Published:Updated:

மனித குலத்தின் சமகால சவால்! - கொசுக்களின் கதை

கொசுக்கள் ஒரு வகையிலான பறக்கும் அற்புதம். மழை பொழிவின் போது விழும் மழை துளிகளினூடேயான இடைவெளியில் சாமர்த்தியமாக பறக்கும் வல்லமை கொண்டவை இந்த கொசுக்கள்...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

'டேய் நாராயணா இந்த கொசு தொல்லை தாங்க முடியலடா' என நடிகர் கவுண்டமணி பேசிய வசனம் அத்தனை பிரபலம்.

'ஆமா.... உங்களுடைய காதுகிட்ட வந்து அந்த கொசு பாடுகிற பாட்டு அத்தனை ந‌ன்றாகவா உள்ளது, ஓயாமல் கைய தட்டுறீங்க?!' இப்படி கொசுக்களை பற்றிய நகைச்சுவைகளும் ஏராளம்.

ஆம், இப்போது இந்த கட்டுரையில் கொசுக்களை பற்றிய சில தகவல்களை அறிய போகிறோம்.

கட்டுரைக்குள் செல்வதற்கு முன்பாக சில கேள்விகள்-பதில்கள்.

உலகின் அதிகமான உயிரிழப்புகளை தரும் உயிரினம் எது?

பதில் - கொசு.

மனிதர்களை, விலங்குகளை கடிப்பது ஆண் கொசுக்களா, பெண் கொசுக்களா?

பதில்:- பெண் கொசுக்களே.

இந்த உலகிலுள்ள பலரிடமும் கேட்க பட வேண்டிய ஒரு கேள்வி, உயிர் வாழ எது அவசியம்?! என்ற கேள்வியை கேட்டால் பதில்கள் வந்து விழும், உணவு, உடை, உறைவிடம் என வரிசையாக. பல கோடியில் மாளிகை கட்டி அங்கே வசி என உயிரிடம் சொன்னால் இருக்குமா?

mosquito
mosquito

பல லட்சம் மதிப்புள்ள உடையை எடுத்து உயிரை அதில் வசிக்க சொன்னால் இருக்குமா?

நட்சத்திர உணவு விடுதியில் உணவை தயாரித்து அதில் உயிரை வசிக்க சொன்னால் இருக்குமா?

சரி, உயிர் வாழ எது அவசியம் என்ற கேள்விக்கான விடை. உடல்! உடல் வளர்த்தேனே.. உயிர் வளர்த்தேனே..! என திருமூலர் பாடியதுதான். நமது உயிர் வாழ, நமது உடலை விட வசதியான, அழகான இடம் ஏதுமில்லை, எங்குமில்லை.

இந்த உலகிலுள்ள உயிர்களுக்கு எல்லாம் ஒரு நோக்கம் உண்டு. மனிதனை தவிர்த்து, ஆம் மனிதனுக்குத்தான் மண் மீது ஆசை, பொன் மீது ஆசை, பொருள் மீது, வீடு, வாசல், கார், கப்பல், விமானம் இப்படி பட்டியல் போட்டால் பக்கமே போதாது. ஆனால், மனிதனை தவிர அனைத்து உயிர்களுக்கும் பசும் புல்லில் தொடங்கி பறவவை வரை அனைத்துலக உயிர்களுக்கும் ஒரே நோக்கம். ஒரு பசும் புல் தனது வேரினை பூமிக்குள் பரப்பி, நீட்டி நீரினை உறிஞ்சி வளர்ந்து பின் கருகி இன்னொரு பசும் புல்லை உருவாக்கி மண்ணோடு மண்ணாகி போகிறது. தன்னுடைய 'சந்ததி' இந்த புவியில் வாழ வேண்டுமென்பதே அனைத்து உயிர்களின் நோக்கமும்.

இப்படியாக நோக்கம், கொள்கை கொண்ட உயிரினங்களுள் ஒன்றுதான் கொசுவும். ஆண் கொசுக்களும், பெண் கொசுக்களும் தாவர சாறுகளை உறிஞ்சியே வாழத் தொடங்குகின்றன. பெண் கொசுக்கள், தன்னுடைய இனப் பெருக்கத்திற்காக முட்டையிடும் காலத்தில் அதற்கு தேவையான சத்து ரத்தத்தில் உள்ளதால், முட்டையிடும் பெண் கொசுக்களுக்கு ரத்தம் தேவைப் படுகிறது. அதன் பொருட்டே பெண் கொசுக்கள் ரத்தத்தை உறிஞ்ச கடிக்கிறது. கொசுக்கள் கடித்து

ரத்தத்தை உறிஞ்ச பற்கள் தேவை இல்லை. ஆனால், கொசுவின் கண்களுக்கு கீழே நுட்பமான இன்ஜெக்ஷன் போன்ற ஊசி வைத்திருக்கிறது. ஒரு ஊசியல்ல, ஆறு ஊசிகள். ஆறு ஊசிகளையும் ஒன்றாக இணைத்து ஒற்றை ஊசியாக ஒன்றிணைத்து தோலுக்குள் இறக்குகிறது. கடிக்கும் முன்பாக 'லோக்கல் அனஸ்தீஸியா' வகையிலான சுரப்பியை முதலில் செலுத்தும், அடுத்ததாக கடித்தவுடன் ரத்தம் உறைந்து போகாமல் இருக்க ஒரு வித வேதியியல் சாற்றினை சுரந்து செலுத்த, அந்த வேதியியல் நொதி ரத்தத்துடன் கலக்கிறது. அப்போதுதான் நம்மால் வலியை உணர முடியும். கொசு கடித்த இடத்தை அடிக்கவோ, சொறியவோ முற்படுகையில் கொசுக்கள் தமது ரத்தம் உறிஞ்சும் பணியினை முடித்து சிறகடித்து பறந்து விடுகிறது.

mosquito
mosquito

Local Anesthetic எனப்படும் உள்ளூர் மயக்கவியல் மருந்தையும், ரத்தம் உறையாதிருக்க வேதி நொதியை கொசுக்கள் செலுத்தும் போதுதான் மலேரியா, டெங்கு, சிக்குன் குன்யா, JE எனப்படும் மூளைக்காய்ச்சல், ஜிகா வைரஸ்,யானைக்கால் நோய் கிருமிகள் உடலுக்குள் உட்செலுத்தப் படுகின்றன.

இப்போதைய கொரோனா ஊரடங்கு, உலகடங்கு என்ற நிலையில் டெங்கு பரவல் தலை தூக்கி உள்ளது. சுமாராக 2,700 கொசு வகைகள் உள்ளன. கொசுக்கள் ஒரு வகையிலான பறக்கும் அற்புதம். மழை பொழிவின் போது விழும் மழை துளிகளினூடேயான இடைவெளியில் சாமர்த்தியமாக பறக்கும் வல்லமை கொண்டவை இந்த கொசுக்கள்.

ஆரம்பத்தில் ஆண்கொசுக்கள் கடிப்பதில்லை, பெண் கொசுக்களே கடிக்கும் என்பது போன்று இன்னொரு கூடுதல் தகவல், பக்குவமான ஆண் கொசுக்கள் ஏழு நாட்கள் முதல் பத்து நாட்களே வாழும். ஆனால் பெண் கொசுக்கள் 21 முதல் 27 நாட்கள் வரை வாழும். அதென்ன பக்குவமான கொசு, ஆம் கொசுக்கள் தமது வாழ்நாளில் நான்கு நிலைகளை கொண்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முட்டை 1-2 நாட்கள

கொசுப் புழு 6-8 நாட்கள்

கூட்டுப் புழு 2நாட்கள்

பக்குவமான கொசு நான்கு நிலைகளை கடந்து பக்குவமான கொசுவாக பறக்கும். 2,700 வகையிலான கொசுக்கள் உள்ளதென அறிந்தோம். இப்போது மூன்று வகையான கொசுக்களை பற்றி மட்டும் பார்ப்போம்.

அனொபிலஸ்

க்யூலெக்ஸ்

ஏடீஸ் எஜிப்டி.

இவை மூன்றும்தான் மனித குலத்தின் சமகால சவால்கள்.

அனெபிலஸ் எனப்படும் மலேரியாவை பரப்பும் கொசுக்கள் சுத்தமான தண்ணீரால் மட்டுமே உற்பத்தியாகின்றன.

mosquito
mosquito

க்யூலெக்ஸ் எனப்படும் கொசு வகை யானைக் கால் நோய், Japanese Encephalitis JE எனப்படும் மூளைக் காய்ச்சலை பரப்பும் இவ்வகை கொசுக்கள் அசுத்தமான நீரில் உறுபத்தி ஆகும். ஏடீஸ் எஜிப்டி எனப்படும் கொசுக்கள்தான் டெங்கு, ஜிகா வைரஸ ,சிக்குன் குனியா வை பரப்புகின்றன.இவ்வகை கொசுக்கள் சுத்தமான , கலன்களில், தொட்டிகளில் உள்ள நீரிலே உற்பத்தி ஆகும். கொசு ஒழிப்பு பணிகளுக்காக கிராமப்புறங்களுக்கு சென்று கலன்களில் நீர் தேங்காதவாறும், தொட்டிகளை கொசுக்கள் புகா வண்ணம் மூடிக்கொள்ள அறிவுறுத்துகையில், எங்களுடைய வீட்டு நீரை மூடி வைக்க வேண்டுமென கூறும் நீங்கள் ஆறு, குளம், குட்டை, ஏரி ஆகிய நீர் நிலைகளை எதனை கொண்டு எப்படி மூடுவீர்கள் என எதிர்க்கேள்வி எழுப்புவார்கள்.


இந்த ஏடீஸ் எஜிப்டி கொசுக்கள் பொதுவாக பகல் நேரங்களில், மாலை நேரங்களில் கடிக்கும் இயல்புடையவை. பகல் நேரங்களில் டேபிளுக்கு கீழே கால்கள் உள்ள நிலையில் , கட்டிலுக்கு கீழே கால்கள் உள்ள நிலையில் தாழ்வாக பறந்து கடிக்கும் இயல்புடயவை. இந்த ஏடீஸ் எஜிப்டி கொசுக்கள் வழக்கமான கருமை நிறத்துடன் வெண்ணிற கோடுகள் ( Tiger stripes) உடையவை.

ஒரு பெண் கொசுவானது நாள் ஒன்றுக்கு 300 முட்டைகளை இடும் வல்லமை கொண்டது. 1-2நாட்கள் மட்டுமே முட்டை நிலையில் இருக்கும

முட்டைகள் கொசு புழுக்களாக மாறுகின்றன. ஆறு, குளம், குட்டை, ஏரி ஆகிய நீர்நிலைகளில் உள்ள மீன்கள், தவளைகள் ஆகியவை கொசு முட்டைகளையும், கொசு புழுக்களையும் உணவாக சாப்பிட்டு விடுகின்றன. Dragon fly எனப்படும் தட்டான் பூச்சிகள் மாலை நேரத்தில் கொசுக்கள் கூட்டமாக பறக்கும் இடங்களில் பறப்பதை பார்த்திருப்போம்.பக்குவமான பறக்கும் கொசுக்களை தட்டான் பூச்சிகள் இரையென பிடித்து சாப்பிடும். வீடுகளல் மூடி வைக்காத தொட்டிகளில் கம்பூசியா,கப்பிஸ் வகை மீன்கள் கொசு புழுக்களை சாப்பிடும்.

கொசு
கொசு

கொரோனாவுக்கான தடுப்பூசியுடன் மக்கள் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் இதோ வட கிழக்கு பருவ மழை தொடங்கி விட்டது. டெங்கு, சிக்குன்-குனியா,ஜிகா வைரஸ் என பரவலாக காணப்படும் இந்த வேளையில் மலேரியாவை பரப்பும் அனொபிலஸ் கொசுக்களை விட, யானைக்கல் நோய் பரப்பிடும் கியூலெக்ஸ் கொசுக்களை விட டெங்கு, சிக்குன்குனியா, ஜிகா வைரஸ் பரவும் இந்த வேளையில் நம் வீட்டை சுற்றியுள்ள நல்ல நீர் தேங்கி உள்ளவற்றை கவனமாக கண்காணிப்போம், தொட்களில் மீன்களை வளர்ப்போம். கொசு பரவலை தடுப்போம். மழைக்கால கொசுக்களின் நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வோம்.

-வீ.வைகை சுரேஷ்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு