Published:Updated:

`சொல்தாக்கள்’ யார்? | பாண்டிச்சேரி வாழ்வியல் கட்டுரை -1

Pondicherry ( Photo by Sukanya Basu on Unsplash )

பிறப்பால் தமிழர்கள் என்றாலும் உணவு பழக்கம், நடை, உடை, பேச்சுவழக்கு அனைத்திலும் ஏறக்குறைய கால் நூற்றாண்டு கால பிரெஞ்சு ராணுவ பணி ஏற்படுத்திய மாற்றங்களுடனான இந்த "பிரெஞ்சு பட்டாளத்தான்களின்" வாழ்க்கை முறை தனித்த, சுவாரஸ்யமான அடையாளங்களை கொண்டது.

`சொல்தாக்கள்’ யார்? | பாண்டிச்சேரி வாழ்வியல் கட்டுரை -1

பிறப்பால் தமிழர்கள் என்றாலும் உணவு பழக்கம், நடை, உடை, பேச்சுவழக்கு அனைத்திலும் ஏறக்குறைய கால் நூற்றாண்டு கால பிரெஞ்சு ராணுவ பணி ஏற்படுத்திய மாற்றங்களுடனான இந்த "பிரெஞ்சு பட்டாளத்தான்களின்" வாழ்க்கை முறை தனித்த, சுவாரஸ்யமான அடையாளங்களை கொண்டது.

Published:Updated:
Pondicherry ( Photo by Sukanya Basu on Unsplash )

ட்டைக்காரகள் என்று அழைக்கப்பட்ட பிரிட்டிஷ் இந்தியாவின் ஆங்கிலோ இந்திய சமூகத்தை போல, பிரெஞ்சு காலனியாதிக்க புதுவை மாநிலத்தில் சொல்தாக்கள் என அழைக்கப்படும் ஒரு சமூகத்தினர் உண்டு.

இந்தியாவில் வாழ்ந்த பிரிட்டிஷ் ஆண்களுக்கும் இந்திய பெண்களுக்கும் திருமண உறவினால் பிறந்த கலப்பு சமூகமான ஆங்கிலோ இந்தியர்களை போலல்லாமல், புதுச்சேரியின் சொல்தாக்கள் இந்தியர்கள். பாண்டிச்சேரி யூனியன் எனப்பட்ட இன்றைய புதுச்சேரி மாநிலத்தின் பச்சை தமிழர்கள்!

இரண்டாம் உலகப்போரின் போது தன் காலனி ஆதிக்கத்திலிருந்த நாடுகளிலிருந்து ராணுவத்துக்கு ஆள் சேர்த்தது பிரான்ஸ். அந்த வகையில் இந்தியாவின் பிரெஞ்சு காலனி பிராந்தியங்களிலிருந்தும் பலர், முக்கியமாக அடித்தட்டு மக்கள் பிரெஞ்சு ராணுவத்தில் இணைந்தனர். நாற்பது வயது வாக்கில் ஓய்வு பெற்று, இந்திய ரூபாய் மதிப்பில் கணிசமான ஓய்வூதியத்துடன் பிரெஞ்சு குடியுரிமையும் பெற்று நாடு திரும்பியவர்கள் தான் இந்த சொல்தாக்கள். இவர்களில் மிக பெரும்பான்மையோர் கிறிஸ்தவர்கள்.

pondicherry
pondicherry

இவர்கள் "பிஞ்சின்கார்கள்" என்றும் அழைக்கப்பட்டார்கள். அரசாங்க ஓய்வூதியம் மற்றும் உதவித்தொகைக்கு பிரெஞ்சு மொழியில் பான்சியம் (Pension) என பெயர். ஆங்கிலத்தில் பென்சன். பென்சன் பேச்சு வழக்கில் பிஞ்சின் என மருகியது.

பிரெஞ்சு குடிமக்களுக்கான அனைத்து உரிமைகளையும் கொண்ட இவர்களின் நலனுக்காக, புதுச்சேரியில் "Le foyer du soldat" எனும் சங்கம் உள்ளது.

புதுவை மாநிலத்தில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் அனைவரையும் குறிக்கும் பொதுச்சொல்லாகவும் இந்த சொல்தா எனும் வார்த்தை வழக்கில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சொல்தா (Soldat) எனும் பிரெஞ்சு சொல்லுக்கு ராணுவ வீரன் என பொருள். கிராமிய வழக்கில் சொல்லவேண்டுமானால் பட்டாளத்தான் !

பிறப்பால் தமிழர்கள் என்றாலும் உணவு பழக்கம், நடை, உடை, பேச்சுவழக்கு அனைத்திலும் ஏறக்குறைய கால் நூற்றாண்டு கால பிரெஞ்சு ராணுவ பணி ஏற்படுத்திய மாற்றங்களுடனான இந்த "பிரெஞ்சு பட்டாளத்தான்களின்" வாழ்க்கை முறை தனித்த, சுவாரஸ்யமான அடையாளங்களை கொண்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சொந்த மண்ணின் சமூக மற்றும் பொருளாதார சூழல்களால் அந்நிய நாட்டு ராணுவ பணியில் சேர்ந்து, அதன் மூலம் ஏற்பட்ட வாழ்வியல் மாற்றங்களால் தாய் நாட்டிலும் சிலரால் அந்நியமாக பார்க்கப்பட்ட அவலத்துக்கும் இவர்களில் சிலர் உள்ளானார்கள்.

"பெர்முடாஸ் டவுசர்" எனும் வார்த்தை கூட புழக்கத்தில் இல்லாதிருந்த எழுபது எண்பதுகளில் அரைக்கால் டிரவுசரும் பொத்தான்கள் மாட்டாத சட்டையுமாக திரிந்தது, விரல்களில் பிரெஞ்சு கொடி கல் மோதிரம் மற்றும் பிரெஞ்சு வார்த்தைகள் கலந்த தமிழ் போன்றவை இவர்களின் அடையாளங்களில் சில !

இன்று சகலரும் அறிந்த மையோனீஸ், கிட்ச்சப், பதப்படுத்தப்பட்ட டின் உணவுகள் போன்றவை எண்பதுகளிலேயே எங்கள் ஊரின் ஜெனரல் ஸ்டோர்களிலும், தர்கா மார்க்கெட் என்றழைக்கப்படும் வெளிநாட்டு பொருட்கள் விற்கப்படும் கடைகளிலும் விற்பனை செய்யப்பட்டது இவர்களுக்காகத்தான்.
காரை அக்பர்

சமூக, பொருளாதார அங்கீகாரத்தைத் துரத்தி அந்நிய மண்ணில் இளமை முழுவதும் ஓடிய நினைவுகளை ஓய்வு காலத்தில் பிரதிபலிப்பவையாய் அவை இருந்திருக்கக்கூடும் !

pondicherry
pondicherry
Abhishek Koli on Unsplash

சொல்தாக்கள் அனைவருக்கும் பொதுவான ஒன்றாக இருந்தது மது ! பிரிக்க முடியாதது சொல்தாக்களும் மதுவும் எனும் அளவுக்கு அவர்கள் மதுப்பிரியர்கள் !

சொல்தாக்கள் யாரை பார்த்தாலும்,

"என்னா முசியே (Monsieur) போன் சாந்தே (Bonne santé) ஆரம்பிச்சாச்சா ?"

என கேட்பது காரைக்கால் வழக்கம். இதுவே புதுச்சேரி என்றால்

"டக்கு போட்டாச்சா !" என உரையாடல் ஆரம்பமாகும் !

போன் சாந்தே, டக்கு எனும் இரு பதங்களுமே மது அருந்துவதை தான் குறிக்கும் !

குடிக்க தொடங்குவதற்கு முன்னால் மதுக்கோப்பைகளை உயர்த்தி "A la santé" என்பது பிரெஞ்சு சியர்ஸ் வழக்கங்களில் ஒன்று. Santé என்றால் ஆரோக்கியம் என அர்த்தம் ! டக்கு என்பதின் மூலம் தெரியவில்லை !

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிரான்சிலிருந்து யார் ஊர் திரும்பினாலும்,

"புத்தேய் கொண்டு வந்தீங்களா முசியே ?"

எனக் கேட்பதும் இந்த சொல்தாக்களின் பழக்கம் ! Bouteille என்றால் பாட்டில். புதுவை மற்றும் காரைக்கால் வட்டாரங்களில் பாட்டிலை குறிப்பிடப் பயன்படுத்தப்படும் போத்தல் எனும் வார்த்தை புத்தேய்யின் மருகல் தான்.

"புத்தேய் இருக்கு முசியே, நாளைக்கு தரேன் !"

என கதையளந்து, நன்றாக பிரெஞ்சு எழுதப் படிக்கத் தெரிந்த இந்த பரிதாப பட்டாளத்தான்களிடம் "பிரெஞ்சு காரியங்கள்" சாதித்துக்கொண்ட பலர் எங்கள் ஊரில் உண்டு !

பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து புதுவை விடுவிக்கப்பட்ட போது உண்டான ஒப்பந்தங்களில் ஒன்று ஒப்சியம் (Option). பிறந்த ஆண்டு, பிறந்த ஊர் போன்ற சில விதிகளுக்கு உட்பட்ட புதுச்சேரி மக்கள் பிரெஞ்சு குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என்பது இந்த ஒப்பந்தத்தின் ஷரத்து.

அப்படியான விண்ணப்பங்களை பிரெஞ்சு மொழியில் எழுதுவதற்கும், புதுச்சேரி பிரெஞ்சு தூதரகத்துக்கு மொழி பெயர்க்க அழைப்பதற்கும் வேண்டி "விவரமான சொல்தாக்கள்" சிலரின் பின்னால் சதா ஒரு கூட்டம் சுற்றிக்கொண்டிருக்கும் ! குடியுரிமை கிடைத்துவிட்டால், "பிரெஞ்சு நெளிவு சுளிவுகளை" கற்றுக்கொடுத்ததும் இந்த சொல்தாக்கள் தான் !

லியான்ஸ் பிரான்சேவில் பிரெஞ்சு கற்றுக்கொள்ள சேரும் எங்கள் ஊர்க்காரர்கள் தங்களின் புது மொழி புலமையை காண்பிப்பதற்காக, ஜனசந்தடியான இடங்களில் தென்படும் சொல்தாக்களிடம் பிரெஞ்சில் பேசுவார்கள். பிரெஞ்சில் பேசுவார்கள் என்பதைவிட, பிரெஞ்சு என அவர்கள் நினைக்கும் ஏதோ ஒரு பாஷையில் பேச முயற்சிப்பார்கள் என்பதுதான் சரியாக இருக்கும் !

மப்பிலிருக்கும் சொல்தாவிடம் புரியாத பிரெஞ்சில் பேசி மாட்டிக்கொண்டு, சரியாக உச்சரிக்கும் வரை அவரிடமிருந்து "ஒன்ஸ்மோர்" வாங்கி, சுற்றம் சிரிக்க சொந்த காசில் சூனியம் வைத்துக்கொண்டவர்களும் உண்டு !

ரு நாள் எதிர்வீட்டு காதர் நானா தான் பிரெஞ்சு கற்றுக்கொண்டிருக்கும் செய்தியை தெருவில் சென்றுகொண்டிருந்த செபமாலை சொல்தா மாமாவிடம் பெரிய குரலில் பறைசாற்றினார் !

"நன்றாகப் பேச கற்றுக்கொண்டீர்களா ?"

என செபமாலை மாமா பிரெஞ்சில் கேட்க,

மந்தகாச புன்னகையுடன் தோளை குலுக்கி,

"உம்மசல்மா...உம்மசல்மா... !"

என்றார் காதர் நானா.

அன் பூ செல்மான் (Un peu seulement)என்றால் கொஞ்சம் மட்டும் தெரியும் என அர்த்தம். அதை மறந்துவிட்ட காதர் நானாவின் புத்தியில் , அந்த வார்த்தைகளின் தொனியில் அமைந்த உம்மசல்மா ஒட்டிகொண்டது !

pondicherry
pondicherry
Photo by Anagh Sharma on Unsplash

அவர் என்ன சொல்கிறார் என புரியாத மாமா, மீண்டும் அதே கேள்வியை சற்று அழுத்தமாக கேட்க,

"உம்மசல்மா... உம்மசல்மா..."

என காதர் மாமா தெருவே அதிரும்படி உரக்க கத்தியதுதான் தாமதம்,

"அட கழிசல்ல போறவனே... உங்க பாட்டனாருகூட என்ன பேரு சொல்லி கூப்பிட்டதில்ல..."

வசவு வார்த்தைகளும் விளக்குமாறுமாய் வீட்டிலிருந்து வாசலுக்கு குதித்தார் காதர் நானாவின் பாட்டியார் ! அதுநாள் வரையிலும் கண்ணும்மா என்றே கூப்பிட்டுப் பழகிய அந்த மூதாட்டியின் இயற்பெயர் உம்மசல்மா என்பதை தெருவே அன்றுதான் தெரிந்துகொண்டது !

சொல்தாக்கள் நாகரீகமான குடிகாரர்கள் ! போதையிலிருந்தாலும் பேச்சிலும் நடத்தையிலும் நிதானமானவர்கள். மிக இங்கிதமாக பழகக்கூடியவர்கள்.

குடும்பம் குழந்தைகள் என வளமாக வாழ்ந்தவர்கள், சதா சர்வகாலமும் மதுவில் மூழ்கிய தனிமரங்கள் என இவர்களை இரண்டு விதமாகப் பிரிக்கலாம் !

செபமாலை சொல்தா மாமா முதல் ரகம். நடை உடை பாவனை அனைத்திலும் ஒரு நளினம், மென்மையான பேச்சு. எங்கள் தெரு மதநல்லிணக்க பஞ்சாயத்து மும்மூர்த்திகளில் ஒருவர் ! ஜம்புமர வீட்டு காஜியார் மாமா, மாவுமில் நேரு மாமா மற்றும் செபமாலை மாமாவின் வார்த்தைகள்தான் எங்கள் தெரு மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களுக்கு மறுபேச்சில்லாத இறுதித் தீர்ப்பு !

மாலை இருள் கவிய தொடங்கும் வேளையில் வீட்டு வராந்தாவில் மேஜை நாற்காலியுடன் போன் சாந்தேக்கு தயாராகிவிடுவார் செபமாலை மாமா ! பாட்டிலை எங்கு வைத்திருக்கிறார், எப்போது கிளாஸில் கலந்தார் என்பதெல்லாம் அவருடன் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பவர்களுக்கு கூட தெரியாது !

அவரது மகன்கள் ஓய்வான நேரங்களில் கிட்டார் பழகிக் கொண்டிருப்பார்கள் அல்லது அவர்கள் வளர்த்த இடுப்புயர அல்சேஷன் நாயை அழைத்துக்கொண்டு வாக்கிங் செல்வார்கள்.

அந்த நாயும் நானுமே அறியாத ஏதோ ஒரு பூர்வஜென்ம பகையின் பிணைப்பு...

நான் தெருவில் இறங்கியதின் மோப்பம் உணர்ந்த அடுத்த நொடியே, அவர்கள் வீட்டுக்குள் இருந்தே குரைக்கத்தொடங்கிவிடும் ! அந்த நாய் துரத்தி, அலறியபடி ஓடிய நீங்காத நினைவுகளால் பொமரேனியன் நாய்க்குட்டியை கண்டால் கூட இன்றும் தண்டுவடத்தில் ஒரு நடுக்கம் அதிர்ந்து மறைகிறது ! அந்த நாய் துரத்தி நான் ஓடினேன் என்பதைவிட நான் ஓடியதை கண்டுதான் அது என்னை துரத்தியது என்ற உண்மை ஓடினால் மூச்சிரைக்கும் வயதில் தான் புரிய தொடங்கியிருக்கிறது !

pondicherry
pondicherry

வார இறுதி நாட்களின் இரவு பொழுதுகளில், அவர் வீட்டின் கிராமபோனிலிருந்து ஒரு ஆங்கில பாடல் சாத்திய ஜன்னல் இடுக்கு வழியே சன்னமாய் கசிந்து, காற்றில் ஏறி எங்கள் வீட்டு முற்றம் வழி இறங்கி செவிகளில் நுழையும் !

என் மனவெளியின் பால்ய நினைவு பால்வெளிக்குள் நீந்த உந்தும் காலயந்திரமாய் இன்றளவும் விளங்கும் அந்த பாடல் Boney M குழுவின் Rivers of Babylon என்பதெல்லாம் வளர்ந்து வாலிபமான பிறகுதான் தெரிந்தது !

இரண்டாம் வகையினரை, அவர்களது வித்தியாச குணநலன்களுக்காக வம்புக்கிழுப்பது எங்கள் ஊர் இளவட்டங்கள் சிலரின் வாடிக்கையாக இருந்தது.

முசியே போஞ்சூர், டாக்டர், ஜீ பூம்பா என்பதெல்லாம் தங்களின் ஹிட் லிஸ்ட் சொல்தாக்களுக்கு இளவட்டங்கள் சூட்டியிருந்த பெயர்கள் !

அவர்களை அடுத்து சந்திக்கலாம்...

தொடரும்,

காரை அக்பர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism