Published:Updated:

ஆசையில் ஓர் கடிதம் | My Vikatan

Representational Image ( Photo by A Koolshooter: )

மொத்தத்தில் மகள் மனைவி, மருமகள் தாய், அம்மம்மா என பல நிலைகளிலும் தன் கடமையை சரிவர செய்து வருகிறாள். ஆனாலும் அவ்வப்போது சோர்ந்து காணப்படுகிறாள். காரணமே இல்லாமல் எரிந்து எரிந்து விழுகிறாள். தனக்குத் தானே பேசிக் கொள்கிறாள் .

ஆசையில் ஓர் கடிதம் | My Vikatan

மொத்தத்தில் மகள் மனைவி, மருமகள் தாய், அம்மம்மா என பல நிலைகளிலும் தன் கடமையை சரிவர செய்து வருகிறாள். ஆனாலும் அவ்வப்போது சோர்ந்து காணப்படுகிறாள். காரணமே இல்லாமல் எரிந்து எரிந்து விழுகிறாள். தனக்குத் தானே பேசிக் கொள்கிறாள் .

Published:Updated:
Representational Image ( Photo by A Koolshooter: )

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

கடந்த மூன்று மாதங்களாக என்னவள் சோர்வாகவே இருக்கிறாள். பார்த்துப் பார்த்துப் ஒவ்வொருவருக்கும் பணிவிடை செய்பவள் முகத்தில் ஒரு சிரிப்பு இல்லை . காலிக்குடத்தில் சில்லரைப் போட்டால் எப்படி சத்தம் வருமோ அப்படி ஓயாமல் தொணதொணவென்று பேசுபவள்... நாம என்ன கேள்விக் கேட்டாலும் . ம்ம்,சரி...என ஒரு வார்த்தையில் பதில் சொல்லி முடித்து விடுகிறாள்.

என்ன ஆச்சு இவளுக்கு .? ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது என்னிடம் சொல்லத் தயங்குகிறாள்.

அப்பா, அம்மாவை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்கிறாள். நேரா நேரத்துக்கு மருந்து மாத்திரை உணவு தந்து விடுகிறாள்.

மொத்தத்தில் மகள் மனைவி, மருமகள் தாய், அம்மம்மா என பல நிலைகளிலும் தன் கடமையை சரிவர செய்து வருகிறாள். ஆனாலும் அவ்வப்போது சோர்ந்து காணப்படுகிறாள். காரணமே இல்லாமல் எரிந்து எரிந்து விழுகிறாள். தனக்குத் தானே பேசிக் கொள்கிறாள் . அடிக்கடி கண்ணாடி முன் நிற்கிறாள். யாராவது கவனிப்பது தெரிந்ததால்நகர்ந்து சென்று விடுகிறாள் ஏனிந்த மாற்றம் அவளிடம்.?! கேட்டால், மாமாவிற்கு டிஃபன் தரணும், பேரனுக்கு சாப்பாடு ஊட்டணும், அத்தைக்கு காபி தரணும்... ன்னு சொல்லி என்னை நாசுக்காக தவிர்க்கிறாள்.

Representational Image
Representational Image

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சரி, இதற்கு ஒரே வழி.. நம் மனதில் உள்ளதை ஒரு கடிதத்தின் மூலம் அவளுக்கு தெரிவிக்கலாம் என்று நினைத்து கடிதம் எழுதத் தீர்மானித்தேன். என் இனிய செல்லத்துக்கு , பாயும் ஒளி நீ எனக்கு பார்க்கும் விழி நானுனக்கு...

(25 வருடங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தத்துக்கும் திருமணத்துக்கும் இடையில் கடிதம் எழுதியது..)

(திடீரென என்னிடமிருந்துவந்த கடிதத்தை பார்த்தவுடன் நீ புருவத்தை உயர்த்துவது தெரிகிறது!)

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நீ

நீ தான் என்றாலும்..

என்னோட நீ

என்னோட ஒரு சின்ன சந்தோஷத்தை உன்கிட்ட பகிரும்போது பலமடங்கும், வருத்தத்தை சொல்றப்போ அது மறைந்தும் போய்விடும்.

அது உனக்கே தெரியும்.. உனக்கு நான் அப்படி தெரியவில்லையா?

எதையோ உள்ளுக்குள் வைத்துக் கொண்டு வெளியில் சிரிப்பது போல் காட்டிக் கொள்கிறாயே?

என்னோட உணர்வுகளுக்கு உயிர் கொடுக்கும் உற்றத் தோழியே!

ஓஓஓஓஓஓ....

இப்பொழுதுதான் என் மரமண்டையில் உன் தடுமாற்றங்கள் புரிகிறது..

ஆம்...' மெனோபாஸ்' எனப்படும் நிலையை நீ எட்டி இருக்கிறாய் என நினைக்கிறேன்.

அந்த நேரத்தில் ஏற்படும் குழப்பங்கள் தான் உன்னை இப்படி தடுமாறச் செய்கிறது.

'மெனோபாஸ்' உன்னுடைய சுறுசுறுப்பான வாழ்க்கை முற்றுப் பெறுவதன் அறிவிப்பு அல்ல ! இது ஒரு புது வாழ்க்கையின் தொடக்கம். இதனாலெல்லாம் உடல் அழகு கெடாது.

(என்னிடம் ஏதாவது மாற்றம் தெரிகிறதா என்று நீ அன்று கேட்டது இப்பொழுது புரிகிறது) வயது ஏற ஏற தோற்றம் மாறுவது இயற்கை.

Representational Image
Representational Image

சுருக்கம், நரை ஆகியவை வயது முதிர்ச்சியின் ஒரு அங்கம்.

மெனோபாஸ்' தாம்பத்தியத்தின் முடிவு என்று நினைக்காதே !

இந்தப் பருவத்தில்தான் எந்தவித பயமுமின்றி முழுமையான தாம்பத்திய சுகத்தை அனுபவிக்கலாம். தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து இல்லறம் நடத்தும் இனிய பருவமிது. . மொத்தத்தில் இயற்கை கொடுத்த இனிமையான காலம் 'மெனோபாஸ்'கண்ணம்மா. அதற்காகவெல்லாம் கவலைப்படாதே! மகப்பேறு மருத்துவரிடம் உன்னை அழைத்துச் செல்கிறேன்.உன் சந்தேகங்களை கேட்டுத் தீர்த்துக் கொள்.

ஆசை அறுபது நாள் என்று யார் சொன்னது?

எத்தனையெத்தனை 60 நாட்களைத் தாண்டினாலும் நீ என் ஆசையாகவே தான் இருப்பாய். கண்ணம்மா!

உன்தொணதொண பேச்சு தான் உனக்கு அழகு . உன் மௌனம் என்னை வதைக்கிறது. .We can talk about everything or nothing it's always okay with you!

Love you darling love you so much.

இந்தக் கடிதத்துடன் உனக்கு மிகவும் பிடித்த விக்ரம் 2 படத்துக்கான 2 டிக்கெட் வைத்து உள்ளேன். தயாராக இரு . இருவரும் போகலாம்.

எப்பவும் உனக்காக நான்

உனக்காக மட்டும்தான் நான். என்பதை நினைவில் கொள் கண்ணம்மா. அன்பு முத்தங்கள்.

பிரியமுடன்

உன் உயிர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism