இன்று எனது பேத்தி அவளுடைய முதல் சம்பளத்திலிருந்து ஒரு புதிய மூக்குக் கண்ணாடியை எனக்காக வாங்கிக் கொடுத்தாள். துரதிருஷ்டவசமாக அதை எங்கு வைத்தேன் என்று எனக்கு ஞாபகப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அதை நான் தேடினேன். மீண்டும் தேடினேன். மீண்டும் தேடினேன். மீண்டும் தேடினேன். மீண்டும் தேடினேன். மீண்டும் தேடினேன். மீண்டும் தேடினேன். மீண்டும் தேடினேன். மீண்டும் தேடினேன். மீண்டும் தேடினேன். இப்பொழுது நான் எதை தேடினேன் என்பதே மறந்து விட்டது .
இந்தக் கடிதத்துடன் ஒரு இளம் பெண் தன் தாத்தாவை அழைத்துக் கொண்டு என் கிளினிக்கிற்கு வந்தார். இந்தக் கடிதத்தை நன்றாகப் படியுங்கள். 'மீண்டும் தேடினேன்’ என்பதையே ஞாபக மறதியினால் எத்தனை முறை உபயோகித்து இருக்கிறார் பாருங்கள் அந்த முதியவர். மறதி நோய் எப்படி வெளிப்படும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

டிமென்சியா (மறதி நோய்)
முதுமையும் ஞாபக சக்தியும்
மறதி : முதுமையின் விளைவா? அல்லது நோயின் அறிகுறியா?
சுமார் 60 வயதைக் கடந்தவர்களுக்கு சற்று ஞாபக மறதி ஏற்படுவது சாதாரண நிகழ்வு. மிகவும் பழக்கமானவர்களின் பெயர் மறந்து விடும். புதிதாக டெலிபோன் எண்ணை ஞாபகத்தில் வைத்துக் கொள்வது சிரமமாக இருக்கும். பணத்தைப் பலமுறை எண்ணிக்கொண்டே இருப்பார்கள். இப்படி ஞாபகமறதி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் தினமும் நடைபெறும். இது முதுமையின் விளைவு. ஆனால், பல நோய்களினாலும் ஞாபக மறதி ஏற்படலாம். மறதி உள்ளவர்கள் எல்லாம் டிமென்சியாவினால் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல. அதே சமயம் டிமென்சியா உள்ளவர்களுக்கு ஞாபக மறதி கட்டாயம் இருக்கும்.
முதுமையில் ஏற்படும் ஞாபக மறதிக்கும், டிமென்சியா நோயினால் ஏற்படும் ஞாபக மறதிக்கும் உள்ள வித்தியாசங்கள்
ஆரம்ப நிலையில் இரண்டிற்கும் வித்தியாசம் கண்டறிவது மிகவும் கடினமே. இருந்தாலும் கீழ்கண்ட குறிப்புகளின் மூலம் ஓரளவிற்கு வித்தியாசம் கண்டு கொள்ள முடியும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSமுதுமையில் ஏற்படும் ஞாபக மறதி
மூளையிலுள்ள நரம்பு செல்கள் மெதுவாக செயல்படுவதால் ஏற்படுகிறது (Slowing, of Neural processes),
தனக்கு ஞாபக மறதி உள்ளதாக கவலை அடைந்து அவரே மருத்துவரிடம் செல்வார்.
ஒரு பொருளை தவறாகச் சொன்னாலும், அதை எடுத்துக் கூறினால், அவர் அதைப் புரிந்து திருத்திக் கொள்வார் (உம்) பேனாவை கத்தி என்பார். ஆனால் அது தவறு, இது எழுதுவதற்கு உபயோகப்படுத்தக்கூடிய பொருள் என்று சொன்னால், அவர் புரிந்து,
"ஆம் அது பேனா தான். நான் தான் தவறாக கத்தி என்று சொல்லிவிட்டேன்” என்று தன்னைத் திருத்திக் கொள்வார். MMSE Test - மனநோயைக் கண்டறியும் பரிசோதனை. இதில் மாற்றம் ஏதும் இருக்காது. MRI மற்றும் PET Brain scan - இதிலும் மாற்றம் ஏதும் இருக்காது.
ஒருவருக்கு ஞாபக மறதியிருந்தால் அதை மட்டும் வைத்துக் கொண்டு அவருக்கு டிமென்சியா நோய் உண்டு என்று கூறிவிட முடியாது. மறதியுடன் கீழே குறிப்பிட்டுள்ள மூன்று தொல்லைகளில் குறைந்த பட்சம் ஒன்று அல்லது இரண்டு தொல்லைகளிலாவது அவர் பாதிக்கப்பட்டு இருக்க வேண்டும்.
1. சரியாக பேச இயலாமை அதாவது உச்சரிப்பு தெளிவாக இருக்காது. சரியான வார்த்தையை சரியான இடத்தில் உபயோகிக்க சிரமப்படுவார் (Aphasia). உதாரணம்: ஒருவர் மதுரைக்குப் போவதை தன் நண்பரிடம் சொல்லும் பொழுது மதுரை என்ற ஊர் பெயர் மறந்து விட்டதினால், தெற்கே மீனாட்சி அம்மன் கோயில் இருக்கும் ஊருக்குப் போக வேண்டும் என்பார்.
2. தனக்கு தெரிந்த தினமும் செய்யக்கூடிய வேலையாக இருந்தாலும் அதை செய்யத் தெரியாமல் தவிப்பது (Apraxia). உதாரணம்: தனது பிரஷ்சில் பற்பசையை எடுத்து வைத்துக் கொண்டு பிரஷ் பண்ணத் தெரியாமல் அப்படியே இருப்பார்.
3. தெரிந்த பொருள்களையோ அல்லது நபர்களின் பெயர்களையோ நினைவில் கொண்டு வர முடியாமை (Amnesia). உதாரணம்: பேனா, சாவி, கடிகாரம் மற்றும் உறவினர்களின் பெயர்களை சொல்ல முடியாத நிலை.
ஆகையால் ஒருவருக்கு டிமென்சியாவினால் பாதிப்பு இருந்தால் அவருக்கு மறதியோடு மேல குறிப்பிட்டுள்ள ஒன்று அல்லது இரண்டு தொல்லைகள் இருப்பது அவசியம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
டிமென்சியா
மூளையிலுள்ள இரசாயன பொருட்கள் குறைவதாலும் திசுக்கள் அழிவதாலும் ஏற்படுதல்.
தனக்கு ஞாபக மறதி ஏதுமில்லை என்று அவராகவே மருத்துவரிடம் செல்லமாட்டார். ஆகையால் அவரை குடும்பத்தினர்கள் தான் மருத்துவரிடம் அழைத்து வருவார்கள்.
பேனாவை கத்தி என்று உறுதிபடக் கூறுவார். எவ்வளவு எடுத்துக் கூறினாலும் தன்னைத் திருத்திக்கொள்ளத் தெரியாது.
MMSE Test - இப்பரிச்சோதனையில் மாற்றம் இருக்கும்.
MRI மற்றும் PET Brain scan: இப்பரிசோதனைகளில் மாற்றம் தெரியும்.
டிமென்சியாவின் வகைகள்
டிமென்சியா என்பது பலவித தொல்லையினால் வரும் ஒரு நோயின் அறிகுறியே. எதனால் டிமென்சியா வருகிறது என்று தெரிந்து கொண்டால் அதற்குண்டான சிகிச்சையளிக்கலாம். டிமென்சியாவில் பல வகைகள் உண்டு.
டிமென்சியா வருவதற்கான காரணத்தை கொண்டு அவைகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.
காரணமின்றி ஏற்படும் டிமென்சியா
அல்ஸைமர் நோய் (Alzheimer's Disease) இன்னமும் இந்நோய்க்கான காரணம் கண்டறியப்படவில்லை. மரபுப் பண்பும் (Gene) சுற்றுப்புறச் சூழ்நிலையில் ஏற்படும் மாற்றமும் (Environment) ஒரு காரணமாக இருக்காலம். டிமென்சியா நோயாளிகளில் சுமார் 70 சதவிதம் பேர் அல்ஸைமர் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்நோயிக்கான காரணம் தெரியப்படாததால் அதற்கு தக்க சிகிச்சையுமில்லை. அதை பூர்ணமாக குணப்படுத்தவும் முடியாது.

காரணங்களினால் ஏற்படும் டிமென்சியா
ஒரு சில காரணங்களினால் டிமென்சியா ஏற்பட்டால் அக்காரணத்திற்குண்டான சிகிச்சையளித்தால் டிமென்சியா குணம் அடைய வாய்ப்புண்டு. சுமார் 30 சதவிதம் பேர் காரணங்களினால் வரும் டின்சியாவினால் பாதிக்கப்படுகிறார்கள். அவற்றின் விவரம் :
மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் பாதிப்பு
மூளையில் இரத்த கசிவோ அல்லது இரத்த ஓட்டம் தடைபட்டாலோ, பக்கவாதம் போன்ற தொல்லைகள் ஏற்படலாம். பக்கவாதம் ஏற்பட்டு சில மாதங்கள் கழித்து அவர்களுக்கு டிமென்சியா வர வாய்ப்புண்டு. (Vascular Dementia) இத்தொல்லை கீழ்கண்ட நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட வாய்ப்பு அதிகம் உண்டு. உதாரணம்: நீரிழிவு நோய், உயர்இரத்த அழுத்தம், உடற்பருமன், இரத்தத்தில் அதிக கொழுப்பு சத்து, புகை பிடித்தல்.
அல்ஸைமர் டிமென்சியாவும், மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் பாதிப்பினால் ஏற்படும் டிமென்சியாவும் சேர்ந்தே ஒருவருக்கு ஏற்படலாம் (Mixed Dementia). மேலை நாடுகளை விட ஆசியா கண்டத்தில் அல்ஸைமர் டிமென்சியா குறைவாக உள்ளது. மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைபடுவதால் ஏற்படும் டிமென்சியாவே (Vascular Dementia) இங்கு அதிகம் காணப்படுகிறது.
மூளையில் கட்டி அல்லது இரத்தக்கட்டி
மூளையில் தோன்றும் சாதாரண, மற்றும் புற்றுநோய் கட்டிகளினாலும் முதியவர்கள் அடிக்கடி கீழே விழ வாய்ப்புண்டு. தலையில் லேசாக அடிப்பட்டாலும் மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டு அது கட்டியாக உறைந்து விடும். அந்த நேரத்தில் அவர்களுக்கு எந்த வித தொல்லையும் இருக்காது. ஆனால் சில மாதங்கள் கழித்து தலைவலி, வாந்தி, மயக்கம் மற்றும் மறதி போன்ற தொல்லைகள் ஏற்படும். இதை மூளை ஸ்கேன் மூலம் எளிதில் கண்டுபிடித்து சிறு அறுவை சிகிச்சை மூலம் இரத்தக் கட்டியை அகற்றி விட்டால் பூர்ண குணம் கிடைக்கும்.

அதிக மது அருந்துதல்
பல மாதங்கள் அல்லது வருடங்கள் தொடர்ந்து அதிகமாக மது நோய் வர வாய்ப்பு அதிகம் உண்டு. மதுவை நிறுத்தி விட்டு, வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக் நினைவாற்றல் திரும்பும்.
தைராய்டு சுரப்பி குறைவாக சுரத்தல்
வயதான முக்கியமாக பெண்களுக்கு தைராய்டு சுரப்பி குறைவாக இத்தொல்லையினால் உடல் பருக்கும், தோலில் வறட்சி ஏற்படும், தலை முடி உதிரும், தொண்டை கரகரக்கும், மந்த நிலையோடு மறதியும் சேரும். இவர்களுக்கு இரத்த பரிசோதனை மூலம் இந்நோய் உறுதி செய்யப்பட்டு தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொண்டால் டிமென்சியா குறைய வாய்ப்புண்டு.
வைட்டமின் குறைவு
வைட்டமின்பி1 மற்றும்பி12 இரத்தத்தில் குறைந்தால் டிமென்சியா வைட்டமின்களோடு வைட்டமின்பி6 ம் (ஃபோலிக்அமிலம்) குறைந்தால் இரத்தத்தில் ஹோமோசிஸ்டின் (Homocystine) அளவு அதிகரிக்கும். இவர்களுக்கும் டிமென்சியா வரவாய்ப்புண்டு. இத்தொல்லை உள்ளவர்களுக்கு வைட்டமின்பி1 (தையமின்), பி6 (ஃபோலிக்ஆசிட்), பி12 (மெக்கோபாலாமின்) கலந்தமாத்திரையை தொடர்ந்து கொடுத்தால் டிமென்சியா வராமல் தடுக்கமுடியும். இதைப்போலவே உண்ணும் உணவில் நயாசின் என்னும் பி.காம்பிளக்ஸ் சத்துகுறைந்தாலும் டிமென்சியா வரலாம். இவ்வைட்டமின், கல்லீரல், சிறுநீரகம், மாட்டு இறைச்சி, மீன், நிலக்கடலை, கோதுமை, காபியில் அதிகமுள்ளது.
உறுப்புகள் செயலிழத்தலின் விளைவு
கல் ஈரல் மற்றும் சிறுநீரகம் செயலிழந்தவர்களுக்கும் டிமென்சியா வரலாம். தொடர்ந்து சிறுநீரக டையாலிசிஸ் செய்து கொள்வோருக்கும் இந்நோய் வர வாய்ப்புண்டு.
உதறுவாதம்
உதறுவாதம் உள்ளவர்களுக்கு பல வருடங்கள் கழிந்து டிமென்சியா (18 - 40%) ஏற்படாலம். உதறுவாதத்தை விட இந்நோய்க்கு கொடுக்கும் மாத்திரைகளின் பக்கவிளைவினாலேயே கூட(லிவோடோபா ) டிமென்சியா வரலாம் என்று கருதப்படுகிறது.
தொற்றுநோய்கள்
எய்ட்ஸ் மற்றும் சிபிலிஸ் (Syphilis) போன்ற நோய்களினாலும் டிமென்சியா வர வாய்ப்புண்டு.
மருந்துகள்
துாக்க மாத்திரை, மனநோய்க்கு கொடுக்கும் மாத்திரைகளை அதிக நாள் சாப்பிடுவதினாலும் டிமென்சியா வரலாம்.
மனச்சோர்வு
நாள்பட்ட மனச்சோர்வு உள்ளவர்க்கும் டிமென்சியா வரலாம்.
(அடுத்த பதிவில் அல்ஸைமர் டிமென்சியா பற்றி தெரிந்து கொள்வோம்.)
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.