Published:Updated:

முதுமையில் ஏற்படும் தோல் நோய்கள்! | முதுமை எனும் பூங்காற்று | My Vikatan

பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ். நடராஜன்

வேறு எந்நோயும் இல்லாமலேயே வறட்சி மட்டுமே அரிப்பினை உண்டாக்கவல்லது. அரிப்பு மிகவும் தொல்லைதரும் நோயாகும். இது தொடரின் துாக்கமின்மை உண்டாகும். சில சமயங்களில்..

முதுமையில் ஏற்படும் தோல் நோய்கள்! | முதுமை எனும் பூங்காற்று | My Vikatan

வேறு எந்நோயும் இல்லாமலேயே வறட்சி மட்டுமே அரிப்பினை உண்டாக்கவல்லது. அரிப்பு மிகவும் தொல்லைதரும் நோயாகும். இது தொடரின் துாக்கமின்மை உண்டாகும். சில சமயங்களில்..

Published:Updated:
பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ். நடராஜன்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

மனித உடலின் மிகப் பெரிய உறுப்பு தோல். உடலின் மொத்த எடையில் அதன் எடை 12%.

தோலின் முக்கியப் பணிகள்

பாதுகாப்பு : நோய்க் கிருமிகள், சூரிய வெளிச்சம், துாசி போன்றவை உடலில் செல்லாமல் தடுக்கிறது. தோலின் நிறம் உடலிற்குப் பேரழகினைத் தருகிறது.

சுரப்பிகள் : எண்ணெய், வேர்வைச் சுரப்பிகள் பல தோலில் உள்ளன. அவை தோலிற்கு மிருது தன்மையைத் தருகின்றன.

கழிவுநீரை வெளியேற்றல் : வேர்வை மூலமாக உப்பு முதலிய கழிவுப்பொருட்களை உடலிலிருந்து வெளியேற்றுகிறது.

தட்ப வெப்பநிலையைச் சீராக்குதல் : சுற்றுப்புறத் தட்ப வெப்ப நிலைக்குத் தகுந்தாற்போல் தோலில் சுரக்கும் வியர்வையை குறைத்தோ, மிகுதிப்படுத்தியோ உடலின் வெப்பநிலையைச் சீராக வைக்கிறது.

வைட்டமின் உற்பத்தி செய்தல் : சூரிய ஒளி உதவியோடு வைட்டமின் டி யைத் (Vitamin D) தயாரிக்கிறது.

உறிஞ்சும் தன்மை : தன் மீது தடவும் களிம்பு உறிஞ்சிக் கொள்கிறது.

முதுமையில் தோலில் ஏற்படும் மாற்றங்கள்

தோல், சூரிய ஒளிக்கு அதிகமாக உட்படுவதாலும் எண்ணெய், வேர்வை சுரக்கும் தன்மையும், ஹார்மோனின் அளவும் குறைவதாலும் வறண்டு சுருங்கி வெளுத்துக் காணப்படும்.

முதுமை
முதுமை
Pixabay

முதுமையில் தோல் அரிப்பு (Senile pruritus)

அரிப்பு என்ற உணர்வு, சில மென்மையான தருணங்களில் இதமாகவும், இன்பமானதாகவும் இருக்கும். அதுவே பல்வேறு சமயங்களில், இயலாமையால் வெறுப்பு, கோபம், எரிச்சல் முதலியவைகளை உண்டாக்கும் கோபமாக மாறிவிடுகிறது

முதுமையில் தோலிலுள்ள எண்ணெய்ச் சுரப்பிகளின் சுரக்கும் தன்மை குறைகிறது. அதனால், தோலில் வறட்சி ஏற்படுகிறது. அவ்வறட்சி தோலில் அரிப்பினை உண்டாக்குகிறது. வேறு எந்நோயும் இல்லாமலேயே வறட்சி மட்டுமே அரிப்பினை உண்டாக்கவல்லது. அரிப்பு மிகவும் தொல்லைதரும் நோயாகும். இது தொடரின் துாக்கமின்மை உண்டாகும்; சில சமயங்களில் மனச்சோர்வு ஏற்பட்டு அது தற்கொலைக்கும் வழிவகுக்கும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தோல் அரிப்பிற்குக் காரணங்கள்

வறட்சித் தோல்

ஒவ்வாமை

கல்லீரல் பாதிப்பு

சிறுநீரகம் சார்பான நோய்கள் - இரத்தச் சோகை

தோல் சார்பான கரப்பான் போன்ற நோய்கள்

புற்றுநோய்

மனநோய்

சிரங்கு, பேன்,

தைராய்டு தொல்லைகள்.

Representational Image
Representational Image

சிகிச்சை முறைகள் :

அரிப்பு நோய் கண்டவர் அடிக்கடி குளிப்பதைத் தவிர்த்து, வாரத்திற்கு மூன்று முறை குளித்தால் போதும்.

குளிப்பதற்கு முன், “ஆலிவ்” எண்ணெயையோ, “பாரபின்” எண்ணெயையோ (Liquid paraffin) தேய்த்து, சோப்பை அதிகமாகப் பயன்படுத்தாமல் குளித்தால் தோல் வறட்சியைத் தடுக்கலாம்.

வீரியம் உள்ள சோப்புகளை தவிர்த்து, வீரியம் குறைந்த சோப்புகளை பயன்படுத்தலாம், உ.ம். சிடாபில்

களிம்பு -காலமைன் மற்றும் ஸ்டீராய்டு களிம்பை அரிப்பு ஏற்படும் பாகத்தில் தடவலாம்.

அரிப்பு மிகுதியாக இருந்தால் அரிப்பு மாத்திரையினை (Antihistamine) உண்ணலாம்.

வீரியம் குறைவாக உள்ள ஸ்டீராய்டு மாத்திரைகள் கொடுக்கலாம்.

மன அமைதி கொடுக்கும் மாத்திரையை கொடுக்கலாம்.

மனச்சோர்வும் அரிப்புக்கு ஒரு காரணமாக இருந்தால், மனச்சோர்வுக்கான மாத்திரையை கொடுக்க வேணடும்.

சத்துள்ள ஆகாரம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

தேவையான நீர் அருந்துதல் வேண்டும்.

சுற்றுப்புற சீதோஷ்ண நிலையினால் தோல் பாதிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

உடலில் அரிப்பு ஏற்படும் போது அதை சரி செய்ய சீப்பு, பிரஷ், கட்டை முதலிய கடினமான பொருட்களை உபயோகப்படுத்தக் கூடாது.

நகத்தை அதிகம் வளர விடாமல்; வெட்டிக் கொள்ள வேண்டும்.

ஒளிக் கதிர் சிகிச்சை(Ultra violet B rays) முறையை கையாளலாம்.

அக்குபஞ்சர் சிகிச்சை முறையும் அரிப்பை குறைக்கும்.

அரிப்புக்குண்டான மூல காரணத்தை கண்டறிந்து அதற்கு தக்க கிசிச்சையளிக்க வேண்டும். உ.ம். : பேன், பொடுகு, சிரங்கு, பூஞ்சை காளான், ரத்த சோகை, தைராய்டு தொல்லைகள்.

முடிவாக

அரிப்பு - சொறிதல் - அரிப்பு (Itch - Scratch - Itch) என்ற நிலை மாற வேண்டும்

தோல் பாதுகாப்பு

குளிப்பதற்கு முன் உடலில் இலேசாக எண்ணெய் (ஆலிவ், தேங்காய் எண்ணெய்) தேய்த்துக் கொண்டு குளிப்பதால் தோலின் வறட்சித் தன்மை குறையும்.

மிகுந்த மணம் வீசும் சோப்பு, கிருமிநாசினி மருந்து கலந்த சோப்புகளை பயன்படுத்தாமல், மிதமான (Neutral or Syndet) சோப்புகளையே பயன்படுத்த வேண்டும்.

சூரிய ஒளி அதிகம் தோலில் படாமல் பாதுகாத்துக் கொள்ள அதற்கென்று தயாரிக்கப்பட்டுள்ள எண்ணெய் அல்லது களிம்பை (Sun screener) உபயோகிக்கலாம். தலைக்குத் தொப்பி, கை, கால்களை முழுவதும் முடும் பருத்தி ஆடைகளை அணிவது மிகுதியான சூரிய ஒளித் தொல்லையிலிருந்து மீளலாம்.

Representational Image
Representational Image

பூச்சி ஊர்தல் போன்றதோர் உணர்வு (Parasitophobia)

“கரப்பான் நோய் பூச்சிகளால் உண்டாகிறது” எனும் மனப்பான்மை உடையவர்க்குத் தோலில் பூச்சிகள் ஊர்வதைப் போன்றதொர் உணர்வு தோன்றும். அவர்கள் சில சமயங்களில் தங்கள் உடம்பில் ஊர்ந்த பூச்சிகள் எனச் சிலவற்றை டப்பாக்களில் அடைத்துக் கொண்டு வருவர். அந்த டப்பாக்களில் தோலின் செதிள்கள் இருக்குமே தவிரப் பூச்சி எதுவும் இராது. இவ்வுண்மையினை எவ்வளவு தான் எடுத்துச் சொன்னாலும் அவர்கள் மனநிறைவு அடையாமல் பல்வேறு மருத்துவரிடம் பலமுறை சென்று வீணே துன்புறுவர். இந்நோயினால் பாதிக்கப்படுவார் மனநோயாளியாகவும் இருக்கலாம். அதனால் உடம்பினைச் சுரண்டி சுரண்டிச் சிராய்ப்புகளையும் உண்டாக்கிக் கொள்வர். மனநோயாளர் மனநோய் மருத்துவரிடம் அறிவுரை பெறலாம். பிமோசைடு (Pimocide) மாத்திரை உண்ணலாம்.

தோல் புற்றுநோய்

தோலில் தோன்றும் புற்றுநோய்களுள் இத்தோல் புற்றுநோய் முதுமையில் மிகுதியாய் காணப்படும்.

இந்நோய்க்குரிய காரணங்களுள் சூரிய ஒளி, ஆர்சனிக் உட்கொள்ளுதல் (வெள்ளை பாசாணம்), கதிர்வீச்சு ஆகியவை முக்கியப் பங்கு பெறுகின்றன. இப்புற்றுநோய் முகத்தின் மேற்பகுதியிற் கண் அருகிலோ, மூக்கின் மேலோ தோன்றும். முதலிற் சிறகட்டி தோன்றிப் பின் அஃது ஆறாத புண்ணாகிச் சுற்றியுள்ள திசுக்களை மெதுவாக அரித்துவிடும்.

சூரிய ஒளி மிகுதியாகப்படும் முகம், கை போன்ற இடங்களில் கறுப்பான கட்டிகள், புண்கள் போன்றவை தோன்றினால், அவை புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம். அதனால் மருத்துவர் அறிவுரையை உடனே பெற வேண்டும். அறுவைச் சிகிச்சையினால் முழுமையாய்க் குணப்படுத்தலாம்.

நம் உடம்பிற்கு கவசம் போல் இருந்து நம்மை பாதுகாத்து அழகு ஊட்டும் தோலை நன்றாக பாராமரிப்பது நமது கடமையல்லவா? தோலில் அரிப்பு ஏற்படும் வரை காத்து இருக்க வேண்டாம். தோல் பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுப்போம்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.