Published:Updated:

பாஸ்வேர்டுகளை அடிக்கடி மறப்பவரா நீங்கள்? - சில டிப்ஸ்

Representational Image
Representational Image

ஒவ்வொரு கணக்கிற்கும் வெவ்வேறு பாஸ்வேர்டுகளை பலரும் வைத்திருப்பர். இதுதான் சிறந்த முறை. ஆனால் அனைத்து பாஸ்வேர்டுகளையும் நினைவில் வைத்திருப்பது கடினமான ஒன்று.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

பாஸ்வேர்டுகள் என்பவை நம்முடைய தகவல்கள் பிறருடைய கைகளுக்குச் செல்லாமல் தடுப்பதற்காக, நாம் அமைத்து வைக்கும் ஒரு முக்கியமான மற்றும் வலிமையான பாதுகாப்பு வளையம்.


ஒவ்வொரு கணக்கிற்கும் வெவ்வேறு பாஸ்வேர்டுகளை பலரும் வைத்திருப்பர். இதுதான் சிறந்த முறை. ஆனால் அனைத்து பாஸ்வேர்டுகளையும் நினைவில் வைத்திருப்பது கடினமான ஒன்று.

நம் அனைவருக்குமே, அனைத்தையும் நினைவில் வைக்கும் போட்டோ கிராபிக் மெமரி (Eidetic memory) கிடையாது என்பதால், பல பாஸ்வேர்டுகளை நாம் சுலபமாக மறந்துபோய் விடுகிறோம். பிறகு Forget password வாய்ப்பைப் பயன்படுத்தியே பல்வேறு கணக்குகளில் நாம் உள்நுழைகிறோம். இதனால் நமது மதிப்புமிக்க நேரம் தேவையின்றி வீணாகிறது.

Representational Image
Representational Image

lastPass,1Password, dashlane, RoboForm போன்ற பல்வேறு தளங்களில் நமது பாஸ்வேர்டுகளை பாதுகாப்பான முறையில் வைத்திருக்க வாய்ப்புகள் இருந்தாலும், இவற்றைப் பயன்படுத்த பலரும் தயங்குகிறோம் என்பதே நிதர்சனம்.

பாதுகாப்பான பாஸ்வேர்டு உருவாக்குவதில் பலரும் தவறிவிடுகின்றனர். 2020 ஆம் ஆண்டின் மிக மோசமான பாஸ்வேர்டுகள் பட்டியலை NordPass வெளியிடப்பட்டது. அதன்படி இந்த ஆண்டு அதிகம் பயன்படுத்தப்பட்ட பாஸ்வேர்டு "123456". இது சுமார் 2.3 கோடி முறை பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

ஒருவரது பிறந்த நாளை பாஸ்வேர்டாக உருவாக்குவது எளிதானது மற்றும் வசதியானது. ஆனால் இது பாதுகாப்பானது அல்ல.ஒருவரது வாழ்க்கையுடன் நேரடித் தொடர்பற்ற எண்கள், எழுத்துகள் மற்றும் சிறப்புக் குறிகளை உள்ளடக்கிய பாஸ்வேர்டுகள் பாதுகாப்பானது. ஆனால் நினைவில் வைப்பது கடினம்.


"எந்த அர்த்தமும் இல்லாத ஒன்றை நினைவில் கொள்வது கடினம்” என்று The Brain Trust Program இன் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் "லாரி மெக்லரி" கூறுகிறார்.

"நீங்கள் நினைவில் கொள்ள விரும்பும் எண்ணுக்கும், உங்கள் மூளையில் ஏற்கனவே உறுதியாகப் பதிந்திருக்கும் எண் நினைவுகளுக்கும் இடையிலான தொடர்புகளைக் கண்டுபிடிப்பதே நினைவுத்திறன் மேம்பட சிறந்த வழி என்கிறார் முதல் அமெரிக்க “கிராண்ட்மாஸ்டர் ஆஃப் மெமரி"
ஸ்காட் ஹாக்வுட் (Scott Hagwood)

Representational Image
Representational Image

ஆனால் நம்மில் பெரும்பாலான மனிதர்களுக்கு குறிப்பிட்ட எண்களுடன் எந்தவிதமான உணர்ச்சிகரமான தொடர்பும் இல்லை. இன்றைய டிஜிட்டல் உலகில், தொலைபேசி எண்கள், ஆதார் எண்கள், வங்கி கணக்கு எண்கள், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு எண்கள், பாஸ்வேர்டுகள் போன்ற பல்வேறு எண்களினுள் மனிதர்கள் தொடர்ந்து மூழ்கிக் கிடக்கிறோம். இவை அனைத்தையும் போனின் பல்வேறு இடங்களில் சேமித்து வைத்தாலும், அடிக்கடி பயன்படுத்தும் சிலவற்றை நமது நினைவில் வைத்திருப்பது சிறந்தது.இது நேரத்தை மிச்சப்படுத்துவது மட்டுமன்றி, எளிதானதான மற்றும் பாதுகாப்பான ஒன்றாகவும் இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உங்களது பாஸ்வேர்டை நினைவில் வைத்திருப்பதை எளிதாக்க-தனித்துவமான மற்றும் மறக்கமுடியாத பாஸ்வேர்டு உருவாக்க சில குறிப்புகள்:

*உங்கள் மனதுக்கு நெருக்கமான ஒரு வாக்கியத்தை அமைத்து,
அதில் உள்ள சொற்களின் முதல் எழுத்துகளை பஸ்வேர்டாக உருவாக்கலாம்.

My parents wedding anniversary is July 12th! என்பது உங்களுக்குப் பிடித்தமான வாக்கியம் எனில், பாஸ்வேர்டு Mpwaij12th!

*எளிதில் நினைவில் இருக்கும் குறிப்புச் சொற்களை உருவாக்கி, அதில் எண்களை ஆங்கில எழுத்துகளாகவும்,
எழுத்துகளை எண்களாகவும் மாற்றி பாஸ்வேர்டு அமைக்கலாம்.

தினமும் உபயோகிக்கும் ஒரு தளத்திற்குரிய குறிப்புச் சொல் "365@Days" எனில் அதற்குரிய
பாஸ்வேர்டு Cfe@412519.

Representational Image
Representational Image

*உங்களுக்குப் பிடித்தமான இரு சொற்களை பல்வேறு வகையில் இணைத்து பாஸ்வேர்டு உருவாக்கலாம்.

Rain மற்றும் Tea ஆகிய சொற்கள் இணைந்த பாஸ்வேர்டு R&taeian2.

*உங்களது இலட்சிய வாக்கியங்களில் உள்ள சொற்களின் முதல் எழுத்தையோ அல்லது இறுதி எழுத்தையோ தவிர்த்து பாஸ்வேர்டு உருவாக்கலாம்.

My dream one என்பதற்குரிய பாஸ்வேர்டு Yream@1.

*பிடித்தமான பாடல் வரிகளின் முதல் எழுத்துகளைக் கொண்டும் பாஸ்வேர்டு அமைக்கலாம்.

London bridge is falling down, falling down என்னும் பாடலுக்கு உரிய பாஸ்வேர்டு Lbifd&2fd.

*எழுத்துகள் மற்றும் எண்களைப் பின்வருமாறு மாற்றி பாஸ்வேர்டு அமைக்கலாம்.

பூஜ்யம் என்னுமிடத்தில் O என்றும்,
E= 3,
L=1,
S=5,
I=!,
A=@,
C=<,
M=W,
என்று மாற்றி பாஸ்வேர்டு உருவாக்கலாம்.

*கணினி கீபோர்டின் எண்களின் கீழே உள்ள எழுத்துகளைப் பயன்படுத்தியும் பாஸ்வேர்டு அமைக்கலாம்.

2 என்னும் எண்ணின் கீழ் உள்ள பாஸ்வேர்டு 2@Wsx.

*இணையதளத்தின் அல்லது சமூக வலைதளத்தின் பெயரின் எழுத்துகளை அந்த தளத்திற்குரிய பாஸ்வேர்டுடன் இணைக்கலாம்.

Twitter இன் பாஸ்வேர்டின் முதலில் அல்லது இறுதியில் Tw.

*நீங்கள் சிறுவயதில் செய்த எழுத்துப்பிழை சொற்களைக் கொண்டு பாஸ்வேர்டு அமைக்கலாம்.

ஐந்தாம் வகுப்பில் சைக்கிளை Bycycle என எழுதி இருப்பின் பாஸ்வேர்டு Bycycle@5.

*உங்களுக்கு பிடித்தமான புத்தகத்தின்,பிடித்த பத்தியைத் தேர்ந்தெடுத்து ஒரு சுவாரஸ்யமான வார்த்தையைக் கண்டுபிடித்து, பக்க எண், பத்தி எண், சொல் எண் கொண்டும் பாஸ்வேர்டு அமைக்கலாம்.

உதாரணம் Mfb#832

Representational Image
Representational Image

முதன்முறை பார்க்கும் போது மேற்காணும் இந்தக் குறிப்புகள் உங்களுக்கு கடினமான ஒன்றாகத் தோன்றலாம். இந்த முறைகளை நினைவில் வைப்பதற்குப் பதில் பாஸ்வேர்டுகளையே நினைவில் வைத்துக் கொள்ளலாமே என்றும் நீங்கள் நினைக்கலாம். ஆனால் இதில் தேவையான முறையை மட்டும் தேர்ந்தெடுத்து, அதில் நீங்கள் பயன்படுத்தும் கலவையை நினைவில் வைத்துக் கொண்டால் போதுமானது. நீங்கள் எந்த முறையில் பாஸ்வேர்டு அமைக்கிறீர்கள் என்பது உங்களுக்கு மட்டுமே தெரிந்த, உங்கள் மனதுக்கு நெருக்கமான மற்றும் பாதுகாப்பான ஒன்றாக மாறிவிடும். பாஸ்வேர்டுகள் மறந்து போகும் தொல்லையில் இருந்து விடுபட்டு விடலாம்.

பாஸ்வேர்டுகள் மறந்து போய்விடாமல் இருக்க,
பல்வேறு தளங்களின் பாஸ்வேர்டுகளைக் குறிப்பேடுகளில் எழுதி பத்திரப்படுத்தி வைக்கும் பழக்கம் பலருக்கும் உண்டு. ஆனால் இதிலும் ஒரு சிறு நுட்பத்தைப் பயன்படுத்துவது சிறந்தது. உங்கள் பல்வேறு பாஸ்வேர்டுகளின் பட்டியலைப் பிறர் நேரடியாகக் காணும் வகையில் வைத்திருப்பதைத் தவிர்த்து, உங்கள் பாஸ்வேர்டு என்னவாக இருக்கும் என்பதற்கான தடயங்களை வழங்கும் உதவிக்குறிப்புகளைப் பயன்படுத்துவதே சிறந்தது.
அதாவது உங்கள் பாஸ்வேர்டை மறந்துவிட்டால், உங்கள் நினைவகத்தைத் தூண்ட, நீங்கள் மட்டுமே புரிந்துகொள்ளும் வகையில் என்று ஒரு ரகசியக் குறிப்பு எழுதுவதே சரியானது.
எனவே பாஸ்வேர்டு புதிதாக உருவாக்க மட்டுமன்றி, நீங்கள் மட்டுமே அறியுமாறு ரகசியக் குறிப்பு தயாரிக்கவும் மேற்காணும் பாஸ்வேர்டு உருவாக்கக் குறிப்புகள் துணை புரியும்!

- அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு