வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
‘என்ன உற்சாகம் இன்னைக்குக் கரை புரண்டு ஓடுது?’ கேட்டபடியே வந்தான் கிருபாகரன்.
‘உனக்குத் தெரியாதா இந்த வருஷம் ‘வருஷப் பிறப்பு’ அதான் நியூ இயர் சண்டே வருதே?!’ என்றான் ஆனந்தன்.
‘அதுக்கென்ன…?’
‘சண்டேன்னா, ‘ஓய்வு’ நாளில்லே…?!’
‘அதுனால..?’
‘ஆரம்ப நாளே சண்டேனா, ஓய்வுநாள்ல கஷ்டப்பட்டு உழைக்க வேண்டாமே..?’
‘ஓ! அப்படியா? வருஷக் கடைசி நாளும், சண்டேதானே பார்த்தியா?!’
‘அப்படியா..? சரியா கவனிக்கலை..! அப்ப, ஆரம்ப நாளும் கடைசிநாளும் ஓய்வுநாள்னா, வருஷம் பூராவும் கஷ்டப்படவே வேண்டாம் பாரு?! ‘ஹேப்பி இன்று முதல் ஹேப்பி..!’ ஜாலியா இருக்கலாம்., பாடினான் உற்சாகமாக.
உனக்கொன்னு தெரியுமா? ஜப்பான், இரண்டாம் உலகப்போர்ல அணு குண்டுபோடப்பட்டு தொழில் நகரங்கங்கள் உருக்குலைந்து போனபோது அந்த நாட்டு அதிபர் கேட்டாராம், ‘பழைய ஜப்பானை மீட்டுக் கொணர, நாமெல்லாம் எட்டு மணிநேரம் மட்டும் உழைத்தால் போதாது! கூட, ஒரு மணி நேரம் அதிகமா உழைக்கணும்! சம்மதமான்னு’ மக்களைக் கேட்டாராம்.

மக்கள் ‘முடியாது! முடியாது!’ன்னு கோஷம் போட்டாங்களாம்!
‘அய்யய்யோ.. அப்புறம்?’
‘ஏன்? உங்களுக்கு பழைய ஜப்பானை மீட்க, ஆசையில்லையா? ஏன் மாட்டோங்கறீங்கன்னாராம் ஜப்பான் அதிபர்.
மக்கள் சொன்னாங்களாம், ‘ஒன்பது மணிநேரமில்ல, பத்து மணிநேரம் கூட, ஏன் நேரம் காலமே பார்க்காமகூட நாங்க நாட்டுக்காக உழைக்கத் தயார்னு சொன்னாங்களாம். அந்த உறுதி கடும் உழைப்புதான் இன்றைக்கு பழைய ஜப்பானை மீட்டிருக்கு. 2புதிய ஜப்பானை உருவாக்கி இருக்கு!’
‘அதுக்கு?!’
அதுக்கா…?! ‘ஓய்வு நாள்ல வருஷம் பொறக்குது., ஆரம்பிக்குதுன்னா உழைக்க வேண்டாங்கறயே.. நம்ம நாடு, எப்படி முன்னேறும்?!’

ஒரு நிமிட மெளனத்துக்குப் பிறகு….
‘நீ சொன்னது நெசமா நடந்துச்சோ இல்லையோ… உழைக்கணும்கற எண்ணத்தை உண்டாக்கீட்டே… என் கண்ணைத் தொறந்துட்டே…! என்றான்.
‘உண்மைதான் நான் சொன்னது, கேள்விப்பட்ட செய்திதான். ஜப்பான் அதிபர் சொன்னாரோ இல்லையோ, நம்ம ஆண்டவர் ஏசுநாதர் என்ன சொல்லி இருக்கார் தெரியுமா?
‘உங்களில் எந்த மனுஷனுக்காகிலும் ஒரு ஆடு இருந்து , அது ஓய்வுநாளில் குழியிலே விழுந்தால், உரியவன் அதைப் பிடித்துத் தூக்கிவிட மாட்டானோ?’-(மத்தேயு:12-8) ஆக, ஆட்டுக்காகிலும் ஒருவன் வாழுகிறா நாட்டுக்காகிலும் ஓய்வு நாளில் உழைக்க மறுப்பது தவறு என்று புரிந்து கொள்!’ என்றான்கிருபாகரன்.
அப்ப சரி, நானும் நேரம், காலம் பார்க்காம உழைக்கப் போறேன்!’ என்றான் ஆனந்தன்.

‘நேரம் காலம் பார்க்காமெல்லாம் உழைக்கணும்னு இல்லே..! உழைக்கற நேரத்தில் ஒழுங்கா உழைச்சாலே, பழைய ஜப்பானா இல்லை, இல்லை., பணக்கடன்ல இருந்து ‘இந்திய நாடு’ மீண்டுடும்!’ என்றான்.
‘ஹேப்பி இன்று முதல் ஹேப்பி!’ என்ற பாட்டை இப்போது வேறு ஸ்கேலில் பாடினான்ஆனந்தன்.
****
-வளர்கவி, கோவை.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.