Published:Updated:

அ..!

Representational Image

அன்னையர் தினம் கொண்டாடுவது சும்மா ஊர் மெச்ச அல்ல. முக நூலில் இவர்தான் என் அம்மா என்று உருகி உருகி பொய்யான அலங்கார வார்த்தைகளால் வர்ணிக்க அல்ல. வந்து விழும் LIKE கள் வாவ், சூப்பர், நச், அசத்தல் நண்பரே...என்று அப்பட்டமான முழுவதும் போலியான விமர்சனங்களுக்காக அல்ல.

அ..!

அன்னையர் தினம் கொண்டாடுவது சும்மா ஊர் மெச்ச அல்ல. முக நூலில் இவர்தான் என் அம்மா என்று உருகி உருகி பொய்யான அலங்கார வார்த்தைகளால் வர்ணிக்க அல்ல. வந்து விழும் LIKE கள் வாவ், சூப்பர், நச், அசத்தல் நண்பரே...என்று அப்பட்டமான முழுவதும் போலியான விமர்சனங்களுக்காக அல்ல.

Published:Updated:
Representational Image

உயிரெழுத்தின் தொடக்கம் 'அ'. அந்த 'அ' வில் ஆத்திகம் நாத்திகம் என்ற வேறுபாடு இல்லாமல்

அனைவருக்கும் உயிரெழுத்தாக இருக்கும் ஒரு தேவதையின், ஒரு தெய்வத்தின் பெயர். அது முழுமுதலான 'அம்மா...அன்னை...' என்று அழைக்கப்படுகிறது. அன்னையை தினம் தினம் போற்ற வேண்டும். பின் எதற்காக அன்னையர் தினம் என்று ஒரு நாள் கொண்டாட வேண்டும்.... சந்தோஷமாக நாம் இருக்கும் ஒவ்வொரு நாளும் நமக்கு பண்டிகைதான். எல்லோரும் ஒத்த சிந்தனையோடு இருந்து கொண்டாடுவதுதான் பெரிய பண்டிகைகளான தீபாவளி, பொங்கல். அதேப் போலத்தான் அன்னையர் தினமும்.

Representational Image
Representational Image

அன்னையர் தினம் என்று ஒன்றை முதன் முதலில் தோற்றுவித்தவர் அமெரிக்காவை சேர்ந்த 'அன்னா ஜார்விஸ்' அவர்கள். அவரது தாய்க்கு அப்படி ஒரு தினம் உருவாக வேண்டும் என்பது விருப்பமாக இருந்தது. அவர் இறந்த பிறகு அன்னா ஜார்விஸ் அதை ஒரு இயக்கமாக தொடர்ந்து நடத்தி வெற்றி கண்டார். 1940 ஆம் ஆண்டு மே 9 ந் தேதி அப்போது அமெரிக்க அதிபராக இருந்த தாமஸ் வுட்ரூ வில்சன் அன்னையர் தினத்திற்கான பிரகடனத்தில் கையெழுத்திட்டார். அன்று முதல் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நமக்கு வழிகாட்டியாய் என்றும் திகழும் சில அன்னைகளைப் பற்றி சுருக்கமாக பார்ப்போம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அன்னை மீனாட்சி :

' என்னுள் இருந்து என்னை இயக்கும் அன்னை மீனாட்சிக்கு கோடானு கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்' - இதை நான் அடிக்கடி என் மனசுக்குள் சொல்லிக்கொண்டே இருக்கிறேன். அந்த அன்னை மனசு வைத்தால்...அருள் கிடைத்தால் எல்லாம் நன்மையாகவே நடக்கும் என்று முழுமையாக நம்புகிறேன்.

என்னைப்போல பலருக்கும் அந்த நம்பிக்கை இருக்கிறது. உலகை காக்கும் அன்னை அவளே. மதுரை என்றதும் அனைவரின் நினைவிலும் வருபவள் அன்னைதான். அங்கே அன்னைக்குப் பிறகுதான் அப்பன். பறக்க முடியாமல் போன கிளி ஒன்றை அன்னை தன்னுடனே வைத்துக்கொண்டாள் என்று சொல்வார்கள். பக்தர்களின் கோரிக்கைகளை அதுதான் அடிக்கடி அன்னையிடம் சொல்லிக்கொண்டே இருக்குமாம். சித்திரைத் திருவிழா புகழ் பெற்ற ஒன்று. பல மாவட்ட மக்கள் கூடி கொண்டாடும் திருவிழா அது. மீனாட்சி ஆட்சி நடைபெற்று வருவதால் மதுரையில் மட்டும் தினம் தினம் அன்னையர் தினம்தான்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பட்டாபிஷேகச் சித்திரைத் திருவிழா!: படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பட்டாபிஷேகச் சித்திரைத் திருவிழா!: படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்

அன்னை ஆர்யாம்பாள் :

ஆதி சங்கரரின் அன்னை இவர். சிவபெருமானிடம் பிள்ளை வரம் வேண்டி பின்னர் பிறந்தவர் என்பதால் அவருக்கு சங்கரன் என்று பெயர் சூட்டினார்கள்.

அவர் சிறு வயதாக இருக்கும்போதே தகப்பனார் சிவகுரு காலமானார். தாயாரின் அரவணைப்பிலே வளர்ந்தார். குருகுலம் முடித்து வந்த பிறகு அவர் மனம் துறவறம் மேற்கொள்ளவே விரும்பியது. இளமையிலேயே மெய்ஞான வல்லுனராக மாறிய அவர் உடல்நலம் சரியில்லாத தனது தாயாரால் வெகு தொலைவில் உள்ள பூர்ணா நதிக்கு சென்று நீராட முடியாமல் போனதால் இறைவனை வேண்டி அந்த நதியை தனது வீடருகே ஓடச் செய்தார். தாயாரின் சம்மதத்தோடு சந்நியாசம் மேற்கொண்டாலும் அவரின் இறுதி காரியங்கள் செய்ய உரிய நேரத்திற்கு வந்து சேர்வேன் என்று வாக்கு கொடுத்தார். சொன்னபடியே வந்து சேர்ந்தார். தாயை துறப்பது தர்மமாகாது என்பதை நிலைநாட்டியவர் அவரே.

தாயின் அருமை பெருமைகளை அவர் மரணம் அடைந்த பிறகு 'மாத்ருகா பஞ்சகம்' என்று ஐந்து ஸ்லோகங்கள் மூலமாக உலகிற்கு வெளிபடுத்தினார். அதில் முக்கியமானது

"அன்னையே என்னை ஈன்றபொழுது பட்ட வலி

என்னென்பேன். பற்களைக் கடித்து பிரசவ வலியில் துடித்து

பெற்றெடுத்தாய். மலங்களினால் வருடம் பல துர்நாற்றம்

அடையச் செய்தேன், பாவி நான். கருவிலிருந்த போது

ஊனினை உருக்கி, உடலை வருத்தி உதிரத்தால் உணவு

தந்து உயிர் கொடுத்தாய். உனக்கு என்ன கைமாறு செய்வேன். பேரும் புகழும் பொன்னும் பொருளும் தந்து போற்றினாலும் போதாது."

பெற்ற தாய்க்கு அவர் செய்த கைமாறு காலத்தால் அழியாமல் நிலைத்து நிற்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அன்னை வேளாங்கன்னி :

நாகப்பட்டினம் அருகே முன்பு சிற்றூராக இருந்ததுதான் வேளாங்கன்னி. அங்கேதான் தூய ஆரோக்கிய அன்னையின் பேராலயம் உள்ளது. இன்று சர்வதேச அளவில் புகழ்பெற்று விளங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29 ந் தேதி அன்று கொடியேற்றம் தொடங்கி அன்னை பிறந்த நாளான செப்டம்பர் 8 ந் தேதி வரையில் இங்கு திருவிழா நடைபெறும். அன்னையின் அருளைப் பெற்று வளமான வாழ்க்கை வாழ பலர் பாதயாத்திரை மேற்கொள்கிறார்கள். அனைத்து மதத்தினரும் இங்கே வந்து வழி படுவதை நாம் பார்க்கலாம். தாயாக இருந்து தன் பிள்ளைகளை காப்பவள் அவள்தான். சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு வியாபாரம் செய்யும் பொருட்டு வங்கக்கடலில் சென்று கொண்டு இருந்த போர்த்துக்கீசிய பாய்மரக் கப்பல் ஒன்று புயலில் சிக்கிக் கொண்டது. கப்பலில் இருந்தவர்கள் காப்பாற்ற கோரி அன்னையிடம் பிரார்த்தனை செய்ய அன்னையின் அருளால் புயல், மழை, கடல் கொந்தளிப்பு எல்லாம் நின்று போனது. தங்களை காப்பாற்றிய அன்னைக்கு வேளாங்கன்னி நடுதிட்டில் சிறிய கோயிலாக இருந்ததை விரிவு படுத்தி கட்டினார்கள். அவர்கள் கரை சேர்ந்த நாள் வேளாங்கன்னி அன்னையின் பிறந்த நாளான செப்டம்பர் 8 அன்று. அன்னை செய்த மேலும் பல அற்புதங்களை திரையில் கொண்டு வந்தார்கள் 'அன்னை வேளாங்கன்னி' படம் மூலமாக.

Velankanni
Velankanni

அன்னை மந்தாங்கினி :

பொன்னியின் செல்வன் நாவலில் வரும் ஊமை ராணி என்கிற மந்தாகினி தான் பெறாத பிள்ளை மேல் வைத்த தாய்ப்பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்த கதாபாத்திரம். சுந்தர சோழர் அப்பெண்ணை காதலித்தார். சோழ ராஜ்யத்தில் பிரச்சனைகள் பல உருவான காரணத்தால் அவசரமாக அவருக்கு முடிசூட்டப்பட்டது. அதன் காரணமாக காதலும் முறிந்து போனது. சோழ சாம்ராஜ்யத்தின் புகழை உச்சிக்கு கொண்டு சென்ற ராஜ ராஜ சோழன் என்று பின்னாளில் பெயர் பெற்ற பொன்னியின் செல்வன் மேல் அளவுகடந்த பாசம் வைத்தவர். பல ஆபத்துகளில் இருந்து அவரைக் காப்பாற்றிவர். பெற்றால்தான் பிள்ளையா...என்ற கேள்விக்கு சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பே விடையாய் இருந்தவர். எதிரிகளிடமிருந்து சுந்தர சோழரை காப்பாற்றி அவருக்காக உயிரை விட்டவர்.

அதுவரையில் நடமாட முடியாத நிலையில் இருந்த சுந்தர சோழர் தனக்காக தியாகம் செய்த தன் பழைய காதலியின் செய்கை அவரை எழுந்து ஓடச் செய்தது.

அவரை தன் மடியில் போட்டு கதறியவர் 'உனக்கு மகன் இருக்கிறானா...சொல்..' என்று அவளுக்கு புரியும்படி கேட்க 'பொன்னியின் செல்வன்' தான் என்பதை சுட்டிக்காட்டுகிறார்.

ஒரு ஊமைத்தாய் தன்னை மகன் என்று அடையாளம் காட்டுவதை கண்ட பொன்னியின் செல்வன் நெகிழ்ந்து போகிறார். அவர் பதவிக்கு வந்த பின் அந்த அன்னைக்கு தஞ்சையில் ஒரு கோயில் காட்டினார். சிங்கள நாச்சியார் கோயில் என்று அதற்கு பெயர். ஒரு ஏழைத்தாய்க்கு மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தின் அரசன் செய்த பதில் மரியாதை இது.

அன்னை ஜீஜீபாய் :

சத்ரபதி சிவாஜியின் வீரத்தாய் ஜீஜீபாய். மராட்டியப்பேரரசை தன் மகன் ஆள வேண்டும் என்ற லட்சியத்தோடு வளர்த்தார். கணவரின் நடவடிக்கைகள் பிடிக்காத காரணத்தால் மகனை அழைத்துக்கொண்டு பூனா சென்று தங்களுக்கான தனி வாழ்க்கையை தொடங்கினார்.

அங்கேதான் சிவாஜி என்ற மாபெரும் வீரன் உருவாகத் தொடங்கினான். சுயமரியாதை நல்லொழுக்கம் அரசியல் நெறிமுறைகள் ஆகியவற்றை கற்றுத்தந்தார். வீரத்தாயாக வரலாற்றில் இடம்பிடித்தார்.

தனது பக்தை ஒருத்திக்காக இறைவனே தாயுமான கதையும் ஆன்மீகத்தில் உண்டு. பேறு காலத்தில் தனது தாயார் பூம்புகாரிலிருந்து வருவார் என்று ரத்னாவதி என்ற பக்தை திருச்சிராப்பள்ளியில் காத்திருந்தார். காவிரியில் வெள்ளம் வந்த காரணத்தால் அவள் தாயால் குறித்த நேரத்தில் வர இயலவில்லை. தவித்துப்போன அவள் இறைவனை நோக்கி பிரார்த்தனை செய்தாள். அவளின் தாயாக உருவெடுத்து பிரசவம் பார்த்தார் இறைவன். நிலைமை சரியாகி தாயார் வந்ததும் அது வரையில் உதவியாக இருந்தது இறைவன்தான் என்பதை சிவபெருமான் காட்சியளித்து உணர்த்தினார்.

அன்னை ஜீஜீபாய்
அன்னை ஜீஜீபாய்

அதனால் சிவபெருமான் 'தாயுமானவர்' என்று பக்தர்களால் அழைக்கப்பட்டார். தன் மகன் சிறந்த பண்பாளன், கல்வி ஞானம் உடையவன் என்று மற்றவர்கள் புகழும்போது ஒரு தாய் அடையும் சந்தோஷத்தை அளவிடமுடியாது. அதைத்தான் வள்ளுவர் திருக்குறளில் சொல்லி இருக்கிறார்.

உலகிற்கே தாயாக இருந்து ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் மூதுரை, விநாயகர் அகவல் போன்ற நல்ல நூல்களை தந்தவர் அவ்வையார். நாம் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை வகுத்து தந்தவர் அவர்.

'அ' என்ற ஒற்றெழுத்து சிகரம் தொடுகிறது அம்மா என்று அழைக்கும்போது. இல்லையென்று சொல்லும் நாத்திகர்கள் வீட்டில் இருக்கும் நடமாடும் தெய்வம்.. அவர்களின் தாயார்தான். தாயின் பெருமைகளை உணர்த்த எம்.ஜி.ஆர். அவர்கள் தயாரித்த படம்தான் 'அடிமைப்பெண்'. .அப்படத்தில்

'தாயில்லாமல் நானில்லை..தானே எவரும் பிறந்ததில்லை..'

என்ற பாடல் மிகவும் பிரபலமானது.

தாய்சொல்லைத் தட்டாதே, தாயைக்காத்த தனயன், தாய்க்குத்தலைமகன், தெய்வத்தாய் போன்ற படங்களில் தாய்க்கு முக்கியவத்தும் கொடுத்து கதை அமைந்திருக்கும்.

அன்னையர் தினம் கொண்டாடுவது சும்மா ஊர் மெச்ச அல்ல. முக நூலில் இவர்தான் என் அம்மா என்று உருகி உருகி பொய்யான அலங்கார வார்த்தைகளால் வர்ணிக்க அல்ல. வந்து விழும் LIKE கள் வாவ், சூப்பர், நச், அசத்தல் நண்பரே...என்று அப்பட்டமான முழுவதும் போலியான விமர்சனங்களுக்காக அல்ல. சமூக வலைத்தளங்களில் அப்படி பதிவிடுபவர்கள் ஒரு கணம் நாம் உள்ளபடியே நமது தாயை மதிக்கிறோமா என்று சுய ஆய்வு செய்து பாருங்கள். அப்படி செய்தால் எந்த ஒரு போலியான செயலிலும் ஈடுபடமாட்டீர்கள். அந்த சுய ஆய்வு 100 சதவீதம் நடந்தால் அன்று ஒவ்வொரு தாயும் பெருமைப்பட்டுக்கொள்வாள் நாம் உண்மையில் போற்றப்படுகிறோம் என்று. அந்த நாள் வரும்போது அதுவே ஆகச் சிறந்த 'அன்னையர் தினம்' என்று அழைக்கப்படும்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism