Published:Updated:

உடற்பருமன் பல நோய்களின் நண்பன்! | முதுமை எனும் பூங்காற்று | My Vikatan

Representational Image

உடற்பருமன் பல நோய்களின் நண்பன். அதை முதுமையில் விரட்டுவது அவ்வளவு சுலபமல்ல. உடற்பருமனைப்பற்றி மூன்று முக்கிய உண்மைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

உடற்பருமன் பல நோய்களின் நண்பன்! | முதுமை எனும் பூங்காற்று | My Vikatan

உடற்பருமன் பல நோய்களின் நண்பன். அதை முதுமையில் விரட்டுவது அவ்வளவு சுலபமல்ல. உடற்பருமனைப்பற்றி மூன்று முக்கிய உண்மைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

உடற்பருமன் பல நோய்களின் நண்பன். அதை முதுமையில் விரட்டுவது அவ்வளவு சுலபமல்ல, முழுமனத்தோடு உணவு கட்டுப்பாடும், உடற்பயிற்சியையும் தவறாமல் கடைப்பிடித்தால்தான் உடற்பருமனை குறைக்க முடியும்.

காரணங்கள்

 • பெற்றோர்களிடமிருந்து பாரம்பரியமாக வருவது. உங்களில் பெற்றோரில் ஒருவரோ அல்லது இருவருமே அதிக உடல் எடை கொண்டவராக இருந்தால் உங்கள் எடை கூட மரபு ஒரு காரணம்.

 • கொழுப்பு உணவுகள் விலை மலிவு, ருசி மற்றும் சுலபமாகக் கிடைக்கிறது என்பதால் கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளைச் சாப்பிடுதல்.

 • உடல் உழைப்பில் ஈடுபடாமை நவீன தொழில் நுட்பம் மற்றும் உடல் உழைப்பைக் குறைக்கும் கருவிகள், நாம் கடினமாக உழைப்பதை தேவை இல்லாமல் செய்துவிட்டன. முன்பு ஒரு காலத்தில் பொழுதைப் போக்கிட வெளியில் போவது ஒன்றுதான் வழியாக இருந்தது. ஆனால் தற்பொழுது ஒரு முறை வெளியே நடந்துவிட்டு வர நேரம் ஒதுக்கிக்கொள்ள வேண்டியதாகிவிட்டது.

 • மன அழுத்தத்தின் கீழ் வருத்தமான அனுபவங்கள் ஏற்படும்பொழுது அதை சமாதானப்படுத்திக் கொள்ள அதிகம் சாப்பிட ஆரம்பிக்கிறார்கள். அது மட்டுமல்ல, பசி இல்லாவிட்டாலும் கூட மனதிற்கு ஒரு நல்ல சூழலுக்காக சிலர் தொடர்ந்து சாப்பிடுகிறார்கள்.

 • தைராய்டு சுரப்பி குறைவாக சுரத்தல்.

 • மருந்துகள் - ஸ்டீராய்டுஸ், மனநோய்க்கு கொடுக்கும் சில மாத்திரைகள் மற்றும் நீரிழிவு நோய்க்கு கொடுக்கும் மாத்திரைகள்.

Representational Image
Representational Image

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உடற் பருமனைக் கண்டுபிடிப்பது எப்படி?

இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரையின் அளவை கண்காணிப்பதைப் போலவே, உடல் எடையையும் மற்றும் ஆரோக்கியம் சம்பந்தமான அபாயத்தையும் அளவிட, பாடி மாஸ் இண்டெக்ஸ் (BMI) பொருத்தமான வழியாகும்.

இந்த முறையைப் பயன்படுத்துவதின் மூலம் ஒருவரின் எடை எவ்வளவு அதிகமாக உள்ளது என்பதை சுலபமாக கணக்கிட முடியும். இந்தக் கணக்கீடு மீட்டர்களில் ஒருவரின் உயரம் மற்றும் கிலோக்களில் ஒருவரின் எடை என்ற அடிப்படையில் உள்ளது.

BMI = கிலோ கிராம்களில் உங்கள் எடை = 95 கிலோ

--------------------------------------------------------------- -------------- = 34.9

( மீட்டர்களில் உங்கள் உயரம்) 2 2.72

1. மீட்டர்களில் உங்கள் உயரத்தை அளவிடுங்கள்.

(உ.ம்.165 செ.மீ. = 1.65 மீ)

2. இதை இதே எண்ணால் பெருக்குங்கள் (உ.ம்.1.65 × 1.65 =2.72)

3. உங்கள் எடையை கிலோ கிராம்களில் அளவிடுங்கள (உ.ம்.95 கிலோ)

4. BMI கணக்கிட விடை 3ஐ 2 ஆல் வகுக்கவும். (உ.ம். 95 கிலோ/2.72 மீட்டர்

= 34.9)

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

BMI வைத்து உடல் எடையைக் கணக்கிடுதல்

 • BMI 18க்கு கீழே இருந்தால் - குறைவான எடை

 • BMI 18 – 23 வரை இருந்தால் - இயல்பான எடை

 • BMI 23க்கு மேல் இருந்தால் உடல் பருமன்

தொல்லைகள்

உடற்பருமனைப்பற்றி மூன்று முக்கிய உண்மைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

 • அதிக எடை நோய்களை உண்டாக்குகிறது. அதிக பருமனாக இருப்பது தலைமுதல் கால் வரை ஆரோக்கிய பாதிப்பை உண்டாக்குகிறது. இதன் விளைவுகள் முதுகு மற்றும் மூட்டுவலி. இரத்த சிரைகளில் புண்கள், பித்தப்பையில் கற்கள், ஒவ்வொரு கிலோ எடையும் அதிக இரத்த அழுத்தத்தை உண்டாக்கும். மாரடைப்பு, டைப் 2 நீரிழிவு மற்றும் புற்றநோய் (குறிப்பாக வயிறு மற்றும் மார்பகப் புற்றுநோய்).

 • ஒவ்வொரு கூடுதல் கிலோவும் ஆயுளைக் குறைக்கிறது. இயல்பான உடல் எடை கொண்டவர்களைவிட கூடுதல் எடை கொண்டவர்களுக்கு மாரடைப்பால் மரணம் அடையும் அபாயம் அதிகம் உண்டு.

 • கூடுதல் எடை வாழ்க்கையைத் துன்பமாக்கிறது. உடல் எடை கூடுதலாக இருப்பதால் அன்றாட வேலைகளில் பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. பொதுவாக சிறிதளவு உடல் உழைப்பு பணி செய்தாலே மூச்சு வாங்குதல் ஏற்படுகிறது. இவை அனைத்துமே சுய அதிருப்தியை ஏற்படுத்துகிறது.

உடற்பருமனுக்கு காரணங்கள் ஏதுமிருந்தால் அதற்கு மருத்துவரின் உதவியை நாடி தக்க சிகிச்சையை பெற்றுக் கொண்டாலே உடற்பருமன் குறைந்து விடும். உதாரணம்: தைராய்டு குறைவாக சுரத்தல்.

Dr V S Natarajan
Dr V S Natarajan

எடையைக் குறைப்பததினல் ஏற்படும் பலன்கள்

எடையைக் குறைப்பதின் மூலம் மூச்சுத்திணறல், நடக்க இயலாத நிலை மற்றும் அடிக்கடி வியர்த்தல் போன்றவற்றை குறைக்க முடியும்.

உடல் நலம் நன்றாக இருப்பதை உணர முடியும். மேலும் குழந்தைகளுடன் விளையாட அதிக சக்தி கிடைக்கும் அல்லது சமூக நடவடிக்கைகளில் அதிகமாக ஈடுபடலாம். அனைத்திற்கும் மேலாக

5-10% வரையிலான எடை குறைப்பு உயர் இரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களுக்கு ஆபத்து ஏற்படுத்துபவைகளைக் குறைக்க முடியும்.

உடற்பருமனைக் குறைக்க வழிமுறைகள்

முதலில் ஏதேனும் நோய் இருக்கிறதா எனக் கண்டறிந்து அதற்கு தக்க சிகிச்சை பெறவேண்டும். அடுத்ததாக உணவு, உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கைச் சூழல் மாற்றங்கள் அடிப்படையானவை.

உணவு முறைகள் :

 • நாள்தோறும் எவ்விதமான சிற்றுண்டியும் சாப்பிடாமல் மூன்று முறைகள் சாப்பிடவும்.

 • நீங்கள் சிற்றுண்டி சாப்பிடுபவராக இருந்தால் இடையிடையே ஆரோக்கியம் தரும் சிற்றுண்டிகளோடு மூன்று முறை சிறு அளவுகளில் சாப்பிட வேண்டும்.

 • சர்க்கரை / சர்க்கரை கலந்த உணவுகள் வேண்டாம்.

 • எண்ணெயில் நன்கு பொரித்த வதக்கிய உணவு கூடாது. சமைக்கும் போது எண்ணெயை குறைத்துக் கொள்ளுங்கள்.

 • நீங்கள் சாப்பிடும் அளவுகளைக் குறைத்துக் கொள்ள சாப்பிடுவதற்கு சற்று முன்பு ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்கவும்.

 • மெதுவாகச் சாப்பிடுங்கள். உங்கள் வயிறு நிரம்பி விட்டது என நிமிடங்கள் ஆகிறது. மூளை உணர 20

 • புத்தம் புதிய பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற நார்ச்சத்து அதிகமுள்ளவைகளை சாப்பிடுங்கள்.

 • மது கூடாது. அது காலி கலோரிகளை (உங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து அற்ற கலோரிகள்) அளிக்கிறது.

 • உங்கள் உணவை ருசிமிக்கதாக்க உப்பு, சோயா சாஸ், தக்காளி கெட்ச் அப் ஆகியவற்றை குறைவாக உபயோகிக்கவும். அதற்குப் பதிலாக புத்தம் புதிய பூண்டு, இஞ்சி, தக்காளி போன்றவற்றை உபயோகிக்கவும்.

Representational Image
Representational Image

உடற்பயிற்சி

முதலில் எடையைக் குறைக்க உடற்பயிற்சி ஏன் முக்கியம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

உடற்பயிற்சியின் பலன்கள்:

 • கலோரிகளை எரிக்கிறது.

 • உடல் பருமனால் ஏற்படும் நோய்களைக் குறைக்கிறது.

 • பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

 • தன்னம்பிக்கை மற்றும் மனோநிலை விஷயங்களில் ஊக்கப்படுத்துகிறது.

 • உடலில் தசைகளைப் பாதுகாக்கிறது.

 • நீண்டகால வெற்றி பெற உதவுகிறது.

நாள்தோறும் 30 நிமிடங்கள் நடப்பது இலட்சியமாக இருக்கவேண்டும். இவ்வாறு நடக்கமுடியாதெனில் அதை மூன்றாகப் பிரித்து பத்து, பத்து நிமிடங்களாக நடந்து செல்லுங்கள். எடை குறைப்பில் நடப்பதன் மதிப்பைப்பற்றி உங்களுக்கு பல கேள்விகள் இருக்கலாம். ஏனெனில், இது மிக சுலபமானதாகத் தோன்றுகிறது. இதற்கென சிரமமான பெரிய முயற்சிகள் தேவையில்லை. ஆனால், உண்மை என்னவெனில், நடப்பதால் மிகவும் நன்மைகள், லாபங்கள் உண்டு. மேலும் நீங்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்யாவிட்டால், இது ஒரு சிறப்பான ஆரம்பம். நீச்சல், கூடைப்பந்து அல்லது ராக்கெட் விளையாட்டுகளைப் போல் இல்லாமல், யாரும் செய்யயக்கூடியது இது. மேலும் இது பலருக்கும் கிடைக்கும் உடல் உழைப்பு நடவடிக்கை. உங்கள் விருப்பப்படி செய்யலாம். வேகமாக அல்லது மெதுவாக -உங்கள் விருப்பப்படி மேலும் நீங்கள் விரும்பியபடி எப்போதும், எங்கேயும் போகலாம் என்பதே இதன் சிறப்பு. நடப்பது சுலபமானது. நடப்பது மகிழ்ச்சியானது. நடப்பதற்கு நீங்கள் அதிக சிரமப்பட வேண்டாம். குறைந்த அளவு சக்தியே போதும்.


பலவற்றையும் ரசித்தபடி செய்யலாம். நண்பர்களுடன் நடந்து செல்லுங்கள். செலவில்லாதது. அதிக விலையுள்ள கருவிகள் அல்லது பூட்ஸ்கள் தேவையில்லை.

உடல் எடையைக் குறைக்க நடைப்பயிற்சியைத் தவிர, வேறு சிறந்த சாதனம் ஏதும் இல்லை. மருந்துகளை நம்ப வேண்டாம். விலை அதிகம். மருந்தை உண்ணும்போது மட்டுமே எடை குறையும். ஆகவே எடை குறைப்பு நிரந்தரமானதல்ல. மருந்தினால் பக்கவிளைவுகள் உண்டு. ஆகவே முழுமனத்துடன் உடற்பயிற்சியை நாடுங்கள். அது உங்களை கைவிடாது.

உடற்பருமனைக் குறைக்க உணவுக்கட்டுப்பாட்டிற்கு அடுத்தது தவறாமல் செய்யும் உடற்பயிற்சியே ஒரு சிறந்த சாதனமாகும். தவறாமல் இதைக் கடைப்பிடித்தால் வெற்றி நிச்சயம்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.