Published:Updated:

பண்டிகையின் மகத்துவம் உணரவில்லையோ? - நவராத்திரியும் நங்கையரும்! | My Vikatan

Representational Image

இன்றைக்கும் எத்தனை பெண்கள் தங்கள் கணவனின் விஷம் போன்ற வார்த்தைகளை விஷமமான நடவடிக்கைகளை பொறுத்துக் கொண்டு வாழ்க்கை என்ற சுழல்கள் நிறைந்த ஆற்றில் நீச்சலிடுகிறார்கள்.!

பண்டிகையின் மகத்துவம் உணரவில்லையோ? - நவராத்திரியும் நங்கையரும்! | My Vikatan

இன்றைக்கும் எத்தனை பெண்கள் தங்கள் கணவனின் விஷம் போன்ற வார்த்தைகளை விஷமமான நடவடிக்கைகளை பொறுத்துக் கொண்டு வாழ்க்கை என்ற சுழல்கள் நிறைந்த ஆற்றில் நீச்சலிடுகிறார்கள்.!

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

வண்ண வண்ணத் தோரணங்களும் அலங்கார விளக்குகளும் பளிச்சிட கொலு களை கட்டியது. அழகான பொம்மைகள் வரிசை வரிசையாக படிகளில் வீற்றிருந்தன.

வாழ்வில் பல பிரச்சனைகளிலும் சிக்கி ‌‌ அம்பிகையிடம் நான் ஒரு விளையாட்டு பொம்மையா ! என்று உருகிய போது ஆலயத்தில் தரிசித்த தேவி, ஆபரணங்கள் தரித்து அழகான மங்கள ரூபத்தில் அனைவரின் இல்லங்களிலும் தானே வந்து பொம்மையாக அமர்ந்திருந்தாள்.

தனக்கே உரிமையான ஒன்பது படிகளிலும் சகல ஜீவராசிகளுக்கும் இடம் கொடுத்து மந்தகாசமான புன்னகையுடன் உன் உள்ளத்திலும் என்னைப் பார்க்க முயற்சி செய் என்னும் பாவனையில் தரிசிக்க வந்து போகும் எல்லாப் பெண்களையும் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

எல்லா உயிரிலும் நானே இருக்கிறேன் என்று நிலை நாட்ட பறவைகள் விலங்குகள் என்று அத்தனை ஜீவன்களையும் சமமாக கொலுப்படிகளில் அமர வைத்து பார்க்கும் அற்புதமான பண்டிகை நவராத்திரி.

வண்ண வண்ண புடவைகள், வசீகரமான அணிகலன்கள் அணிந்து வளைய வரும் பெண்கள் ,என்று கொண்டாட்டமான திருநாள்.

Representational Image
Representational Image

சக்தி வழிபாடு ஒன்பது நாட்களும் பெண்களுக்கே பிரதான இடம் கொடுக்கும் பூஜை வழிபாடு அல்லவா!

காலங்கள் தோறும் பெண்களின் நிலைப்பாடு காவியங்கள் தொடங்கி இன்று வரை சக்தி, சக்தி என்றே சொல்கிறது.

மணிமேகலையும் குண்டலகேசியும் பெண்ணின் பெயரில் திகழ்கின்றன என்றால் ஒரு பெண் தன் ஆபரணத்தை வைத்தே கணவனின் குற்றமற்ற தன்மையை நிரூபிக்கும் சிலப்பதிகாரம்.

இன்னும் ஔவையார் திலகவதி காரைக்கால் அம்மையார் என்று எத்தனை மாதர்குல திலகங்கள் !

தோழியை பாவை நோன்புக்கு அழைக்கும் திருப்பாவை., விளையாட்டாக கும்பகர்ணன் தோற்ற பின்னும் தூக்கத்தை உனக்கு பரிசாக கொடுத்தானே என்று பரிகசித்துக் கொண்டே நாட்டின் நிலவளம் நீர்வளம் மற்றும் கண்ணனின் அவதாரங்கள் அனைத்தையும் பட்டியலிடும் ஆண்டாளின் அழகு தமிழ் இன்றைக்கும் வியக்க வைக்கிறது.

வார்சடையோன் அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை என்று அபிராமி பட்டர் போற்றினாரே!

இன்றைக்கும் எத்தனை பெண்கள் தங்கள் கணவனின் விஷம் போன்ற வார்த்தைகளை விஷமமான நடவடிக்கைகளை பொறுத்துக் கொண்டு வாழ்க்கை என்ற சுழல்கள் நிறைந்த ஆற்றில் நீச்சலிடுகிறார்கள்.! உடலில் படும் அடிகளையே தாங்க முடியாமல் தவிப்பவர்கள்,மனதில் பல ரணங்களை வேதனைகளை சுமந்து கொண்டு வளைய வரும் மங்கையர்களை உணர மறுக்கிறார்கள்.

இல்லம் ,அலுவலகம் என்று இரட்டை பொறுப்புகளையும் சுமந்து திறமையாக சமாளிக்கும் பெண்மணிகள்.

Representational Image
Representational Image

கடலிலும் ஆற்றிலும் மட்டும் தான் நீந்துவேன் என்று இல்லாமல் கண்ணாடித் தொட்டி நீரிலும் நீந்தும் மீனைப் போல சமுதாயத்தின் கட்டுப்பாடுகளுக்கும் வீட்டின் சட்ட திட்டங்களுக்கும் கட்டுப்பட்டு சின்ன சின்ன வாய்ப்புகளை கூட உறுதியாக பிடித்துக்கொண்டு முன்னேறும் பெண்கள்.

கலைத் துறை விளையாட்டுத்துறை வணிகத்துறை என்று கால் பதித்த மாதர்கள்.

அவர்களது பேட்டிகளை காணும் போது எவ்வளவு அவமானங்களையும் அலட்சியங்களையும் தாங்கிக் கொண்டு சாதித்தே தீர வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படும் எத்தனையோ இளம் பெண்களின் செயல்திறன்களை உணர முடிகிறது.

ஆனால் அவர்கள் எப்படி எல்லாம் அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்று பார்க்கும் போது பண்டிகையின் மகத்துவம் உணரவில்லையோ என்று தோன்றுகிறது.

வெட்டிப் போட்டாலும் மீண்டும் வளரும் அமீபா ஹைடிரா போன்ற ஒரு செல் உயிரினங்களும் உலகையே திருப்பிப் போட்ட நுண்ணுயிர்களும் அவ்வப்போது வாழ்க்கையின் நிதர்சனத்தை காட்டத்தான் செய்கின்றன.

ஒன்பது படிகளிலும் அமர்ந்திருக்கும் அத்தனை கலைப்படைப்பு களையும் காணும் போது நீ எந்தப் படியில் இருக்கிறாய் என்று மனம் கேட்டது.

திருமணமாகிவிட்டதா , குழந்தை இருக்கிறதா, வேலை பார்க்கிறாயா, இந்தியாவா வெளிநாடா இதெல்லாம் சமுதாய ரீதியான அடையாளங்கள்.

நீ எந்தப் படியில் இருக்கிறாய்? என்று மனம் மறுபடியும் கேட்டது.

அவமான சேற்றில் புழுவாக நெளிகிறாயா?

ஆடம்பர மோகத்தில் அதிகார வானத்தில் பறந்து கொண்டிருக்கிறாயா? இல்லை மிருக உணர்ச்சியுடன் பெண்ணினத்தை சேதப்படுத்தினர் கொண்டிருக்கிறாயா?!

உண்மையில் இந்த பண்டிகை நம் அனைவரின் மனதையும் சுய பரிசோதனை செய்துகொள்ளத்தான் சொல்கிறது.

அழகு அன்பு அறிவு துணிச்சல் சமயோசிதம் என்ற ஐந்து முகங்களிலும் விளக்கேற்றி பெண்மை சுடர் விட வேண்டும்.

அறியாமை அகங்காரம் அழுக்காறு ஆகியவை நீங்கி வாழ்வில் அனைவரும் வளம் பெறுவோம்.

தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா!!

சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா!!

-Kanthimathi Ulaganathan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.