வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
2020 ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சூரரை போற்று, சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், மண்டேலா போன்ற படங்கள் விருதுகள் குவித்துள்ளன. இந்த மூன்று படங்களுக்குமே உள்ள ஒரு ஒற்றுமை என்னவென்றால் மூன்று படத்தின் மூலக்கதைகளும் புத்தகங்களில் இருந்து எடுக்கப்பட்டவை.
சூரரை போற்று திரைப்படத்தின் கதை ஜிஆர் கோபிநாத் எழுதிய "simply fly" என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. "சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்" படம் எழுத்தாளர் அசோகமித்ரனின் "விமோசனம்", ஆதவனின் "ஓட்டம்", ஜெயமோகனின் "தேவகி சித்தியின் டைரி" என்கிற சிறுகதைகளை தழுவி எடுக்கப்பட்டது. "மண்டேலா" திரைப்படம் "இந்நாட்டு மன்னர்" என்கிற நாஞ்சில் நாடனின் சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டது.
இதுபோல இதற்கு முந்தைய ஆண்டுகளில் இலக்கிய படைப்பிலிருந்து தழுவி எடுக்கப்பட்டு தேசிய விருதுகள் வென்ற படங்களை பற்றி பார்ப்போம்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
நாமக்கல் கவிஞர் எழுதிய "மலைக்கள்ளன்" நாவலை தழுவி எடுக்கப்பட்ட "மலைக்கள்ளன்" திரைப்படம் முதன்முதலாக தேசிய விருது வென்ற தமிழ்த்திரைப்படம்.
"குலதெய்வம்" திரைப்படம் - வங்காள எழுத்தாளர் பிரபாவதி தேவி சரஸ்வதி எழுதிய "Bijita" என்கிற நாவலை தழுவி எடுக்கப்பட்டது.
"பார்த்திபன் கனவு" கனவு திரைப்படம் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய "பார்த்திபன் கனவு" நாவலை தழுவி எடுக்கப்பட்டது.
"கர்ணன்" திரைப்படம் "மகாபாரதம்" புதினத்தை தழுவி எடுக்கப்பட்டது.
"திருவிளையாடல்" திரைப்படம் பரஞ்சோதி முனிவர் எழுதிய "திருவிளையாடற் புராணம்" என்கிற படைப்பிலிருந்து எடுக்கப்பட்டது.
"தில்லானா மோகனாம்பாள்" திரைப்படம் ஆனந்த விகடனில் கொத்தமங்கலம் சுப்பு எழுதிய கதையிலிருந்து எடுக்கப்பட்டது.
"முதல் மரியாதை" திரைப்படம் ஜெயகாந்தன் எழுதிய "ஊருக்கு நாலு பேர்" என்கிற நாவலை தழுவி எடுக்கப்பட்டது.

"ஊருக்கு நூறு பேர்" என்கிற திரைப்படம் "ஊருக்கு நூறு பேர்" என்கிற ஜெயகாந்தனின் நாவலை தழுவி எடுக்கப்பட்டது.
"இயற்கை" திரைப்படம் தஸ்தாயெஸ்ஸ்கி எழுதிய "வெண்ணிற இரவுகள்" புதினத்தை தழுவி எடுக்கப்பட்டது.
"பூ" திரைப்படம் - எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் எழுதிய "வெயிலோடு போயி" என்ற சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டது.
"பரதேசி" படம் - எழுத்தாளர் இரா. முருகவேள் மொழிபெயர்த்த "எரியும் பனிக்காடு" என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டது.
"நான் கடவுள்" திரைப்படம் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய "ஏழாம் உலகம்" நாவலை தழுவி எடுக்கப்பட்டது.
"கன்னத்தில் முத்தமிட்டால்" திரைப்படம் எழுத்தாளர் சுஜாதா எழுதிய "அமுதாவும் அவனும்" என்கிற சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டது.
"விசாரணை" திரைப்படம் மு. சந்திரகுமார் எழுதிய "லாக்கப்" நாவலை தழுவி எடுக்கப்பட்டது.
"அசுரன்" திரைப்படம் எழுத்தாளர் பூமணி எழுதிய "வெக்கை" நாவலை தழுவி எடுக்கப்பட்டது.
"தக்கையின் மீது நான்கு கண்கள்" என்கிற குறும்படம் எழுத்தாளர் ச. கந்தசாமியின் சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டது.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.