Published:Updated:

பொன்னியின் செல்வனும் நானும்! | My Vikatan

Representational Image

நினைத்தது போல அன்று மாலையே அந்த பெண்ணிடம் இருந்து போன்.... ஆனால் எதிர்முனையில் பேசியது அந்த பெண்ணின் அப்பா. பொ. செ பற்றி நான் சொன்னதை அந்த பெண் தன் அப்பாவிடம் அட்சரம் பிசாகாமல் சொல்லியிருப்பார் போலும்.

பொன்னியின் செல்வனும் நானும்! | My Vikatan

நினைத்தது போல அன்று மாலையே அந்த பெண்ணிடம் இருந்து போன்.... ஆனால் எதிர்முனையில் பேசியது அந்த பெண்ணின் அப்பா. பொ. செ பற்றி நான் சொன்னதை அந்த பெண் தன் அப்பாவிடம் அட்சரம் பிசாகாமல் சொல்லியிருப்பார் போலும்.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

பொன்னியின் செல்வன் வாசிக்க ஆரம்பித்தது என் கல்லூரி காலங்களில்.. ஒரு வெறி பிடித்த குடிகாரன் போல.... அதிகாலை... நடு ஜாமம் என நேரம் காலம் பார்க்காமல் அதனை பருகிக்கொண்டு அதன் போதையிலேயே இருந்தது நினைவிருக்கிறது. அதற்கு பின்னர் சில பல காதல் தோல்விகளால் தாடி வளர்த்த தருணங்களிலும் .... திருமணம் முடிந்து வீட்டம்மிணி பிரசவத்திற்கு சென்று தனித்திருந்த காலத்திலும் அதன் துணையோடு என் ரசனைக்கு பெயிண்ட் அடித்துக்கொண்டிருந்தது தூசு தட்டப்படாத பழைய வரலாறு.

ஒவ்வொரு முறை படிக்கும் போதும் தஞ்சையின் புழுதி படர்ந்த தெருக்களில் அக்கதை மாந்தர்களோடு நானும் வெற்றி வேல்! வீர வேல்! என சுற்றித் திரிந்த பயல்தான். எல்லையற்ற ஒரு கற்பனை சுதந்திரத்தை.... ஒரு பிரம்மாண்டமான பேரரசின் எழுச்சியை... வீழ்ச்சியை...மகிழ்ச்சியை துக்கத்தை .... காதலும்... துரோகமும் காட்டாறு போல கரை புரண்டோடும் உணர்வுகளை ரத்தமும் சதையுமாய் அதன் வாழ்வியலை பக்கத்தில் இருந்து உள்ளூற உணரும் அனுபவத்தை தந்தது கல்கி அவர்களின் மந்திர எழுத்துக்கள்.

பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்னமும் நினைவிருக்கிறது....

ஒரு ரயில் பயணத்தில் எதிரில் அமர்ந்திருந்த அழகான பெண்ணை கவர்வதற்காய்... மெல்ல மெல்ல பேச்சுக் கொடுத்து... அவளின் விருப்பம் ஆங்கில வாசிப்பு என்பதை அறிந்து, நமக்கு ஆங்கில வாசிப்பு செவ்வாய் கிரக தூரம் என்பதால், தமிழின் ஆக சிறந்த நூல்கள்... எழுத்தாளர்கள் பற்றி ஜல்லியடித்து... அதில் பொன்னியின் செல்வனுக்கு ஒரு நீண்ட அறிமுகம் கொடுத்து, இதை படிக்காதவன் ஆதார் கார்டு வைத்திருந்தாலும் இந்திய குடிமகனாக இருக்கவே தகுதியற்றவன் என்கின்ற ரேஞ்சில் பில்டப் ஏற்றி சந்தடி சாக்கில் என் மொபைல் நம்பரையும் கொடுத்துவிட்டு இறங்கிவிட்டேன். அந்த பெண்ணின் நம்பர் வாங்காமல் வந்திருந்தாலும்... நிச்சயம் அவள் கால் செய்வாள் என்கின்ற நம்பிக்கை டன் கணக்காய் இருந்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நினைத்தது போல அன்று மாலையே அந்த பெண்ணிடம் இருந்து போன்.... ஆனால் எதிர்முனையில் பேசியது அந்த பெண்ணின் அப்பா. பொ. செ பற்றி நான் சொன்னதை அந்த பெண் தன் அப்பாவிடம் அட்சரம் பிசாகாமல் சொல்லியிருப்பார் போலும். எடுத்த எடுப்பில், என் பொண்ணு இங்கிலிஷ் லிட்ரேட்சர் படிச்சு என்ன பிரயோஜனம்? பொன்னியின் செல்வன்னு தமிழ்ல எழுத கூட தெரியாது. ஆனா நான் அப்படி இல்லை! பத்து தடவைக்கும் மேலே படிச்சுருக்கேன் என ஆரம்பித்து ஐந்து அத்தியாங்கள் பற்றியும் வெகு விரிவாய் பேச ஆரம்பித்துவிட்டார். "சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா? இன்னும் இருக்கா...? என்னவோ மயக்கம்....'' எனும் பாடல் என் வாழ்விலும் நிகழ்ந்தது... என்ன.... எதிர் முனையில் பானுப்ரியா இல்லாமல் பிரகாஷ் ராஜ் பேசியதுதான் ஒரே வருத்தம்.

'பொன்னியின் செல்வன்
'பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் ஒரு அபாயமான சுழல் போல... நம்மை அப்படியே உள் இழுத்துகொள்ளும். ஐந்து பாகங்கள்.. தொண்ணுற்று ஒன்று அத்தியாயங்கள் கொண்ட பிரம்மாண்டமான ஒரு புதினம். இதில் ஆச்சரியமான விஷயம்.. இப்போது நம் கைகளில் ஐந்து பாகங்களும் ஒரு சேர இருக்கிறது.. ஒரே மூச்சில் படித்து விடுகிறோம். அனால்.. இந்த கதை 1950ல் எழுதப்பட்ட காலத்தில், ஒரு தொடராக சுமார் 3 1/2 வருடங்கள், வாரம் ஒருமுறை நம் மக்கள் பொறுமையாய் காத்திருந்து படித்தது வியப்பான ஒன்று.

மணி ரத்னம் தன் கனவு படைப்பாக இதை உருவாக்க முயல்கிறார் என அறிந்ததுமே, மகிழ்ச்சியை விட ஒரு பீதி தான் என்னை ஆட்கொண்டது. ஏனெனில் இதை படித்திருக்கும் எல்லோருக்கும்.... ஒரு பிரம்மாண்டமான காட்சி அனுபவம் அவரவர் மன கண்களில் முன்னதாகவே இருந்திருக்கும். அதே அனுபவத்தை அவர் திருப்பி தருவாரா என்பதே மில்லியன் டாலர் கேள்வி. இருப்பினும் ஒரு புகழ் பெற்ற தமிழ் வரலாற்று புதினத்தை காட்சிப்படுத்த அவர் எடுத்திருக்கும் முயற்சி மிக பாராட்டுக்குரியது. அப்போதுதான் தூங்கி எழுந்து சடவு முறிக்கும் நபரை கூட மிக அழகியலாக திரையில் காட்டுவார் என்பது நமக்கு தெரியும்.... சமீபத்தில் வெளியான டீசர் கூட அதை நிரூபணம் செய்கிறது.... டீசரின் அழகியல் நிச்சயம் தியேட்டருக்கு எல்லோரையும் வர செய்து விடும்.... ஆனால் அங்கு அமர வைப்பது தெளிவாய் பின்னப்பட்ட திரைக்கதையும்... எழுத்தும்தான்! நிச்சயம் அதிலும் புலிப் பாய்ச்சல் இருக்கும் என்ற நம்பிக்கையுடன் அவருக்கும் அவரின் குழுவிற்கும் வாழ்த்துக்கள்.

-மனோகர் சண்முகம்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.