Published:Updated:

தர்மனாக மனதில் நின்ற பாவெல்! - வாசகர் பகிர்வு

Pavel Navageethan
Pavel Navageethan

பெரிய இயக்குனர்களின் படத்தில் நடிகராக பயணித்தவர் இப்போது இயக்குனர் ஆகிவிட்டார் இனி இயக்குனராக தன்னுடைய பயணத்தை தொடர்வார் என்று நினைத்தேன், ஆனால்..

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

ரஷ்ய எழுத்தாளரான மாக்சிம் கார்க்கி எழுதிய நாவல் "தாய்". அந்த நாவலில் வரும் ஹீரோவின் பெயர் பாவெல். அப்படிப்பட்ட பாவெல் என்கிற பெயரை தன் பெயருக்கு முன்னால் வைத்திருக்கும் நவகீதனை "குற்றம் கடிதல்" படம் மூலம் முதன்முறையாக திரையில் பார்த்தேன். அந்தப் படத்தில் செழியனின் தாய் மாமாவாக வரும் பாவெல் நவகீதன் ஒரு காட்சியில் பேருந்து பயணத்தில் ஜன்னலோரத்தில் அமர்ந்தபடி "தாய்" நாவல் படித்தபடி வருவார். அந்தக் காட்சியின் மூலம் அதிக கவனம் ஈர்த்தார். "தாய்" நாவலை தமிழ் சினிமாவில் பதிவு செய்த மிக முக்கியமான காட்சி அது.

Pavel Navageethan
Pavel Navageethan

அடுத்ததாக பா. ரஞ்சித்தின் "மெட்ராஸ்", வெற்றிமாறனின் "வட சென்னை" போன்ற படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் தலைகாட்டினார். அந்தக் காட்சிகள் அவருக்கு அவ்வளவாக பெயர் வாங்கி கொடுக்கவில்லை என்றாலும் தனக்கு கொடுத்த வேலையை சரியாக செய்திருப்பார் பாவெல் நவகீதன். "குற்றம் கடிதல்" எனும் மிக அருமையான படத்தை தந்த இயக்குனர் பிரம்மா "மகளிர் மட்டும்" என்று தன்னுடைய இரண்டாவது படத்தை தந்தார்.

அந்த "மகளிர் மட்டும்" படத்தில் வயதான அம்மா ஒருவரின் மூத்த மகனாக நடித்திருப்பார் பாவெல் நவகீதன். ரௌடி போல வளர்ந்திருக்கும் அவர் தன் அம்மாவை பணியாள் போலவும் அடிமை போலவும் நடத்துவார். எந்நேரமும் முரட்டுத்தனமாக மிரட்டிக்கொண்டே இருப்பார். அப்படி "அன்பு" என்கிற உணர்வே இல்லாமல் அரக்கதனமாக வாழ்ந்துகொண்டிருக்கும் பாவெல் நவகீதன்... தன் அம்மா தன்னை பற்றி தன் நண்பர்களிடம் மனம் விட்டுப் பேசுவதை மறைந்து நின்றுக் கேட்பார். அம்மாவின் வாயிலிருந்து தன்னை பற்றி வார்த்தைகள் வரவர அவருக்குள் இருக்கும் அரக்கன் கரைந்துபோயி நல்ல மனிதன் வெளிப்படுவார்.

Pavel Navageethan
Pavel Navageethan

முதன்முறையாக அவருடைய மனம் குற்ற உணர்ச்சியில் சிக்கிக் கொள்ளும். அம்மாவை இவ்வளவு நாட்கள் அடிமையாக நடத்தியிருக்கிறோமே என்று வீட்டின் ஒரு மூலைக்குள் அடைப்பட்டு சின்ன பையனை போல கதறி அழுவார். அந்தக் காட்சியில் தனது அற்புதமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருந்தார் பாவெல். அவருடைய நடிப்பு, நமக்கும் கண்கள் கலங்க வைக்கும். அப்படிப்பட்ட நடிகர் "V1 மர்டர் கேஸ்" என்ற க்ரைம் திரில்லர் படத்தின் மூலம் தனக்குள் இருக்கும் சிறந்த இயக்குனரை வெளிப்படுத்தியுள்ளார். ஒரு க்ரைம் த்ரில்லர் படத்தில் சாதிவெறி பிடித்த அப்பாவை காட்டி அழுத்தமான மெசேஜ் சொல்லியிருக்கிறார். தமிழ் சினிமாவின் மிக முக்கியமான முயற்சி அவருடைய V1 மர்டர் கேஸ்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்படி பெரிய பெரிய இயக்குனர்களின் படத்தில் நடிகராக பயணித்தவர் இப்போது இயக்குனர் ஆகிவிட்டார் இனி இயக்குனராக தன்னுடைய பயணத்தை தொடர்வார் என்று நினைத்தால் எந்தவொரு தலைகனமும் இல்லாமல் சமீபத்தில் வெளியான "பூமிகா" படத்தில் பங்களாவில் வேலை செய்யும் "தர்மன்" என்கிற கிராமத்தானாக (எடுபிடியாக/உதவியாளனாக) நடித்துள்ளார் பாவெல்.

Pavel Navageethan
Pavel Navageethan

"பூமிகா" படத்தில் இவருடைய வசன உச்சரிப்புகள் பிரமிக்க வைத்தது. மலைப்பிரதேச பகுதியில் வாழும் அசல் கிராமத்தானாக வசனங்கள் பேசியிருந்தார் பாவெல். அவர் பூமிகாவின் ப்ளாஷ்பேக் கேட்டதும், "பூமிய மனுசங்க காப்பாத்த தேவை இல்ல... பூமி தன்னை தானே காப்பாற்றிக் கொள்ளும்... பூமிய அழிக்கிற நீங்க பூமிட்ட இருந்து உங்கள காப்பாத்திக்குங்கடா... உங்க திமிரு அடக்கி வாழுங்கடா..." என்று பொருள்படும் வகையில் வசனம் பேசியிருந்தார் பாவெல் நவகீதன். அந்த வசனங்கள் அவ்வளவு எளிமையாக இருந்தன. இயற்கையை போற்றி பாதுகாக்கும் எளிய கிராமத்து மக்கள் பணத்திற்காக இயற்கையை சிறிதுசிறிதாக ஒழித்துக்கொண்டிருக்கும் நகரவாசிகளை பார்த்து மெசேஜ் சொல்வது போல் இருக்கும் அந்த வசனம். அதை அருமையாக பதிவு செய்தது பாவெலின் குரல். "பூமிகா" படத்தில் பூமிகாவுக்கு அடுத்து பிரமிக்க வைத்தவர் தர்மனாக நடித்த நம் பாவெல் நவகீதன். இவருக்கு சினிமாத் துறையில் நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.

- மா. யுவராஜ்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு