Published:Updated:

ஆயம்மா! | My Vikatan

Representational Image

அந்த காலத்தில் கிராமங்களில் யாருக்கேனும் பிரசவம் என்றால் அருகிலுள்ளவர்கள் எல்லாரும் வீட்டு வாசலில் காத்திருப்பார்கள். பிறந்தது என்ன குழந்தை என்று தெரிந்து கொள்ளும் ஆவல்.

ஆயம்மா! | My Vikatan

அந்த காலத்தில் கிராமங்களில் யாருக்கேனும் பிரசவம் என்றால் அருகிலுள்ளவர்கள் எல்லாரும் வீட்டு வாசலில் காத்திருப்பார்கள். பிறந்தது என்ன குழந்தை என்று தெரிந்து கொள்ளும் ஆவல்.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

என்னுடன் பிறந்தவர்கள் நான்கு பேர் என்னையும் சேர்த்து. இரண்டு அக்கா ஒரு அண்ணன். நான்தான் கடைசி. நான் பிறந்தது எங்கள் ஊரில் உள்ள எங்களுடைய வீட்டில்தான். என்னுடைய அம்மாவிற்கு பிரசவம் பார்த்தது எங்கள் ஊரிலிருந்த தாய் செய் நலவிடுதியில் பணியாற்றிய செவிலியர் மேரியும் துணை செவிலியர் ஆயம்மாவும் தான்.

அந்த காலத்தில் கிராமங்களில் யாருக்கேனும் பிரசவம் என்றால் அருகிலுள்ளவர்கள் எல்லாரும் வீட்டு வாசலில் காத்திருப்பார்கள். பிறந்தது என்ன குழந்தை என்று தெரிந்து கொள்ளும் ஆவல். ஆண்குழந்தை என்றால் சந்தோச படுபவர்களை விட பொறாமை படுபவர்கள் அதிகம்.

பெண்குழந்தை என்றால் "இப்பவும் பொட்ட புள்ளதான் பொறந்துருக்கு...." என்று சலித்து கொண்டே வெளியில் தெரியாமல் சந்தோச பட்டு கொள்வார்கள். இதற்குத்தான் அந்த காத்திருப்பு எல்லாம்.

நான் பிறந்து அழ ஆரம்பித்தவுடன் பரபரப்பாக அனைவரும் என்ன குழந்தை என்று கேட்க ....

"திரும்பவும் பொட்ட புள்ளத்தான் பொறந்துருக்கு...." என்று ஆயம்மா கூறியதும் என்னுடைய அம்மாவிற்கு சற்று அதிர்ச்சியாக இருந்ததாக என் அம்மா சொல்ல கேட்டிருக்கிறேன். குழந்தை பிறந்து நஞ்சு கொடி வெளியேறும் வரை பிறந்த குழந்தையின் பாலினத்தை சொல்லாமல் இருப்பது ஒரு வகையான நம்பிக்கை (Myth) என்பதாக பின்னர் நான் அறிந்து கொண்டேன்.

Representational Image
Representational Image

எனக்கு நினைவு தெரிந்த வரை நாலரை அடி உயரம். மாநிறம். வெண்மையான கேசம். எப்பொழுதும் வெண்மையான ஆடை. சற்றேறக்குறைய ஒரு பாட்டியை போன்ற தோற்றம். அனைவருக்கும் "ஆயம்மா..." என்றால் தான் தெரியும். அவருடைய பெயர் பல வருடங்களுக்கு பிறகுதான் எனக்கே தெரிய வந்தது. எங்கள் ஊரில் அநேகம் பேருக்கு அவருடைய உண்மையான பெயர் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றே நான் நினைக்கிறன்.

தென் மாவட்டங்களில் அப்பாவின் அம்மாவை ஆயம்மா என்று அழைக்கிறார்கள். ஆனால் எங்கள் ஊருக்கு ஆயம்மா அவர்தான். அவருடைய சொந்த ஊர் எது என்று யாருக்கும் தெரியாது. ஒரு சிறிய ஒற்றை அறை கொண்ட வீட்டில்தான் குடியிருந்தார். வீட்டிற்கு வெளியிலேயே சமைத்து கொள்வார். என் பால்ய காலங்களில் மிக சிறிய டேக்ஸாவை வைத்து சமைப்பதை பல சமயங்களில் பார்த்திருக்கிறேன்.

மிக அருமையாக நுணுக்கமான பூ வேலைப்பாடுகளை துணிகளில் செய்வதில் வல்லவர். பல நேரங்களில் அவரை ஊசியும் கையுமாக பார்க்க முடியும். இன்றைய கம்ப்யூட்டர் டிசைன்களை விட மிக அற்புதமாக வரைந்து அந்த கோடுகளில் பலவிதமான தையல்கள் மூலம் அழகான பூக்களை மலர வைக்க அவரால் மட்டுமே முடியும்.

எங்கள் ஊரில் ஆயம்மா அனைவருக்கும் ஒரு உறவினர் போலத்தான். யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சென்று ஆயம்மா பசிக்குது என்றால் வீட்டில் இருப்பதை அப்படியே அவர்களுக்கு கொடுத்துவிடுவார். எங்கள் ஊரில் என் வயதொத்த மற்றும் என்னைவிட பத்துவயது மூத்த அல்லது இளைய வயதுடைய அனைவரும் மேரி மற்றும் ஆயாம்மா ஆகியோர்  உடனிருக்க பிறந்தவர்கள் தான். நல்ல கைராசி உண்டு. மிக சிறப்பாக பிரசவம் பார்த்து தாய் மற்றும் சேய் இருவரையும் எந்த விதமான சிக்கல்களுமில்லாமல் காப்பற்றுவதில் வல்லவர்கள்.

புறப்பாடு பணியிலிருந்து ஓய்வு பெற்று பென்ஷன் வாங்கி கொண்டிருந்த போதும் ஏனோ எங்கள் ஊரிலேயே தான் தங்கியிருந்தார் ஆயம்மா. இப்பொழுது இருவரும் இல்லை.

அந்த ஆயம்மாவின் பெயர் "தெரசா" என்ன பொருத்தமான பெயர் என்று இப்போது தோன்றுகிறது.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.