Published:Updated:

பொங்கல் வந்தாலே தபால்காரரை தான் எதிர்பார்ப்போம்! - 70ஸ் பால்ய நினைவுகள் | My Vikatan

Representational Image ( Unsplash )

எப்பொழுது தபால்காரர் வருவார் என்று எண்ணி திண்ணையில் காத்திருப்போம். ஆம் ..யார் யாருக்கு எத்தனை பொங்கல் வாழ்த்து வரும்?.

பொங்கல் வந்தாலே தபால்காரரை தான் எதிர்பார்ப்போம்! - 70ஸ் பால்ய நினைவுகள் | My Vikatan

எப்பொழுது தபால்காரர் வருவார் என்று எண்ணி திண்ணையில் காத்திருப்போம். ஆம் ..யார் யாருக்கு எத்தனை பொங்கல் வாழ்த்து வரும்?.

Published:Updated:
Representational Image ( Unsplash )

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

பொங்கல் என்றாலே நினைவுக்கு வருவது எங்கள் வளவனூரில் சிறுவயதில் கொண்டாடிய பொங்கல் தான். பொங்கல் வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே வீடு பரபரப்பாகிவிடும்‌. காரணம் எங்கள் நிலத்தில் பயிரிடுபவர்களுக்கெல்லாம் வேட்டி சேலை எடுக்க வேண்டும் . விழுப்புரம் சீமாட்டி துணிக்கடையில் மொத்தமாக வாங்குவோம். வாங்கி வந்ததை அதற்குரிய துணிப் பையில் போட்டு அவரவர்களின் பெயர் எழுதுவது என்னுடைய வேலை. எனக்கு மிகவும் பிடித்தமான வேலையும் கூட.

போகி அன்று மாலையே தோட்டத்தில் சுத்தமாக பெருக்கி சாணம் போட்டு மெழுகி மண் அடுப்பு வைத்து விறகெல்லாம் தயார் நிலையில் வைத்திருப்போம். பொங்கல் என்று காலை அம்மா புதுப் பானையில் அழகாக இஞ்சி, மஞ்சள் கொத்து கட்டி மஞ்சள், குங்குமம் வைத்து (பார்க்கவே மங்களகரமாக இருக்கும்)பொங்கல் வைப்பார்கள் பொங்கும் சமயத்தில் எங்கள் அனைவரையும் கூப்பிட்டு 'பொங்கலோ பொங்கல் 'ன்னு மூன்று முறை சத்தமாக சொல்லச் சொல்வார்கள்.

Pongal
Pongal
Vikatan library

பிறகு சூரிய பகவானுக்கு படையல் இட்டு வணங்கி அப்பா அம்மா தரும் புதுத் துணியை அவர்களிடம் ஆசி பெற்று கட்டிக்கொண்டு, கட்டி இருந்த துணியை அவிழ்த்து அதன் மேல் மண்டியிட்டு இறைவனை வணங்கி தோழிகளை பார்க்க சென்று விடுவோம். பதினோரு மணி வாக்கில் நிலத்தில் பயிரிடுபவர்கள் ஒருவர் பின் ஒருவராக வர அவர்களுக்கு எடுத்த வேட்டி சேலை எல்லாம் கொடுத்து கூடவே அம்மா செய்த சர்க்கரை பொங்கலை ஒவ்வொருவருக்கும் தனித்தனியே ஒரு எவர்சில்வர்தூக்கு சட்டியில் (புதுசு) போட்டு கூடவே ஆளாளுக்கு ஒரு கரும்பும் வைத்து தர அனைவரும் அன்பாய் வாங்கிச் செல்வார்கள்.

பிறகு மதிய சாப்பாடு வடை போட்ட மோர் குழம்பு ,கத்தரி முருங்கை வேர்க்கடலை பொரியல், வாழைக்காய் வறுவல், சேமியா அல்லது ஜவ்வரிசி பாயசம் வடை, அப்பளம், தக்காளி ரசம், கெட்டி தயிர் என தடபுடலாக சாப்பிடுவோம். பிறகு எப்பொழுது தபால்காரர் வருவார் என்று எண்ணி திண்ணையில் காத்திருப்போம் .ஆம் ..யார் யாருக்கு எத்தனை பொங்கல் வாழ்த்து வரும்?.

Pongal
Pongal

யாரெல்லாம் அனுப்புவார்கள்.. என்று எதிர்பார்ப்பது ஒரு தனி சுகம் . பொங்கல் விடுமுறைக்கு பிறகு பள்ளி சென்றால்தோழிகளுடன் இதைப் பற்றி சொல்ல வேண்டுமே. பெரும்பாலும் எல்லா பொங்கல் வாழ்த்தும் மாடு கரும்பு புது பானை என்றே வரும். சிலது வித்தியாசமாக மலர்களுடன் கூடிய பொங்கல் வாழ்த்து வரும். அதை எல்லாம் பத்திரமாக சேகரித்து , கட் செய்து அலமாரியில் ஒட்டி வைத்ததெல்லாம் தனிக் கதை. பிறகு மூன்று மணி வாக்கில் அப்பா தோட்டத்தில் கரும்புகளை அழகாக துண்டுகள் ஆக்கி கொடுப்பார்.

அதை கடித்து சாப்பிடும் போது புறங்கையில் சாறு வழியாமல் யார் சாப்பிடறாங்க..என்பதில் ஒரு போட்டி நிலவும் .(எங்களுக்குள்). பிறகு மாலை கண்டிப்பாக பொங்கல் ரிலீஸ் படத்தை குடும்பத்துடன் சென்று கண்டு களிப்போம். பொங்கல் ரிலீஸ் படத்தை பொங்கலன்று பார்ப்பது என்பது ஒரு தனி சுகம் .. அப்படி எத்தனை எத்தனை படங்கள் ..பார்த்ததுஎல்லாமும் இன்னமும் பசுமையாய் நினைவுப் படலத்துள் இருக்கிறது..

Sugarcane
Sugarcane

மொத்தத்தில் பொங்கல் எங்கள் ஊரில் களைக்கட்டும். மறுநாள் மாட்டுப் பொங்கல் கேட்கவே வேண்டாம். மாடுகளை குளிப்பாட்டி அதற்கு பொட்டு வைத்து கொம்பில் கலர் கலராய் ரிப்பன் கட்டிவிடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். அப்படியே ரிப்பனை கட்டிவிட்டு அதன் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுக்க, அதன் ஷைனிங்கான கண்ணோடு என்னை பார்த்து .. வாலைஆட்டும். அதுவும் இன்னமும் என் நெஞ்சுக்குள்..

மறுநாள் காணும் பொங்கல் என்று உறவுகள் வீட்டிற்கு சென்று அவர்களின்காலில்விழுந்து ஆசீர்வாதம் வாங்க, அவர்கள் அட்சதை போட்டுஆசிர்வதித்து கையில் வைத்திருக்கும் பணத்தை தருவர்.

Pongal
Pongal

அந்தப் பணத்தை வீட்டிற்கு எடுத்து வந்து உண்டியலில் போட மனம் தாங்கொனா சந்தோஷப்படும். மொத்தத்தில் அன்று எங்கள் வளவனூரில் கொண்டாடிய பொங்கலை என்றுமே மறக்க முடியாது. அது ஒரு அழகான வாழ்வியல்!

என்றென்றும் அன்புடன்

ஆதிரை வேணுகோபால்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.