Published:Updated:

பல் நோய்கள்! | முதுமை எனும் பூங்காற்று | My Vikatan

Representational Image

பற்களை நன்றாகத் துலக்கி, உணவுப் பொருள்கள் தங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பற்களில் ஒட்டிக்கொள்ளும் சர்க்கரை கலந்த உணவுப் பொருள்களை மிகுதியாக உண்ணக் கூடாது.

பல் நோய்கள்! | முதுமை எனும் பூங்காற்று | My Vikatan

பற்களை நன்றாகத் துலக்கி, உணவுப் பொருள்கள் தங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பற்களில் ஒட்டிக்கொள்ளும் சர்க்கரை கலந்த உணவுப் பொருள்களை மிகுதியாக உண்ணக் கூடாது.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

வளமான உடலொடு வாழவேண்டுமாயின் வாயினையும், பற்களையும் நோய் தாக்காவண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஈறுகள் பாதிப்பு

பற்களில் படியும் பற்படலத்தை அகற்ற வேண்டும். இன்றேல் நாளடைவில் அது பற்காரையாக மாறி, உறுத்தலினால் ஈறுகள் சிவந்து., வீங்கி இரத்தம் கசியும். நுண்ணுயிர்க் கிருமிகள் ஈறுகளைத் தாக்கும்போதும் ஈறுகள் தடித்துப் புண்ணாகி இரத்தம் கசியும். இதனால் வாயில் துர்நாற்றம் வீசும். சிலருக்குப் பற்களில் காரை படிதலால் அவற்றின் நிறம் மாறுகிறது. பற்களிலும், ஈறுகுழிகளிலும் தங்கும் உணவுப்பொருள்களை அவ்வப்போது அகற்ற வேண்டும். இன்றேல், அவை பற்படலமாய் மாறிப் பின் பற்காரையாக உருவெடுக்கும். இக்காரை உறுத்தலால் ஈறுநோய்கள் தோன்றி பற்கள் விழக்கூடும். அதனால், ஒவ்வொருவரும் பற்பசைகளால் நன்றாக பல்லை துலக்க வேண்டும்.

பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ். நடராஜன்
பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ். நடராஜன்

பல் தேய்மானம்

பல் தேய்மானத்தின் போது பல்லில் எனாமல் தேய்கிறது. இதனால் பல்லில் கூச்சம் மற்றும் வலி ஏற்படுகிறது. இதற்கு தகுந்த பற்பசையை உபயோகித்தல் மற்றும் பற்களில் கொப்பி (Cap) போடுதலே தக்க சிகிச்சையாகும்.

பற்சொத்தை

பற்களைப் பெருமளவில் தாக்கும் நோய் பற்சொத்தையாகும் (Dental caries). இது ஒரு சிதைவு நோய். பற்களை நாள்தோறும் சரிவரத் துலக்காத போது உண்ணும் உணவிலுள்ள சர்க்கரைப் பொருள்களும், சாக்லேட், ஜஸ்கிரீம், பிஸ்கேட், மிட்டாய் போன்ற தின்பண்டங்களும் பற்களின் இடைவெளிகளிலும், பற்களின் குழிகளிலும் தங்குகின்றன. அவைகளை உமிழ்நீரில் உள்ள அமில அணுக்கள் தாக்குகின்றன. அதனால் ஓர் அமிலம் தோன்றி பற்களில் தங்கி பற்சிப்பியைச் சிறுகச் சிறுகச் சிதைக்கிறது. இச்சிதைவே நாளடைவில் பற்சொத்தையாக வடிவெடுக்கிறது.

பற்களை நன்றாகத் துலக்கி, உணவுப் பொருள்கள் தங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பற்களில் ஒட்டிக்கொள்ளும் சர்க்கரை கலந்த உணவுப் பொருள்களை மிகுதியாக உண்ணக் கூடாது. புளோரைடு கலந்த பற்பசையைப் பயன்படுத்தினால் பற்சொத்தையைத் தடுக்கலாம்.

பல் அகற்றுதல்

ஒரு பல் பழுதாகித் தொடர்ந்து தொல்லைக் கொடுத்துக் கொண்டே இருப்பின் அப்பல்லினை அகற்றிவிட வேண்டும். மரப்பு மருந்து (Local anaesthesia) கொடுத்து வலியின்றி பல்லினை மருத்துவர் அகற்றிவிடுவார். அவ்விடத்தில் புண் ஆறியபின் செயற்கைப் பல்லினைக் கட்டிக் கொள்ள வேண்டும்.

பற்களின் வேர் சிகிச்சை (Root Canal Treatment)

சிலருக்கு பற்களில் ஏற்படும் நோய் தொற்றுக்கு பற்களை எடுக்கவேண்டியிருக்கும். இதற்கு முக்கிய காரணம் பல் சொத்தை, உடைந்த பற்கள் மற்றும் நோய் தொற்று. பற்களின் உட்பகுதியிலுள்ள நோய் தொற்றை நீக்க பற்களை எடுக்காமலேயே அதற்கு தக்க சிகிச்சையளிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். தாங்க முடியாத பல்வலி, சாப்பிடும் போது ஏற்படும் பல்வலி, பற்களை அழுத்தும் போது உண்டாகும் வலி, குளிர்ந்த அல்லது சூடான உணவு சாப்பிடும் போது ஏற்படும் வலி மற்றும் பற்களின் நிறம் கருப்பாக மாறுதல் போன்றவர்களுக்கெல்லாம் இச்சிகிச்சை முறை தேவைப்படும். இச்சிகிச்சை முறை சற்று வலியுள்ளதாக இருந்தாலும் இம்முறையினால் வலியிலிருந்து பூரணமாக விடுதலை கிடைக்கும்.

Representational Image
Representational Image

பாதிக்கப்பட்ட பல் ஈறுகளில் மரத்துபோகும் ஊசி போட்டு, சிறு துவாரத்தின் வழியாக பாதிக்கப்பட்ட பற்களின் பாகத்தை வெளியேற்றப்படுகின்றன. அடுத்ததாக அந்த இடத்தை சுத்தப்படுத்தி, காலியான இடத்தை சிமெண்ட் மூலம் அடைக்கப்படும். சிகிச்சை செய்த பல்லின் மேல் கொப்பியை போடுவார்கள். தற்பொழுது நவீன சிகிச்சை முறையினால் பழுதடைந்த பற்களை அகற்றாமலேயே சிகிக்சை கொடுப்பது தான் சிறந்த சிகிச்சையாக இருக்கிறது.

செயற்கைப் பல்

பல் போனால் சொல்லும் முகப் பொலிவும் போவதோடு சத்துணவும் குறையும்; கடித்து, மென்று, சுவைத்து, உண்ண முடியாதநிலையில், நீர்வடிவ உணவினை உண்ணும் நிலை உருவாகும். சத்துள்ள உணவின் அளவு மிகுதியாகக் குறையும். அதனால், பல் இல்லாத முதியவர் கண்டிப்பாகச் செயற்கைப் பற்களைப் (Artificial denture) பொருத்திக் கொள்ள வேண்டும்.

வாய் வறட்சி

வாயை ஈரப்பதமாக வைத்திருக்க வாயில் தோன்றம் உமிழ்நீர் உதவுகிறது. உமி;நீர், ருசியை அதிகப்படுத்தும், முழுங்குவதற்கு மற்றம் நோய்தொற்றை அகற்றுவதற்கும் உதவுகிறது. வாயில் வறட்சி ஏற்பட காரணங்கள் : வாயினால் சுவாசித்தல், பற்கள் இல்லாமல் இருத்தல், நீர் வறட்சி, மருந்துகள் (உதாரணமா: அலர்ஜி, மனச்சோர்வு மற்றம் மனநோய்க்கு கொடுக்கும் மருந்துகள், சிறுநீர் மாத்திரை, புற்று நோய்க்கு கொடுக்கும் கதிர்வீச்சு சிகிச்சை) நீரிழிவு நோய், தைராய்டு தொல்லை, மறதி நோய், உமிழ்நீர் பாதையில் கல் அல்லது கட்டி அடைத்தல். நீர் வறட்சிக்கு காரணமான தேவையற்ற மாத்திரைகளை நிறுத்த வேண்டும், நிறைய திரவங்களை கொடுக்க வேண்டும், சர்க்கரை குறைவான மிட்டாயை வாயில் அடைத்து வைத்திருத்தல் உமிழ்நீரை சுரக்க வழிவகுக்கும்.

Representational Image
Representational Image

வாய் புண்கள் (Mouth ulcer)

வாயில் புண்கள் வர (Stress induced- Aphthous ulcer) மன உளைச்சலும் ஒரு முக்கிய காரணமாகும். ஆனால் இது வருவதற்கான காரணம் இன்னமும் கண்டறியப்படவில்லை. புண்கள் மரத்தும் போகும் பசையை உபயோகிக்கலாம். இப்புண் சாதாரணமாக பத்து நாட்களுக்குள் ஆறிவிடும்.

நோய்தொற்று – பூஞ்சை காளான் - இது நாக்கை சுற்றிலும் வெண்ணிறம் படர்ந்த மாதிரி இருக்கும், வலி அநேகமாக இருக்காது. நீரிழிவு நோய், புற்றுநோய் மற்றும் ஸ்டீராய்டு மாத்திரை, புற்றுநோய்க்கு கொடுக்கும் சிகிச்சையினாலும் தோன்றலாம்.

வைரஸ் கிருமியினால் (Viruse Herps Labialis) – உதடுகளில் சிறு கொப்பளங்கள் மற்றும் புண் தோன்றும், இது சாதாரணமாக ஒரு வாரத்திற்குள் மறைந்துவிடும். புண்கள் மரத்தும் போகும் பசையை உபயோகிக்கலாம். நோய் தொற்றுக்கான சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்.

சரியாக பொறுந்தாத செயற்கை பல்லினாலும் வாயில் புண் தோன்றலாம். 3 - 4 வாரங்களுக்கு மேல் ஆறாமல் இருந்தால் புற்று நோய் வருவதற்கு காரணமாகக்கூட இருக்கலாம்.

பற்கள் வனப்பாய் இருக்க

தினமும் இரண்டு வேளை பற்பசையைப் பயன்படுத்தி சரியான முறையில் பற்களைத் துலக்க வேண்டும். பல்லிடுக்குகளையும், இடைவெளிகளையும் நன்கு சுத்தம்செய்ய வேண்டும். பற்களைத் துலக்கியபின் ஈறுகளை இதமாக அழுத்திவிட வேண்டும். -

உணவிற்கு முன்பும், பின்பும் வாயை நன்றாகக் கொப்பளிக்க வேண்டும்.

மிருதுவான உணவுப் பொருள்களை உண்பதோடு சற்றுக் கடின உணவுப் பொருள்களையும் கடித்து, உடைத்து, மென்று உண்பதால் பற்களில் படியும் பற்படலம் அகலும்.

வாயில் தோன்றும் எப்புண்ணும் இரண்டு வாரத்திற்கு மேல் குணமாகமல் இருந்தால் அது புற்றநோயாகவும் இருக்கக் கூடுமாகையால் உடனே பல் மருத்துவரை அணுக வேண்டும்.

குழந்தைகள் உபயோகப்படுத்தும் பல் துலக்கியை முதியோர்கள் உபயோகப்படுத்துவதின் மூலம் பல் இடுக்கில் சிக்கி உள்ள உணவு பொருட்களை எளிதில் அகற்ற முடியும்.

ஆண்டுக்கு இருமுறையாவது தவறாமல் பல் மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.