Published:Updated:

முன்னேற்றம் எப்பொழுது? | My Vikatan

Representational Image

அப்படி நீங்கள் நினைத்ததுண்டு என்றால், நீங்கள் ஓர் குறுகிய வட்டத்திற்குள் வாழ்கிறீர்கள் என்று அர்த்தம். சமீபகாலமாக உங்கள் வாழ்க்கையில் நீங்கள் புதிதாக எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

முன்னேற்றம் எப்பொழுது? | My Vikatan

அப்படி நீங்கள் நினைத்ததுண்டு என்றால், நீங்கள் ஓர் குறுகிய வட்டத்திற்குள் வாழ்கிறீர்கள் என்று அர்த்தம். சமீபகாலமாக உங்கள் வாழ்க்கையில் நீங்கள் புதிதாக எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

நீங்கள் எப்போதாவது உங்கள் வாழ்க்கை ஒரே இடத்தில் சிக்கிக்கொண்டது போல உணர்ந்துள்ளீர்களா?

அப்படி நீங்கள் நினைத்ததுண்டு என்றால், நீங்கள் ஓர் குறுகிய வட்டத்திற்குள் வாழ்கிறீர்கள் என்று அர்த்தம். சமீபகாலமாக உங்கள் வாழ்க்கையில் நீங்கள் புதிதாக எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

புதிதாக கற்போம்:

புதிதாக ஒன்றை நாம் கற்றுக்கொள்ளும் போது முதலில் ஒரு சிறு தயக்கம் இருக்கும், தன்னம்பிக்கை குறைவாக இருக்கும், செயல்களை நாம் தள்ளிப்போட முயற்சிப்போம். பலர் பின் அதை முற்றிலுமாக மறந்து விட்டு பழைய வட்டத்திற்குள் சென்று விடுவார்கள். ஏன் இவ்வாறு நடக்கிறது? இவர்கள் எப்படி பட்டவர்கள்? இவர்கள் எதுவாக இருந்தாலும் உடனடியாக நடந்து விட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். உதாரணத்திற்கு உடற்பயிற்சி செய்ய விரும்பும் பலர், இன்று முதல் ஜிம் செல்ல வேண்டும், டயட் இருக்க வேண்டும், மூன்றே மாதத்தில் உடலை ஏற்றவேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் மூன்று வாரம் கூட அவர்களால் தொடர்ந்து செல்ல முடிவதில்லை. காரணம், தங்கள் வழக்கமான செயல்களை உடனடியாக மாற்ற எண்ணுகிறார்கள்.

Representational Image
Representational Image

நேற்றுவரை காலையில் இட்லி, தோசை, பூரி, பொங்கல், மதியம் நல்ல சாப்பாடு, மாலையில் தேநீர் அல்லது காபி, பின் நொறுக்கு தீனிகள், இரவு பரோட்டா என்று பல வருடமாக வெளுத்து வாங்கிய ஒருவர் திடீரென்று அடுத்த நாள், காலை சிறுதானிய உணவு, இடையில் பழத்துண்டுகள்,மதியம் குறைவான சாப்பிடு அதிக காய்கறிகள், மாலையில் பயிர் வகைகள், பின் உடற்பயிற்சி, மீண்டும் ஒரு சில முட்டைகள், இரவு சப்பாத்தி என்று சாப்பிட்டால் அவரது உடல் அதை எவ்வாறு ஏற்றுக்கொள்ளும்? எப்படி அவரால் அதை தொடந்து கடைபிடிக்க முடியும்? அவர் மிகவும் சோர்வாகிவிடுவார். அந்த சோம்பல் ஓர் சலிப்பை ஏற்படுத்தும். அந்த சலிப்புத்தன்மை அவரை முன்னோக்கி செல்ல விடாமல் மீண்டும் அவரை அந்த வட்டத்திற்குள் அடைத்துவிடும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனால் உண்மையில் முன்னேற்றத்தை விரும்புபவர்கள் எந்த ஒரு புதிய முயற்சியும் ஆரம்ப காலத்தில் கடினமாகத்தான் இருக்கும் என்பதை புரிந்துகொள்வார்கள். மாற்றம் என்பது சீரான செயல்முறைதான். தங்களது உழைப்பை குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை சீராக அதிக படுத்திக்கொள்வார்கள்.

இங்கே உடற்பயிற்சியிக்கு செல்லும் சிலர், தங்களது உணவு பழக்கத்தை ஒரே நாளில் மாற்றாமல் சிறுது சிறிதாக மாற்ற முயற்சிப்பார்கள்.

Representational Image
Representational Image

உதாரணத்திற்கு வாரம் இருமுறை ஏதேனும் ஒருவேளை சிறுதானிய உணவு எடுத்துக்கொள்வார்கள், மதிய உணவில் சோற்றை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொண்டு காய்கறிகளை அதிக படுத்துவார்கள். அளவாக உடற்பயிற்சி செய்வார்கள். ஒரே நாளில் 6 முட்டைகு பதிலாக, ஒரு நாள் இரண்டு முட்டை என்று உண்பார்கள் பின் இரவு அளவான உணவை உண்ண பழகுவார்கள். காலப்போக்கில் இந்த சிறு சிறு மாற்றங்கள் மிக பெரிய மாற்றத்தை வாழ்வில் உண்டாக்கும். அவர்கள் எண்ணிய இலக்கை அவர்களால் அடைய முடியும். நண்பர்களே! உடற்பயிற்சியில் மட்டும் அல்ல, நம் வாழ்வில் புதிதாக கற்றுக்கொள்ள அல்லது மாற்றிக்கொள்ள விரும்பும் அனைத்திற்கும் இது பொருந்தும். புதிய முயற்சிகள் சில தோல்விகளை தரலாம், அந்த தோல்விகள்தான் நல்ல பாடத்தை கற்றுத்தரும். நல்ல பாடம் நல்ல மாற்றத்தை தரும். நல்ல மாற்றம் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தை தரும்.

நன்றி,

நரேந்திரன் பாலகிருஷ்ணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.