வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அண்மையில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் சாரை சாரையாக வந்திறங்கிய சம்பவம் ஒரு சாட்சி. வடமாநிலத்தவர்களின் வாழ்வாதார தேவையை தமிழ்நாடு பூர்த்தி செய்து கொண்டிருக்கிறது என்றே கூறலாம். இது ஒரு புறம் இருக்க, தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டு பன்னெடுங்காலமாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்கள் மத்தியில் வேலையில்லாத் திண்டாட்டம் இருந்துக் கொண்டிருப்பதும் இன்னொரு புறம்.

தன் வாழ்வாதாரத்திற்க்காக வேலை வாய்ப்பைத் தேடி வேறுவேறு மாநிலம் கண்டம் விட்டு கண்டம் இடம்பெயர்தல் என்பது உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை. இதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் தொழில்துறைக்கு போதிய அளவு மனித வளம் இல்லாமையால் வடமாநிலத்தவர்களின் வருகை அதிகமானது என்ற ஒரு சிலரின் பார்வையும், தமிழ்நாட்டில் இருக்கக் கூடியவர்கள் குறைந்த நேரத்திற்கு அதிக சம்பளம் கேட்கிறார்கள் ஆனால், வடமாநிலத்தவர்கள் குறைந்த சம்பளத்திற்கு அதிக நேரத்திற்கு வேலை செய்கிறார்கள் என்கிற தமிழ்நாட்டு தொழிலதிபர்களின் பார்வையும் குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது.
கலைஞர் காலத்தில் தலைமைச் செயலக கட்டடம் கட்ட வந்த வடமாநிலத்தவர்கள், படிப்படியாக திருப்பூர் பின்னலாடை தொடங்கி கட்டடத்தொழிற்சாலைகள், மேம்பாலங்கள், ஹோட்டல்கள், டீ கடைகள்என தமிழ்நாடு முழுவதும் ஆக்கிரமித்துவிட்டார்கள் என்பது நிதர்சனம். தமிழ்நாட்டினரின் மீதுள்ள குறைவானம்பார்வை இங்குள்ள கார்ப்பரேட்டுகளிடம் இருந்தது மட்டுமல்லாமல் அரசாங்கங்களிடமும் தமிழ்நாட்டினருக்கான பார்வையும் தேவையும் குறைவாகவே இருந்தது எனலாம். அப்படியென்றால் வடமாநிலத்தவர்களின் வருகைக்கு காரணம் தனியார் தொழில் நிறுவனங்கள் மட்டுமல்லாமல் தமிழ்நாடு அரசாங்கமும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது.

இடம்பெயர்ந்து வரும் வடமாநிலத்தவர்கள் தனியார் நிறுவனங்களில் மட்டுமின்றி தமிழ்நாட்டில் மத்தியஅரசுப் பணிகளிலும் தன் கால்தடங்களை பதித்து வருகின்றனர். குறிப்பாக அஞ்சல்துறை, வங்கி, ரயில்நிலையம் மற்றும் சுங்கச் சாவடி போன்ற துறைகளில் பணியமர்ந்துகொண்டு தமிழ்நாடு அரசு வழங்கும் சலுகைகளையும் பெற்று வருகின்றனர். இதனால் தமிழ்நாட்டில் வாழும் பூர்வகுடிகளின் வாழ்வாதாரமும் வேலைவாய்ப்பும் பாதிக்கப்படுகிறது.
ஒரு பாலைவனத்தில் கடும் குளிரில் ஒரு கூடாரத்தில் ஒருவன் தங்கியிருந்தான். அந்தசமயம், ஒரு ஒட்டகம் ஒன்று கடும் குளிர் தாங்க முடியாமல், கூடாரத்தில் தங்கியிருந்தவரிடம் சிறுது நேரம் ஒதுங்கிக் கொள்கிறேன் என்று கேட்டது. உடனே, சரி என்று கூடாரத்தில் இடம் கொடுத்தான். நேரம் ஆகஆக, கூடாரத்தில் தங்கியிருந்தவனை வெளியில் தள்ளிவிட்டு ஒட்டகம் முழு கூடாரத்தையும் ஆக்கிரமிப்பு செய்துகொண்டது. இறுதியில் அவன் கூடாரத்தை விட்டு வெளியேற்றப்பட்டு நிற்கதியாய் நின்றான்.

நான் மேலே கூறியது, மண்ணின் மைந்தர்களான பாலஸ்தீனியர்களை இஸ்ரேலியர்கள் வந்து ஆக்கிரமித்த சம்பவத்தால் உருவானது தான் இந்தக்கதை. இதே கதை வரும் காலங்களில் இதே நிலையில் நீடித்தால் தமிழ்நாட்டிலும் வடவர்களின் ஆதிக்கம் இஸ்ரேலியர்களைப்போல் நம்மையும் தமிழ்நாட்டை விட்டு அகற்றி விடுவார்களோ என்ற பயம் எழுகிறது.. எனவே வடமாநிலத்தவர்களின் வருகையை கட்டுப்படுத்த வேண்டும் என்பது என் கருத்து!
-Rajkumar Che
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.