Published:Updated:

கருணை(யில்லா)க் கொலைகள்! | முதுமை எனும் பூங்காற்று | My Vikatan

Representational Image

என் கருத்து என்னவென்றால், இது மாதிரி நோயாளிக்கு கிராமங்களில் தொடர் சிகிச்சை மையம் ஒன்றை (long-term care or terminal care) ஆங்காங்கே ஆரம்பித்தால் ஓரளவுக்கு தீர்வாக அமையும் என்று எண்ணுகிறேன்.

கருணை(யில்லா)க் கொலைகள்! | முதுமை எனும் பூங்காற்று | My Vikatan

என் கருத்து என்னவென்றால், இது மாதிரி நோயாளிக்கு கிராமங்களில் தொடர் சிகிச்சை மையம் ஒன்றை (long-term care or terminal care) ஆங்காங்கே ஆரம்பித்தால் ஓரளவுக்கு தீர்வாக அமையும் என்று எண்ணுகிறேன்.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

சிசுக் கொலையைப் பற்றி ஒரளவுக்கு நமக்குத் தெரியும். மக்களிடையே இதைப் பற்றி தற்பொழுது ஒரளவுக்கு விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது. பெண் சிசுக்கள் அல்லது வேண்டாத குழந்தைகளுக்குத் தான் இந்த கதி ஏற்படுகிறது. கள்ளிப்பால் கொடுப்பது உள்ளிட்ட பலவகையான செயல்கள் மூலமும் இத்தகைய கருணையில்லாக் கொலைகள் நடைபெறுகின்றன. தான் பெற்ற பச்சிளம் குழந்தையை குப்பைத் தொட்டியில் போடுவது இப்போது ஒரு சர்வ சாதாரணமான நிகழ்வாக மாறிவிட்டது. இதைப் போலவே முதியவர்களும் கருணைக் கொலை என்ற போர்வையில் சில முதியவர்கள் கொல்லப்படுகிறார்கள். இது முக்கியமாக கிராமங்களில் இலை மறைவுக் காயாக நடந்து வருகிறது.

      இது தொடர்பாக எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை இங்கே தெரிவிக்கிறேன்.

     சமீபத்தில் நான் என்னுடைய கிராமத்திற்கு சென்றிருந்தேன். அப்பொழுது என் துாரத்து உறவினர் என்னிடம் சில மணி நேரம் பேசிக் கொண்டு இருந்தார். அப்பொழுது அவர் கூறிய ஒரு செய்தி இந்த கருணைக் கொலையை பற்றியது தான். அவர் கூறியதை அப்படியே உங்களிடம் சொல்கிறேன்.

     “எனது பக்கத்து வீட்டுக்காரர் சுமார் 50 வயது இருக்கும். அவரும் அவருடைய மனைவியும் தினமும் கூலி வேலை செய்து தான் பிழைப்பை நடத்த முடியும். அவருக்கு மூன்று குழந்தைகள் வேறு. வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள நிலை. அவருடைய தாயார் 70 வயதிற்கு மேல். சமீபத்தில் பக்கவாதம் ஏற்பட்டு படுத்த படுக்கையாய் கிடக்கிறார். தொடர்ந்து படுக்கையிலிருப்பதனால் பல இடங்களில் படுக்கைப் புண் வந்துவிட்டது. உணவை மற்றவர்கள் தான் ஊட்டி விட வேண்டும். சிறுநீர், மல ஐலம் எல்லாம் படுத்த படுக்கையில் ன். பக்கவாதத்தினால் அவரால் பேச முடியாது. அடிக்கடி காய்ச்சல் வேறு. அந்த தாயாருக்கு காலையில் இவர்கள் கூலிக்கு போகும் முன்பு தேவையானவற்றை எல்லாம் செய்து விட்டு போவார்கள் மறுபடியும் மாலையில் தான் வேலையிருந்து திரும்பிய பின்பு அவரை கவனிக்க முடியும். இடையில் யாருடைய கவனிப்பும் கிடையாது. அவரிடம் இருந்து துார்நாற்றம் வீசுவதால் பக்கத்து வீட்டுக்காரர்களும், வருவதைக் குறைத்துக் கொண்டனர். ஒரு நாள் வீட்டிலுள்ளவர்கள் வேலைக்குச் சென்று இருக்கும் போது அந்த முதியவள் கட்டிலிருந்து கீழே விழுந்து கால் எலும்பை முறித்துக் கொண்டார். அருகிலுள்ள டாக்டரிடம் அழைத்துச் சென்று வைத்தியம் செய்து கொள்ள பணம் இல்லை. அவருடைய தாயாருக்கோ தாங்கமுடியாத வலி.

Representational Image
Representational Image

இந்நிலையில் கிராமத்து மக்கள் "உன் தாயார் வலியால் அவதிப்படுவதைப் பார்க்க மிகவும் கஷ்டமாக இருக்கிறது. உன்னாலே இதற்கு வைத்தியம் செய்ய முடியாத ஒரு நிலை, இதற்கு முற்று புள்ளியாக அவருக்கு ஏன் ஒரு ஊசியைப் போட்டு மரணத்தை கொடுக்க கூடாது" என்றார்கள். அந்த கிராமத்திலே இந்த மாதிரி நிகழ்வுகள் முன்னமேயே நடந்திருந்தால், அவரும் அதற்கு சம்மதித்தார். அதற்காகவே கிராமத்தில் ஒர் வைத்தியர் இருக்கிறார். அவருக்கு ரூபாய் 1,000/- கொடுக்கப்பட்டது. ஒரு ஊசியின் மூலம் கருணைக் கொலை நிறைவேற்றப்பட்டது. கிராம மக்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டதால் இதை ஒரு பெரிய பிரச்சனையாக யாரும் எடுத்துக் கொள்ளவில்லை. போலீசும் கண்டு கொள்ளவில்லை. “ நான் செய்தது தவறு என்று எனக்கு தெரியும். ஆனால் இதைத் தவிர எனக்கு வேறு எந்த வழியும் தெரியவில்லை” என்று அந்த மகன் கூறினான் என்று என் உறவினர் சொல்லி முடித்தார்”. இது மாதிரி சில கருணை கொலைகள் கிராமங்களில் நடைபெற்று வருகின்றன. இது சரியா? தவறா? என்று ஆராய்வதை விட, இப்படி ஒரு நிகழ்வு வராமல் தடுக்க சமுதாயமோ அல்லது அரசாங்கமோ என்ன செய்யலாம் என்பதைப் பற்றி யோசிக்க வேண்டிய தருணம் இது.

      என் கருத்து என்னவென்றால், இது மாதிரி நோயாளிக்கு கிராமங்களில் தொடர் சிகிச்சை மையம் ஒன்றை (longterm care or terminal care) ஆங்காங்கே ஆரம்பித்தால் ஓரளவுக்கு தீர்வாக அமையும் என்று எண்ணுகிறேன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கருணைக் கொலைக்கு ஆளாகுபவர்கள்

·       நீண்ட காலம் நோயினால் படுத்த படுக்கையிலே இருப்பவர்கள்.

·       நோயுற்ற முதியவர்களைக் கவனிக்க ஆள் பலமோ, பண பலமோ இல்லாத நிலையில் இருப்பவர்கள்

·       நோய் முற்றிய நிலையில், குணப்படுத்த முடியாத நிலையில் மற்றும் தொடர்ந்து வலியைத் தாங்க முடியாத நிலையில் உள்ளவர்கள். உதாரணம்: உடலில் அதிகமாக பரவியுள்ள புற்றுநோய், பக்கவாதம், உதறுவாதம் போன்ற நரம்பு நோய்களினால் படுத்த படுக்கையாக பலகாலம் இருப்பவர்கள்.

·       சில நேரங்களில் நோயாளியே முன் வந்து “என்னால் நோயினால் ஏற்படும் தொல்லையை தாங்கிக் கொள்ள முடியவில்லை, எனக்கு இதிலிருந்து நிரந்தரமாக விடுதலை கொடுங்கள்” என்று மற்றாடும் முதியவர்கள்.

·       மிகவும் அரிதாக, முதியவர்களின் சொத்துக்கு ஆசைப்பட்டு, குணப்படுத்தக் கூடிய நோயாக இருப்பினும், அதற்கு தக்க சிகிச்சை அளிக்காமல் விட்டுவிடுவது. வெளி உலகிற்கு அவர் உண்மையிலேயே நோயினால் தான் இறந்து விட்டதாகத் தெரியும். ஆனால் உண்மையிலேயே இதுவும் ஒரு விதமான கருணையில்லாக் கொலைதான்.

     மருத்துவத்துக்கு அப்பாற்பட்டு கைவிடப்பட்ட நிலையில் ஒருவர் பல்வேறு உபாதைகளுடன் தொடர்ந்து படுக்கையில் இருந்தால் அவரது சம்மத்ததுடனோ அல்லது அவரது குடும்பத்தினரின் சம்மதத்துடனோ நோயாளிக்குக் கொடுக்கப்படும் சிகிச்சையும் மருந்துகளையும் நிறுத்திவிட்டால் அவருக்கு இறப்பு நேரிடும். இதுதான் கருணைக் கொலை (passive enthunisia).

     சில சமயங்களில் இறப்பதற்காக ஊசி அல்லது மாத்திரைகள் கொடுப்பார்கள் (active enthunisia).

     தன் உயிரே ஆனாலும், அதை மாய்த்துக்கொள்ள எந்த நாட்டிலும் யாருக்கும் உரிமையோ, அதிகாரமோ கிடையாது. அது சட்டவிரோதமும் கூட. இருந்தாலும், மருத்துவம் கைவிட்டப்பட்ட நிலையில் நோயுடனும், உடல் உபாதையுடனும் ஒருவர் வாழ்நாளைக் கழிக்கவேண்டுமா? இறப்பின் மூலம் அவருக்கு நிரந்தர நிம்மதியைக் கொடுக்கலாமே? என்று நினைக்கலாம்.

     இந்தியாவில் அப்படி நினைக்கத்தான் முடியும். ஏனெனில், கருணைக் கொலை என்பது சட்ட விரோதம். சில நாடுகளில் இது வழக்கத்தில் இருக்கலாம். இன்றைய காலகட்டத்தில், மருத்துவம் எவ்வளவோ முன்னேற்றம் கண்டுள்ளது. எந்த நோய்க்கும் சிகிச்சை அளிக்க முடியும். இதனால் மனிதர்களுடைய வாழ்நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

     வயதான காலத்தில் பெரும்பாலானவர்கள் பல்வேறு நோய்களுடன் வாழ வேண்டியிருக்கிறது. பலருக்கும் சரியான உறுதுணை இல்லை. படுத்த படுக்கையாகிவிட்டால் பார்ப்பதற்கு யாரும் இல்லை என்று கைவிடப்பட்ட முதியோரின் நிலை இன்னும் பரிதாபத்துக்குரியது. இப்படிப்பட்ட நிலையில் கருணைக் கொலையை நடைமுறைப்படுத்துவது குறித்து யோசிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அரசு ஒரு தெளிவான, திடமான முடிவு எடுக்க வேண்டும்.

Representational Image
Representational Image

·       அகிம்சாவாதியான காந்தி அவர்களே தன் கன்றுக்குட்டி நோயால் துன்புறுவதைப் பார்த்து அதைக் கொன்றுவிடும்படி கூறியுள்ளார்.

·       குதிரைப்பந்தையத்தில் ஓடும் குதிரை அடிபட்டு கால்முறிவு ஏற்பட்டால் அதை உடனே சுடச்சொல்லி, மரணத்தின் மூலம் அக்குதிரை படும் துன்பங்களிலிருந்து நிரந்தர தீர்வு அளிக்கப்படுகிறது.

     மிருகங்களுக்கும் கருணைக்கொலை உண்டு என்றால் ஏன் மனிதர்களுக்கும் கருணைக்கொலையை செயல்படுத்தக் கூடாது.

இதற்கு என்னதான் தீர்வு

1. முதியவர்கள் காலமுறைப்படி மருத்துவப்பரிசோதனை செய்து கொண்டு, மருத்துவர்களின் ஆலோசனையின்படி தொடர் சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும். இதனால் பல நோய்களை கட்டுக்குள்ளேயே வைத்துக்கொள்ள முடியும். உ.ம்.: உதறுவாதம், பக்கவாதம், மறதிநோய், மூட்டுவலி, ஆஸ்துமா.

2. நகர்புறங்களில் மட்டுமின்றி, கிராமங்களிலும் முதியோர்களுக்கு தனி சிகிச்சைப் பிரிவை, மாவட்டம் தோறும் தொடங்கவேண்டும்.

3. படுத்த படுக்கையிலேயே கிடக்கும் நோயுற்ற முதியவர்களை ஆரம்ப சுகாதார நிலைய மருந்துவர் முடிந்த அளவுக்கு வாரத்திற்கு ஒரு முறையாவது சென்று தொடர் சிகிச்சை அளிக்கலாம். அவருடன், செவிலியர், இயன்முறை பயிற்சி நிபுணர் (Physiotherapist) சென்று சிகிச்சை அளிக்க உதவலாம்.

4. நோயாளிகளுக்கு கிராமங்களில் தொடர் சிகிச்சை அளிக்க தாலுக்கா அளவில் மையம் (Longterm care unit) ஆரம்பிக்கலாம்.

5. மருத்துவச் செலவுகள் அனைத்தும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ஈடுசெய்யலாம்.

கருணையில்லாக் கொலைகள்

     சமீபத்தில் வெளிவந்த ஒரு ஆங்கில தினசரியில் 2021 ஆம் ஆண்டில், நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக முதியவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்ற செய்தியைப் படித்து என் மனம் மிக்க வேதனையுற்றது. இச்சம்பவம் கடந்த 3 ஆண்டுகளில் வருடத்திற்கு வருடம் அதிகமாகிக் கொண்டே போகிறது. உதாரணம் :

ஆண்டு 2019 2020 2021 1745 1661 1686 மொத்த கொலைகள் முதியவர்களின் கொலை எண்ணிக்கை 173 177 191

       மூன்று ஆண்டுகளில் தமிழகத்தில் நடைபெற்ற மொத்த கொலைகள் சற்று குறைந்து வந்த போதிலும் அதற்கு மாறாக முதியவர்களின் கொலைகள் வருடா வருடம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு மொத்தம் 1,686 கொலைகள் நடைபெற்றுள்ளன அதில் 60 வயதை தாண்டிய முதியவர்கள் 11.3 சதவீத பேர் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். முதியவர்கள் அதிகம் வாழும் கேரளாவில் முதியவர்களின் கொலை சற்று குறைவாகவே உள்ளது (நன்றி : Crime in India, report released by “National Crime Records Bureau').

     முதியோர்கள் கடவுளுக்குச் சமமாகப் போற்றப்பட்ட ஒரு காலம் இருந்தது அது இன்றைக்கு மாறிவருகிறது. முதியோர்களை அவமதித்தலில் ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக முதியோர்களை கொலை செய்யும் அளவிற்கு இளைய சமுதாயம் மாறி வருகிறது. கருணைக் கொலை என்ற போர்வையில் சில முதியவர்கள் கொல்லப்படுகிறார்கள். சமீப காலமாக கருணைக் கொலையையும் தாண்டி கருணையில்லாக் கொலையாக முதியவர்கள் கொடூரமாக பகலிலேயே தாக்கப்பட்டு கொல்லப்படுகிறார்கள். இது மிகவும் வேதனைக்குரிய செய்தியாகும்.

     இதற்கு என்ன காரணம் என்று ஒரு வரியில் எழுதிவிட முடியாது. இது போன்ற கொலைகள் கூட்டுக் குடும்பத்தில் பணத்தகராறு காரணமாக முதியவர்கள் கொல்லப்படுகிறார்கள். இளைஞர்களின் அவசரத் தேவைக்காகவும், ஆடம்பர செலவிற்காகவும் தனியாக இருக்கும் முதியவர்கள் கொலைக்கு ஆளாகுகிறார்கள். வறுமையில் வாழும் குடும்பத்தில் இளைஞர்கள் மது அருந்திவிட்டு, சரியான காரணமின்றி முதியோர்கள் கொல்லப்படுகிறார்கள். முதியவர்களின் பணம், நகை மற்றும் சொத்து ஆகியவைகள் தான் முதியவர்களின் கொலைக்கு காரணமாகின்றன.

Representational Image
Representational Image

இக்கொடிய நிகழ்ச்சியில் இருந்து விடுபட என்ன செய்யலாம் உதாரணத்திற்கு ஒரு சில கருத்துக்கள் :

·       முதியவர்கள் தங்களிடம் பணம் சற்று இருப்பதை உறவினர்களுக்கோ அல்லது வேலையாட்களுக்கோ முடிந்தவரை தெரியாமல் இருப்பது நல்லது.

·       உயில் எழுதும் பொழுது, உறவினர்களின் உதவியுடன் சுமூகமாக உயிலை தக்க காலத்தில் எழுதுவது நல்லது.

·       வீட்டில் இளைஞர்கள் மதுவிற்கு அடிமையாக இருந்தால், அவருடன் சற்று கவனமாக இருக்கவேண்டும். வீண் விவாதம் கொலையில் முடியலாம்.

·       வேலையாட்களின் முன்னால் உங்களின் சொத்துக்களைப் பற்றி விவாதிக்க வேண்டாம்.

·       பாதுகாவலர் மற்றும் வேலையாட்களை நியமிப்பதில் கவனம் சற்று அதிகம் தேவை, முக்கியமாக பிற மாநிலகளில் இருந்து வரும் வேலையாட்கள்,

·       நாய் போன்ற வளர்ப்புப் பிராணிகளை பாதுகாப்புக்காக வளர்க்கலாம்.

·       விழாக்களுக்கு செல்லும் பொழுது தேவையில்லாமல் நிறைய நகைகளை அணிய வேண்டாம்.

·       முடிந்தால் வீட்டில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராவை பொறுத்தலாம்.

·       உங்களின் உயிருக்கு சற்று ஆபத்தை ஏற்படுத்தும் சந்தேகத்திற்குரியவர்களைப் பற்றி அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு முன்னரே தெரிவிப்பது நல்லது.

     முதியவர்கள் தங்கள் நலம் காக்க, இல்லை இல்லை, உயிர் காக்க முடிந்தவரை முன் எச்சரிக்கையோடு இருப்பது நல்லது. முதியோர்கள் கடவுளுக்கு சமமாக கருதப்பட்டக் காலம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, முதியோரை அவமதிக்கும் இளைய சமுதாயம் அதிகரித்து வருகிறது. முதியோரை கருணையில்லாக் கொலைகள் மூலம் பல கொலைகள் மறைமுகமாக நடந்து வருகிறது. தற்பொழுது முதியவர்கள் பகல் நேரத்திலேயே கொலை செய்யப்படும் கருணையில்லா கொலைகள் அதிகரித்து வருகிறது. முதியவர்களை கொலை செய்யாமல் இருக்கும் இளைய சமுதாயம் திடீரென்று மாறிவிடும் என்று நாம் தற்பொழுது எதிர்பார்க்கக்கூடாது. முதியவர்களாகிய நாம்தான் நம்மை மாற்றி, இளைய சமுதாயத்தினரிடமிருந்து மிக்க எச்சரிக்கையுடன் வாழ முயற்சிக்க வேண்டும் !

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.