கடைசி நேர அவசரத்தில் மிளகு, சீரகம், மிளகாய், பட்டை, ஏலக்காய் என்று ஒவ்வொன்றாக பார்த்துப் பார்த்து தேடி எடுத்து அரைக்கும் வேலையை மிச்சப்படுத்தி, டென்ஷனை தவிர்க்கக் கூடியவை.. மேலும் உணவின் சுவையை அதிகரிக்க கூடியவை இவை. மசாலா பொடிகளை குறைந்த செலவில் நாமே தயாரிக்கலாம். பொருட்களின் அளவை கூட்டிக் குறைப்பதன் மூலம் சுவையையும் நம் விருப்பம் போல் தேர்வு செய்யலாம்.

நான் வீட்டிலேயே தயாரிக்கும் சில வித்தியாசமான பொடிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சீரகம் ,தனியா ,மாங்காய் தூள், உப்பு தலா அரை கப்.

கருப்பு உப்பு, மிளகு தலா ஒரு டேபிள் ஸ்பூன்

காய்ந்த மிளகாய் 15

அனைத்தையும் வெயிலில் நன்கு காய வைத்து மிக்ஸியில் நன்கு அரைத்தெடுக்க சாட் மசாலா பொடி தயார். இந்த பொடியை பழங்களின் மீதும், தயிர் பச்சடியோடும், பேல் பூரி, பானி பூரி வகைகளிலும் (கலந்து) உபயோகிக்கலாம் .(எதனோடு சேர்த்தாலும் சுவை தூக்கலாக இருக்கும்.)

Masala
Masala

பொட்டுக்கடலை ஒரு கப், காய்ந்த மிளகாய் 6, மிளகு அரை டீஸ்பூன் வெறும் வாணலியில் லேசாக வறுத்து பூண்டு 4 பற்கள் சிறிதளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்க வாசமான பொட்டுக்கடலை பொடி ரெடி.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இட்லிக்கு தொட்டுக் கொடுக்கலாம் சுவை அபாரமாக இருக்கும். (இந்தப் பொட்டுக்கடலை பொடி என் நட்பு வட்டத்தின் பிள்ளைகள் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று.. அந்தப் பிள்ளைகளின் பிள்ளைகள் இப்பொழுது பள்ளி செல்கின்றன. நேற்று கூட பெங்களூரில் இருந்து அலைபேசியில் அழைத்த தோழியின் மகள், ஆன்ட்டி நாங்கள் ஸ்கூலுக்கு போகும் போது நீங்கள் ஒரு பொட்டுக்கடலை பொடியை செய்து தருவீர்களே.. அதன் செய்முறையை கூறுங்கள் என்றாள். (பார்த்துக் கொள்ளுங்கள்... அதன் சுவையை..)

மிளகு, சீரகம் தலா 1/2 டேபிள் ஸ்பூன்

காய்ந்த மிளகாய் பத்து

கடலைப்பருப்பு ,உளுத்தம் பருப்பு தலா ஒரு டேபிள்ஸ்பூன்

வெள்ளை எள், தனியா தலா இரண்டு டீஸ்பூன்

அனைத்தையும் வாணலியில் வறுத்தெடுத்து பொடித்து வைத்துக்கொண்டால், வாசமான மசாலா பொடி தயார். எல்லா வகையான வத்தக் குழம்பு மற்றும் அரைத்து வைத்த சாம்பாருக்கும் இறக்கும் தருவாயில் ஒரு டேபிள் ஸ்பூன் சேர்க்க உணவின் தரம் கூடும்.

புளிக்காய்ச்சல் செய்யும் போதும் புளிக்காய்ச்சல் கொதித்து இறக்கும் தருவாயில் இந்த பொடியில் ஒரு டேபிள் ஸ்பூன் கலக்க புளிக்காய்ச்சலின் சுவை கோயில் புளியோதரை போல் இருக்கும் .

Representational Image
Representational Image

வீட்டில் ஊறுகாய் இல்லையா? கடையில் போய் வாங்க சோம்பேறித்தனமா..? நாமே நம் கைப்பட ஊறுகாய் பொடியை தயாரித்து வைத்துக் கொண்டால் அந்தந்த சீசனில் கிடைக்கும் காய்களை வைத்து சுவையான காரசாரமான ஊறுகாய் தயாரித்து விடலாம்.

மிளகாய் தூள், கடுகுத்தூள் தலா ஒரு கப் வறுத்தரைத்த வெந்தய பொடி ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூள் ஒரு டீஸ்பூன் உப்பு தேவையான அளவு.

இந்தப் பொருட்களை ஒன்றாக கலந்து வைத்துக் கொண்டால் ஊறுகாய் பொடி ரெடி. மாங்காயைப் பொடியாக நறுக்கி அதில் தேவைக்கேற்ப இந்த பொடியைத் தூவி நல்லெண்ணெய் கலந்து வைத்துக் கொண்டால் அவசர மாங்காய் ஊறுகாய் ரெடி.

மயக்கும் மசாலா பொடிகள்! - சிம்பிள் செய்முறை | My Vikatan

மிளகாய்த்தூள் அரைக்கப், தனியா தூள் சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் தலா கால் கப் , கருப்பு உப்புத்தூள் அரை டீஸ்பூன், லைம் சால்ட் 2 டீஸ்பூன் இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து வைத்துக்கொண்டால் தந்தூரி மசாலா பொடி ரெடி‌.

பனீர், ஆலு , காலிபிளவர் ஆகியவற்றில் இந்த பொடியை தூவி தேவையான உப்பு சேர்த்து ஊற வைத்து எண்ணெயில் பொரித்து எடுக்க அருமையாக இருக்கும். எல்லா வகையான கிரேவி செய்யும் போதும் இந்த பொடியில் சிறிதளவு சேர்த்துக் கொண்டால் கிரேவியின் சுவை தாறுமாறாக இருக்கும்.

சரி இதுவரை காரசாரமான பொடிகள் சொல்லியாச்சு. இப்போ வாழ்க்கையின் சுவை கூட்டும்' பாக்குபொடி எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாமா ?

எங்கள் வீட்டில் விருந்திற்குப் பிறகு நான் தயாரித்து கொடுக்கும் இனிப்பு பாக்குப் பொடிக்கு ரசிகர் கூட்டமே உண்டு. 100 கிராம் கொட்டைப் பாக்கை ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ள வேண்டும். சிறிதளவு நெய்யை காய வைத்து அதில் பாக்கை வறுத்துக் கொள்ளவும்.

மேலும் சிறிதளவு நெய்யில் 15 ஏலக்காய், பெருஞ்சீரகம் 4 டீஸ்பூன், கசகசா ஐந்து டீஸ்பூன், கிராம்பு எட்டு ,சாரப்பருப்பு இரண்டு டேபிள் ஸ்பூன், வெள்ளரி விதை ஒரு டேபிள் ஸ்பூன், சேர்த்து வறுத்துக் கொள்ளவும். சற்று ஆறியதும் பாக்குடன் சேர்த்து சற்று கரகரப்பாக பொடித்து வைத்துக் கொள்ளவும். கடைசியில் சர்க்கரையை சேர்த்து கலக்கினால் பீடா, வெற்றிலை என்று எதனோடு வேண்டுமானாலும் இதனை போட்டு கலக்க கம கம வாசமான இனிப்பு பாக்குப் பொடி ரெடி பாக்குப் பொடியின் மனம்' சொக்குதே மனம்'. என்று பாட வைக்கும்.

Betel
Betel

ஞாயிற்றுக்கிழமைகளில் உங்கள் கைகளாலேயே வெற்றிலையில் இந்த இனிப்பு பாக்குப்பொடியை கலந்து பீடாவாக மடித்து உங்கள் கணவருக்கு கொடுங்கள். மாலை சந்தோஷமாக அவர் உங்களை கோயிலுக்கோ கடற்கரைக்கோ , சினிமாவுக்கோ அழைத்துச் செல்வது உறுதி.

வாழ்க்கையை சந்தோஷமாக மசாலா பொடிகளுடன் இனிதே கொண்டாடுங்கள் !

மசாலா பொடிகள் அவசர உணவுக்கு மட்டுமல்ல.. ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் அருமையான தாம்பத்தியத்துக்கும் உகந்தவை!

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.