Published:Updated:

நைஜீரியா வாகன ஓட்டி கற்றுக் கொடுத்த வாழ்க்கை பாடம்! - குட்டி ஸ்டோரி

Representational Image
Representational Image

அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை. நான் நைஜீரியாவிற்கு வந்து மூன்று மாதங்கள் ஆகியிருந்தது...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

நான் என் வேலை நிமித்தமாக பல வெளிநாடுகளுக்கு சென்று இருக்கிறேன். குறிப்பாக கிழக்கு ஆப்ரிக்க நாடுகள், மேற்கு ஆப்ரிக்க நாடுகள் மற்றும் தெற்கு ஆப்ரிக்க நாடுகள். பொதுவாக இந்தியாவில் ஆப்ரிக்கா என்றவுடன் உயரமான , உறுதியான உடல்வாகுடன், கரடுமுரடான மனிதர்களை தான் நினைவில் கொள்வார்கள். இது எந்த அளவிற்கு உண்மை என்பதை அவர்களுடன் பழகினால் தான் தெரிய வரும். நான் எனது நைஜீரியா அனுபவத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்.

Representational Image
Representational Image

அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை. நான் நைஜீரியாவிற்கு வந்து மூன்று மாதங்கள் ஆகியிருந்தது. சமையலுக்கு தேவையான பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க 34 கிலோமீட்டர் தூரமுள்ள லாகோஸூக்கு செல்ல நினைத்திருந்தேன். வாகன ஓட்டுநர் காலை எட்டரை மணிக்கு வந்துவிட்டார். காலை சிற்றுண்டிக்கு பிறகு , கிளம்பினேன். லாகோஸ், நைஜீரியாவின் வணிக தலைநகர் என்று அழைக்கப்படுகிறது. பல நேரங்களில் முப்பத்தி நான்கு கிலோ மீட்டர்களை கடக்க மூன்று மணிநேரம் ஆகும்.

வழிநெடுக நகர்ப்பகுதிகளையும் இயற்கை காட்சிகளையும் கண்டு ரசித்த படி பயணித்து கொண்டிருந்தேன். பல இடங்களில் வாகன நெரிசல்கள் , வெகு நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது. சில இடங்களில் இடைமறித்து நிற்கும் கன ரக வாகனங்களை கடக்க , எனது வாகன ஓட்டியின் நடவடிக்கை வினோதமாய் இருந்தது. அவரது இருக்கையில் இருந்து இறங்கி சென்று , அந்த கனரக வண்டி ஓட்டியின் இருக்கை அருகில் சென்று கைக்கூப்பி வணங்கி வழிவிடுமாறு சைகையில் கோரிக்கை விடுத்து, பின் வண்டியை நகர்த்தினார்.

Representational Image
Representational Image

ஒருவாறாக இரண்டு மணிநேரத்தில் லாகோஸை அடைந்து அங்கிருக்கும் மிகப்பெரிய பல்நோக்கு அங்காடிக்கு சென்றேன். எனக்கு தேவையான மளிகைப்பொருட்களை வாங்கும் போது, வாகன நெரிசலில், எனது வாகன ஓட்டியின் வித்தியாசமான நடவடிக்கை நிழலாடியது. உடனடியாக வழக்கமாக அவருக்கென வாங்கும் குளிர்பானத்துடன் அவருக்கென மட்டன் சமோசாவையும் வாங்கினேன். வாகனத்தில் ஏறும் போது , அவருக்கென வாங்கியவற்றை கொடுத்தவுடன் புன்னகையுடன் பெற்றுக்கொண்டார். மறுபடியும் கிளம்பிய நான் , வாகன நெரிசல் குறைவாக இருந்த காரணத்தால், ஒரு மணிநேரத்தில் இருப்பிடத்தை வந்தடைந்தேன்.

மறுநாள் அலுவலுக்கு புறப்பட அதே வண்டி , அதே வாகன ஓட்டி. இருக்கையில் அமர எத்தனித்த போது நன்றி எனக்கூறி அவர்கள் பாணியில் உடலை வளைத்தார். எதற்காக எனக்கேட்ட போது, நேற்று நீங்கள் வாங்கி தந்த உணவு பொருளுக்காக என்றார். மேலும் கேட்ட போது, அவர்களின் வழக்கப்படி , எந்தவொரு உதவிக்கும் மறுநாள் நன்றி தெரிவிப்பது என்றார். இப்படியும் நன்றி மறவாமை போற்றப்படுகிறது. முடிந்தால் நாமும் கடைப்பிடிப்போம்.

-சரோவை

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு