Published:Updated:

நீட் தற்கொலைகளை தடுப்பதற்கு அரசு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கலாம்?

நீட் தேர்வு எழுதிய அனைத்து மாணவ மாணவிகளுக்கும் தொலைபேசி வழியாக மனநல ஆலோசனை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார் அமைச்சர் மா. சுப்ரமணியம். இது வரவேற்க கூடிய விஷயம் என்றாலும் இந்த ஒரு நடவடிக்கை மட்டும் போதாது..

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

திமுக ஆட்சி அமைத்தால் முதல் வேலையாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தார் தற்போதைய முதல்வர் ஸ்டாலின். ஆட்சி அமைந்ததும் டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து நீட் தேர்வை ரத்து செய்வதற்கான கோரிக்கையை வைத்தார் முதல்வர். ஆனால் அந்தக் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை. அடுத்ததாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியம் அவர்கள் மத்திய கல்வித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து நீட் தேர்வு விலக்கிற்கு கோரிக்கை வைத்தார். நேரில் சந்தித்த போது இதுகுறித்து நல்ல முடிவு எடுக்கப்படும் என்று சொன்ன மத்திய கல்வித்துறை அமைச்சர் அன்று மாலை அப்படியே உல்டாவாக தமிழகத்தில் கூடுதலாக நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்று அரசியல் நாடகம் செய்தார்.

சட்டசபையில் முதலவர் மு.க ஸ்டாலின்
சட்டசபையில் முதலவர் மு.க ஸ்டாலின்

அதோ இதோ என்று இப்படியே இழுவையாக இருக்க நீட் தேர்வு ஒரு வழியாக நடந்து முடிந்துவிட்டது. இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு தற்கொலை பட்டியலை தனுஷ் என்கிற கூலித் தொழிலாளியின் மகன் தொடங்கி வைத்தான். அதை தொடர்ந்து தற்போது மாநில பொதுத்தேர்வில் பள்ளி அளவில் முதல் மதிப்பெண் பெற்ற கனிமொழி நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்துவிடும் என்ற அச்சத்தில் இப்போது தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது போன்ற தற்கொலைகள் இன்னும் தொடரும் என்பதை நம்மால் முன்பே கணிக்க முடிகிறது.

இந்நிலையில் நீட் தேர்வு எழுதிய அனைத்து மாணவ மாணவிகளுக்கும் தொலைபேசி வழியாக மனநல ஆலோசனை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார் அமைச்சர் மா. சுப்ரமணியம். இது வரவேற்க கூடிய விஷயம் என்றாலும் இந்த ஒரு நடவடிக்கை மட்டும் போதாது. மாணவ மாணவிகளின் மனநிலையை பதினேழு வருடங்களாக வளர்த்திய அவர்களுடைய பெற்றோராலயே கணிக்க முடியவில்லை. ஆதலால் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியமாகிறது.

மா சுப்ரமணியம்
மா சுப்ரமணியம்
விகடன்

1. தேர்வு முடிவுகளை அந்த தேர்வுக்கான அதிகாரபூர்வ இணையதளங்களில் வெளியிடுவதற்கு முன் தேர்வு எழுதிய அத்தனை மாணவ மாணவிகளின் பட்டியலையும் அரசாங்கம் மாவட்ட வாரியாக கணக்கெடுத்து வைக்க வேண்டும். அவர்களின் பன்னிரெண்டாம் வகுப்பு மாநில பொதுத்தேர்வு மதிப்பெண்ணையும் நீட் தேர்வு மதிப்பெண்ணையும் அரசாங்கம் தனிப்பட்டியலாக தயார் செய்ய வேண்டும். அதில் எந்தெந்த மாணவ மாணவிகள் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றிருக்கிறார்களோ அவர்களை டார்கெட் செய்து அவர்களுக்கு விஏஓ முதல் கலெக்டர் வரை உள்ள ஏதாவது ஒரு அதிகாரியோ அல்லது பள்ளி தலைமையாசிரியரோ நம்பிக்கை வார்த்தைகளை... போன் வழியாகவோ அல்லது கடிதம் வழியாகவோ அல்லது நேரில் அழைத்தோ தாழ்வு மனப்பான்மையை போக்கும் வகையில் பேச வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2. முதல்வரிடம் இருந்து தன்னம்பிக்கை வார்த்தைகள் நிரம்பிய கடிதம் மற்றும் தன்னம்பிக்கை புத்தகம், கல்வித்துறையில் உள்ள இதர படிப்புகள்... அதற்கான கல்லூரி மற்றும் கட்டண விவரங்கள் பற்றிய ஆலோசனை புத்தகம் ஒன்று நீட் தேர்வு எழுதிய மாணவ மாணவிகளின் வீடுகளுக்கு தேடி வந்தால் இன்னும் கூடுதல் சிறப்பாக இருக்கும்.

3. அரசுப்பள்ளி மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர் ஆசிரியைகள் தங்கள் வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள அல்லது தங்களது பள்ளியை சார்ந்த நீட் தேர்வு எழுதிய மாணவ மாணவிகளின் பெற்றோர்களுடன் தினமும் போன் வழியாகவோ அல்லது நேரிலோ உரையாடி மாணவ மாணவிகளின் மனநிலையை சீராக வைத்திருக்க உதவ வேண்டும்.

நீட் தேர்வு எழுத வந்த மாணவர்கள்
நீட் தேர்வு எழுத வந்த மாணவர்கள்
Photo: Vikatan / T. Vijay

4. நீட் தேர்வுக்கு முழு கவனத்தையும் செலுத்தி வருடக்கணக்கில் படித்து வரும் மாணவ மாணவிகளுக்கு முடிந்தால் ஊக்கத்தொகையாக குறிப்பிட்ட தொகையை வழங்கலாம்.

5. மாவட்டந்தோறும் நீட் தேர்வு எழுதிய மாணவ மாணவிகளுக்காக இலவச முகாம்கள் நடத்தப்பட வேண்டும். அதில் நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்ற அந்த மாவட்டத்தை சார்ந்த முன்னாள் மாணவ மாணவிகள், மனநல ஆலோசகர்கள், பள்ளி ஆசிரியர்கள், மருத்துவ கல்லூரி ஆசிரியர்கள், தற்போது நீட் தேர்வு எழுதும்/ எழுதிய மாணவ மாணவிகள், அவர்களுடைய பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டு மனம்விட்டு கலந்துரையாடும் வகையில் முகாம்கள் நடத்தப்பட வேண்டும்.

6. நீட் தேர்வு எழுதும் அரசுப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு மற்றும் கூலித்தொழிலாளிகளின் மகன் மகள்களுக்கு செலவாக கூடிய நீட் பயிற்சி மைய கட்டண தொகையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்தால் சிறப்பாக இருக்கும்.


7. நீட் தேர்வு எழுதிய மாணவ மாணவிகள் / தயாராகும் மாணவ மாணவிகள் மனநல மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற விரும்பினால் அவர்களிடம் ட்ரீட்மென்ட் எடுக்க விரும்பினால் அதற்கான கட்டண தொகையை அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும் என்று அறிவிக்க வேண்டும். மனநல மருத்துவமனையில் நீட் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு வெயிட்டிங் டைம் என்று ஒதுக்காமல் அவர்களுக்கான நேரத்தை மிச்சம் பண்ணும் வகையில் உடனடியாக டாக்டரை பார்க்கும் வகையில் முன்னுரிமை கொடுக்க வேண்டும். (நம் தமிழகத்தில் இலவசமாக பணியாற்றும் வகையில் எத்தனை அரசு மனநல மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்பது கேள்விக்குறி. இந்த விஷியத்தையும் அரசு கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். குடிபோதை பழக்கத்தில் இருந்து மீள நினைப்பவர்களுக்கு இது உதவும்.)

நீட் தேர்வு எழுத வந்த மாணவர்கள்
நீட் தேர்வு எழுத வந்த மாணவர்கள்

8. தற்கொலைகளை தடுக்கும் வகையில் ஏற்கனவே 104 என்ற பிரிவு செயல்படுகிறது என்றாலும் நீட் தேர்வு எழுதிய மாணவ மாணவிகளின் பெற்றோர்களுக்கு தினமும் நம்பிக்கை வார்த்தைகள் நிரம்பிய தமிழ் குறுஞ்செய்தியை அனுப்ப அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

9. இரண்டு வருடம்/ மூன்று வருடம் என்று நீட் தேர்வுக்கு டைம் எடுத்து தொடர் முயற்சி செய்யும் மாணவ மாணவிகளின் நெருங்கிய உறவினர்களுக்கு... "இன்னும் எத்தன வருசத்த வீணாக்குவ?" என்பது போன்ற முட்டாள்தனமான கேள்விகளை கேட்க கூடாது என்றும் தன் குறிக்கோளில் உறுதியாக இருக்கும் மாணவ மாணவிகளின் தன்னம்பிக்கையை குறைக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஆலோசனைகள் நிரம்பிய குறுஞ்செய்தி அல்லது கடிதத்தை பெற்றோர்கள் வழியாக சென்றடைய அரசு வலியுறுத்த வேண்டும். (நீட் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளின் உறவினர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற ஆலோசனை குறிப்பு புத்தகங்கள் வெளியிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.)

10. நீட் தேர்வு எழுதிய மாணவ மாணவிகளை எந்த சூழலிலும் தனியாக விட்டுவிடாமல் அவர்கள் யாரிடம் மனம்விட்டு பேச நினைக்கிறார்களோ அவர்களிடம் பேச... ஆலோசனை கேட்க பெற்றோர் உதவ வேண்டும். ஆன்லைன் வகுப்பிற்கு சரியான வசதி இல்லாத (வருமான சான்றிதழ் மற்றும் அப்பா அம்மாவின் தொழிலை அடிப்படையாக வைத்து) மாணவ மாணவிகளுக்கு அரசாங்கமே போன் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு