Published:Updated:

மழலை உளவியல்! | My Vikatan

Representational Image

நம்மில் சராசரியான படிப்பை முடித்த பெற்றோர் கூட தம் குழந்தை ஓர் பந்தயத்தில் ஓடும் முதல் குதிரையாக இருக்க வேண்டும் என்பதைத் தான் விரும்புகின்றனர்.

மழலை உளவியல்! | My Vikatan

நம்மில் சராசரியான படிப்பை முடித்த பெற்றோர் கூட தம் குழந்தை ஓர் பந்தயத்தில் ஓடும் முதல் குதிரையாக இருக்க வேண்டும் என்பதைத் தான் விரும்புகின்றனர்.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

“அப்பா எங்க ஸ்கூல்லயே நான்தான் முதல் மார்க்”

என்று நம்மிடம் நம் குழந்தைகள் கூறும்போது நாம் உடனே உச்சி குளிர்ந்தவர்களாக “வெரிகுட் இதுபோல்தான் எல்லா பரீட்சையிலும் நீ முதல் மார்க் வாங்கனும்”என்போம்.

இப்படி யோசித்துப் பாருங்கள், ஒருவேளை நம் குழந்தை தாம் இரண்டாம் அல்லது மூன்றாம் மதிப்பெண் பெற்றிருப்பதாக கூறினால் உடனே நாம் தொடுக்கும் அடுத்த கேள்வி

“அப்போ! முதல் மார்க் வாங்குனது யாரு! அத்தோடு நிற்பதில்லை மேலும் “அந்த புள்ள தான் நல்லா படிக்குமா! ஏன் உனக்கு மார்க் குறைந்தது?. போன்ற அடுத்ததடுத்த கேள்விகளை அது நோக்கித் தொடுத்துக் கொண்டே இருப்போம்.

சட்டென்று அந்த குழந்தையின் முகம் நாம் தொடுக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் மாறுவதை நாம் யாருமே அவதானிப்பதில்லை, நம்மில் சராசரியான படிப்பை முடித்த பெற்றோர் கூட தம் குழந்தை ஓர் பந்தயத்தில் ஓடும் முதல் குதிரையாக இருக்க வேண்டும் என்பதைத் தான் விரும்புகின்றனர். இதற்காக அவர்கள் கொண்டிருக்கும் கற்பிதம் என்பது நாம்தான் சரியாக படிக்கவில்லை எமது பிள்ளைகள் படித்து பெரியாளாக வேண்டும் பெரிய உத்தியோகத்தில் அமர வேண்டும் என்பதே!

சரி! இதையே உங்களது பெற்றோர் உங்களிடம் எதிர் பார்த்திருந்தால் என்ன செய்து இருப்பீர்கள் என்ற வினாவை தமக்குள் என்றைக்கும் அனுமானித்து பார்ப்பதே இல்லை. இப்படி இருக்க தாம் விரும்புவதை மட்டும் தமது பிள்ளைகள் மீது பகீரத பிரயத்தனம் செய்வதில் என்ன நியாயப்பாடு உள்ளது.

Representational Image
Representational Image

தாம் விரும்புகின்றவாறு சாவி கொடுத்து இயக்குவதற்கு அவர்கள் ஒன்றும் பொம்மைகள் அல்ல, உணர்வுள்ள பிள்ளைகள் என்பதை நம் உளவியல் ஒருபோதும் உணர்வதே இல்லை.

எவ்வித தார்மீகமும் அற்று நிறுவப்பட்டிருக்கும் எமது நம்பிக்கைகளுக்கு பிள்ளைகளை வடிகாலாய் பயன்படுத்த விழைகிறோம். இந்த நமது சுயநலத்திற்கு பிள்ளைகள் என்ன விலை கொடுக்கின்றனர். என்பதை நாம் ஒருபோதும் அறிவதே இல்லை எனலாம்.

கட்டற்ற கற்பனைத் திறனுடன் படைக்கப்பட்டிருக்கும் ஒரு நுண்ணிய படையல் தான் நம் பிள்ளைகள் என்பதையே இந்த நிறுவன படுத்தப்பட்டிருக்கும் நுகர்வு வாழ்க்கையில் நாம் மறந்தே போகிறோம்.

நம் குழந்தைகளின் கட்டற்ற கற்பனைத் திறனை, அதன் நுன்னாற்றலை இனி என்றுமே வாழ்க்கையில் கிடைக்கப் பெறாத அதன் சிறுபருவ கேளிக்கைகளை ‘கல்வியைக் கொடுக்கிறோம்’ என்ற கவர்ச்சி பதத்திற்கு மட்டுமே நாம் ஆட்படுத்துகிறோம்.

அதன் வெளிப்பாடுகள் பல வெளிகளில் நம்மிடமிருந்து வெளியீட்டை அடைகிறது. விளைவு குழந்தைகள் விரும்பாமலேயே அவர்கள் மீது பல கனமான பரிமாணங்கள் நிறுவப்படுகிறது.

அது அவர்கள் பள்ளிக்கு செல்வது முதல் பள்ளியில் இருப்பதிலிருந்து மற்றும் பள்ளியில் இருந்து வரும் வரை அவர்கள் ஒவ்வாமையுடன் தான் ஒவ்வொரு நடவடிக்கையும் மேற்கொள்ள நாமே வித்திடுகிறோம்.

காலை அவர்கள் எழுவதிலிருந்து அவர்கள் மீதான நம் அதிகார மமதை தொடங்குகிறது, எழுவதிலிருந்து, குளிப்பதிலிருந்து, சிற்றுண்டி வரை அவர்களின் எத்தேவைகளையும் நாம் அதிகார தோரணையை அவர்கள் மீது செலுத்தியே அவர்களை நோக்கித் திருப்புகிறோம். அவர்களின் ஆரோக்கியம் பேண நாம் அளிக்கும் உணவைக் கூட அவசரகதியில் அவர்களின் மீது திணித்து அவர்களை ஒரு உளம் சார்ந்த அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறோம்.

இவை அனைத்தையும் விட தாம் எதற்காக கற்க வேண்டும் என்ற சுயசிந்தனை விதையற்று அவர்கள் நம்மால் ஓர் வன்முறை விசை கொண்டு இயக்குவிக்கப் படுகின்றனர்.

இவைகள் நீங்கி கற்பதனால் விளையும் நன்மைகள் குறித்து அவர்களுக்கு நயம்பட விளக்கி, அவர்களின் ஆரோக்கியம் பேண நாம் எடுக்கும் தன்முனைப்பு ஒவ்வொன்றும் அவர்களை மகிழ்வுடன் கல்வியை நோக்கியும், சுய ஒழுங்குடன் கூடிய நடத்தையுடன் மேம்பட்டு வாழ பழகிக் கொள்ள வழிவகை செய்யும்.

எண்ணமும் எழுத்தும்.

பாகை இறையடியான்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.