Published:Updated:

அத்தியாவசியத்தைக் கூட கஷ்டப்பட்டுதான் வாங்கனும் போல! - மிடில் கிளாஸ் மைண்ட் வாய்ஸ்

Representational Image
Representational Image

அதென்னவோ தெரில வீட்ல அம்மா, புளி இல்ல, அரிசி இல்ல, உப்பு இல்லனு சொல்லும் போதெல்லாம் கூட நாங்க Middle Class-னு ஃபீல் வராது, ஆனா..

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

'நிறைய ஆசைப்படுவோம் ஆனா ஆசப்பட்ட எல்லாமே இன்னைக்கு வரைக்கும் ஒரு கனவா தான் இருக்கும். இதுவரைக்கும் ஆசைப்பட்ட எதாச்சும் ஒரு விசயம் முழுசா கிடசுருக்கான்னு கேட்டா இல்லனுதான் சொல்லனும். எது எதுக்கெல்லாம் ஆசப்படுவோம்னா, சொந்த வீடு, கார், Bank balance, Property -னு பெரிய ஆசைகள் ல தொடங்கி போட்டுக்கற Shirt, Jeans, Branded Watch, Shoes, Sports bike, Flight Journey, Train-ல AC Coach Travel, Fish tank, Hybrid Dog, Friends கூட Tour, பெரிய ஹோட்டல்ல Dinner -னு, சின்ன சின்ன ஆசைகள் வரைக்கும் எல்லாத்துக்கும் ஆசப்படுவோம் இதுல ஏதாச்சும் கிடைக்கலனா அதுக்காக Feel பண்ணிட்டே இல்லாம சூழ்நிலைகளை அனுசரிச்சு சரிதான் போன்னு போய்ட்டே தான் இருப்போம். jow

Representational Image
Representational Image

அதென்னவோ தெரில வீட்ல அம்மா, புளி இல்ல, அரிசி இல்ல, உப்பு இல்லனு சொல்லும் போதெல்லாம் கூட தெரியாது நாங்க Middle Class-னு, ஆனா பக்கத்து தெருவுக்கு போனும்னா கூட நண்பனோட பைக்கை எதிர்பார்த்து நிக்கும் போதும், Bill, Loan and EMI Pay பண்ண முடியாம தவிக்கும் போதும், நாம போட்டிருக்கிற Dress-அ மத்தவங்களோட Compare பண்ணி சொல்லும் போதும், ஓசி கார்-ல Driving பழகும் போதும், Status-னால காதல தவறவிடும் போதும், காசில்லாம வாய்ப்புகளை இழக்கும் போதும் அதெல்லாம் விட ஆடம்பரத்த இல்ல அத்யாவசியத்தைக் கூட ஆசப்பட்டு கஷ்டப்பட்டுதான் வாங்கனும்னு இருக்கும் போதுதான் தோனும் நாங்கல்லாம் Middle Class–னு!

அதுக்காக எங்க வாழ்கைல சந்தோஷமே இருகாதோன்னு நினைக்க வேண்டாம், எங்கள மாதிரி சந்தோஷமா இருக்க இந்த உலகத்துல யாராலயும் முடியாது. நாளைக்கு என்னாகுமோன்னு Pressure எங்களுக்கு இல்ல ஆனா இன்னைக்கு இந்த சூழல்-அ கடந்து போய்ட்டாலே அத சந்தோசமா நினைக்குற மனசு இருக்கு. புரிஞ்சுக்கற Friends கிடச்சுட்டாலே Life-ல எல்லாமே கிடச்சுடும்-னு சொல்வாங்க அப்படி பாத்தா எங்களுக்கு வெறும் Friend-ஆ மட்டுமில்ல வீட்ல ஒருத்தரா நினைக்கற அளவுக்கு Friends இருக்கானேனு நினைக்கும் போதே கர்வமா இருக்கு. மாளிகை மாதிரி வீட்ல ஆளுக்கொரு ரூம்-ல அடஞ்சு கிடந்து பழக்கம் இல்ல, ஒரு Hall, ஒரு Kitchen தான் வீடுன்னா கூட அதுல எந்நேரமும் சிரிச்சு உரிமையா பேசி சண்டை போட்டுக்கிட்டு இருக்கற சந்தோசமே தனி தான். அப்பா-னாலே இறுக்கமா, மூஞ்ச வெறப்பா வச்சுருப்பாரு அதிகம் பேச மாட்டாருங்கற Formula இங்க இல்ல.

Representational Image
Representational Image

Friendly-யா தோல தட்டி குடுத்து சகஜமா பேசுவாருன்னு மரியாதையும் இருக்கும் அதே சமயம் தப்பு பண்ணா தோலுக்கு மேல வளந்த புள்ளைன்னு கூட பாக்காம அடி உதையும் குடுப்பாருன்னு பயமும் இருக்கும். எப்போதும் திட்டிக்கிட்டே இருந்தா கூட புள்ள சாப்பிடாம போயிடக் கூடாதேன்னு கண்ண கசக்கிக்கிட்டே சமாதானப்படுத்தும் போது வெகுளியாய் தெரியர அம்மா, ஊர்ல புள்ளைய பத்தி ஒரு வார்த்தை தப்பா பேசிட்டா நமக்காக வரிஞ்சு கட்டிட்டு சண்டைக்கு போகறத பாக்கும் போது நாம தான் இந்த உலகத்துல எல்லாங்கற திமிரு வரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Night ஆனா தெரு முனைல Friends கூட உட்காந்து Games விளையாடுறது. போரடிக்கும் போதெல்லாம் Movie போறது, தலைவர் படம் Release ஆனா First Day, First Show போறது. வருசம் Full-ஆ Plan பண்ணி கடைசில போன Place -கே Tour போயிட்டு வர்றது, Sunday ஆனா Ground-ல போய் Cricket விளையாடுறது. இதுக்கிடையில Love, Friends Support, இடையில இடையில கனவு மாதிரி வந்து நியாபகப்படுத்திட்டு போற Passion, அப்படின்னு ரொம்ப சின்ன வட்டமா எங்களோட Life இருந்தாலும் அதுல கிடைக்குற சந்தோசம் ரொம்ப பெருசு தாங்க.

Representational Image
Representational Image

மொத்தத்துல சொல்லனும்னா காலேஜ் போரதுக்கு நல்லதா நாலு Dress வாங்கனும்ன்னு ஏக்கமா இருந்தாலும் வீட்டோட Financial Situation புரிஞ்சுகிட்டு இருக்கற இரண்டு Dress -அ திரும்ப திரும்ப போட்டுட்டு வறுமைய எதிர்த்து நிக்கற தன்னம்பிக்கையா இருக்கட்டும்,

வேலைக்கு போற வயசுல, மனசுல தனக்குன்னு ஆயிரம் ஆசைகள் இருந்தா கூட அதெல்லாம் பெருசா காட்டிக்காம குடும்பத்த வறுமையில இருந்து எப்படியாவது வெளிய கொண்டு வந்துட மாட்டோமான்னு வைராக்கியத்தோட வேலைக்குப் போற துணிச்சலா இருக்கட்டும்,

தான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் அக்கம் பக்கம் தனக்கு தெரிஞ்சவங்க உதவின்னு கேட்கும் போது இல்லனு சொல்லாம தன்னால முடிஞ்சவரைக்கும் உதவனும்-னு நினைக்கற வெள்ளந்தியான மனசா இருக்கட்டும்,


மாதம் 2 EMI, Loan, வாடகை வீடு, Monthly Budget, அப்படின்னு எத்தனையோ கஷ்டங்களுக்கு இடையில இருந்தாலும் தன்னை நம்பி வந்தவளையும் தன் குழந்தைகளையும் தன்னால முடிஞ்ச அளவுக்கு சந்தோசமா நல்லா பாத்துக்கனும்னு நினைக்கற பேரன்பா இருக்கட்டும்,

Representational Image
Representational Image

அறுவது வயச தாண்டினாலும், ஆயிரம் வியாதிகள் உடம்பில் இருந்தாலும் இந்த வயசுலயும் தன்னோட புள்ளைங்களுக்கு பாரமா இருக்கக் கூடாதுன்னு தன்னால முடிஞ்ச வேலைகள செஞ்சுட்டு இப்பவும் யாரோட தயவும் இல்லாம தன் சொந்த காலில் நிக்கனும்-னு நினைக்கற திமிரா இருக்கட்டும்,

இதெல்லாம் தான், இந்த தன்னம்பிக்கை, வைராக்கியம், வெள்ளந்தியான மனசு, பேரன்பு, திமிரு இதெல்லாம் சேர்ந்தது தான் நாங்க.

ஒருவரில சொல்லனும்னா "குடும்பத்தோட மொத்த கஷ்டத்தையும் தோள்ல தூக்கி போட்டுக்கிட்டு எந்த கஷ்டமுமே இல்லாத மாதிரி எதார்த்தமா நடந்துக்கற Real Heroes தான் எங்கள மாறி Middle class Guys.

-ஐஸ்வர்யா சந்திரன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு