Published:Updated:

உன் பேரை சொன்னாலே! - நா.முத்துக்குமார் ரசிகை | My Vikatan

நா.முத்துக்குமார்

பெரும்பாலும் காதல் பாடல்களாகவே அமைந்துவிடுகிறது. அதனால் தான் காதல் பாடல்களில் தத்துவங்களை நான் படைக்க முயற்சித்தேன் என்றே சொல்லி இருப்பார். அவரின் அந்த முயற்சிக்கு தாறுமாறான வெற்றி கிடைத்தது.

உன் பேரை சொன்னாலே! - நா.முத்துக்குமார் ரசிகை | My Vikatan

பெரும்பாலும் காதல் பாடல்களாகவே அமைந்துவிடுகிறது. அதனால் தான் காதல் பாடல்களில் தத்துவங்களை நான் படைக்க முயற்சித்தேன் என்றே சொல்லி இருப்பார். அவரின் அந்த முயற்சிக்கு தாறுமாறான வெற்றி கிடைத்தது.

Published:Updated:
நா.முத்துக்குமார்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

ஒருவரின் பெயரைச் சொன்னால் உள்நாக்கும் தித்திக்கும் என்றால் அது பாடல் ஆசிரியர் நா முத்துக்குமார் அவர்களின் பெயரைத்தான்.

தமிழ் சினிமா ரசிகர்களை தனது பாடல் வரிகளில் ஆட்சி செய்தவர். காதல், தாலாட்டு, வலி ,அழுகை, ஆனந்தம் என நா. முத்துக்குமார் அவர்களின் வரிகள் பலருக்கு எனர்ஜி டானிக். வார்த்தைகளை பூமாலையாக கோர்த்து பாடல் எழுதுவதில் வல்லவர்.

ஒரு "உருவகத்தை" அடுத்த கட்டத்திற்கு பாடல் வரிகளின் வழியாக கொண்டு செல்லும் வித்தகர்."கல்லறை மேலே பூக்கும் பூக்கள் கூந்தலைப் போய் தான் சேராதே" இப்படி" காதல் கொண்டேன்" படத்தில் பூக்களுக்கு அந்தஸ்து இல்லை என்று எழுதிய அவரே தான் "கல்லறை மீதுதான் பூத்த பூக்கள் என்றுதான் வண்ணத்துப்பூச்சிகள் பார்த்திடுமா?" என "காதல்" படத்தில் மாற்றி எழுதி இருப்பார்.

நா. முத்துக்குமார்
நா. முத்துக்குமார்
Vikatan

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதாவது அந்தப் பூக்களையும் வண்ணத்து பூச்சிகள்தேடி வரும் என்ற அர்த்தத்தில்... இவரின் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒரு கவிதை. இவரின் "ஆனந்த யாழ் மீட்கப்படாத" வீடு இல்லை இவரின் காதல் வரிகளை பயன்படுத்தாத காதலர்கள் மிக மிகக் குறைவு என்று பெருமையாக சொல்லலாம். இவரின் பெரும்பாலான காதல் பாடல்கள் தத்துவ வரிகளை கொண்டிருக்கும் . காரணம் கேட்டதற்கு திரு .கவிஞர் கண்ணதாசன் அவர்களுக்கு கிடைத்தது போல் கதைக்களமும், பாடல் சூழலும் இப்பொழுதெல்லாம் கிடைப்பதில்லை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பெரும்பாலும் காதல் பாடல்களாகவே அமைந்துவிடுகிறது. அதனால் தான் காதல் பாடல்களில் தத்துவங்களை நான் படைக்க முயற்சித்தேன் என்றே சொல்லி இருப்பார். அவரின் அந்த முயற்சிக்கு தாறுமாறான வெற்றி கிடைத்தது.

அவர் எழுதிய அழகான காதல் தத்துவ பாடல்கள் ஒவ்வொன்றிலும் ஒரு ஜீவன் இருக்கும் வலிகளுடன் கூடிய வலி நிவாரணி என்றே சொல்லலாம் . அப்படி எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடல்...

``ஒரு கல் ஒரு கண்ணாடிஉடையாமல் மோதிக்கொண்டால் காதல்..

ஒரு சொல் சில மௌனங்கள் பேசாமல் பேசிக்கொண்டால் காதல்..

கண்கள் இரண்டில் காதல் வந்தால் ஹோ..

கண்ணீர் மட்டும் துணையாகுமே.’’

சிவா மனசுல சக்தி என்ற படத்தில் இடம்பெற்ற பாடலிது.

"திமிருக்கு மறுபெயர் நீதானே

தினம் தினம் உன்னால் இறந்தேனே

மறந்திட மட்டும் மறந்தேனே"

எவ்வளவு அழகான வரிகள்..

அதே பாடலில்

" உன் உதட்டுக்குள் இருக்கும் ஒரு வார்த்தை..

அதை சொல்லிவிட்டால் தொடங்கும் என் வாழ்க்கை..’’ என்ற வரிகளில் காதலின் வலியை அழகாக சொல்லி இருப்பார்.

"கடும் விஷத்தினை எடுத்து குடித்தாலும்

அடி கொஞ்ச நேரம் கழித்தே உயிர் போகும்

. இந்த காதலிலே உடனே உயிர் போகும்

காதல் என்றால் பெண்ணே சித்திரவதை தானே!’’ என்று காதல் செய்து பிரிந்தால் வரும் வலியை நயம் பட எழுதி இருப்பார்.

"உன் முகம் பார்த்தே நான் எழுவேன்

உன் குரல் கேட்டால் நான் அறிவேன்

உன் நிழலுடனே நான் வருவேன்..

புன்னகை செய்தால் உயிர் வாழ்வேன்

புறக்கணித்தால் நான் என்னாவேன்

பெண்ணே எங்கே நான் போவேன்."

இந்த வரிகளில் காதல் சோகம், தனிமை, ஏக்கம் இப்படி எல்லாம் நிரம்பி இருக்கும்.

உண்மையாக காதல் செய்து பிரிந்தவர்கள் மனதில் இந்த பாடல் ஒரு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால் மிகையன்று.

"நீ கடவுள் எழுதி வைத்த மண்ணில் வந்த ஒரு கவிதையடா"... என்ற வரிகள் அவருக்கே சாலப்பொருத்தம்.

VikatanPhotoStory
VikatanPhotoStory

மழை நின்ற பிறகும் தூவானம் போலதூறிக் கொண்டிருப்பவர். அவருடைய பாடல்கள் ஒளிபரப்பப்படும் ஒவ்வொரு நொடியிலும் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். மண்ணுலகில் எழுதி கொடுத்தது போதுமென்று இப்பொழுது விண்ணுலகில் பாடல்களை எழுதிக் கொண்டிருக்கும் நா.முத்துக்குமார் அவர்களுக்கு அழகான பிறந்தநாள் வாழ்த்துகள்.!

-என்றென்றும் அன்புடன்,

ஆதிரை வேணுகோபால்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.