Published:Updated:

வயதானவர்களுக்கும் தடுப்பூசி உண்டு |முதுமை எனும் பூங்காற்று | My Vikatan

Representational Image

ஒரு முதிய தம்பதியரின் உரையாடல் மூலம் வயதானவர்களுக்கான தடுப்பூசியைப் பற்றி தெரிந்து கொள்வோம்..

வயதானவர்களுக்கும் தடுப்பூசி உண்டு |முதுமை எனும் பூங்காற்று | My Vikatan

ஒரு முதிய தம்பதியரின் உரையாடல் மூலம் வயதானவர்களுக்கான தடுப்பூசியைப் பற்றி தெரிந்து கொள்வோம்..

Published:Updated:
Representational Image

கமலா, “நான் டாக்டர் நடராசன் அவர்கள் "வயதானவர்களுக்கும் தடுப்பூசி உண்டு” என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு ஒன்றை இன்று மாலை நிகழ்த்த உள்ளார் அதற்கு நான் சென்று வருகிறேன்".

“பத்திரமாக போய் வாருங்கள். வீட்டிற்கு வந்த பின்பு அவர் கூறியதை எல்லாம் எனக்கு விபரமாகக் கூறவும். எனக்கும் உங்களோடு வர ஆசை தான் ஆனால் இன்று வீட்டில் வேலை சற்று அதிகம் அதனால் உங்களோடு வர முடியவில்லை”.

டாக்டரின் சிறப்புரையைக் கேட்டுவிட்டு வீட்டிற்கு வரும் இராமநாதனை வரவேற்க கமலா கதவருகிலேயே நின்று காத்திருந்தார்.

Representational Image
Representational Image
Photo by ritesh arya

கமலா : இதுவரையில் குழந்தைக்குத் தான் தடுப்பூசி என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதென்ன வயதானவர்களுக்கும் தடுப்பூசியா. டாக்டர் அதைப்பற்றி என்ன சொன்னார்?

இராமநாதன் : வயது ஆக ஆக (சுமார் 50 வயதிற்கு மேல்) உடலில் எதிர்ப்புச்சக்தி குறைகிறது. அதனால் தொற்றுநோய்களை வயதானவர்களை எளிதில் தாக்குகிறது. அதிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவே முதியவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

கமலா : நோய் எதிர்ப்புச்சக்தி குறைய என்ன காரணமாம் ?

இராமநாதன் : அதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் உண்டு. உதாரணம் :

 • முதுமை

 • நோய்கள், உ.ம்.: நீரிழிவு நோய், புற்றுநோய்

 • மருந்துகள், உ.ம்.: ஸ்டீராய்டு, புற்று நோய்க்கு கொடுக்கும் மருந்து

 • சத்துணவு குறைவு

கமலா : நோய் எதிர்ப்புச் சக்தி குறைவதினால் உடலில் என்னவிதமான பாதிப்பு ஏற்படும் ?

இராமநாதன் : முதியவர்கள் அடிக்கடி மருத்துவரிடம் சிகிச்சைக்காக செல்வதற்கும், உடல்நலம் குன்றி இறப்பதற்கும் தொற்று நோய்களே முக்கியமான காரணமாகும்.

கமலா : வயதான காலத்தில் எந்தவிதமான தொற்றுநோய்கள் வரும் என்பதைப் பற்றி டாக்டர் என்ன சொன்னார்?

இராமநாதன் : ஒன்றா, இரண்டா, டாக்டர் நிறையவே சொன்னார். அவைகள் :

 • நெஞ்சக நோய்கள் உதராணம்: நிமோனியா, ப்ளூ, காச நோய்

 • சிறுநீரகம் மற்றும் அதன் தாரையில் ஏற்படும் நோய்கள்

 • வயிறு, குடல் சார்ந்த பூச்சி தொல்லைகள், உதாரணம் : சீதபேதி, டைபய்டு

 • தோல் சார்ந்த நோய்கள் - உதாரணம் :படை, சிரங்கு, பூஞ்சை காளான் தொல்லை, அக்கி சார்ந்த அம்மை நோய்கள்

கமலா : இவ்வளவு நோய்களிலும் மிகவும் கொடுமையான தொற்றுநோய் எது ?

இராமநாதன் : பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் அந்த அந்த நோயின் பாதிப்பைப் பற்றி அதிகமாகத் தெரியும். இதில் உடல்நலத்தற்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தி உயிருக்கு ஆபத்தானது நிமோனியா எனும் சளி நோய் தான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கமலா : நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்க கலபமான வழிகளை டாக்டர் ஏதாவது கூறினாரா?

இராமநாதன் : ஆம், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க தினமும் கடைப்பிடிக்கவேண்டிய சில எளிய வழிமுறைகளை டாக்டர் சொன்னார்.

 • தினமும் செய்யும் உடற்பயிற்சி, தியானம், பிரணாயாமம்

 • நெல்லிக்காய், ஆரஞ்சு, எலுமிச்சை, பாதாம், கொட்டை வகைகள், பாகற்காய், தேன், காளான், பூண்டு, இஞ்சி, மஞ்சள், தயிர் போன்ற உணவு வகைகளை முடிந்த அளவிற்கு அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கமலா : ஒரு சந்தேகம். பிராணாயாமம், தியானம் மற்றம் நீங்கள் குறிப்பிட்டுள்ள உணவு முறைகள் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, நிமோனியா வராமல் தடுக்க முடியாதா?

இராமநாதன் : மிகவும் அறிவுச் சார்ந்த கேள்வி. உன் கேள்வி ஓரளவிற்கு உண்மையாக இருக்கலாம். ஆனால் மேற்கண்டவற்றை பல மாதங்கள் மற்றும் ஆண்டுகள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து நிமோனியா வராமல் ஓரளவிற்கு தடுக்க முடியும். ஆனால் ஊசி போட்டுக் கொண்ட ஒரு சில வாரங்கிலேயே எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பது தடுப்பூசியால் மட்டுமே முடியும்.

டாக்டர் வி.எஸ்.நடராஜன்
டாக்டர் வி.எஸ்.நடராஜன்

கமலா :சளித்தொல்லையால் அடிக்கடி சிரமப்படுவதாகும், இறப்பதற்கு மூலகாரணமாக இருக்கும் நிமோனியாவைப் பற்றி விபரமாக டாக்டர் என்ன சொன்னார்?

இராமநாதன் : முதியோர்களுக்கு வரும் இருமல், சளித் தொல்லைகளில் நிமோனியா முக்கிய பங்கு வகிக்கிறது. இது ஒரு பாக்டீரியாவினால் ஏற்படும் தொற்று நோய். இந்நோய் உள்ளவர்கள் இரும்பும் பொழுது காற்றின் மூலம் மற்றவர்களுக்கு பரவும். இந்நோயின் முதல் அறிகுறி காய்ச்சல், உடல்வலி மற்றும் வாந்தி. இதைத் தொடர்ந்து இருமல், சளி, மூச்சு திணறுதல் போன்றவை தோன்றும். இருமல் அதிகரிக்கும் பொழுது சிலருக்கு சளியில் இரத்தமும் கலந்திருக்கும். எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இந்நோய் காது, தலை (ஸ்சைனஸ்) மற்றும் மூளையை பாதித்து உயிருக்கே ஆபத்தைக்கூட விளைவிக்கும். மிகவும் வயதானவர்களுக்கு இந்நோய் மனக்குழப்பம், கீழே விழுதல் மற்றும் சிறுநீரை கட்டுப்படுத்த முடியாத நிலை கூட ஏற்படலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கமலா :எனக்கு ஒரு சந்தேகம். இந்த நிமோனியா யாருக்கு எல்லாம் வரும்?

இராமநாதன் : ஒரு பட்டியலே உண்டு. கவனமாகக் கேள்.

நிமோனியா வர வாய்ப்பு உள்ளவர்கள்

 • வயதானவர்கள்

 • நீரிழிவு நோய் உள்ளவர்கள்

 • ஸ்டீராய்டு மருந்து உண்பவர்கள்

 • சமீபத்தில் ப்ளூ காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள்

 • நுரையீரல் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள்

 • இதயம், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள்

 • தூசி நிறைந்த இருப்பிடத்தில் வசிப்பவர்கள்

 • புகைப்பிடிப்பவர்கள்

 • மது அருந்துபவர்கள்

 • புற்றுநோயாளிகள்

கமலா : நிமோனியா தடுப்பூசியைப் பற்றி டாக்டர் சற்று விபரமாக கூறியிருப்பாரே அதைப்பற்றி தெரிந்துக் கொள்ள மிக்க ஆவலாக இருக்கிறேன்.

Representational Image
Representational Image

இராமநாதன் : அதற்காகத் தானே டாக்டரின் சொற்பொழிவிற்குச் சென்று வந்தேன்.

நோய் தடுப்பு என்றாலே அது குழந்தைகளுக்கு மட்டும் தான் என்ற காலம் மாறிவிட்டது. முதியவர்களுக்கும் உண்டு தடுப்பூசி!

முதுமையில் நோயின் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்களுக்கு இந்நோய் மரணத்தைக் கூட விளைவிக்கும். ஆகையால் இந்நோய் வராமல் தடுப்பதே நல்லது. இதற்கும் தடுப்பூசி உண்டு. சுமார் 50 வயதைக் கடந்தவர்களுக்கு ஆயுளுக்கு ஒரே ஒரு முறை இந்த ஊசியை எடுத்துக் கொண்டால் போதும். ஒரு சிலருக்கு மட்டும் சில ஆண்டுகள் கழித்து தேவைப்பட்டால் இரண்டாவது ஊசியை போட்டுக் கொள்ளலாம். இந்த தடுப்பூசியினால் பக்க விளைவுகள் ஏதும் இல்லை. நிமோனியா தடுப்பூசியுடன் தேவைப்பட்டவர்களுக்கு இன்புளூயன்ஸா தடுப்பூசியையும் ஒரே சமயத்தில் போட்டுக் கொள்ளலாம்.

கமலா : இந்த தடுப்பூசியினால் வேறு ஏதாவது நன்மைகள் உண்டா?

இராமநாதன் : உண்டு.

 • நிமோனியா சளி ஜீரம் வராமல் தடுக்கிறது.

 • அடிக்கடி மருத்துவமனையில் இந்நோய்க்காக சிகிச்சை பெற்று பணம் விரயம் ஆவது தடுக்கப்படுகிறது.

 • தடுப்பூசி மூலம் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு, இவர்கள் மூலம் இந்நோய் வராமல் தடுக்கப்படுகிறது.

கமலா : வேறு எந்த நோய்களுக்கு எல்லாம் தடுப்பூசி உண்டு?

இராமநாதன் : இன்புளூயன்ஸா, டெட்டனஸ், ஹெப்படைட்டிஸ் பி மற்றும் அக்கி எனும் அம்மை சார்ந்த நோய்களுக்கு தடுப்பூசி உண்டு.

கமலா : நிமோனியாவிற்கு அடுத்ததாக எந்த நோய்க்கு தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது என்று டாக்டர் கூறினார். அதைப் பற்றியும் கூறுங்கள்.

இராமநாதன் :

இன்புளூயன்ஸா

இது வைரஸ் கிருமியினால் ஏற்படும் ஒரு தொற்று நோய். இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் இருமலிலிருந்து அல்லது தும்மலிலிருந்து இக்கிருமி மற்றவர்களுக்கு எளிதாக பரவுகிறது. இந்நோய் முக்கியமாக குளிர் காலத்தில் தான் தாக்கும். இந்நோயை வராமல் தடுப்பதற்கு தடுப்பூசி உண்டு. வருடத்திற்கு ஒரு முறை ஒவ்வொறு ஆண்டும் போட்டுக் கொள்வது நல்லது. நிமோனியா தடுப்பூசியையும் இன்புளயன்ஸசா தடுப்பூசியும் ஒரே நேரத்தில் போட்டுக் கொள்ளலாம். இந்த ஊசியினால் பக்க விளைவுகள் ஏதுவும் கிடையாது. இந்த ஊசியை ஆஸ்துமா, நீரிழிவு நோய், இருதய நோய், புற்று நோய் மற்றும் சிறுநீரக தொல்லை உள்ளவர்கள் போட்டுக் கொள்வது மிகவும் நல்லது.

டெட்டனஸ்

வயதான காலத்தில் அடிக்கடி கீழே விழ, உடம்பில் காயங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உண்டு. ஆகையால் இவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த தடுப்பு ஊசியை போட்டுக் கொள்வது நல்லது.

Representational Image
Representational Image

ஹெப்படைட்டிஸ் பி

ஒரு வைரஸ் கிருமினால் ஏற்படும் மஞ்சள் காமலை நோய். இதை தடுக்க ஹெப்படைட்டிஸ் பி தடுப்பூசி கொடுக்கப்படுகிறது. வயதானவர்கள் எல்லோருக்கும் ஹெப்படைட்டிஸ் பி பரிந்துரைக்கப்படுவதில்லை. அடிக்கடி இரத்தம் செலுத்தி கொள்பவர்கள், குளுக்கோஸ் சார்ந்த திரவ ஊசி போட்டு கொள்பவர்கள் மற்றும் நரம்பு ஊசி போட்டுக்கொள்பவர்களுக்கு இந்த ஊசி தேவைப்படும். மூன்று ஊசிகள் போட்டுக்கொள்ள வேண்டும். முதல் ஊசி போட்டு கொண்ட பிறகு அடுத்ததாக ஒரு மாதம் கழித்து இரண்டாவது ஊசி, மூன்றாவது ஊசியை ஆறு மாதம் கழித்து போட்டுக் கொள்ளவேண்டும்.

"போலியோ இல்லாத நாடு போல், விரைவில் நிமோனியா இல்லாத நாடாக உருவாக்க அனைவரும் பாடுபடுவோம்"

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism