Published:Updated:

மறக்க முடியாத பிறந்த நாள் பரிசு | My Vikatan

Representational Image

ஏப்ரல் மே மாதங்களில் எங்கள் தோப்பில் இருந்து "புளி" வரும். புளியிலிருந்து புளியங்கொட்டையை எடுத்து, வீதியில் புளியங்கொட்டை வாங்க வருபவர்களிடம் கொடுக்க அவர்கள் 100 கொட்டைக்கு நாலணா(25பைசா) தருவார்கள்.

மறக்க முடியாத பிறந்த நாள் பரிசு | My Vikatan

ஏப்ரல் மே மாதங்களில் எங்கள் தோப்பில் இருந்து "புளி" வரும். புளியிலிருந்து புளியங்கொட்டையை எடுத்து, வீதியில் புளியங்கொட்டை வாங்க வருபவர்களிடம் கொடுக்க அவர்கள் 100 கொட்டைக்கு நாலணா(25பைசா) தருவார்கள்.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

சிறுவயதில்.. ஞாயிறன்று ஒரு பக்கம் தமிழ், ஒரு பக்கம் ஆங்கிலம் எழுதி முடித்தால் அம்மா நாலணா கொடுப்பார்கள். ஓடிப்போய் தெருமுனையில் இருக்கும் பரிமளாக்கா வீட்டிற்கு போய் தேன் மிட்டாய் வாங்கி... ஒண்ணு, ஐந்து பைசா, வெளிர் சிவப்பு நிறத்தில் உருண்டையாக இருக்கும்.

வாயில் போட்டால் அப்படியே தேன் போல உள்ளே இறங்கும் அதன் சுவையை அடித்துக் கொள்ள இன்றுவரை வேறு எந்த மிட்டாயும் இல்லை. அங்கேயே இரண்டு சாப்பிட்டு மூன்றை எடுத்து வந்து வீட்டின் திண்ணையில் உட்கார்ந்து பொறுமையாக ரசித்து ருசித்து சாப்பிட்டது...

ஏப்ரல் மே மாதங்களில் எங்கள் தோப்பில் இருந்து "புளி" வரும். புளியிலிருந்து புளியங்கொட்டையை எடுத்து, வீதியில் புளியங்கொட்டை வாங்க வருபவர்களிடம் கொடுக்க அவர்கள் 100 கொட்டைக்கு நாலணா(25பைசா) தருவார்கள்.

அதற்காகவே எப்பொழுதெல்லாம் தேன் மிட்டாய் சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்பொழுதெல்லாம் புளியிலிருந்து புளியங்கொட்டை எடுப்பதை வழக்கமாக்கிகொண்டது... பதின் பருவ வயதில் நாலணா, எட்டணாவாக (50பைசா) உயர்ந்து, பள்ளிவாசலில் இருக்கும் கடையில் அவசர அவசரமாய் ஆரஞ்சு மிட்டாய் வாங்கிச் சென்று தாவணியில் வைத்து காக்கா கடி கடித்து (ப்ரேயரில் வாயில் அடைத்துக் கொண்டு) தோழிகளுடன் பகிர்ந்து கொண்டது...

Representational Image
Representational Image

கல்லூரி காலங்களில் எட்டணா ஒரு ரூபாயாக உயர்ந்து "நெஸ்லே பாரிஸ்" (கிரீன் கலர் ரேப்பர் சுற்றி இருக்கும்) சாக்லேட் வாங்கி கல்லூரிக்கு சென்று (முதல் நாள் பார்த்த சினிமாவின் விமர்சனங்களை பேசிக்கொண்டே) முதல் பீரியட் முடிந்து மணி அடித்தபின் ஆசிரியர் சென்ற பிறகு அடுத்த பீரியடின் ஆசிரியர் உள்ளே வருவதற்குள் அவசர அவசரமாய் சாக்லேட்டை பிரித்து வாயில் போட்டு பல்லில் ஒட்டிக் கொண்டதை நாவால் சுழற்றி உள்ளே தள்ளியது.... இந்தியாவை எத்தனையோ மன்னர்கள் ஆண்டு இருந்தாலும், குப்தர்களின் ஆட்சி காலத்தை தான் "இந்தியாவின் பொற்காலம்" என்று சொல்லுவர். அதுபோல அதன் பிறகு எத்தனையோ மிட்டாய்/ சாக்லேட்டுகள் சாப்பிட்டாலும் இவையெல்லாம் தான் எனது பொக்கிஷ நினைவுகள். என்னுடைய பொற்காலம்.

சரி இப்பொழுது நிகழ்காலத்துக்கு வருவோம். நிச்சயத்துக்கும் திருமணத்திற்கும் இடையில் என்னவரின் பிறந்தநாள் வந்தது. அப்பொழுது ஓல்ட் ஸ்பைஸ்ஆஃப்டர் ஷேவ் லோஷன் மற்றும் டெய்ரி மில்க்பெரிய பார். (விலை... ஐந்து ரூபாய்) இரண்டையும் வாங்கி. கிப்ட்ஃபேக் செய்து அவரின் அலுவலக முகவரிக்கு அனுப்பினேன். முதன்முதலாக என் காதலையும், அன்பையும் "சாக்லேட்"மூலம் வெளிப்படுத்திய அழகிய தருணமது . அதன் பிறகு என் மனதிற்கு பிடித்தவர்களை சந்திக்க செல்லும்போது' டெய்ரி மில்க் ' வாங்கி சென்று" இந்த நட்பு இனிப்பாக தொடரட்டும் "என்று கூறி டெய்ரி மில்க் கொடுப்பதை என் வழக்கமாக (வே)ஆக்கிக் கொண்டேன். கோயிலுக்கு சென்றால் கூட பழத்துக்குப் பதில் டெய்ரிமில்க் தான் எடுத்துச் செல்வேன்.

எனக்கு மிகவும் பிடித்த ஒரு நாள் என்றால்அது என் பிறந்தநாள். ஒரு முறை என் பிறந்தநாளுக்கு அவர் வாழ்த்தும் சொல்லவில்லை. பரிசும் அளிக்கவில்லை. முதலில் சற்று வருத்தமாக இருந்தது. பிறகு சரி அவருக்கு அதிக வேலை அதனால் என்ன என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன். இரவு 9 மணிக்கு வீட்டிற்கு வந்தபோது, ஒரு பெரிய டெய்ரி மில்க்டன் ஒரு பேப்பரை சுற்றி என்னிடம் கொடுத்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொன்னார் என்ன பேப்பர் என்று வாங்கிய பிறகு தான் தெரிந்தது. அந்த மாத மளிகை சாமான் பொருட்களின் பில்ரூபாயை அவர் கொடுத்து வந்த விஷயம். (குடும்பச் செலவுக்கென்று என்னிடம் ஒண்ணாம் தேதி பணத்தைக் கொடுப்பது அவரின் வழக்கம்.

எப்பவும் ஒரு மாதத்தின் மளிகை சாமான் பில்லை அடுத்த மாதம் லிஸ்ட் போடும் போது, கொடுத்துவிட்டு பிறகு வாங்குவது என்னோட வழக்கம்.

உலகத்திலேயே மனைவியின் பிறந்தநாளுக்கு பரிசாக அந்த மாத மளிகை சாமான் பில்லை கொடுத்து வந்தது என்னவராக மட்டும் தான் இருக்க முடியும். ஹாஹாஹா!

எது எப்படியோ அவரின் அன்பை சாக்லேட்டுடன் உணர்ந்த அன்பான தருணம். பிடித்த சாக்லேட் பிடித்தவரிடம் இருந்து கிடைத்த போது அது வேற லெவலாக இருந்தது.கூடவே அந்த மாத மளிகைச்சாமான் பில்லை கட்டியதில். எனக்கு பணம் மிச்சம் ஆனதால் இரட்டிப்பு சந்தோஷம்)

மிட்டாய்/சாக்லேட் பற்றி இவ்வளவு சொல்லிவிட்டு ஒரு பஞ்ச் சொல்லாமல் விட்டால் எப்படி? "வாழ்க்கை என்றுமே இனிக்கும் இனிப்பைப்போல... என்னவொன்று அதை ரசித்து சுவைக்க தெரிந்திருக்க வேண்டும் அம்புட்டுதான் மக்கா!"

என்றென்றும் அன்புடன்

ஆதிரை வேணுகோபால்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.