Published:Updated:

பிரியாணி... பிரியமான நீ! | My Vikatan

பிரியாணி

இப்போது அதையெல்லாம் மலையேறி... போச்சுபாஸ்! சின்னச் சின்ன விசேஷங்கள் என்றாலும் கூட பிரியாணி செய்யும் இல்லத்தரசிகள் தான் அதிகம்!

பிரியாணி... பிரியமான நீ! | My Vikatan

இப்போது அதையெல்லாம் மலையேறி... போச்சுபாஸ்! சின்னச் சின்ன விசேஷங்கள் என்றாலும் கூட பிரியாணி செய்யும் இல்லத்தரசிகள் தான் அதிகம்!

Published:Updated:
பிரியாணி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

நம்மில் பலருக்கு பிடித்த "டிஷ் "என்றால் அது நிச்சயம் பிரியாணி ஆகத்தான் இருக்கும். எப்போ சாப்பிட்டாலும் சலிக்காத உணவு பிரியாணி. என் செல்ல பிரியாணியே.. உன் பெயரை காகிதத்தில் எழுதிய உடன் பேனா நகர மறுக்கிறதே... பேனா விற்கும் உன் மேல் காதலோ! அது சரி... உன்னை யாருக்குத்தான் பிடிக்காது ! நீ இல்லாத நாட்கள் நகர மறுக்கிறது!

உன்னோடு நான் கொண்ட நேசத்தை எந்த மொழியில் சொல்ல!

எனது சந்தோஷ /வருத்த தருணங்களிலெல்லாம் உடன் வரும் என் இனிய நண்பனே! எத்தனை உணவுமுறைகள் புதிது புதிதாக வந்தாலும் என் கண்கள் முதலில் தேடுவது உன்னைத்தானே!

பிரியாணி ...எப்போதாவது முக்கியமான விசேஷ தினங்களில் மட்டுமே சில ,பல வீடுகளில் கமகமக்கும் ஒர் உணவு என்றிருந்த காலம் ஒரு காலம். இப்போது அதையெல்லாம் மலையேறி... போச்சுபாஸ்! சின்னச் சின்ன விசேஷங்கள் என்றாலும் கூட பிரியாணி செய்யும் இல்லத்தரசிகள் தான் அதிகம்!

பிரியாணி
பிரியாணி

அது மட்டுமா ...என்ன சமைக்கிறதுன்னே தெரியல... பேசாம "பிரியாணி" பண்ணிடறனே என்ற படியே அடிக்கடி பிரியாணி சமைப்பது கூட இப்பொழுதெல்லாம் வாடிக்கையாகிவிட்டது. பிரியாணி என்றதும் என் நினைவுக்கு வரும், நபர் தி ஓன்&ஓன்லி நபர் சாட்நாத் "நானேதான்"

என்னுடைய பிரியாணிக்கு என் உறவு மற்றும் நட்பு வட்டாரத்தில் மிகப்பெரிய ரசிகர் கூட்டமே உண்டு. எனக்கு உலகத்திலேயே மிகவும் பிடித்த ஒரு சமையல் என்றால் அது பிரியாணி தான் .! சின்னச் சின்ன விஷயங்களை ஃபாலோ செய்தால் (அடிப்படையான சில விஷயங்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்) நம் வீட்டு பிரியாணியும் பாய் வீட்டு பிரியாணிக்கு சவால் விடும். என் வீட்டில் உபயோகிக்கும் பிரியாணி டிப்ஸ் உங்களுக்காக.. பாஸ்மதி அரிசி பிசைந்து கழுவாமல் இலேசாக விரல்களால் களைந்து பூ ப்போல கழுவ வேண்டும்.(பிறந்த குழந்தையின் கன்னத்தை தடவுவது போல்)

வெங்காயம், தக்காளியை நன்றாக வதக்க வேண்டும். தண்ணீர் நன்றாக கொதித்ததும் அரிசியைப் போட்டு ஒரு முறை கலந்து விட்டு குக்கரை மூடணும். ( இப்படி செய்தால் அரிசி உடையாமல் இருக்கும் )

வெஜிடபிள் ,சிக்கன் ,மட்டனுடன் சிறிதளவு உப்பு ,மிளகாய்த்தூள், தயிர் எலுமிச்சை சாறு சேர்த்து சிறிது நேரம் ஊறவைத்து பிறகு பிரியாணி செய்தால் சுவை அதிகரிக்கும் எல்லா வகை பிரியாணி களுக்குமே நாட்டு தக்காளி உபயோகித்தால் கூடுதலான ருசி கிடைக்கும் .பாஸ்மதி அரிசி ஒரு கப் அளவுக்கு ஒன்றரை கப் தண்ணீர் தான் வைக்கவேண்டும்.( அரிசி சிறிது பழையதாக இருந்தால் மட்டுமே ஒன்றே முக்கால் கப் தண்ணீர்.) பிரியாணி வெந்ததும் கடைசியாக கொஞ்சம் நெய் சேர்த்து இறக்கவும். பின்னர் நன்றாக கிளறி பரிமாற வாசம் அடுத்த தெரு வரை வீசும்.

Spices
Spices

"தம்" போடுவது ஒரு கலை பிரியாணிக்கான மசாலா தொக்கோடு வெந்நீர் சேர்த்து கொதித்த பின் அரிசி சேர்க்கவேண்டும். அரிசியின் மீது தண்ணீர் நிற்காமல் பிரட்டினாற்போல சேர்ந்து வரும்போது ,விளிம்புகளில் இடைவெளி இல்லாமல் மூடி போடவும். அதன் மீது கொதிக்கும் தண்ணீர் உள்ள கனமான பாத்திரத்தை 5முதல்10 நிமிடங்களுக்கு வைக்க வேண்டும். அடுப்பும்" சிம்"மில் தான் இருக்க வேண்டும் இதுவே சுலபமான முறையில் "தம்"போடுதல்... இதையெல்லாம் ஃபாலோ பண்ண உங்க வீட்டு பிரியாணியும் உலக லெவல் பிரியாணிக்கு இணையாக கமகமக்கும் .

இவ்வளவு சொல்லிட்டு ரெசிப்பி சொல்லாமல் விடுவதா நோ தேவர்...

சூப்பரா ஒரு மட்டன் பிரியாணி.

தேவையான பொருட்கள்

பாசுமதி அரிசி- அரை கிலோ

மட்டன் -அரைகிலோ

பெரிய வெங்காயம் -3(நீள நீளமாக மெல்லிசாக நறுக்கிக் கொள்ளவும்)

தக்காளி -4

மஞ்சள் தூள் -அரை டீஸ்பூன்

மட்டன் மசாலா-இரண்டு டீஸ்பூன்

தனி மிளகாய் தூள்-ஒரு டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய மல்லித்தழை புதினா ஒரு கைப்பிடி

தாளிக்க

பட்டை கிராம்பு ஏலம் -தலா இரண்டு

பிரிஞ்சி இலை இரண்டு, பெருஞ்சீரகம் ஒரு டீஸ்பூன்.

புளிப்பில்லாத கெட்டி தயிர் -இரண்டு டேபிள் ஸ்பூன்

அரைக்க

பச்சை மிளகாய் 3,இஞ்சி சிறு துண்டு,

பூண்டு 10 பல்

நெய்+ எண்ணெய் கலந்தது -இரண்டு டேபிள் ஸ்பூன்

உப்பு தேவையான அளவு

Briyani
Briyani

செய்முறை

பிரஷர் பேனில் நெய் எண்ணெய் (கலந்தது)ஊற்றி பட்டை லவங்கம் ஏலக்காய் பிரிஞ்சி இலை தாளிக்கவும். நீளமாக நெருங்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு மட்டனை சேர்த்து நன்கு வதக்கவும். ஒரு பச்சை மிளகாயை கீறி சேர்க்கவும்.

பிறகு அரைத்த பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது +ஒன்று இரண்டாக மிக்ஸியில் அரைத்த தக்காளி விழுது+மஞ்சள் தூள் +தனி மிளகாய் தூள்+ மட்டன்மசாலா+பொடியாக நறுக்கிய புதினா மல்லித்தழை+கெட்டித்தயிர் என ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கி தேவையான உப்பு சேர்த்து நன்கு வதக்கி பிரஷர் பேனை மூடி நான்கு விசில் விட்டு இறக்கவும்.

ஸ்டீம் அடங்கியதும் மூடியை திறந்து அதில் இருக்கும் ஜூஸை கணக்கில் கொண்டு, (நீரை சற்று குறைத்துக் கொள்ளவும்) 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

நீர் நன்கு கொதித்ததும் கழுவிய அரிசியை சேர்க்கவும். ஸ்டீம் வந்ததும் ,(அடுப்பை சிம்மில் வைத்து) மூடியைத் திறந்து எலுமிச்சம் பழச்சாறு விட்டு நன்கு கிளறி மூடவும் . இப்போது வெயிட்டை போட்டு (அடுப்பு சிம்மில் இருப்பது அவசியம்) பத்து நிமிடம் கழித்து திறக்க கலக்கலான ஹோட்டல் பிரியாணி ... உங்களைப் பார்த்து பாசமாய் கண்ணடிக்கும்.

இந்த ஞாயிறு அன்று உங்கள் வீட்டில் பிரியாணி செய்து கணவரையும் பிள்ளைகளையும் அசத்துங்கள்

என்றென்றும் அன்புடன்

ஆதிரை வேணுகோபால்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.