Published:Updated:

மாமாவும் அத்தையும் சுமையா? | My Vikatan

Representational Image ( Photo by Shrey Khurana on Unsplash )

நன்றாக பேசி இரவு வணக்கம் சொல்லி தூங்கச் சென்ற மாமா காலையில் எழுந்திருக்கவில்லை தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்தது. அத்தைக்குத் தான் மாமாவின் பிரிவினால் வருகிற மன அழுத்தம் வந்தது.

மாமாவும் அத்தையும் சுமையா? | My Vikatan

நன்றாக பேசி இரவு வணக்கம் சொல்லி தூங்கச் சென்ற மாமா காலையில் எழுந்திருக்கவில்லை தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்தது. அத்தைக்குத் தான் மாமாவின் பிரிவினால் வருகிற மன அழுத்தம் வந்தது.

Published:Updated:
Representational Image ( Photo by Shrey Khurana on Unsplash )

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

அறுபதில் அடியெடுத்து வைப்பதை ஒருவகையில் 'முதுமையில் இளமை' என்றே சொல்லலாம். அப்படி என்றால் எண்பதில் அடி எடுத்து வைப்பதை என்னவென்று சொல்வது? இன்னொரு குழந்தை என்றா? பிறந்த குழந்தையை பார்த்துப் பார்த்து வளர்ப்போம் அல்லவா அதே போல் தான் எண்பதுகளில் இருந்த மாமாவையும் அத்தையையும் நான் பார்த்துக் கொண்டேன். எலும்பு வலிமை இழத்தல் என்கிற ஆஸ்டியோபொரோசிஸ் முதலில் வந்தது. அதனால் குறைந்தது இருபது நிமிடமாவது மெதுவாக நடைப் பயிற்சி மேற்கொள்ள வைத்தேன். அதேபோல் ஒரு பத்து நிமிடம் தோட்டத்தில் நாற்காலிப் போட்டு சூரிய ஒளியில் அமரச் செய்தேன்.

Representational Image
Representational Image
Photo by David Sinclair on Unsplash

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அவர்கள் உணவில் சிறு சிறு மாற்றங்களாக சிறுதானியங்களில் கஞ்சி , தினமும் கீரை ,கருவேப்பிலை பொடி சூடான சாதத்தில் பிசைந்து ஒரு கவளம்... இதையெல்லாம் பின்பற்றினேன். காலை 10 மணிக்கு என் வேலைகளைஎல்லாம் முடித்த பிறகு மாமாவிடம் சென்று அன்றைய சமையல், நாளிதழில் வந்த செய்திகளைப்பற்றி எல்லாம் சிறிது நேரம் பேசிவிட்டு பிறகே என் வேலைகளை தொடர்வதை வழக்கப் படுத்திக் கொண்டேன். அதேபோல் மாலை தேனீர் அருந்தும் நேரத்தில் மாமாவிடம் சென்று குடும்ப நிகழ்வுகளை பற்றி பேசி வருவேன். ஒருபோதும் எனது மாமா 'போர் அடிக்கிறது 'என்று சொன்னதே இல்லை. நான் எங்கு வெளியில் சென்று திரும்பி வந்தாலும் அவருக்காக அவருக்குப் பிடித்த புத்தகங்கள் வாங்கிவந்து தருவேன். (புத்தக வாசிப்பு அவருக்கு மிகவும் பிடிக்கும்.) அவர் தன்னை தனிமையில் இருப்பதாக ஒருபோதும் எண்ணியது இல்லை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நன்றாக பேசி இரவு வணக்கம் சொல்லி தூங்கச் சென்ற மாமா காலையில் எழுந்திருக்கவில்லை தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்தது. அத்தைக்குத் தான் மாமாவின் பிரிவினால் வருகிற மன அழுத்தம் வந்தது. 60 வருடம் மாமாவுடன் அந்நியோன்யமாக வாழ்ந்த அத்தை மாமா தவறிய உடன் எதிலும் ஆர்வம் இல்லாமல் இருந்தார். அதிகப்படியான முட்டி வலியினாலும், இரண்டு முறை வழுக்கி விழுந்ததாலும் , அத்தை படுத்த படுக்கையாகி விட்டார். (அவர் ஓய்வு பெற்ற ஆசிரியை) வீடு, பள்ளி கணவர் ,பிள்ளைகள் என பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தவர் உடல் பலவீனமாகி படுக்கையில் விழுந்து விட்ட உடன்' யாருக்கும் பலனில்லாமல் இப்படி படுக்கையில் கிடக்கிறோமே' என்கிற சுய இரக்கம் அவர்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தை கொடுத்தது.

Representational Image
Representational Image
Photo by Luana Azevedo on Unsplash

நாங்கள் கூட்டுக் குடும்பம் என்பதால் நாங்கள் அனைவரும் அவரை தனியே விடாமல் ஒருவர் மாற்றி ஒருவர் எப்பொழுதும் சந்தோஷமாக வைத்துக் கொண்டோம். " தான் எல்லோருக்கும் பார்த்து பார்த்து செய்தது போய் தனக்கு எல்லோரும் செய்யும்படி ஆகி விட்டதே' என்ற மனக்கவலை அவர்களுக்கு நிறைய இருந்தது. அதையும் கொஞ்சம் கொஞ்சமாக அவரிடம் பேசி நீங்கள் 25 வருடங்களுக்கு முன்னால் எங்களுக்கு செய்ததை இப்பொழுது நாங்கள் உங்களுக்கு வட்டியும் முதலுமாக மன மகிழ்ச்சியுடன் செய்கிறோம் அவ்வளவு தான் அத்தை என்று கூறி.....அவரின் பள்ளி வாழ்க்கை ,அவரின் சக ஆசிரியைகள், வகுப்பில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகள்...

எல்லாவற்றையும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் பேசிப் பேசி அவரை சரி செய்தோம். வார விடுமுறை நாட்களில் கண்டிப்பாக அவருடன் உணவருந்துவது எங்களது ப(வ)ழக்கமானது. எனது மகன் காலை உணவை ' டாடி ம்மா'வுடன் கதை பேசிக்கொண்டே தான் சாப்பிடுவான். என்ன கதை பேசுவானோ?தெரியாது? குறைந்தது இரண்டு மணி நேரம் கழித்துதான் மாடிக்கு வருவான்.

Representational Image
Representational Image

மாமா தவறிய பிறகு முழுக்க முழுக்க மகன்களை சார்ந்து இருக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம் என அவர்கள் எண்ணக் கூடாது என்று பிறந்தநாள், திருமணநாள் போன்றவற்றிற்கு முதலிலேயே அவரிடம் பணத்தைக் கொடுத்து பிள்ளைகளாகட்டும், நாங்களாகட்டும் அவரிடம் ஆசிர்வாதம் வாங்கி அவர்கள் கையால் பணத்தைப் பெற்றுக் கொள்வோம். அவர்கள் கையால் அந்தப் பணத்தை கொடுக்கும் போது அவர்கள் முகத்தில் ஒரு சந்தோஷம் வரும் பாருங்கள் அடடடடா... அது ஒரு அழகிய கவிதை. அவர்களுக்கு தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் ஒருசேர தந்தது. அதுமட்டுமல்ல, இரவில் தூங்கும் போது அவர்கள் தனியாக உறங்கக் கூடாது என்று ஒருவாரம் என் கணவரும், மறுவாரம் என் மைத்துனரும் மாறி மாறி அவர்களுடன் படுத்துக்கொள்வார்கள். இப்படி அவர்கள் தனியே இருக்கிறோம் என்ற எண்ணம் கொஞ்சம் கூடஎழாமல் பார்த்துக் கொண்டோம். மொத்தத்தில் ஓய்வு பெற்ற எனது மாமா அத்தைக்கு கூடுமானவரை வீட்டில் இதமான சூழ்நிலையை தந்தோம். அவர்கள் உபயோகமில்லாது போய்விடவில்லை.

அலுவலகம், பள்ளி தொல்லைகளிலிருந்து விடுபட்டுச் சற்றே நிம்மதியான சூழ்நிலையில் ஓய்வெடுத்துக் கொள்ள ஆரம்பிக்கிறார்கள் என்பதை அவர்களை உணரச் செய்தோம். பேரன், பேத்திகள் எல்லோரும் தொடர்ந்து அவர்களை மரியாதையுடனும், மனம் நோகாதபடி பேசும்படியும் பார்த்துக்கொண்டோம். பழைய காலத்தை அசை போடும் போது, தெரிந்த கதைதான் என்றாலும் உட்கார்ந்து பொறுமையாக கேட்டோம். இவைகளெல்லாம் தான் ஓய்வு பெற்றவுடன் இருக்கக்கூடிய உடைந்த மனதை சரிபடுத்தும் .

மாமாவும் அத்தையும் சுமையா? | My Vikatan

இத்தனை வருடங்களாக வேலைக்குப் போய்க்கொண்டு எங்களையும் கவனித்த எங்கள் அத்தை மாமாவிற்கு திடீரெனத் தள்ளாமை வந்துவிடாது... அவர்களுடன் நட்புறவாகப் பேசி சின்னச்சின்ன காரியங்களில் ஈடுபடுத்தினோம். எங்கள் குடும்பத்திற்கு அவர்கள் இப்பொழுது தான் மிகவும் தேவை. வயது முதிர்வை மட்டுமல்ல வாழ்க்கையின் உதிர்வையும் கண்ட அவர்கள் பெரியவர்களாக இருந்து எங்களையெல்லாம் வழிநடத்த வேண்டும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளுமாறு நடந்து கொண்டோம். இன்றைய ஆறுதான்... நாளைய 60 என புரிந்து கொண்டால்... வாழ்வில் என்றும் மகிழ்வே!

என்றென்றும் அன்புடன்

ஆதிரை வேணுகோபால்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.