Published:Updated:

பெரியாரின் பொன்மொழிகள் நூறு

பெரியாரின் இக்கருத்துகள் யாவும் படித்த கருத்துகளோ, மேலை நாட்டு சிந்தனையோ அல்ல.. தம் கண் முன் கண்ட காட்சிகளை கருத்தாக கூறியிருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தில்லி எலிக்கு வான் பருந்து தெற்குத் திசையின் படை மருந்து கல்லாதோர்க்கு நன் மருந்து கற்றவர்க்கு வண்ணச் சிந்து
பெரியார் குறித்து பாரதிதாசன்

பெரியாரை முதல் முதலில் தெரிந்து கொண்டது ஆறாம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் தான்.'தொண்டு செய்து பழுத்த பழம்..' என ஆரம்பிக்கும் பாடலில் அவரின் முழு உருவமும் தெரிந்தது.பின்பு காலஒட்டத்தில் அவரை படிக்கும் போதெல்லாம் பல விஷயங்கள் அறிய முடிந்தது. முனைவர் நன்னன் தொகுத்த பெரியாரைக் கேளுங்கள், பெரியார் கணினி, பெரியார் களஞ்சியம்,பெரியார் மொழிகள் என்று அவர் சொன்ன கருத்துகள் எல்லாம் அவ்வப்போது குறித்து வந்துள்ளேன்.'பெரியாரை துணைகொள் என்பது போல் சில வரிகள் நெற்றிப் பொட்டில் அடித்தது போல் இருக்கும், சில வரிகள் தத்துவார்த்தமாய் இருக்கும்.

பெரியாரின் இக்கருத்துகள் யாவும் படித்த கருத்துகளோ, மேலை நாட்டு சிந்தனையோ அல்ல.. தம் கண் முன் கண்ட காட்சிகளை கருத்தாக கூறியிருக்கிறார்.அவற்றையும் பகுத்தறிவு கொண்டு தெளியும்படி வலியுறுத்தியிருக்கிறார்.அறிவும், அனுபவமும் மனிதர்க்கு இருப்பதால் அதை ஆராய்ந்து தெளிய அறிவுறுத்துகிறார்.

இதில் எளிமையும் இனிமையும் நிறைந்த 100 பொன்மொழிகளில் உள்ளன

பெரியார்
பெரியார்

*காலமெல்லாம் மடையனாக இருந்து சாவதைவிட அறிவைக் கொண்டு சிந்திக்க வேண்டும் என்றார்.from bad to the worse என்பது போல் கெட்டதிலிருந்து கழிசடைக்கு செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

*" என்னை கடவுள் நம்பிக்கை இல்லாதவன் என்கின்றனர் சிலர் உண்மை அஃதன்று;நான் நம்பிக்கை வைக்க அப்படி எதுவும் இருப்பதாக புலப்பட காணோமே என ஏங்குபவன் நான்

*கடவுள் மறுப்பாளன் என்று என்னை குறிப்பிடாதீர்கள். அதனையும் தேடி அலைந்து அலுத்துக் களைத்து ஓய்ந்தவன் என்று வேண்டுமானால் என்னை குறிப்பிடுங்கள். ஏனெனில் நான் கடவுள் வேண்டாம் என்று அது இருக்கக் கூடாது என்று கூறவில்லையே

*மக்களில் இரண்டு விதப் பிறவி உண்டு ஒன்று மக்களைப்போல் மக்களை அனுசரித்து மக்கள் விருப்பப்படி நடப்பது; மற்றொன்று தங்களை மக்களில் ஒருவன் என்றே கருதாமல் தங்களை தனிப்பிறவி என்று கருதிக்கொண்டு மக்கள் கருத்தை பற்றி கவலை இல்லாமல் நடப்பது.என தலைவனை பற்றி கூறுகிறார்

* எதிரிகளுடன் போராடுவது முக்கிய வேலை தான் ஆயினும் அதைவிட முக்கியம் துரோகிகளை ஒழிக்க போராடுவது ஆகும்

* எவனுக்கு பொய் சொல்ல தைரியம் இருக்கின்றதோ எவனுக்கு பொருள் செலவு செய்ய சக்தி இருக்கிறதோ எவனுக்கு பொய் பிரச்சாரம் செய்ய சௌகரியம் இருக்கிறதோ அவனுக்கு வெற்றி கொடுக்க நம்நாடு தயாராக இருக்கிறது

* வாழ்க்கை ஒழுக்கத்தில் கணவனுக்கு ஒரு சட்டம் மனைவிக்கு வேறு சட்டம் இருக்கிறது

* நிந்தனையான பேச்சுக்கள் எப்போதும் ஒரு விஷயத்துக்கு நியாயமான பதிலாக முடியாது

* வளைய முடியாத (கொள்கையுள்ள) கல்தூணில் (போட்டி என்னும்) பிளவு ஏற்பட்டால் பிறகு அபாயத்தை தான் எதிர் பார்க்க நேரிடும்

* நமக்கெல்லாம் கடவுள் எது என்றால் இந்தப் புராணங்களில் வரும் பாத்திரங்கள் கடவுள்களாக இருக்கின்றனவே தவிர தத்துவப்படி ஆன கடவுள் நமக்கு இல்லை

* கையாலாகாதவனுக்கு கடவுள் துணை, அறிவு இல்லாதவனுக்கு ஆண்டவன் செயல். தவற்றை உணரமுடியாத உனக்கு தலைவிதி

*கணவனிழந்த பெண்ணை எப்படி விதவை என்று கூப்பிடுகிறோமோ அது போலவே மனைவி இழந்த புருசனை விதவன் என்று கூப்பிட வேண்டும்.

*மற்ற நாடுகளில் மக்களை ஒன்று படுத்தவே கடவுள் மதம் இருக்கின்றன. நமது நாட்டில் மக்களை வேறு வேறாக பிரிக்கவே கடவுள் மதம் இருக்கின்றன

*சிந்திப்பவன் மனிதன்

சிந்திக்க மறுப்பவன் மதவாதி

சிந்திக்காதவான் மிருகம்

சிந்திக்க பயப்படுகிறவன் கோழை

* கல்லை கடவுளாக்கும் மந்திரங்கள் ஏன் ஒரு மனிதனை மற்ற மனிதனுக்கு சமத்துவமான மனிதனாக்க கூடாது

* மற்ற நாடுகளில் மக்களை ஒன்று படுத்தவே கடவுள் மதம் இருக்கின்றன. நமது நாட்டில் மக்களை வேறு வேறாக பிரிக்கவே கடவுள் மதம் இருக்கின்றன

* உலகிலுள்ள மக்களில் பலருக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது என்றாலும் அவர்களெல்லாம் நம்மைப் போல் முட்டாள் தனமாக கடவுளை நம்புவதில்லை

*மனிதன் பிறந்தநாள் முதற்கொண்டு சாகின்ற வரையில் உலகில் மாணவனாக இருக்கிறான்.அவன் கற்றுக்கொள்ள வேண்டியது அவ்வளவு இருக்கின்றது.

* பச்சை உண்மையானது மக்களுக்கு எப்போதும் கலப்பு உண்மையை விட அதிகமான அதிருப்தியை கொடுக்கக்கூடியதாக இருக்கும். உண்மையை மறைக்கப் பேசுவது என்பது, எப்போதும் பேசுகின்றவனுக்கும், பேச்சு கேட்பவர்களுக்கும் திருப்தியை கொடுக்கக்கூடியதாக இருக்கும். திருப்தியை உண்டாக்கும்படியும் செய்து கொள்ளலாம். ஆனால் உண்மை பேசுவதன் மூலம் அப்படி செய்ய முடியாது.

*ஊரார் உழைப்பைக் கொள்ளை கொள்ளாமல் எவனும் பணக்காரனாக முடியாது.

*முட்டாள்தனம் சுலபத்தில் தீப்பிடிக்கக் கூடியது.அறிவு சற்று தீப்பிடிக்க தாமதமாகும்.

*ஊரில் பேசிக் கொள்கிறார்கள் என்பது கீழ்த்தரமான தன்மையாகும்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

*மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம்;மானமற்ற ஒருவருடன் போராடுவது கஷ்டமான காரியம்.

*ஓய்வு ,சலிப்பு என்பவற்றைத் தற்கொலை என்றே கருதுகிறேன்.

*நீ இன்ன காரியம் செய்தால் உன் பாவம் மன்னிக்கப்படும்;பரிகாரமாகி விடும்;நீ பாவமற்றவனாக ஆகிவிடுவாய் என்று சொல்வதால் ஒழுக்கக்கேடே வளர்கிறது.


*தெரியாததை,இல்லாததை நம்ப வேண்டும்; ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதால் மனிதன் அறிவு பெற முடியாமல் சிந்தனா சக்தியற்றவனாக ஆகி விடுகின்றான்.


*என்ன கஷ்டப்பட்டாவது மறு உலகத்தை தயவு செய்து மறந்துவிட்டு இந்த உலக நடவடிக்கைகளுக்கு உங்களுடைய வாழ்க்கையைப் பொருத்துங்கள்.


*எண்ணெய் இருந்தால்தான் விளக்கு எரியும் என்பது போலச் சிந்தனை இருந்தால்தான் உண்மை விளங்க முடியும்.


*உள்ளதைப் பங்கிட்டு உண்பது, உழைப்பைப் பங்கிட்டுச் செய்வது என்ற நிலை ஏற்பட்டால் கடவுளுக்கு வேலையோ அவசியமோ இருக்காது.


*ஒருவன் தன் தேவைக்கு மேலே எடுத்துக் கொள்ளாவிட்டால் எல்லோருக்கும் வேண்டியவை கிடைத்துவிடும்.


*துறவிகள் மோட்சத்திற்கு போக வேண்டும் என்று பாடுபடுகின்றார்களே தவிர, சமூகத்தில் மனித மேம்பாட்டுக்காக பாடுபடுவதில்லை

*முன்நோக்கிச் செல்லும் போது பணிவாக இரு.. ஒருவேளை பின்நோக்கி வர நேரிட்டால் யாராவது உதவுவார்கள்.

*ஒரு காலத்து முறைகளே எக்காலத்துக்கும் என்றால் மனிதனுக்கு அறிவு வளர்ச்சி இல்லை என்பதுதான் பொருள்.

*விதி என்பது மிதிக்கப்பட்டவர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் கொதித்து எழாதிருக்க செய்யப்பட்ட சதியாகும்

*பிச்சைக்காரனுக்குச் சோறு போடுவது நாத்திகமேயாகும். ஏனெனில் கடவுள் பார்த்து ஒருவனை அவனது கர்மத்திற்காகப் பட்டினி போட்டிருக்கும் போது நாம் அவனுக்கு சோறு போடுவது கடவுளுக்கு விரோதமான செயல் தானே.

*நாத்திகம் என்றால் தன் அறிவுகொண்டு எதையும் ஆராய்ந்து பார்ப்பவன்

பேரறிஞர் அண்ணா - பெரியார்
பேரறிஞர் அண்ணா - பெரியார்

*சமுதாய சீர்திருத்தத்தின் கடைசி எல்லை பொதுவுடைமை என்பதைப் போலவே நாத்திகமும் அறிவின் உண்மையான கடைசி எல்லையாகும்


*தண்டனை என்பது குற்றவாளிக்குக் கஷ்டத்தைக் கொடுக்கக் கூடியதாய் இருக்க வேண்டுமே தவிர,கண்டிப்பாய் சுகம் கொடுக்கக் கூடியதாக இருக்க கூடாது


*தேசாபிமானம் பாஷாபிமானத்தை விட உயர்ந்தது மனிதாபிமானம்

*மக்கள் தங்கள் தகுதிக்கேற்ற தலைவரைத் தேர்ந்தெடுக்கிறார்கள்

*ஆயுதமும் காகிதமும் பூஜை செய்ய அல்ல..புரட்சி செய்ய..

*எப்போதும் நான் நன்றி பெறுவதில் கவலைப்படுவதே இல்லை.மனித ஜீவனிடம் நன்றி எதிர்பார்ப்பது அறிவில்லாத தன்மையே யாகும்

*நன்றி என்பது பலன் பெற்றவர் காட்ட வேண்டிய குணம்.செயல் செய்தவர் எதிர்பார்க்கக் கூடாது

*என்னை 'உண்மையாய்' எதிர்க்கத் துவங்குங்கள். அந்த உண்மை ஏன் எதிர்க்கின்றோம் என்ற கேள்வியை மூளைக்குள் எழுப்பும். அந்த கேள்விக்கான தேடல் நீங்கள் மதத்தின் பெயராலும், கடவுளின் பெயராலும் இந்தியாவில் எப்படிப்பட்ட அடிமுட்டாளாய் வாழ்கிறீர்கள் எனும் விடையில் கொண்டு சேர்க்கும் -

*அச்சத்துக்கும் அறியாமைக்கும் பிறந்த குழந்தையே கடவுள்

*நான்கு ஆண்களும்,ஒரு பெண்ணும் குடும்பத்தில் இருந்தால் முதலில் அந்தப் பெண்ணைத்தான் படிக்க வைக்க வேண்டும்

*அறிவுக்கு ஏற்றது,மக்களுக்கு நன்மை பயப்பது,மக்களின் அறிவை வளர்ச்சியடையச் செய்வது எதுவோ அதைப்பற்றி பேசு

*ஆரியமே! நீ என்னை முழ்கடிக்க முயற்சிக்கும் பேரெல்லாம் ஆழிப்பேரலையாய் உயர்ந்து வருவேன்.


*கல்வி அறிவும்,சுயமரியாதை எண்ணமும்,பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்!

*உன்னை யோசிக்க வைப்பதுதான் என் நோக்கமே தவிர..என்னைப் பின்பற்று,உன்னை மாற்றிக்கொள் என்பது அல்ல..நீ நீயாகவே இரு.!

*முற்போக்கு அறிவும்,அக்கறையும் வளர வளர, புரட்சிகள் ஏற்பட்டுக் கொண்டேதான் இருக்கும்.

*என் கஷ்டத்தைச் சாத்திரமும், மதமும், கடவுளும் கவனிக்கவில்லை. ஆதலால் நான் ஏன் அவைகளை மதிக்க வேண்டும்?

*தகுதியும், திறமையும் பெறத்தான் ஒருவன் பள்ளிக்கோ, கல்லூரிக்கோ வருகிறான்.ஆனால் பள்ளிக்கோ கல்லூரிக்கோ வரவே தகுதி திறமை தேவை என்பது மிகப்பெரிய அயோக்கியத்தனம் "

*அறிவுக்கும் அனுபவத்திற்கும் ஒத்து வராததைப் பயத்தால் நம்புகிறவன் பக்குவமடையாத மனிதனாகிறான்

*மனித வாழ்வில் வெற்றி என்னவென்றால் அவனவன் மனத் திருப்தியோடு வாழ்வதுதான்

*மற்றவர்களிடம் பழகும் விதத்தையும், ஒழுக்கத்தையும் சிறுவயதிலேயே நன்றாக ஒருவன் கற்றுக் கொண்டானானால் அவனே வாழ்வில் பெரிய மனிதனாகிறான்

*மனசாட்சி என்று சொல்லுவதே அகிம்சை என்பதைப் போல கோழைகளுடைய ஆயுதமாகிவிட்டது

*ஒருவன் வாழ்வது என்பது அவனுடைய வாழ்க்கையால் பிறர் நன்மையடைந்தார்கள், மற்றவர்கள் சுகங்கண்டார்கள் என்று அமைய வேண்டும்.

*மந்திரிப் பதவி பெரிதல்ல; பணக்காரனாக இருப்பதும் பெரிதல்ல;மனிதனாக வாழ்வதுதான் பெருமை

*எந்த மனிதனுக்கும் அவனுடைய கருத்தை எடுத்துச் சொல்ல உரிமையுண்டு.அதைத் தடுப்பது அயொக்கியத்தனம்

*மனிதன் தன் வாழ்நாளில் அடைந்த வெற்றிக்கு,மேன்மைக்கு அறிகுறி, முடிவின் போது அடையும் புகழ்தான்

*மதம் மனிதனை மிருகமாக்கும் சாதி மனிதனை சாக்கடையாக்கும்

*சாதியின் கடைசி வேர் அறுபடும்வரை என் சிந்தனைகள் தொடரும்

பெரியார்
பெரியார்

*எந்த பாவத்தை செய்தாவது சாதியை ஒழிக்க வேண்டும்..

*ஒரு கருத்தை யார் சொல்லியிருந்தாலும் நானே சொல்லியிருந்தாலும் பகுத்தறிவுக்கு முரணாக இருந்தால் அதை ஏற்றுக்கொள்ளாதே"

*ஆத்மாவைப் பற்றி பேச வேண்டுமெனில் அறிவையும், அனுபவத்தையும் தூர வைத்துவிட்டு வெறும் நம்பிக்கை மீதே ஒப்புக்கொண்டு பேச வேண்டியதாய் இருக்கிறது.


*ஆத்மா என்பது ஆகாயத்தில் தளவாடம் இல்லாமல் கட்டப்பட்ட ஒரு கோட்டை

*நூறு அறிவாளிகளுடன் மோதுவதை விட, ஒரு மூடனோடு மோதுவது மிகச் சிரமமானது

*என் அபிப்ராயத்தை மறுக்க உங்களுக்கு உரிமை உண்டு.ஆனால் என் அபிப்ராயத்தை வெளியிட எனக்கு உரிமையுண்டு.

*எதிரியை அடக்கணும், அவனை ஒழிக்கணும் என்றால் நாம் அவனை வெறுக்கணும். கூண்டோடு நம்மை அவன் ஒழித்தாலும் சரி என்று துணிந்து இறங்கினால் தானே அவன் பயப்படுவான்


*நாதசுரக்குழாயாய் இருந்தால் ஊதியாக வேண்டும்; தவுலாயிருந்தால் அடிபட்டுத்தானாக வேண்டும் என்பது போல் எனக்குத் தொண்டை, குரல் உள்ள வரை பேசியாக வேண்டும்; பிரசங்கம் செய்தாக வேண்டும்


*நானே எழுதி, நானே அச்சுக்கோர்த்து, நானே அச்சடித்து, யாரும் வாங்காவிட்டாலும் நான் ஒருவனே படிப்பேன்


*வேறு ஒருவன் வந்து உங்களுக்கு உதவி செய்வான் என்று எதிர்பார்ப்பதும் பெரிய முட்டாள்தனமாகும். உங்களையே நீங்கள் உபயோகப்படுத்திக் கொள்ளத் துணிவு கொள்ள வேண்டும்


*நம்மை எவன் இழிவுபடுத்துகிறானோ, அவனை நாம் மதிப்பதில்லை என்று முடிவு கட்டிக்கொள்ள வேண்டும்.


*சாதியை ஒழிப்பது என்பது செங்குத்தான மலையில் தலைகீழாக ஏறுவது போன்றது.


*தலைவிதி,முன் சென்மக் கர்மப்பலன் என்பவைகள் மனிதனுடைய முட்டாள்தனத்துக்கும் அயோக்கியத்தனத்துக்கும் பரிகாரமாக்கப்படுகிறது.

*சகுனம் பார்க்கிறோமே! சாப்பிடும் போது சகுனமோ, ராகுகாலமோ பார்க்கிறோமா?நீதி மன்றத்தில் ராகுகாலம் பார்த்தால் என்ன ஆகும்?

*வெங்காயத்தை உரித்துக்கொண்டே போனால் கடைசியில் எதுவுமே மிஞ்சாது. ஒன்றும் இல்லாத பூஜ்யப் பேர்வழிகளைத் தாக்கவே அந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறேன்

பெரியார்
பெரியார்

*எனக்கு என்ன யோக்கியதை இருக்கிறதென்றால் துணிவு ஒன்றுதான்.வேறு எந்த யோக்கியதையும் எனக்கு கிடையாது.


*யாரோ ஒருவன், எப்போதோ ஒரு காலத்தில், ஏதோ ஒரு மொழியில், என்னமோ ஒரு உத்தேசத்தின் மீது சொன்னதாக, யாராலோ எழுதி வைக்கப்பட்டதை ஒப்புக்கொண்டு பின்பற்றச் சம்மதிப்பதை விடப் பெரிய அடிமைத்தனம் வேறு இல்லை

*வாழ்த்து என்பது ஒரு சம்பிரதாயம் ஒழிய அதனால் எந்த பயனும் இல்லை. இந்த முறை எல்லாம் 2000 ஆண்டுகளுக்கு முந்தியது.

*சுயமரியாதை உடையவன் இந்தியை ஆதரிக்க மாட்டான்

*பகுத்தறிவு என்பது ஆதாரத்தைக் கொண்டு தெளிவடைவதாகும்

*எந்த மனிதனும் எனக்கு கீழானவன் இல்லை.அதேபோல் எவனும் எனக்கு மேலானவனும் இல்லை

*கல்வியினுடைய குறிக்கோள் என்பது பணம் சம்பாதிப்பது மாத்திரம் என்று நினைக்கக் கூடாது

*முட்டாள்கள் உள்ள வரை அயோக்கியர்கள் ஆட்சி செய்வார்கள். இதுதான் ஜனநாயகம்

*மூட்டை தூக்கும் பொழுது பாரத்தினாலே நான் கஷ்டப்பட்டிருப்பேனே தவிர, வெட்கத்தினால் ஒரு போதும் கஷ்டப்பட்டதில்லை.


*கோர்ட் மக்கள் சவுகரியத்திற்காகவே தவிர, வக்கீல்கள் சவுகரியத்துக்காக அல்ல


*பக்தி ஆசையிலிருந்தும் அன்னியர் பார்த்து மதிப்பதிலிருந்தும் வளருகிறது


*நமது அறிவிக்கு ஒரு காரியம் சரி என்று பட்டாலும் அனேக விஷயங்களை உணர்ந்தே அதைப் பிரயோகிக்க வேண்டும்


*எனக்கும் கடவுளுக்கும் என்ன முன்விரோதமா?நான் அவரைப் பார்த்ததுகூட இல்லை!’


*கீழ்சாதி என்பதற்கும், தொடக்கூடாதவர் என்பதற்கும் மதத்தையோ கடவுளையோ காரணம் காட்டுவது வெறும் பித்தலாட்டம்.


*பக்தி என்பது தனிச்சொத்து ஒழுக்கம் என்பது பொதுச்சொத்து

*பக்தி வந்தால் புத்தி போகும்; புத்தி வந்தால் பக்தி போகும்


*எந்த இனம் தன்னுடைய உரிமைக்காகப் போராட முன் வரவில்லையோ அந்த இனம் உரிமைகளை அனுபவிக்க தகுதியற்றது

*எங்கே விழுந்தாய் என்று பார்க்க வேண்டிததில்லை..எங்கே வழுக்கியது என்று பார்க்க வேண்டும்

*இந்த சமுதாயத்தை மானமும் அறிவுமுள்ளதாக மாற்றவும், மனிதனுக்கு மனிதன் ஜாதிய ஏற்றத்தாழ்வில்லாமல் வாழச் செய்வதே என் லட்சியம்

*என்னைக் கடவுள் நம்பிக்கை இல்லாதவன் என்கின்றனர். நம்பிக்கை வைக்கத்தக்க அப்படி எதுவும் இருப்பதாக புலப்படக் காணோமே என ஏங்குபவன் நான்

*சேவை என்பது கூலியை உத்தேசித்தோ, தனது சுயநலத்தை உத்தேசித்தோ செய்வதல்ல. மற்றவர்கள் நன்மை அடைவதை பார்த்து மகிழ்ச்சியும் திருப்தியும் அடைவதற்காகவே செய்யப்படும் காரியம் தான்

*தொடர்ந்து கற்றுக்கொள்,

ஆய்வு செய்

உருமாறு.!


இதில் உள்ள கருத்துக்கள் எல்லாம் சிலரால் ஏற்றுக் கொள்ளாமல் போகலாம்.ஆனால் ஏதேனும் ஒரு கருத்து உங்கள் இதயத்தை தொட்டது என்றால் அதுவே பெரியாரின் வெற்றி.இந்த வரிகளோடு நம் வாழ்வை உயர்த்த விரும்பிய பெரியாரை இந்த நன்நாளில் நினைவு கூர்வோம்.

- மணிகண்டபிரபு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு