Published:Updated:

இணையவழி ஆயுதம் பெகாசஸ்! - சில உண்மைகள்

Representational Image
Representational Image

இறுதியில் உலகப் புகழ் பெற்ற இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டின் (Mossad) மறைமுகக் கட்டுப்பாட்டில் என்.எஸ்.ஓ நிறுவனம் இயங்கத் தொடங்கியது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

பெகாசஸ் (pegasus) என்னும் செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் உலகம் முழுக்கவே பெரும் அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது. பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோரை உளவு பார்க்க உலகின் பல்வேறு நாடுகளால் இந்த மென்பொருள் பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த "பார்பிடன் ஸ்டோரீஸ்" (Forbidden Stories) என்னும் லாப நோக்கமற்ற வலைதள நிறுவனமும், அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பும் இந்த விவகாரத்தை முதலில் வெளிக்கொண்டு வந்தன.

அதனைத் தொடர்ந்து சர்வதேச அளவில் புகழ்பெற்ற 17 ஊடக நிறுவனங்கள் பல்வேறு புலனாய்வுகளை நடத்தி , இந்த ஒட்டு கேட்பு விவகாரம் குறித்த பல்வேறு உண்மைகளைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றன.

Representational Image
Representational Image

ஒட்டுக்கேட்பு குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என பெகாசஸ் மென்பொருளை உருவாக்கிய என்.எஸ்.ஓ நிறுவனம் தெரிவித்த போதும், உலகின் பல்வேறு நாடுகளில் என்.எஸ்.ஓ நிறுவனம் மீதான விசாரணை துவங்கிவிட்டது.

இந்தியாவிலும் இந்த விவகாரம் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கடந்த சில நாட்களாக முழுவதும் முடங்கிப் போய் உள்ளன.

என்.எஸ்.ஓ நிறுவனம் ஒரு பார்வை:

*2000 ஆம் ஆண்டில் ஹூலியோ மற்றும் லாவி ஆகிய இரு நண்பர்கள் இணைந்து ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தைத் துவங்கினர்.


*"மீடியாஅண்ட்" என்று பெயரிடப்பட்ட அந்த ப்ரோடெக்ட் ப்ளேஸ்மெண்ட் நிறுவனம் செல்போன்களின் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு சார்ந்த பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்தது.


*ஒரு மொபைல்போனை வெகு தொலைவில் இருந்து கட்டுப்படுத்தும் செயலியான "கம்யூனிடேக்" என்ற தொழில்நுட்பத்தை மீடியாஅண்ட் நிறுவனம் கண்டறிந்தது.

Representational Image
Representational Image

*செல்போனில் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படும் போது, அதனைச் சரி செய்ய வாடிக்கையாளர்களின் மொபைல் போன்களை தாங்கள் இருந்த இடத்திலிருந்தே அணுக, மொபைல் ஆப்பரேட்டர்களுக்கு இந்தத் தொழில்நுட்பம் மிகவும் பயன்பட்டது.

*இஸ்ரேலின் புகழ்பெற்ற உளவு நிறுவனமான "மொசாட்" அமைப்பின் முன்னாள் அதிகாரியும்,இணையதள பாதுகாப்பு நிபுணருமான "நிவ் கார்மியை" தங்களுடன் இணைத்துக் கொண்டு ஹூலியோ மற்றும் லாவி ஆகியோர் 2010 இல் என்.எஸ்.ஓ (NSO Group) என்னும் பெயரில் ஒரு குழுமத்தை உருவாக்கினர்.


*நிவ் கார்மி,ஷாலெவ் ஹுலியோ மற்றும் ஓம்ரி லாவி என்னும் மூன்று பங்குதாரர்களின் முதல் எழுத்துகளின் சுருக்கமே என்.எஸ்.ஓ.

*தொடர்ந்து நடத்த முடியாத காரணத்தால், 2014 ஆம் ஆண்டில், அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் முதலீட்டு நிறுவனமான பிரான்சிஸ்கோ பார்ட்னர்சிற்கு தங்கள் என்.எஸ்.ஓ குழுமத்தை 130 மில்லியன் டாலருக்கு விற்றனர்.

*கம்யூனிடெக் தொழில்நுட்பத்தை நவீன தொழில்நுட்ப வடிவில் மேம்படுத்தி, 2018 இல் அதற்கு "பெகாசஸ்" (Pegasus) என்று பெயரிட்டனர்.

*பிரான்சிஸ்கோ பார்ட்னர்ஸுக்கு விற்ற என்.எஸ்.ஓ நிறுவனத்தை புதிய சிந்தனைகள் மற்றும் நம்பிக்கையுடன் 2019 ஆம் ஆண்டில் நண்பர்கள் திரும்ப வாங்கினர்.


*பெகாசஸ் ஸ்பைவேரின் ஆழ்ந்த பயன்பாட்டையும், செயல்திறனையும் பற்றி அறிந்த இஸ்ரேல், என்.எஸ்.ஓ நிறுவனத்திற்கு பற்பல சலுகைகளை வாரி வழங்கியது.

*இறுதியில் உலகப் புகழ் பெற்ற இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டின் (Mossad) மறைமுகக் கட்டுப்பாட்டில் என்.எஸ்.ஓ நிறுவனம் இயங்கத் தொடங்கியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"பெகாசஸ்" என்ன செய்யும்?:

# பெகாசஸ் என்பது ஒருவரின் செல்போனை உளவு பார்க்கும்,
அதில் இருக்கும் ரகசியங்களைத் திருடும் ஒரு மிக நவீனமான மென்பொருள்.

# இது இஸ்ரேல் அரசாங்கத்தால் "இணையவழி ஆயுதம்" என வகைப்படுத்தப்பட்ட ஒரு செயலியாகும்.

# உலகின் மிகவும் தீவிரமான கண்காணிப்பை மேற்கொள்ளும் உளவு ஸ்பைவேர் பெகாசஸ் ஆகும்.

# பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ஒருவரின் ஐபோன் அல்லது ஆண்டிராய்ட் போனை எவ்வளவு தொலைவில் இருந்தாலும் ஹேக் செய்ய முடியும்.

Representational Image
Representational Image

# ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்ட் போன்களை ஹேக் செய்ய வேண்டும் என்னும் நோக்கத்திற்காகவே பெகாசஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.

# போன் பயன்படுத்தும் நபருக்கே தெரியாமல் ஒரு டெக்ஸ்ட் மெசேஜ் வடிவிலோ,வாட்ஸ்அப் மிஸ்டு கால் மூலமாகவோ,ஏதேனும் லிங்க் மூலமோ செல்போனுக்குள் பெகாசஸ் வந்துவிடும்.

# ஐமேசேஜில் பெகாசஸை வரவேற்க குறுஞ்செய்திக்கான ஒரு "பிரிவியூ" போதுமானதாக இருக்கும்.

# இதற்காக எந்த ஒரு இணைப்பையும் க்ளிக் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஜீரோ-க்ளிக் முறைக்கு தற்போது பெகாசஸ் மாறியுள்ளது.

# ஒரு நபரின் போனில் பெகாசஸ் ஸ்பைவேர் நுழைந்தவுடனே, போனை வேவு பார்ப்பதற்குத் தேவையான மாட்யூல்களை தானாக இன்ஸ்டால் செய்யும். பின்னர் ஃபோனின் முழு கட்டுப்பாட்டையும் ஸ்பைவேர் எடுத்துக்கொள்ளும்.

*ஹேக்கர்கள் அந்த போனில் இருந்து மெசேஜ், போட்டோ,
வீடியோக்கள், மின்னஞ்சல், பயனாளர் செல்லும் இடம் போன்ற அனைத்து தகவல்களையும் பெற முடியும். போனின் வாய்ஸ் அழைப்புகள் அனைத்தையும் ஒட்டுக்கேட்கவும் முடியும்.

# முழுக்க முழுக்க மறையாக்கம் செய்யப்பட்ட (Encrypted) மெசேஜ்களை கூட பெகாசஸ் மூலம் ஹேக்கர் படிக்கலாம்.

# பெகாசஸ் ஸ்பைவேர்,போனின் டெவலப்பருக்கும் அதன் மென்பொருளுக்கும் தெரியாத இலக்குகளிலும் ஊடுருவும். மேலும் அந்த போனை வெளியிலிருந்து இயக்கவும் முடியும்.

# ஹேக் செய்யப்பட்ட போனில் இருக்கும் மைக்ரோபோன்,கேமிரா உள்ளிட்ட அனைத்தையும் போனின் உரிமையாளருக்குத் தெரியாமல் தூரத்தில் இருந்தே செயல்படுத்த முடியும்.

Representational Image
Representational Image

# போன் உரிமையாளரின் தனிப்பட்ட விவரங்களை பெகாசஸ் மிகச் சுலபமாகத் திருடிவிடும்.

# இந்த மென்பொருளைப் பயன்படுத்தும் ஹேக்கர் வெகுதொலைவில் இருந்தே இதனை இயக்க முடியும்.

# தரவு திருட்டைத் தவிர, அழைப்பு பதிவுகள், காலண்டர் நிகழ்வுகள் உள்ளிட்ட அனைத்தையும் போனிலிருந்து அழிக்கும் வேலையையும் பெகாசஸ் செய்யும்.அதாவது தனக்கு வேண்டிய தரவுகளைத் திருடுவது மட்டுமல்லாமல்,தனக்கு வேண்டாத தரவுகளை அழிக்கவும் முடியும்.


# இதில் ஆச்சரியப்படுத்தும் இன்னொரு முக்கிய விஷயம் மென்பொருளின் தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் செயல்பாடு. இந்த மென்பொருள் தன்னைக் கட்டுப்படுத்தும் ஹேக்கருடன் 60 நாட்களுக்கு மேலாக தொடர்புகொள்ள முடியவில்லை என்றாலோ அல்லது தவறான ஃபோனில் இன்ஸ்டால் செய்யப்பட்டு விட்டாலோ தானாகவே அழிந்துகொள்ளும் வகையில் வடிவமைப்பட்டுள்ளது.

பெகாசஸ் - சில உண்மைகள்:

1)பெகாசஸின் முதல் வாடிக்கையாளர் மெக்ஸிகோ.

2)மெக்சிகோ, வங்கதேசம், சவுதி அரேபியா உள்ளிட்ட பல நாடுகள், என்.எஸ்.ஒ நிறுவனத்திடம் இருந்து பெகாசஸ் மென்பொருளை வாங்கிப் பயன்படுத்துகின்றன.

3)இந்த சாப்ட்வேர் அரசாங்கங்கள் கேட்டால் மட்டும்தான் வழங்கப்படுமே தவிர தனி நபர்களுக்கு தரப்படாது என்பது என்.எஸ்.ஓ நிறுவனத்தின் முதன்மைக் கொள்கை.

4)எனவே தான் பெகாசஸ் விவகாரம் ஆளும் அரசுகளுக்குப் பெரும் தலைவலியாக மாறியுள்ளது.

5)பெகாசஸ் ஸ்பைவேர் உரிமத்தின் அடிப்படையில் பல்வேறு நாடுகளின் மத்திய அரசாங்கங்களால் மட்டுமே ஆரம்பத்தில் பயன்படுத்தப்பட்டது. மே 2019 முதல் மென்பொருளின் விற்பனை மாநில புலனாய்வு அமைப்புகளுக்கும் வழங்கப்படுகிறது.

Representational Image
Representational Image

6)பயங்கரவாதம்,போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல்வேறு குற்றங்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்க அரசாங்க நிறுவனங்களுக்கு உதவ சிறந்த தரமான தொழில்நுட்பத்தை உருவாக்குவதே எங்கள் நோக்கம் என்று என்.எஸ்.ஒ குழுமம் கூறுகிறது.

7)ஆனால் செல்போன்களை ஒட்டுக்கேட்டு,தனிமனித உரிமைகளில் தலையிடுவதாக பெகாசஸ் மென்பொருள் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.

8)தங்கள் தனியுரிமையில் அனுமதியின்றி தலையிடுவதாக பேஸ்புக் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் என்.எஸ்.ஒ நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளன.

8)"செல்போன் பயனர்கள் தங்கள் சாதனத்தில் பெகாசஸ் ஊடுருவுவதை கவனிக்கவோ அல்லது ஊடுருவிய பிறகு அதனைக் கண்டுபிடிக்கவோ வாய்ப்பில்லை" என்று ரஷ்யாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் உலகின் புகழ்பெற்ற கஸ்பர்ஸ்கி (Kaspersky) என்னும் சைபர் செக்யூரிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.


9)மனித உரிமைகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட சர்வதேச அமைப்பான அம்னஸ்டி இன்டர்நேஷனல் (Amnesty International) "பெகாசஸ் ஊடுருவல் மனித உரிமைகளை நசுக்கும் செயல்" என்று தெரிவித்துள்ளது.

தொழில்நுட்பம் என்னும் இருமுனைக் கத்தியின் எதிர்மறைப் பக்கம் படிப்படியாக உலகைத் தாக்கத் தொடங்கியிருக்கிறது.
செல்போன்களைத் தொடர்ந்து பயன்படுத்தினால் கெடுதல் என்பதைத் தாண்டி, போன்களைப் பயன்படுத்தினாலே பாதிப்பு என்பது அறிவியல்- தொழில்நுட்பத்தின் மிக மோசமானதொரு நிலை.

ஒவ்வொரு மனிதனின் ரகசியமும், தனியுரிமையும் மதிக்கப்படுவதே நாகரீக சமுதாயத்திற்கு அடையாளம். தொழில்நுட்பத்தால் ஏற்படும் இத்தகைய உரிமை மீறல்களைத் தொழில்நுட்பத்தின் துணைகொண்டே முறியடிக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். நாக்கை விற்று விட்டுத் தேனை வாங்கி என்ன பயன்!

- அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு