Published:Updated:

காந்தியின் நவகாளி யாத்திரை தோல்வி முயற்சியா? - வரலாற்று பக்கங்கள்

Noakhali March
Noakhali March

தேசப் பிரிவினையைத் தடுக்க காந்தி எவ்வளவோ முயற்சி செய்தும் அவரால் முடியவில்லை. அப்போதிலிருந்தே அவர் தனித்து விடப்பட்டிருந்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

1946 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஜின்னாவின் தனிநாடு கோரிக்கை வலுபெற்றது. கோரிக்கை, கூட்டம் ஆனது. கூட்டம், கலவரம் ஆனது.


கொல்கத்தா முழுவதும் இனக்கலவரம் பற்றி எரிய, பிரிட்டிஷ் அரசால் ஒன்றும் செய்ய முடியவில்லை.


கொல்கத்தாவைத் தொடர்ந்து வங்காளத்திலும் பீஹாரிலும் கலவரங்கள் மூண்டன.


வங்காளத்தின் 'நவகாளி' என்ற இடத்தில் ஹிந்துக்கள் முஸ்லிம்களால் கொல்லப்பட, பீஹாரில் முஸ்லிம்கள் ஹிந்துக்களால் கொல்லப்பட்டனர்.


இரு பிரிவினர் இடையேயும் 'மதத்தீ' கொழுந்து விட்டு எரிந்தது. அந்தந்த இடத்தில் இருந்த சிறுபான்மையினர் ஒடுக்கப்பட்டனர்.


ஹிந்து - முஸ்லிம் ஒற்றுமைக்காக தன் வாழ்வின் ஒரு பகுதியை செலவிட்ட காந்தி, தலையில் கையை வைத்து உட்கார்ந்து கொண்டார்.


தேசப் பிரிவினையைத் தடுக்க காந்தி எவ்வளவோ முயற்சி செய்தும் அவரால் முடியவில்லை. அப்போதிலிருந்தே அவர் தனித்து விடப்பட்டிருந்தார்.


கொண்ட அகிம்சை கொள்கையின் மீது கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கையை இழக்கத் தொடங்கினார் அவர்.
'நான் இருட்டில் எதையோ தேடிக் கொண்டிருக்கிறேன். நான் இந்த சேதத்தை திசை தவற செய்து விட்டேனோ...?' என நண்பருக்கு கடிதம் எழுதினார்.


ஆனாலும் அவர் துவண்டு போய் ஓர் இடத்தில் முடங்கவில்லை.
கையறு நிலையில் அவர் நிற்கும் போதெல்லாம், அவருக்கு உதவியது அவருடைய பாதங்கள்.


ஆம்...


அவர் மீண்டும் நடக்க முடிவெடுத்தார்!


'ஒரு சாதாரண நடை என்ன செய்யும்?'


'போர் குணத்தைத் தடுக்கும்...அன்பை நிலை நாட்டும்...'
செய்து காண்பித்தார் காந்தி.


'நான் செய்த பரிசோதனைகளில் மிக முக்கியமானது இது...' என சொல்லி, ஆதரவாளர்கள் சிலைரை திரட்டிக் கொண்டு நவகாளி நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

Noakhali March
Noakhali March

1946 அக்டோபரில் ஆரம்பித்து மூன்று மாதங்கள் வரை நீண்ட அந்த நடைப் பயணம், நவகாளியில் இருந்த அசாதாரண சூழ்நிலையை மாற்றி அமைத்தது.


ஆக்ரோஷமாக சீறிக்கொண்டிருந்த கலகக்காரர்கள் அமைதியானார்கள்.


பாதிக்கப்பட்ட ஹிந்து பெண்களுக்கு தேவையான உதவிகளை காந்தி செய்தார். முஸ்லிம் பெண்களோ, ஆர்வமுடன் முன்வந்து நிதி உதவி செய்தனர்.


நவகாளியின் சுற்றத்தில் இருந்த 47 கிராமங்களின் சாலைகளில் காந்தியின் புண்ணியப் பாதம் பதிந்தது.


அப்படி ஒரு கிராமத்திற்கு அவர் சென்ற போது எடுத்த புகைப்படம் தான் இது.


கிட்டத்தட்ட 116 மைல்கள் செருப்பு கூட இல்லாமல் வெறுங்காலில் நடந்தபோது, அந்தக் கைத்தடி கிழவனுக்கு வயது 77!


உப்பு சத்தியாக்கிரகத்திற்குப் பிறகு காந்தி மேற்கொண்ட சக்தி வாய்ந்த பயணம் நவகாளி யாத்திரை. சுமார் ஐந்தாயிரம் மக்களை காவு வாங்கிய அந்த இனக்கலவரம், மேலும் தீவிரம் ஆகாமல் இருந்ததற்கு காந்தியின் நடை பயணமே காரணம்.
மதத்தால் துண்டாகிக் கிடந்த இரு பிரிவினரையும் காந்தி என்ற ஒற்றை பிம்பம் ஒன்றாக்கியது.


நவகாளி யாத்திரை ஒரு தோல்வி முயற்சி எனவும் சில வரலாற்று ஆசிரியர்கள் பதிவிடாமல் இல்லை. ஆனால் நவகாளி யாத்திரை பயணத்தில் ஒரு உயிர் போவதை அவர் தடுத்து இருந்தால் கூட அது வெற்றியே!


'காந்தியின் பாதங்கள் பல உயிர்களை காப்பாற்றி இருக்கின்றன'.

'ஒரு சாதாரண நடை என்ன செய்யும்?'


'போர் குணத்தைத் தடுக்கும்...அன்பை நிலை நாட்டும்...'


- சரத்


(Ref. - நள்ளிரவில் சுதந்திரம் டொமினிக் லேப்பியர், இந்தியப் பிரிவினை மருதன், என்றும் காந்தி ஆசை, History TV website)

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு