Published:Updated:

ஒரே நாடு, ஒரே தேர்தல்! - சாத்தியமா?

Representational Image

இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் சுஷில் சந்திரா அவர்களிடம் இருந்து வந்த ஒரு அறிக்கை அரசியல் ஆர்வலர்களிடையே ஒரு விவாதத்தை கிளப்பியது...

ஒரே நாடு, ஒரே தேர்தல்! - சாத்தியமா?

இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் சுஷில் சந்திரா அவர்களிடம் இருந்து வந்த ஒரு அறிக்கை அரசியல் ஆர்வலர்களிடையே ஒரு விவாதத்தை கிளப்பியது...

Published:Updated:
Representational Image

கடந்த வியாழன் அன்று ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருந்த போது நாடே ஆவலோடு தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்திருந்த வேளையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் சுஷில் சந்திரா அவர்களிடம் இருந்து வந்த ஒரு அறிக்கை அரசியல் ஆர்வலர்களிடையே ஒரு விவாதத்தை கிளப்பியது. அதுதான் “ஒரே நாடு ஒரே தேர்தல்” முறை, ஆமாம் ஒரே நேரத்தில் அனைத்து தேர்தல்களையும், அதாவது அனைத்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களை நடத்த தேர்தல் ஆணையம் தயராக உள்ளது என்பதுதான்.

சுஷில் சந்திரா
சுஷில் சந்திரா

“ஒரே நாடு ஒரே தேர்தல்” என்பது இந்தியாவுக்கு ஒன்றும் புதிதல்ல, 1967 வரை சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்திற்கு ஒன்றாகவே தேர்தல் நடத்தப்பட்டு வந்தது. அதன் பிறகு, 1968 மற்றும் 1969 களில் சில மாநில சட்டமன்றங்கள் கலைக்கப்பட்ட பின் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் தனித்தனியே நடத்தப்பட தொடங்கியது.

ஒரே தேர்தல் என்பது பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றம் இரண்டிற்கும் சேர்ந்த ஒரே தேர்தல், அதாவது மக்கள் ஒரே நேரத்தில் இரண்டு வாக்குகள் செலுத்த வேண்டியது இருக்கும், ஒன்று மாநில சட்டமன்றத்திற்கு, இன்னொன்று பாராளுமன்றத்திற்கு. இப்படியாக இரண்டையும் சேர்த்து ஒரே தேர்தல் நடத்துவதால் தேர்தலுக்கான செலவு குறையும், ஆனால் அதை தவிர்த்து நடைமுறை சிக்கல்கள் பல உள்ளன. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் அலுவலர்கள் பற்றாக்குறை, வாக்குப்பதிவு எந்திரங்கள் பற்றாக்குறை போன்ற பல சிக்கல்கள் உள்ளன. இந்த பிரச்சனைகளை தவிர்த்து அரசியல் ரீதியிலான பிரச்சனைகளும் உள்ளன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒருவேளை, 2024 இல் பாராளுமன்ற தேர்தலோடு சேர்ந்து சட்டமன்ற தேர்தல்கள் நடத்தப்பட்டால், அப்போது மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் கட்சியின் முழு ஆயுட்காலம் முடியும் முன்னரே கலைக்கப் படுமா? அப்படி ஒருவேளை கலைக்கப்படுமானால் அதற்கு அந்த மாநில அரசுகள் ஒத்துக் கொள்ளுமா? இது ஒருபுறம் இருந்தாலும், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் போது, தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்றம் ஐந்து ஆண்டுகள் முடியும் முன்பே அரசியலமைப்பு சட்டம் 356 பிரிவின் படி கலைக்கப்படுமானால் அதற்கான மறு தேர்தல் என்பது எப்படி நடத்தப்படும்.

அல்லது கலைக்கப்பட்ட காலம் முதல் அடுத்த தேர்தல் வரை கவர்னர் ஆட்சி நடைமுறைப்படுத்த படுமா? ஒரு உதாரணத்திற்கு, ஒரு மாநில சட்டமன்றத் தேர்தல் நடந்து இரண்டு ஆண்டுகளில் கலைக்கப்பட்டால், மீதமுள்ள மூன்று ஆண்டுகளுக்கு யார் ஆட்சி செய்வார்கள் அல்லது அந்த மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் மறு தேர்தல் நடத்தப்படுமா?

Representational Image
Representational Image

இப்படி மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்பட்டு புதிதாக பதவி ஏற்கும் அரசு அந்த மூன்று ஆண்டுகள் மட்டும் தான் ஆட்சி செய்யுமா? ஒருவேளை கவர்னர் ஆட்சியே மூன்றாண்டுகளும் தொடருமானால் அது இந்தியா பின்பற்றும் கூட்டாட்சி தத்துவத்திற்கு, அரசியல் ஜனநாயகத்திற்கும் ஏற்புடையதாக இருக்குமா? அல்லது 356 பிரிவின் படி மாநில சட்டமன்றங்களை கலைக்க முடியாது என்ற நிலை வருமா? அதற்கடுத்தபடியாக, ஒருவேளை, அரசியலமைப்பு சட்டம் 83(2) பிரிவின்படி ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்யும் முன்னரே மக்களவையை குடியரசு தலைவர் கலைத்தால் அதனோடு சேர்ந்து சட்டமன்றங்களும் கலைக்கப்பட்டு, புதிதாக தேர்தல் நடத்தப்படுமா? இப்படி, அடுக்கடுக்கான ஆயிரம் கேள்விகள் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையின் மீது இருந்தாலும், அதற்கான அரசியலமைப்பு சட்ட திருத்தம் வராத வரை தேர்தல் முறை எப்படி இருக்கும் என்பதை சொல்ல முடியாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த ஒரே நாடு, ஒரே தேர்தலில் பாராளுமன்ற தேர்தலை எப்படி வேண்டுமானாலும் நடத்திக்கொள்ளலாம், ஆனால், சட்டமன்ற தேர்தல்களை நடத்துவதில் தான் மிகப்பெரிய சவாலே உள்ளது. குறிப்பாக அரசியலமைப்பு சட்டம் 356 ஐ எப்படி பயன்படுத்துவார்கள் அல்லது முழுமையாக அது நீக்கப்படுமா என்பதே அந்த சவாலாகும். இந்த ஒரே தேர்தல் நடத்துவதில் மிக முக்கியமானது என்னவென்றால், மக்கள் பெரும்பாலும் தங்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளை பொறுத்தே தேர்தல்களில் வாக்களிப்பார்கள்.

Representational Image
Representational Image

இதனடிப்படையில், மாநில அளவில் உள்ள பிரச்சனைகள் மற்றும் தேசிய அளவிலான பிரச்சனைகள் என்பது ஒன்றுக்கொன்று வேறுபட்டது. உதாரணமாக சமையல் எரிவாயு விலை உயர்வு என்பது ஒன்றிய அரசு சார்ந்தது, மின்சார கட்டண உயர்வு என்பது மாநில அரசு சார்ந்தது, அதனால் ஒரே நேரத்தில் பாராளுமன்ற மற்றும் சட்டமன்றத்திற்கு தேர்தல் நடத்துவதால் வாக்காளர்கள் குழப்பமடைய வாய்ப்புள்ளது. அடுத்தபடியாக, ஒரே தேர்தல் என்பதால் பெரும்பாலும் பாராளுமன்ற தேர்தலே அதிக முக்கியத்துவம் பெறலாம், சட்டமன்ற தேர்தல் என்பது குறைவான முக்கியத்துவமே பெறலாம், இதன் காரணமாக கூட்டாட்சி தத்துவம் பாதிக்கப்படலாம்.

மேலும், இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் சுஷில் சந்திரா ஒரே நாடு, ஒரே தேர்தல் பற்றி கூறுகையில் அதற்கான சட்ட திருத்தத்தை அரசியலமைப்பில் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதற்காக அரசியலமைப்பு எவ்வாறு திருத்தப்படும், என்ன மாறுதல்கள் செய்யப்படும், அதனை அனைத்து அரசியல் கட்சிகளும் ஏற்றுக் கொள்ளுமா என்பதை பொறுத்தே இந்த திட்டத்தில் உள்ள சாதக பாதகங்களை இன்னும் விரிவாக விவாதிக்க முடியும்.

-க.சேதுராமன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism