Published:Updated:

வெண்பனி மலரே! - சிறுகதை

Representational Image

உனக்கு நினைவு இருக்கா பருத்தி, போன வாரம் உனக்கு உடம்பு சரியில்ல, பார்த்துக்கவோ, என்னாச்சுன்னு கேட்கவோ நாதி இல்ல.. ஆனா, எல்லாரும் இருக்காங்க நமக்கு..

வெண்பனி மலரே! - சிறுகதை

உனக்கு நினைவு இருக்கா பருத்தி, போன வாரம் உனக்கு உடம்பு சரியில்ல, பார்த்துக்கவோ, என்னாச்சுன்னு கேட்கவோ நாதி இல்ல.. ஆனா, எல்லாரும் இருக்காங்க நமக்கு..

Published:Updated:
Representational Image

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

அழகான ஒரு கிராமம், சுத்தி எங்கேயும் நிறைய மலைகள், வயல்கள், பெரிய தோப்பு, வழி எங்கும் மரங்கள், அங்கே அங்கே சில குளங்கள், குட்டைகள், எப்போதும் வீசும் ஜில்லென்ற காற்று, மொத்தமாக இருநூறு வீடுகள், பஞ்சாயத்து ஆலமரங்கள், தெரு எங்கும் நிம்மதியாக சுற்றி தெரியும் ஆடு, மாடு, கோழி அதனுடன் விளையாட சில சின் வண்டுகள், மண் தரையிலும், சேற்றிலும் தவழும் பிஞ்சுகள், பாரபக்ஷம் இன்றி வளரும் குழந்தைகள், நேரில் யாரை கண்டாலும், நல்ல இருக்கீங்களா, வூட்டுல எப்படி இருக்காங்க, சாப்டீங்களா என்று நலம் விசாரிக்கும் நெஞ்சங்கள், வன்மம் என்ற சொல் மறந்த அந்த அழகிய கிராமம் மதுராந்தகம் பக்கத்துல இருக்கற "நல்லமூர்". ஊர் பேர் மட்டும் இல்ல, அங்க இருக்கற எல்லாரும் அப்படித்தான்..

Representational Image
Representational Image

இந்த அழகான ஊர்ல, பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, கல்யாணம் பண்ணிக்கிட்டு, புள்ள பெத்துக்கிட்டு, பேரன், பேத்தி எடுத்தி சந்தோஷமா வாழற எழுபது வயது நெருங்கும் ஆதர்ஷ தம்பதி முத்துகாளையும், பருத்தியம்மாளும்..விவசாயம் செஞ்சு, சில வீட்டுல பாத்திரம் கழுவி, ரெண்டு வேலை மட்டும் சாப்பிட்டுக்கிட்டு, வர காசுல கொஞ்சமா கொஞ்சமா சேர்த்து வெச்சு புள்ளகுட்டிகளை படிக்கச் வெச்சு, பட்டணத்துல வேளைக்கு அனுப்பறதுக்கு அம்பது வருஷம் ஓடி போச்சு... திரும்பி பார்த்த, இவங்களோட பாதி வாழ்க்கை, இவர்களுக்காக இல்லாம புள்ளைங்க, பேரங்கனு போய்டுச்சு..

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

திடீர்னு, ஒரு நாள்... அதிகாலை ஒரு 4 மணி இருக்கும், பருத்தியம்மாள் ரொம்ப அசந்து தூங்கறப்போ, முத்துக்காளை மெதுவா அவங்க கிட்ட போய், ஏலே, கண்ணு, பருத்தி கண்ணு, எந்திருடா, எனக்கு ஒரு யோசனை.. வெகு நேரம் முயற்சி செய்தும் பலனில்லை.. அவளின், தலையை ரெண்டு ஆட்ட.. காலின் விரலை சொடுக்கு எடுக்க, என்னமோ செய்ய, பருத்தியம்மாள் எதற்கும் அசையவில்லை.. சற்றே, பயந்து போய். ஏலே, விளையாடாத.. இப்போதான் எனக்கு ஒரு யோசனை வந்துருக்கு இத்தனை வருஷத்துல..நீ பல நாளா சொல்ற அப்போ தெரில.. ஒழுங்கா எந்திரியா..என்ற சொல்லிக்கொண்டே யோசிக்காமல், சட்டென்று அருகில் சொம்பில் இருந்த தண்ணீரை எடுத்த அவள் மூஞ்சில் ஊற்ற, ஏதோ கெட்ட கனா கண்டது போல், தூக்கி வாரி போட்டு கொண்டு பருத்தி எந்திரிக்க, ஐயோ என்னாச்சு !!!

Representational Image
Representational Image

முத்துக்காளை அப்பாடா என்று பெரு மூச்சு விட..கொஞ்ச நேரத்துல அடி வயிறு கலங்கிடிச்சு...

தலையில் இருந்து, கழுத்து வரை முழுதும் தண்ணீர்..சற்றும் கோபிக்காத பருத்தி, என்னய்யா பசிக்குதா, எதுனா சாப்பிடறீங்களா..தோசை சுட்டு தரவா..அதெல்லாம் இல்ல பருத்தி, எனக்கு ஒரு யோசனை, இப்போவே, உடனே செய்ய போறோம் அத.

இந்த நேரத்துல, இப்படி எழுப்பி என்ன சொல்லப்போறீங்க

அது என்னனா..

இத்தனை வருஷத்துல, கடமை, பொறுப்பு, பார்க்க கூடாத கஷ்டம்..எல்லாத்தையும் பார்த்தாச்சு.. ஹ்ம்ம்ம்.. பெரு மூச்சு விட்டுக்கொண்டே..ஏலே, பருத்தி, நீயும் நானும் கடமைக்காக நெறையா பார்த்தாச்சுயா, நம்ப வாழ்க்கைல திரும்பி பாக்கறப்போ மொத்தமும் நம்ம பசங்கள படிக்கச் வெச்சு, சோறு போட்டு, வேளைக்கு அனுப்பி, கல்யாணம் பண்ணி, பேர புள்ளைங்கள வளர்த்து தான் இருக்கு.. சேர்ந்து ஒரு வேளை சோறு கூட திங்க நேரமில்லை, நினைச்சாலும் முடியல..

பசங்களும், வேலை வேலைனு இருக்காங்க, அதுவும் ரெண்டு இல்ல மூணு நாளைக்கு ஒரு தடவ போன் பன்றாங்க.. நம்ப சாப்பிட்டோமா, தூங்குனமோ, உடம்பு நல்லாயிருக்கா கூட தெரியாது.. எல்லார்க்கும் ஒரு நிலைக்கு அப்பறம், அவங்க வாழ்க்கை, அங்க உள்ள சூழ்நிலை அப்டியே போகுது..

உனக்கு நினைவு இருக்கா பருத்தி, போன வாரம் உனக்கு உடம்பு சரியில்ல, பார்த்துக்கவோ, என்னாச்சுன்னு கேட்கவோ நாதி இல்ல.. ஆனா, எல்லாரும் இருக்காங்க நமக்கு..

Representational Image
Representational Image

நம்ம செத்துட்டா கூட, ஒரு நாள் கண்ணீர் அவ்ளோதான்.. அடுத்த வேலைய பார்க்க எல்லாரும் போய்டுவாங்க.. அறுபது வருஷமா இவங்க, அவங்களுக்காக இல்லாம நமக்காக வாழ்த்தாங்க சொல்லி யாரும் சிலை வைக்கமாட்டாங்க...கடமையை செஞ்சோம், அத சந்தோஷமா செஞ்சோம்.. எந்த எதிர்பார்ப்பும் இல்லாம..எப்பவும், இப்பவும்...

ஒரு நாள், ஒரே ஒரு நாள் நமக்காக வாழ்வோம், நம்ம சந்தோஷத்துக்காக.. ஆறு மணிக்கு முத பஸ் வரும், ஏறி போவோம்.. எங்கன்னு தெரில...ஆனா போவோம்..இப்ப விட்ட இதுக்கு அப்பறம் எதுவும் நடக்காதோ அப்டினு பயமா இருக்கு பருத்தி.. போவோம், போய்ட்டு ராத்திரி வந்துடலாம் வீட்டுக்கு..

முத்து காளை பேச பேச, பருத்தி அம்மாள் கண்களில் வழிந்து ஓடும் காதலும், ஏக்கமும் கண்ணீராக.. அய்யா, ரெண்டு நிமிஷம்..நான் கிளம்புறேன் சாமி..நீங்க, சுகர் மாத்திரை மட்டும் எடுத்துக்கோங்க, அப்பறம் தண்ணி பாட்டில், கொஞ்சம் நொறுக்கு தீனி போற வழில சாப்பிட, போன் சார்ஜ் போடுங்க..அவள் பேச பேச, ஏலே, எதுவும் வேண்டாம் டா..நீ மட்டும் போதும்.. அடுத்த மொத்த நேரமும், நமக்காக.. எதுக்கும் இல்ல.. நீ கிளம்பு டா.. காபி குடிச்சுட்டு பஸ் ஏறுவோம்..

மனதுக்குள், சொல்ல முடியாத சந்தோசம்.. சில நொடிகள் இருபது வயது பெண்ணாக மாறியே போனால் பருத்தி அம்மாள்.. அனைத்தும் வேகம்.. வெறும் அஞ்சு நிமிஷம், புடவைய சுத்திகிட்டு வர, முத்தக்காளையும், ஒரு வேட்டி, சட்டை, தலைல ஒரு துண்டு...என்ன, போலாமா..ஹ்ம்ம் போலாம்..

இறுதி பயணமாக...

அதிகாலை ஆறு மணி, முதலில் முத்துக்காளை வீட்டு வெளியில் எட்டி பார்க்க, ஏலே பருத்தி ஒரு பையன் இல்ல, சீக்கிரமா வா போயிரலாம் என்ற சொல்லி முடிப்பதற்குள், சாமீ நான் இங்க..வாங்க. ஹாஹாஹா சிரிச்சுகிட்டே.. பயணம் தொடர்ந்தது..

Representational Image
Representational Image

வழியில் யாரும் பார்க்காத போல், முத்துக்காளை தலைப்பாகையோடும், பருத்தியம்மாள் புடவை முந்தானையால் முகத்தை மூடி கொண்டு, ஒத்தையடி பாதை வழியில் ஒரு வழியாக பேருந்து நிறுத்தும் இடம் வரவும், பஸ் வரவும் சரியாய் இருந்தது.. சிறு வயது காதலர்கள் போல் துள்ளி கொண்டு உள்ளே இரு.. கண்டக்டர் whistle போலாம் என்று சொல்ல, அது தனக்கும் என்றே தோன்றியது...

ஜன்னல் ஓரமாக, இருவரும் அமர..இருவருக்கும் பெருமூச்சு.. மெதுவாக, முண்டாசையும், முந்தானையும் கழட்ட, கண்டக்டர் அய்யா எங்க போனும்,

ஹ்ம்ம்ம் எங்க போலாம் பருத்தி..

தெரில அய்யா..

அய்யா, எங்கே போறீங்க தெரியாம ஏரியாச்சா..

அது இல்ல தம்பி, ரெண்டு பெரும் வீட்டை விட்டு ஓடி போறோம்.. அதான்...

இந்த வயசுலயா..

என்ன வயசா !!! அறுபது வயசு தான் காதலுக்கு ஏத்த வயசு.. நீ ஒரு நாள் புரிஞ்சுக்குவா கண்டக்டர் தம்பி..

அது சரி..

பஸ் கடைசியா எங்க போய் நிக்குமோ அங்க கொடு, பருத்தி என்ன நான் சொல்றது என்று கர்வமாக பார்க்க, சற்றென்று இருவரும் ஒருவரை ஒருவர் கண்களால் பேசி கொள்ள, காதல் எவ்ளோ அழகானது என்பது, அதை உணர்ந்தால் மட்டும் புரியும்.. வார்த்தை இல்லை, ஆனால் காதல் மொழிக்கு பஞ்சமில்லை... அவ்ளோ அழகு இருவரின் கண்களில்.. பருத்தி மெல்ல அவரது தோளில் சாயந்து கொள்ள, தலை வருடி, ஏலே ஒரு முத்தும் ஒண்ண தரவா என்று கேட்டு முடிப்பதுற்குள், பருத்தி நீ வெக்க பட்டு பார்த்து முப்பது வருஷம் ஆச்சு... என் அழகி லே நீ என்ற கொஞ்ச கொஞ்ச..

அய்யா.. போதும் முதல டிக்கெட் புடிங்க..

டிக்கெட் வாங்கி கொண்டு, பாக்கெட்டில் வைக்க..மறுபடியும் காதல் வழிந்தோடியது. பேசவில்லை..

தோளில் சாய்ந்தபடியே...அய்யா, உங்க தோள் சாஞ்சு பல வருஷம் ஆகி போச்சு, நான் பொறந்து நாள் தொட்டு, இன்னைக்கு தான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் என் உசுரே போனாலும் சந்தோஷம்.. அத பேசவேண்டாம், இந்த நிமிஷம்.. நமக்காக.. உங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டு, என்ன காளை மாட்டு வண்டியில கூட்டிகிட்டு வந்தது இன்னும் நியாபகம் இருக்கு.. கைல அப்போ காசு இல்ல, ஆனா சந்தோஷமும், நம்பிக்கையும் ரொம்ப பெருசா இருந்துச்சு..

Representational Image
Representational Image

ஹாஹாஹா, ஆமாடா பருத்தி, உனக்கு சத்தியம் செஞ்சே நினைவு இருக்கா.. நீ வந்த நேரம், எல்லாம் மாறும், எப்போதும் உன்கூடவே இருப்பேன்னு சத்தியம் செஞ்சேன்…

ஆமா அய்யா.. நீங்க கவனிச்சுங்களா, அன்னைக்கு கட்டுன புடவை தான் இன்னிக்கு கட்டி இருக்கேன்..

அட.. இதை பார்க்கல.. அருமைடா...

ஜன்னல் வழியா வர காற்று, ஆனாலும் கண்ணில் தூக்கம் இல்லை.. இருவரும், அறுபது வருட வாழ்க்கையை பேச, பேச கண்களில் கண்ணீரும், காதலும் ஒன்றாய்.. திடீரென்று, முத்துகாளைக்கு ஒரு ஆசை, ஏலே.. எனக்கு சின்ன வயசுல ஒரு ஆசை, உன் கூட பஸ் படிக்கட்டுல நின்னுகிட்டு கொஞ்ச தூரம் போனும். போலாமா.. போலாம்..இப்பவே.. முத்துக்காளை முண்டாசை, தலையில் கட்டி, வேட்டியை மடிச்சு கட்டிக்கிட்டு. வாயா போலாம் என்று சொல்லிக்கொண்டே இருவரும் படிக்கட்டு நோக்கி நகர.. கண்டக்டர் அய்யா, நீங்க போக வேண்டிய இடம் வரல… அது தெரியும் தம்பி.. அப்போ எங்க போறீங்க... என்ற சொல்ல சொல்ல, முத்துக்காளை இரண்டாவது படிக்கட்டில் மெதுவாக நிற்க, வா கண்ணு என்று சொல்ல, இருவரும் படியில் உலகத்தை மறந்து, வெளியில் வரும் காற்று தலையில் இருந்து கால் வரை அடிக்க, அதுவும் பருத்தியின் தலை முடி சற்றே அதிகம் பறந்து, முத்துக்காளை மூஞ்சியில் விழ, தன்னை மறந்து அவர் பாட, பஸ்சிலும் அதே பாடல்..

"காதலின் தீபம் ஒன்று

ஏற்றினாலே என் நெஞ்சில்

காதலின் தீபம் ஒன்று

ஏற்றினாலே என் நெஞ்சில்

ஊடலில் வந்த சொந்தம்

கூடலில் கண்ட இன்பம்

மயக்கம் என்ன காதல் வாழ்க"

அய்யா, முதல மேல வரிங்களா, இல்லையா.. இல்ல எங்க இறக்கி விட்ருவேன்.. சின்ன பசங்களையே, நிக்க கூடாது கத்தறோம், இந்த வயசுல போய்.. முதல மேல வாங்க.. என்று கத்தி கொண்டே இருக்க, மெதுவாக இருவரையும் ஒரு வழியாக, கண்டக்டரும், மற்ற பயணிகளின் கெஞ்சலுக்கு பணிந்து, இருவரும் அதே இருக்கையில்...

ஹ்ஹாஹ்ஹா ரொம்ப சந்தோசம் யா.. அதுவும், முத முறையா, படிக்கட்டுல.. கொஞ்சம் பயமா இருந்துச்சு.. உனக்கு,

எனக்கு பயமே இல்ல.. அதான் நீங்க இருக்கீங்களா என்று சொல்ல,

இருவரும் கைகள் கோர்த்து, தோள் சாய்ந்து, சிரித்து கொண்டே ஜன்னல் வழியாக ரசித்து கொண்டே வந்தார்கள்.. எப்போது கண் அசைந்தார்கள் என்று அவர்களுக்கே நினைவு இல்லை...

Representational Image
Representational Image

சிறிது நேரம்..

அய்யா நீங்க இறங்கவேண்டிய இடம், இன்னும் பத்து நிமிஷத்துல வந்தரும் என்று சொல்லி கொண்டே கண்டக்டர் வர.. இருவரும், ஆழந்த தூக்கம்.. அட காதல் பண்ணிகிட்டே தூங்கிட்டாங்களா.. ஹாஹாஹா...

அய்யா, அய்யா, எந்திரங்க, இடம் வந்துருச்சு.. அம்மா நீங்களாச்சு எந்திரிங்க.. என்று சொல்லி கொண்டே குலுக்க இருவரும் எந்திரிக்க வில்லை.. கூட, சில பயணிகளும், கண்டக்டர் ஒரு சேர்ந்து எழுப்ப, பலனில்லை..

பஸ்சில் பாடல் ஒளித்து கொண்டு இருந்தது...

வீடு வரை உறவு வீதி வரை மனைவி

காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ?

இந்த அழகிய காதல், காற்றில் ஒன்றாய்.. இனி ஒரு நாள் இல்லை, இன்னும் பல ஜென்மம் இருவரும் சொர்க்கத்தில் அவர்களுக்காக வாழ பயணம் தொடர்ந்த்து..

"மறுபிறவி இருந்தா போதும்,

சீமதுரை போல வந்து நானும்,

உன்ன - ராணி போல வாழ

வைப்பேன் தினமும்...

"

முற்றும்..

எழுத்தும், கற்பனையும்,

கல்யாணராமன் நாகராஜன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/