Published:Updated:

வறுமையிலும் நேர்மை வேண்டும்! |My Vikatan

Representational Images

கடைசியாக இன்னும் ஐந்து ரூபாய் தேவை என்கிற போது சிறுவன் சாலையோர சாக்கடையில் இருந்து ஐந்து ரூபாயை எடுத்து வந்து பாட்டியிடம் கொடுக்கிறான். பாட்டி உண்மையிலயே அது சாக்கடையிலிருந்து எடுக்கப்பட்ட நாணயமா என்பதை அறிய பாட்டி அதை முகர்ந்து பார்க்கிறார்.

வறுமையிலும் நேர்மை வேண்டும்! |My Vikatan

கடைசியாக இன்னும் ஐந்து ரூபாய் தேவை என்கிற போது சிறுவன் சாலையோர சாக்கடையில் இருந்து ஐந்து ரூபாயை எடுத்து வந்து பாட்டியிடம் கொடுக்கிறான். பாட்டி உண்மையிலயே அது சாக்கடையிலிருந்து எடுக்கப்பட்ட நாணயமா என்பதை அறிய பாட்டி அதை முகர்ந்து பார்க்கிறார்.

Published:Updated:
Representational Images

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

"திருடாதே பாப்பா திருடாதே" என்று பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதிய வரிகள் எக்காலத்துக்கும் நிலைத்து நிற்கும் ஒன்று. அதே கருத்தை வலியுறுத்தும் இலக்கியம் மற்றும் சினிமா குறித்த கட்டுரை இது.

குழந்தைகள் நலனில் அதிக அக்கறை கொண்டவர் எழுத்தாளர் ராம்தங்கம். அவர் எழுதிய "திருக்கார்த்தியல்" சிறுகதை தொகுப்பு வறுமையில் வாடும் சிறுவர்களின் வாழ்வியலை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது.

"வெளிச்சம்" அவற்றில் மிக முக்கியமான சிறுகதை. தந்தை இல்லாத சூழலில் தாய் மற்றும் தம்பியுடன் வாழ்ந்து வரும் சிறுவன் லிங்கம் வறுமை காரணமாக பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு பேக்கரி ஒன்றிற்கு வேலைக்குச் செல்கிறான். அங்கு அவனை அன்பாக நடத்துகிறார்கள் என்றபோதும் தன் பாட்டி ஆசைப்பட்ட முந்திரி கேக்கை யாருக்கும் தெரியாமல் திருடிச் சென்று பாட்டியிடம் கொடுக்கிறான். பாட்டி அவன் திருடியதை அறிந்து "கள்ளன்னு ஒருமுறை பேர் எடுத்துட்டா அது வாழ்நாள் பூரா போவாதுலே" என்று அறிவுறுத்தி அதற்கான பணத்தை வீட்டில் உள்ள மூலை முடுக்கெல்லாம் தேடி பொறுக்கியும் பழைய பேப்பர்களை எடைக்குப் போட்டு வந்த பணத்தை சேகரித்தும் அக்கம்பக்கத்தில் கடன் வாங்கி வர செய்தும் சேர்க்கிறார்.

Representational Images
Representational Images

கடைசியாக இன்னும் ஐந்து ரூபாய் தேவை என்கிற போது சிறுவன் சாலையோர சாக்கடையில் இருந்து ஐந்து ரூபாயை எடுத்து வந்து பாட்டியிடம் கொடுக்கிறான். பாட்டி உண்மையிலயே அது சாக்கடையிலிருந்து எடுக்கப்பட்ட நாணயமா என்பதை அறிய பாட்டி அதை முகர்ந்து பார்க்கிறார். சாக்கடை நாற்றம் அடித்ததும் நிம்மதி பெருமூச்சு விடுகிறார். அவ்வாறு சேர்த்த பணத்தை பேக்கரியின் கல்லா பெட்டியில் யாருக்கும் தெரியாமல் சிறுவன் வைத்துவிட்டு வந்து இருளில் அமர்ந்திருக்கும் தன் பாட்டியை பார்க்கிறான். பாட்டியிடம் அந்த கேக்கிற்குரிய பணத்தை கல்லா பெட்டியில் வைத்துவிட்டேன் என்று சிறுவன் சொல்ல இருளிலும் தன் பாட்டியின் கண்களில் வெளிச்சம் தெரிவதை உணர்கிறான். வறுமையிலும் நேர்மை தேவை என்பதை அழுத்தமாக பதிவு செய்த சிறுகதை இது. இந்தச் சிறுகதை தான் வறுமையிலும் நேர்மை வேண்டும் என்பதை பதிவு செய்த படைப்புகளை பற்றி தேடும் ஆர்வத்தை தூண்டியது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

1838 ஆம் ஆண்டு ஆங்கில எழுத்தாளர் சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய "ஆலிவர் ட்விஸ்ட்" என்கிற நாவல் வறுமையிலும் நேர்மையாக வாழ்ந்த ஒரு சிறுவனின் கதையை அழுத்தமாக பதிவு செய்திருக்கும். திருட்டுக் கும்பலிடம் சிக்கிய போதிலும் ஆலிவர் ட்விஸ்ட் என்கிற சிறுவன் திருட்டில் ஈடுபடாமல் நன்னடத்தையுடன் வாழ்வான். இறுதியில் அவனுடைய நேர்மைக்கு பலனாக அவன் எதிர்பாராத அதிசயம் ஒன்று நடக்கும். அது அவன் வாழ்க்கையையே மொத்தமாக மாற்றும்.

Oliver twist
Oliver twist

"காதலும் கடந்து போகும்" என்கிற படத்தில் சிறையிலிருந்து வெளியேறிய விஜய்சேதுபதி தன் ஏரியாவில் உள்ள டிபார்ட்மெண்ட் ஸ்டோர் ஒன்றிற்கு எதர்ச்சையாக செல்ல, அங்கு இரண்டு சிறுவர்களை கடைக்காரர் திட்டிக்கொண்டிருப்பார். என்னவென்று விஜய்சேதுபதி விசாரிக்க, சிறுவர்கள் அக்கடையில் திருடியது தெரிய வரும். "இனிமேல் இந்தப் பக்கம் வந்திங்க..." என்று கடைக்காரர் சொல்ல, "திருடாதன்னு சொல்லு... ஆனா வராதன்னு சொல்லாத... எங்க ஏரியாவுல கடைய போட்டுட்டு எங்களையவே வர வேணாம்னு சொல்வியா?" என்று கடைக்காரரிடம் வாதிட்டு சிறுவர்களை தண்டனையிலிருந்து மீட்டு அவர்களை இனிமேல் திருட்டில் ஈடுபட வேண்டாமென வலியுறுத்துவார்.

"காக்கா முட்டை" படத்தில் சிறையிலிருக்கும் தன் தந்தையை வெளியே கொண்டுவரும் பொருட்டு இரண்டு சிறுவர்கள் குழந்தை தொழிலாளர்களாக மாற அவர்களுக்கு திடீரென பீட்சா மீது ஆர்வம் வருகிறது. பீட்சா சாப்பிட காசு சேர்ந்த போதிலும் கடைக்குள் அனுமதிக்கப்படவில்லை என்பதால் புதுத்துணி வாங்க ரயில் படிக்கெட்டில் அமர்ந்து பயணிப்பவரின் செல்போனை குச்சியால் அடித்து பறித்து அதன் மூலம் பணம் ஈட்ட நினைப்பதும், பெரிய அபார்ட்மெண்ட்டில் உள்ள சாக்கடையின் இரும்பு மூடியை திருடி எடைக்கு போட நினைப்பதும் பிறகு அது தவறென உணர்ந்து அச்செயலில் ஈடுபடாமல் தவிர்ப்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. நிலக்கரியை எடுக்கிறோமா திருடறமோ என்று உணராத அதே சிறுவர்கள் தான் பின்னாளில் திருடுவது தவறென உணர்ந்து வறுமையிலும் நேர்மையாக இருக்கிறார்கள்.

’காக்கா முட்டை’ பாய்ஸ்
’காக்கா முட்டை’ பாய்ஸ்

"சின்ன வயசுலயே திருடறயே தப்பில்ல..." என்று பார்த்திபனின் ஒரு படத்தில் ஒருவர் கேட்க, அதற்கு அச்சிறுவன் "சின்ன வயசுலயே பசிக்குதே அது தப்பில்ல..." என்று சிறுவன் பதிலளிப்பது போல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

"மெரினா" படத்தில் வறுமை காரணமாக பெட்ரோல் திருடும் சிறுவனை காட்டியிருப்பார்கள். "பசங்க" படத்தில் கையேந்தும் சிறுவனுக்கு தன்னால் முடிந்த நிதியளித்து "அவன் கையேந்தக் கூடாதுனு நீ நினைக்குற... அவன் திருடன் ஆகிடக்கூடாதுனு நான் நினைக்கிறேன்" என்று நாயகி வசனம் பேசுவது போல் காட்சி இடம்பெற்றிருக்கும். மேற்கண்ட படங்களில் வறுமையில் வாடும் சரியான ஆதரவில்லாத சிறுவர்கள் வறுமையை காரணமாக வைத்து திருட கூடாது என்பதை காட்டியிருப்பார்கள்.

வசந்த பாலனின் "வெயில்" படத்தில் சிறுவயதில் தன் அம்மாவின் நகைகளை, நாயகன் திருடிச் சென்றுவிட அவனிடமிருந்து அந்த நகைகள் வேறொருவரால் திருடப்படும். அந்த நாயகன் வளர்ந்து பெரியவனாகி தன் வீட்டிற்கு திரும்பி மறுவாழ்க்கை வாழ்வான். அப்போது பீரோவிலிருந்த நகைகள் திடீரென காணாமல் போக குடும்பத்தில் உள்ள எல்லோருடைய சந்தேக பார்வையும் நாயகன் மீது தான் திரும்பும். நான் திருடவில்லை என்று நாயகன் எவ்வளவு எடுத்துரைத்தும் யாரும் நம்பமாட்டார்கள். ஒருமுறை திருட்டுப்பட்டம் வாங்கிவிட்டால் அது கடைசிவரை போகாது என்பதை அந்தக் காட்சிகள் எடுத்துரைக்கும்.

Representational Images
Representational Images

சமீப காலங்களாக இளைஞர்கள் சிலர் திருட்டு வழக்கில் கைதாவது மிக அதிக எண்ணிக்கையில் உள்ளது. அதிலும் குறிப்பாக புதுபுது தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திருட்டில் ஈடுபடுவது மிக அதிகளவில் நடந்து வருகிறது. "மெட்ரோ" என்கிற படம், கல்லூரி படிக்கும் இளைஞர்கள் செயின் பறிப்பில் ஈடுபடுவது குறித்தும் அத்தொழிலில் ஈடுபடும் வசதியில்லாத வீட்டு இளைஞன் கடைசியில் என்ன ஆனான்? அவன் குடும்பம் என்ன ஆனது? என்பது பற்றியும் அழுத்தமாக பதிவு செய்யப்பட்டிருக்கும்.

"துப்பறிவாளன்" என்கிற படத்தில் திருட்டில் ஈடுபடும் இளம்பெண் மற்றும் பள்ளி சிறுமி குறித்த காட்சிகள் இடம்பெற்றிருக்கும். "ஜிகிர்தண்டா" என்கிற படத்தில் இளம்பெண் ஒருவர் துணி கடையில் சேலைகள் திருடுவது போல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். "தங்கமீன்கள்" படத்தில் அப்பாவிடம் காசு இல்லை என்பதால் மகள் திருடிவிடுவது போல் காட்சிகள் இடம்பெற்றிருக்கும்.

சிறுவர்கள் சிறுமிகள், இளைஞர் இளைஞிகள் மட்டுமின்றி, சில பெரியவர்கள் கூட, "வேலை செய்யும் இடத்தில் கைவரிசை காட்டிய ஊழியர்" என்ற ரீதியில் கைது செய்யப்படுகிறார்கள். இதற்கெல்லாம் மிக முக்கியமான காரணம், திருட்டில் ஈடுபடுவது எவ்வளவு பெரிய குற்றச்செயல் என்பது குறித்து சிறுவயதிலயே அழுத்தமாக பள்ளி மாணவர்கள் மனதில் பதிவு செய்யப்படவில்லை என்பது தான்.

அரசுப் பள்ளி மாணவர்கள்!
அரசுப் பள்ளி மாணவர்கள்!

சமீபத்தில் தமிழக அரசு, பள்ளிகளில் மாதந்தோறும் திரைப்பட விழாக்கள் நடத்தப்படும் என்று அறிவித்தது. "வெளிச்சம்", "ஆலிவர் ட்விஸ்ட்" மாதிரியான வறுமையிலும் நேர்மை வேண்டும் என்பதை வலியுறுத்தும் படைப்புக்கள் மற்றும் "வெயில்" போன்ற படைப்புகளில் உள்ள சில காட்சிகளை திரை வல்லுனர்களை கொண்டு முறையாக கத்தரித்து திருட்டில் ஈடுபட்டால் சமூகம் எப்படி பார்க்கும்? குடும்பம் என்ன நிலைக்கு தள்ளப்படும்? என்பதை வலியுறுத்தும் வகையில் தொகுத்து அவற்றை பள்ளி திரைப்பட விழாக்களில் இடம்பெற அரசு பரிசீலனை செய்ய வேண்டும். பெற்றோர்களும் இதுபோன்ற படைப்புகளை பற்றி தம் குழந்தைகளுக்கு புரியும்படி எடுத்துரைக்க வேண்டும்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.